“நெய்தல் திணை – நெய்தற்பத்து இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகை பெரிது உடைய, காதலி கண்ணே! -188 கழியில் மேயும் இறா மீன்களைப் பறவைகள் வயிறார உண்ணும் துறை கொற்கைத்துறை. அது கொற்கைக் கோமான் பாண்டியனுக்கு உரியது. அந்தத் துறையில் வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் போன்று தகைமையில் சிறந்து விளங்குவது காதலியின் கண்.
சிவகங்காவதி அறையிலிருந்து வெளியேறியே பின்னும் நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருந்தான் நஸீம்.
அவனால் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் ஒன்றும் கூறாமல் இருந்திருந்தால்கூட மனம் மகிழ்ந்திருக்கும்.
எப்போதும் போல் தான் இப்போதும் வரைந்தேன் எனக் கூறக் கேட்டவனுக்கு அப்படியாய் ஒரு ஏமாற்றம்.
தான் என்ன நினைக்கிறோம்,சிவகங்காவதியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்று எதுவுமே புரியவில்லை.
அப்போது தான் அவனுக்குத் தோன்றியது என் அன்பை நான் வாய்மொழிந்து கூறாத பொழுது அவள் மட்டும் எப்படி தன் விருப்பத்தை வெளிப்படையாய் கூறுவாள்.
ஏன் அவளருகில் என் வசமிழந்து நின்ற அந்த நிமிடங்கள் போதாதா என் அன்பை உணர்ந்து கொள்வதற்கு?
எந்த ஒரு ஆண்மகனும் அவள் போன்ற மங்கையிடத்தில் தன் வசம் இழந்து தான் நிற்பான். இதில் எப்படி அவள் அன்பை உணர முடியும்?
அப்படியானால் ஒரு வேளை அவள் மேல் கொண்ட இச்சையால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று எண்ணியிருப்பாளோ!!?
இச்சையா??!!!என் கங்காவின் மீதா?? என்னால் அப்படி சிந்திக்க கூட இயலுமா?? அவள் என்னவள் அந்த உரிமையை அன்றி அவளை வேறொரு எண்ணத்தால் எப்படி என்னால் பார்க்க இயலும்?
எந்த ஒரு பெண்ணையுமே அப்படி பார்க்க நினைக்காத எனக்கு கங்காவை மட்டும் அவ்வாறு காண இயலுமா!!
யா அல்லாஹ் இதென்ன என்னுள் முதன்முறையாய் இத்துனை தடுமாற்றம். அவள் மீதான காதலும் அன்பும் கரைகடந்து இருந்தும் அதை அவளிடம் வெளிக் கொணர முடியாமல் தவிக்கிறேனே!
என்னுடைய பாரா முகத்தால் வருத்தப்பட்டிருப்பாளோ என்ன செய்து கொண்டிருப்பாள்!!!”
இப்படி பலவகையான சிந்தனைகளில் கரைந்துகொண்டிருக்க அங்கு சிவகங்காதியோ தனதறையின் படுக்கையில் விழுந்தவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைஅறியாமல் குழம்பித் தவித்தாள்.
“இஷான் என்னிடம் ஏன் இவ்வாறெல்லாம் நடந்துகொள்கிறார். அவர் கண்களில் தெரிந்த ஏதோ ஓர் உணர்வு எனை அவர்முன் பலமிழக்கச் செய்கிறது.
ஆனால் ஏன்!!எங்களின் திருமணம் கட்டாயத்திற்காக நடந்த ஒன்று அப்படியானால் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்காக கணவராய் அவர் உரிமையை நிலைநாட்டப் பார்க்கிறாரா?
இல்லையேல் அவரது கொள்கைப் பற்றி ரத்தன் அண்ணா கூறினாரே அதனால் வேறு வழியின்றி என்னோடு நன்முறையில் நடக்க விருப்பம் கொள்கிறாரா??!
அதுவும் இல்லையெனில் கணவனாய் உரிமை எடுத்து எனை பழிவாங்குவதற்காக???!!!
ஈசனே என்ன இது இத்துனை கீழ்த்தரமாய் எண்ணங்கள் கொள்கிறேன். கைதியாய் எனை வைத்திருந்த போதே தவறான ஒரு பார்வை கூட படவிடாதவர் அவரைப் பற்றி இப்படி எண்ணிணால் என் ஈசனே எனை மன்னிக்கமாட்டார்.
அனைத்தும் போகட்டும்,அவர் அப்படி என்னை நெருங்கி நின்ற வேளையில் நான் மட்டும் அதை தடுக்கவா செய்தேன்?!
இஷானிடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் இது சாத்தியமா?அத்தனையும் கடந்து நான் வரைந்த சித்திரம்!¡!
அது எப்படி என்னால் முடிந்தது ஒரு சில நொடிகளில் காணும் காட்சி இத்துனை கச்சிதமாய் வரைவதில் சாத்திமிருக்கிறதா?
இதுவரையில் ஈசனின் உருவத்தை அன்றி நான் எதையுமே இவ்வாறு வரைந்ததில்லையே. அப்படியெனில் அதன் அர்த்தம் என் மனதில் அவர்!!
வேகமாய் தன்னிடத்திலிருந்து எழுந்து அமர்ந்தவள் வெளியில் வெறித்திருக்க மெதுவாய் அங்கு நின்று மரங்களின் அசைவையும் காற்றின் சங்கீதத்தையும் தனக்குள் சுகித்துக் கொண்டாள்.
மீண்டுமாய் எண்ண அலைகள் அவளை சுழற்ற ஆரம்பித்திருந்தது.
பாட்டி அவர்கள் இருந்திருந்தால் அவர்களிடம் ஏதெனும் தெளிவு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அவர்கூட அன்று பேசியபோது ஏதோ கூறவந்து நிறுத்தினாரே.இந்த ஆயிஷாவும் ஏதேதோ பிதற்றுகிறாள்.
அப்படியெனில் இது காதாலாக இருக்குமா!!எனக்காக இஷான் அதை மறைக்கிறாரா அல்லது நானே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாய் இருக்குமோ!!
இப்படி நினைத்தபோதே மனது ஒருவித பரவசத்தை உணர்ந்தது சிவகங்காவதிக்கு.
அவளுக்கும் அவன்மீது ஒருசில கோபங்கள் இருந்ததேயன்றி எந்த சூழ்நிலையிலும் அவனை வெறுத்தது இல்லை..
அதுமட்டுமன்றி எப்போது அவன் தன் கரம் பற்றி அக்னியை வலம் வந்தானோ அப்போதே இப்பிறவிக்கான அவளின் பதி அவன்தான் என்ற எண்ணத்தை தனக்குள் நிலைநிறுத்திக் கொண்டாள்.
அப்படியிருந்தும்ஏனோ அவனோடு அத்துனை இயல்பாய் வாழ்வை நகர்த்த முடியவில்லை சிவகங்காவதிக்கு.
ஆனால் இன்று நடந்த அனைத்தும் சேர்ந்து அவளை சற்றே சிந்திக்க வைத்திருந்தது.
இந்தகோணத்தில் சிந்திக்கும் நேரம் அவள் இதழோரம் அதுவாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
அவளாகவே ஒருமுடிவுக்கு வரும் சமயத்தில் அவளிருந்த பகுதிக்கு சற்று அருகில் இருளின் நடுவில் ஏதோ அரவம் கேட்க சற்றே தன்னை நிலைப்படுத்தியவளாய் அங்கு கவனம் பதித்தாள்.
யாரென்று சரியாகத் தெரியாத போதிலும் சன்னமான இரு குரலின் ரகசியங்கள் ஓரளவு அவள் காதில் நன்றாகவே விழுந்தது.
“நமக்கு கிடைத்த ஆணைப்படி அந்த நஸீமை இந்நேரம் கொன்றிருக்க வேண்டும் ஆனா இங்கு நிலைமை தலைகீழாக உள்ளதே!”
“நீ கூறுவதும் சரிதான் இந்த நிக்காஹ் யாரும் எதிர்பாராதது. அதுவும் இந்து மதத்தை சார்ந்தவளோடு. இதனால் எத்தனை குழப்பங்கள் வரும் எனத் தெரிந்தும் அவன் அவளை நிக்காஹ் செய்திருக்கிறான் என்றால் காரணமின்றி இருக்காது”
“நீ என்ன கூறுகிறாய்?”
“நீயே சிந்தித்துப் பார் அந்த நஸீம் இத்தனை சிறந்தவனாய் விளங்குவதற்கு மிக முக்கிய காரணம் அவனுக்கு எந்தவித உறவுகள் மீதும் உணர்ச்சிகள் மீதும் நம்பிக்கை கிடையாது.
அப்படியிருக்க தனக்கு லாபமேதுமின்றி இந்த பெண்ணை நிக்காஹ் செய்ய அவன் ஒன்றும் முட்டாள் இல்லை.
நேரடியாகவே கூறுகிறேன்,உனக்கு நினைவிருக்கிறதா இந்துஸ்தானத்தின் பேரரசரிடம் நஸீம் கூறியது எப்படியாவது தென்னகத்தின் அந்த பகுதியை கைப்பற்றி முகலாய ஆட்சியின் எல்லைகளை விரிவுபடுத்துவேன் என அத்துனை உறுதியாய் கூறியிருந்தானே!
தான் கூறும் சொற்களை செயல்படுத்திக் காட்டுவதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.
அதுமட்டுமல்லாது அவளை கொன்று விடு என்று பேரரசர் கூறியும் அவளின் திமிருக்கு ஏற்ற பாடம் கற்பித்தே ஆகவேண்டும் என்று கூறினானே இதையனைத்தையும் வைத்துப் பார்த்தால் எதோ ஒரு யுக்தி கொண்டு அவளை பழிவாங்கக் காத்திருக்கிறான் என்பது உறுதியாய் தெரிகிறது”
“அடடா ஆம் நீ கூறுவதனைத்தும் சரி. ஆக இப்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. முதலில் அவன் அந்த பெண்ணை பழி தீர்க்கட்டும். நாளை அவன் பேரரசரை சந்திக்கச் செல்லவிருக்கிறான்.
சென்று ஒரு முடிவோடு வரட்டும்.அதன் பின் இவன் கதையை நாம் முடிக்கலாம்”
“ம்ம் அதுதான் என் எண்ணமும் சரி சரி வெகுநேரம் இங்கு நிற்க வேண்டாம். அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருப்போம். சென்று வா”, என்றவர்கள் சற்று தொலைவு கடந்து மறைந்து செல்வது தெரிந்தது.
சர்வமும் அடங்கிப்போய் தரையில் வேரோடி நின்றிருந்தாள் சிவகங்காவதி. என்ன நடக்கிறது என்னைச் சுற்றி இத்துனை கவனமிழந்தா இருந்திருக்கிறேன்.
அப்படியென்றால் அவன் செய்த அனைத்தும் என்னை வைத்து என் பாளையத்தை முற்றுகையிடத்தானா??!
அவர்கள் கூறியது அனைத்தும் சரியாய் இருக்கிறதே!
ஈசனே ஒரு நொடியில் மனம் மகிழ்ந்து குழம்பிப் போனேனே!
என் கடமையை எப்படி மறந்தேன். என் மக்களை காப்பாற்றுவதை விட எனக்கு அற்ப உணர்ச்சிகள் பெரிதாகிப் போய் விட்டதா??!
நாளை பேரரசரை பார்க்கச் செல்கிறானாமே எதற்காக இங்கு நடக்கும் அனைத்தையும் தெரிவிப்பதற்காகவா?!
நான் அவன்முன் என் வசமிழந்து நிற்கிறேன் கூடிய விரைவில் அவன் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறிவிடும் என்று தெரிவிப்பதற்காகவா!!!
இத்துனை யோசித்தவளால் பேசிக் கொண்டிருந்த இருவரும் அவனை கொல்லவந்ததாய் கூறியதையும் அப்படி வரும் அடிதட்டு வீரர்களுக்கு அரச ரகசியங்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்பதையும் யோசிக்க மறந்திருந்தாள்.
அவன் மீது கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது.இப்போதே சென்று அவன் விழிநோக்கி அத்தனை கேள்விகள் கேட்க வேண்டும் என்று ஒருவித ஆத்திரம் கூட எழுந்தது இருந்தும் அதை செய்யாமல் தனக்குள்ளேயே மேலும் மேலும் குழம்பிக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை அன்றைய மனநிலையில் அப்போதே கேட்டிருந்தால் கூட தெளிவு பிறந்திருக்குமோ!?”
அவன் மனம் முழுவதுமாய் ஒரு வித சோர்வு பரவியிருந்தது. சிவகங்காவதியுடனான நேற்றைய உரையாடல் இப்போது பேரரசரை சந்திக்க போகும் விடயம் அனைத்துமாய் களைத்துப் போயிருந்தான்.
பேரசர் அவனை அழைப்பது நிச்சயமாய் இந்த நிக்காஹ் பற்றி பேசுவதற்காகத் தான் இருக்கும். என்ன கூறி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லை ஆனாலும் யாருக்காகவும் எதற்காகவும் கங்காவை விட்டுத் தர முடியாது என்பதில் தெளிவாய் இருக்கிறேன் என்றவாறே தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.
“அஸ்லாம் அலேகூம் உசூர்..”
“மல்லேகூம் அஸ்லாம் நஸீம்.என்ன நடந்து கொண்டிருக்கிறது.
ஆளுநராய் பதிவியேற்று சிறிது தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படி ஒரு அதிருப்தியை கொடுத்திருக்கிறாயே எனக்கு!”
“அதிருப்தி வரும் வகையில் நான் என் கடமையிலிருந்து தவறவில்லையே உசூர்!!”
“புத்திசாலிதனத்தை என்னிடம் காட்டும் அவசியமில்லை என்றே எண்ணுகிறேன்,நான் கூறுவது உன் நிக்காஹ் பற்றி.”
“அது என் தனிப்பட்ட விடயம் உசூர் அதற்கும் நிர்வாகத்திற்கும் சம்மந்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை”
“நஸீம் நீ நம் மதத்தின் பெண்ணை திருமணம் செய்திருப்பின் அதைப் பற்றிய எந்த அக்கறையும் எனக்கு கிடையாது.
ஆனால் அவள் பிறப்பால் ஓர் இந்து!இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று தோன்றவில்லையா உனக்கு?”
“உசூர் தங்களை எதிர்த்து வாதம் புரிவதாய் எண்ண வேண்டாம். மதமும் கடவுளும் மக்களை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி அதன் பெயர் கூறி மக்கள் தங்களுக்குள் பிரிவினை புரிவதற்கு அல்ல.
அதுமட்டுமின்றி ஒரு பேரரசரான தங்களின் கீழ் எத்தனையோ சிற்றரசுகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களே அப்படியிருக்க நான் செய்ததில் ஏதேனும் தவறு இருக்கிறதா கூறுங்கள்”
“நஸீம்!!!நீ என்ன சமாதானம் கூறினாலும் இதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. வேற்று மதத்தின் பெண் அரண்மனையின் ஆசை நாயகியாக இருக்கலாமேயன்றி அரசியாய் இருப்பதற்கு எவ்வித தகுதியும் கிடையாது”
“உசூர் இதற்குமேல் இதை பற்றிய வாதம் அவசியமற்றது. கங்கா இந்த இஷான் நஸீமின் மனைவி. என் சிற்றரசின் அரசி இதை யாராலும் மாற்ற இயலாது.
அவளைப் பற்றிய பேச்சுகள் நிர்வாகத்திற்கு அவசியமற்றது எனவே இதற்குமேல் இதில் ஒன்றுமில்லை.நான் வருகிறேன்.”
அத்தனை திடமாய் கண்களில் ஒருவித தீவிரத்தோடு பேசுபவனை எதுவும் கூறும் வழியின்றி பேரரசர் சிந்தனையில் ஆழ்ந்திருக்க அதற்குள் அரசவையில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.
“ஷேகின் ஷாவையே எதிர்த்து பேசும் துணிவை ஆளுநருக்கு வழங்கியது எவர்!!”
“கேவலம் ஒரு பெண்ணிற்காக இத்துனை பேர் முன்னிலையில் அரசரையே எதிர்க்கிறானே!”
“போதும் தேவையற்ற சலசலப்பு வேண்டாம். நஸீம் கூறியதுபோல் அது அவனது தனிப்பட்ட விடயம் அதையும் நிர்வாகப் பணிகளையும் இணைத்து வைத்து சிந்திக்க வேண்டாம் என்றே எனக்கும் தோன்றுகிறது.
இங்கு உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறவுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் யாரையும் அரசவையிலேயே வைத்திருக்க முடியாது.
எனவே அவரவர் பொறுப்புகளை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது.”, என்ற பேரரசரர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட மீண்டும் அனைவருமாய் நஸீமிற்கு எதிராய் தங்கள் உரையாடலைத் தொடங்கினர்.
“அவனது வலிமையும் நிர்வாகமும் கூட நம் அரசரின் வெற்றிக்கான முக்கிய காரணம்.
எனவே தான் அவனைப் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் விட்டு வைத்திருக்கிறார்.”
“உண்மைதான் இருந்தும் அவனுக்கெதிரான சிற்றரசர்களின் எண்ணிக்கை இந்த நிக்காஹ்ஹிற்கு பிறகு இன்னும் அதிகரித்திருக்கிறது.
நஸீமை வீழ்த்துவதற்கு காத்திருந்தவர்களுக்கு இப்போது இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
கூடிய விரைவில் இந்துஸ்தானத்திற்கு புது ஆளுநர் மாறிவிடுவார் போல் இருக்கிறது” என்று ஒவ்வொருவரும் தங்கள் மனதின் வஞ்சக எண்ணங்களைக் கருத்துகளாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அங்கிருந்து வெளிவந்திருந்த நஸீமிற்கு பெரிதாய் எதிலிருந்தோ விடுபட்டது போன்ற ஓர் உணர்வு.
கங்காவை கரம்பிடித்ததில் அவன் பெரிதாய் சிந்தித்தது அவரைப் பற்றி மட்டுமே.
அவர் தன் மீது வைத்திருக்கும் நன்மதிப்பை இழப்பதென்பது வேறு.அதைக் கூட பொறுத்துக் கொள்ளவே தயாராகியிருந்தான்.
ஆனால் சிவகங்காவதியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்பதே மிகப் பெரிய அச்சமாய் இருந்தது.
ஒன்று அவள் இல்லை ராஜ்ஜியம் என்று கூறியிருந்தல் கூட அவள்தான் என்று முடிவுசெய்து அனைத்தையும் விட்டுச் செல்வதற்கு தயாராகத் தான் வந்திருந்தான்.
அந்த விதத்தில் இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது.இனி எதற்காகவும் அவனது கங்காவை விட்டு விலகி நிற்கத் தேவையில்லை என்றே தோன்றியது.
சில அரச பணிகள் நிலுவையில் இருந்ததால் மேலும் இரு தினங்கள் அங்கிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நஸீமிற்கு.
இங்கு சிவகங்காவதியோ மனதால் ஒடிந்து போயிருந்தாள்.
தன்நாட்டை காக்க வேண்டும் என்பதையும் தாண்டி இஷான் தன்னை ஏமாற்றினான் என்பதை தாங்கிக் கொள்ளவே முடியாமல் போது.
அதுவும் முதுகில் குத்துவதற்கு அவன் கையில் ஏந்திய ஆயுதம் காதல்!!!எப்படி அவனால் இது முடிந்தது.
அவனது இயல்பே ஒரு வேளை இதுதானா?என்னால் தான் இதை ஏற்க முடியாமல் போகிறதா!இப்படிபட்ட ஒருவனுக்காக என் மனதை இழக்கத் துணிந்தேனே!
இத்துனை பலகீனமானவளாகவா வளர்ந்திருக்கிறேன்”, என்று மேலும் மேலும் இதைப் பற்றி எண்ணித் தவித்தவளுக்கு அவன் மேல் தான் கொண்ட காதலால் தான் இத்துனை தவிப்பும் என்பதை புரிய வைப்பவர் யார்!
அவளின் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடை ,எதிரில் இருப்பவன் இஷான் நஸீமாய் இருப்பதால் தான் தன்னை தானே நொந்து கொண்டு தவிக்கிறாளேயன்றி வேறொருவன் எனில் எப்போதோ இந்த வாழ்வை தூக்கியெறிந்து சென்றிருப்பாள் என்பதே.
இந்த நொடி வரையிலும் அவள் உணராமல் இருக்கும் இதை உணர்த்துவதற்காக இன்னும் இன்னல்கள் அனுபவிக்க காத்திருக்கிறாள் என்பதை ஈசனே அறிவான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.