சற்று நேரம் அவள் கரங்களை வருடியவன், அவள் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்து கொண்டான். கூச்சமாக இருந்தாலும் நெளிந்து கொண்டே, மிருதுளா கையை விலக்காமல் அவன் பிடியிலேயே விட்டிருந்தாள்.
அவள் கூச்சத்தில் நெளிவதை உணர்ந்தவன், மெல்ல அவள் கைகளை விடுவித்து தன் இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு மேசை மேல் வைத்தான். அதன் பின்பே மிருதுளா கொஞ்சம் இயல்புக்கு வந்தாள்.
கலாச்சார வேறுபாடுகள் அவனுக்கும் புரிகிறது தான். அதைக் கொண்டு பெரிய தயக்கம் இருப்பதும் உண்மை தான். ஆனால் அதை ஒரு தடையாக பார்க்காமல், சில விஷயங்கள் தெரியாமல் அவளைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதே அவனது தயக்கத்திற்கு பெரும் காரணம்.
அதை அவளிடமே கூறியவன்,
“மிரு, ஒரு விஷயம் தெளிவு படுத்திக்க விரும்பறேன். என்னை பொருத்தவரை கண்டிப்பா இது ஒரு புளுட்டானிக் ரிலேஷன்ஷிப் கிடையாது. நான் அது மாதிரி பார்க்கல. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.
நமக்கு நடுவுல இருக்குற தடைகள் எல்லாம் எனக்கு புரியுது. ஆனா, அட்லீஸ்ட் வி ஹேவ் டு பி கம்போர்ட்டபிள் வித் ஈச் அதர். நீ என் பக்கத்தில் உட்கார கூட ஷையா ஃபீல் பண்ணா, எனக்கு ஹர்ட்டிங்கா இருக்கும்.
எனக்கு அது நம்பிக்கைய அடிப்படையா வச்சிருக்கிற விஷயம். எல்லாமே என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையான்ற புள்ளில கொண்டு வந்து நான் நிறுத்த முடியாது. எனக்குமே அது கஷ்டம் தான். நீ இப்ப இந்த இடத்துக்கு வந்ததே நீ என் மேல வச்சிருக்கிற நம்பிக்கை தான்.
எனக்கு அது புரியுது. ஆனா எல்லா நேரமும் நான் அதை ஞாபகப்படுத்திட்டே இருக்கனும்னா என்னோட இயல்பு போயிடும்.” என தன்னால் முயன்ற அளவு விளக்க முயன்றான்.
அலெக்ஸ் கூற வருவது அவளுக்கு புரியாமல் இல்லை. ஜெனியுடனும், பீட்டருடனும் தானே அதிக நேரம் செலவழித்திருக்கிறாள். அவர்களது காதல் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் எல்லாம் ஒரளவு தெரியும் தான்.
அதுவும் ஜெனி மிருதுளாவிடம் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசி விடுவாள். சில சமயம் அவள் பேசுவதை கேட்கும் மிருதுளாவுக்கு முகம் சிவந்து விடும்.
“இவ்ளோ டீடெயில் எனக்கு தேவை இல்லை ஜெனி” என மறுப்பவளிடம்,
“எல்லாம் ஜெனரல் நாலெட்ஜ் தான். ஏற்கனவே லேட். பின்னாடி உனக்கு யூஸ் ஆகும் லவ்லி” என கண் சிமிட்டுவாள்.
எல்லாம் புரிகிறது. அவர்கள் பார்வையில் தவறும் இல்லை. ஆனால் வளர்ப்பு, வளர்ந்த சூழல் என்றவைகளின் தாக்கத்தை அவ்வளவு சுலபமாக தவிர்க்க முடியாதே.
காலங்கள் மாறி விட்டது. உறவின் நிலைப்பாடுகளும் மாறி விட்டது.யாரையும் குறை சொல்ல முடியாது. அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. அதில் எல்லாம் மிருதுளாவுக்கு தெளிவு தான்.
ஆனால் அவளுக்கு என்று இத்தனை வருட வாழ்வில் நிர்ணயம் செய்த கொள்கையும், கோட்பாடுகளும் ஒரே நாளில் விட்டொழிக்க முடியாதே.
கலைவாணி. அவரைப் பார்க்கும் போது அவர் கண்களைப் பார்த்து ‘நான் எந்த விதத்திலும் உங்கள் பார்வையில் தவறான காரியத்தை செய்யவில்லை’ என்று நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில், அவளை நிறுத்தும் எந்த விஷயத்தையும் மன உறுத்தல் இல்லாமல் அவளால் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
தன் துணையை தானே தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது தான். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளும் பாதை என்று ஒன்று இருக்கிறதே. அதில் யாருக்கும் தலை குனிவு ஏற்படுத்தும் விஷயத்தை அவள் செய்வது கடினமே.
இதை எல்லாம் அலெக்ஸுக்கு என்னவென்று சொல்லி புரிய வைப்பாள். அவன் கண்களில் அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மயக்கம் தெரிகிறது; காதலும், கனிவும் நிரம்பி வழிகிறது. அவளை இழுத்தணைத்து, இதழ் பதித்து, இளைப்பாறும் வேட்கையை அவன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதும் தெரியாமல் இல்லை.
நம்பிக்கை. அவனை நம்பாமல் வேறு யாரை நம்புவாள். அவன் பேச்சில் உண்மை இருக்கிறது என்பதை அவள் உணர்கிறாளே. இந்த சில தினங்களிலேயே அவன் மீது நம்பிக்கையும், மரியாதையும் அதிகரித்திருக்கிறதே தவிர குறைந்ததில்லை.
ஆனால் அவளது செயல்களை, அவன் நம்பிக்கையுடன் இணைத்துப் பார்த்தால், வலிக்கிறதாமே. இதை எங்ஙனம் சீர் செய்வாள்?
கோர்த்திருந்த அவன் கரங்களைப் பிரித்து, மீண்டும் தன் கரத்தோடு கோர்த்துக் கொண்டவள்,
“லெக்ஸி, நீங்க சொல்றது எனக்கு புரியுது. இது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு.
நீங்க சொன்ன மாதிரி, நம்பிக்கை இல்லாம இருந்திருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன்.
ஆனா என்னோட வேல்யூ சிஸ்டம் வேற லெக்ஸி. ஓவர் நைட் அதெல்லாம் மாறாது. ப்ளீஸ், நீங்க ஹர்ட் ஆகுறதுக்கு இதுல எதுவும் இல்லை.
முன்னாடி நீங்க சொன்ன மாதிரி திஸ் இஸ் டைம் டு அண்டர்ஸ்டாண்ட் ஈச் அதர். அண்ட் ஐ திங்க் வி ஆர் டூயிங் தேட் குட் சோ ஃபார். நீங்க ஒன்னொன்னா என்கிட்ட கேட்குறதே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இட்ஸ் டேகிங் மீ க்ளோசர் டு யூ.
என்னோட அம்மாக்கு முன்னாடி தலை குனிஞ்சு நிற்கிற மாதிரி எந்த விஷயத்தையும் என்னால செய்ய முடியாது. வினயோட நடந்த விஷயங்களினால எனக்கு கல்யாணத்துல இருந்த நம்பிக்கையே போய்டுச்சு.
ஆனா அதுக்காக திருமணத்தை மீறிய ஒரு ரிலேஷன்சிப்ல என்னால நிம்மதியா இருக்க முடியுமான்னா, அதுக்கு பதில், இல்லைன்றது தான்” என தவிப்புடனே கூறினாள்.
அவள் கூறுவதை உள்வாங்க சற்று நேரம் எடுத்தவன்,
“எனக்கு புரியல. சோ யூ திங்க், எ பீஸ் ஆஃப் பேப்பர் டிசைட்ஸ் எவிரிதிங் பிட்வின் அஸ்?” என தீவிரமாக கேட்டான்.
“இல்லை தான். ஆனா அந்த தெளிவு வர்ற வரைக்கும் என்னோட மைண்ட் ஆட்டோ பைலட் மோட்ல இந்த ரூல்ஸ் எல்லாம் அப்ளை பண்ணிடும்” என அவளும் தீவிரமாக பதில் சொல்ல, அலெக்ஸ் வாய் விட்டு சிரித்தான்.
“லுக் மிரு. இவ்ளோ சீரியஸ்னெஸ் வேண்டாம். ஆல் ஐ ஆம் ஆஸ்கிங் இஸ் டிரஸ்ட் மீ. என் கூட இருக்குறது பழகிக்கோ.
நீ ஒரு ஹக் கூட கிடையாதுன்னு சொன்னப்பவே எனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சு. ஆனா என்னோட பக்கத்தையும் நீ தெரிஞ்சுக்கனும். எனக்கு ராபர்ட் தவிர சொல்லிக்கிற மாதிரி யாரும் இல்லை.
நான் தான் சொல்லிருக்கேனே. வளர்ந்தது எல்லாம் ஃபாஸ்டர் ஹோம்ஸ்லன்னு. பெரிசா நான் யாரையும் தேடினது கிடையாது. தனிக்காட்டு ராஜா மாதிரி தான் சுத்திட்டு இருப்பேன்.
அதுக்கு வருத்தப்பட்டதும் இல்லை. ஆனா இந்த ஒரு வாரமா, ஐ மிஸ்ட் யூ மிரு. தனியா இருக்குறது கொடுமையா இருந்துச்சு. எனக்கு உன்னைய என் கூடவே வச்சிருக்கனும் போல இருக்கு.
ஐ கேன் ஃபீல் யூ. நீ ஒரு பேமிலி பேக்க்ரவுண்ட்ல இருந்துட்டு இப்ப தனியா இருக்கனும்னா அது என் நிலைமைய விட கஷ்டம். எனக்கு அதெல்லாம் தூக்கி போட்டுட்டு உன்னைய ஹாப்பிய வச்சிக்கனும் போல இருக்கு. சோ உனக்காகவும் தான் சொல்றேன்.
ஆஃப் கோர்ஸ், தெர் இஸ் எ பிசிகல் எலிமன்ட். வி மிஸ்ட் த மொமெண்ட்ஸ். உன்னை கிஸ் பண்ணனும்னு தோன்ற அர்ஜ நான் என்ன பண்றது? அது ஒரு அழகான தருணம் தானே. இதுல என்ன தலைகுனிவு வந்திடப் போகுதுன்னு எனக்கு தெரியல.
நான் பொய் சொல்ல மாட்டேன் மிரு. ஐ வாண்ட் டு ஃபீல் யுவர் ஸ்கின் ஆன் மீ. ஃபீல் அனதர் ஹூயூமன் பீயிங் இன் பாடி அண்ட் சோல். ஐ பேன்ஸி யூ இன் மை ட்ரீம்ஸ். அது எனக்கு தப்பா தெரியல. இன் ஃபாக்ட் அது நிஜமாகுறதுக்கு என்ன தடைன்னு கூட எனக்கு புரியல.
பட், ஐ ரெஸ்பெக்ட் யுவர் வேல்யூஸ். என்னோட லோன்லினஸ் அண்ட் லாங்கிங்க நீயும் புரிஞ்சுக்கோ. அதை அக்னாலட்ஜ் பண்ணு. இந்த ஒரு ரூல் புக்குள்ள உன்னையும், என்னையும் அடைச்சு வச்சிடாதே. அவர் ரிலேசன்சிப் இஸ் பிக்கர் தென் தேட்” என மீண்டும் தீவிரமாகவே முடித்தான்.
அவனது ஆசைகளையும், ஏக்கங்களைக் கேட்டு மிருதுளா பேச்சற்றுப் போனாள். இதற்கு என்ன பதில் கூற முடியும். அவன் தரப்பு எதிர்பார்ப்புகளையும், நியாயங்களையும் பகிர்வதில் தவறில்லையே. தனிமையின் கொடுமை அவளறிவாளே. வாரி அணைத்து ஆறுதல் படுத்த, வானளவு ஆசை இருந்தாலும், காலம் கனிந்து வர காத்திருக்க வேண்டுமே.
அவள் மௌனமாக இருப்பதைப் பார்த்தவன்,
“ஹேய், என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட? ஓவரா பேசிட்டேனா?” என கேட்டான்.
“ஹாங்”, என தலையை உலுக்கியவள்,
“அதெல்லாம் இல்லை. பேசுறது நல்லது தான்.” என அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அதில் நிம்மதி பெருமூச்சு விட்டவன், மீண்டும் அவள் கையை வருடிக் கொண்டே,
“ரொம்ப பிரசரைஸ் பண்றனா உன்னை?” என கேட்டான்.
“ம்ம்ம், டென்ஷனா தான் இருக்கு. பட், விடுங்க பார்த்துக்கலாம். நான் டென்ஷன் ஆனா நீங்க கூல் பண்ணுங்க. நீங்க டென்ஷன் ஆனா நான் கூல் பண்றேன்”
“நீ சொன்னதுலயே இந்த ரூல் தான் நல்லா இருக்கு. ஐ லைக் இட்” என்றவன்,
“ஆமா, நீ என்ன பண்ணா கூல் ஆவ” என தனது அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான்.
அதற்கு பதில் கூறாமல்,
“நீங்க என்ன பண்ணா கூல் ஆவிங்க?” என அவனிடமே பதில் கேள்வி கேட்டாள்.
அவளின் தந்திரம் புரியாதவன்,
“நான் அவ்ளோ சீக்கிரம் டென்ஷன் ஆக மாட்டேன் மிரு. நத்திங் புட்ஸ் மீ ஆஃப். அப்படி ஒருவேளை ஆகிட்டா கூல் ஆகுறது கஷ்டம் தான். நீ என்னோட டார்லிங் அப்டின்றதால வேணும்னா உனக்கு ஸ்பெஷல் கன்சிடரேஷன் கொடுக்கலாம். இஃப் யூ கிஸ் மீ ஃபர்ஸ்ட் தென், நான் கூல் ஆயிடுவேன்” என அப்பாவியாக உண்மையை உரைத்தான்.
“ஓ….அப்புடி, ரைட் ரைட்” என மிருதுளா சிரிக்க,
“நீ சொல்லவே இல்லையே. நான் என்ன பண்ணி உன்னை கூல் பண்றது?” என மீண்டும் கேட்டான்.
“அதெல்லாம் நானே சொல்லனுமா. நீங்களா தான் கண்டு பிடிக்கனும். எல்லாமே நானே சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு வேலை வேண்டாமா” என உதடு சுழிக்க, ‘அடிப்பாவி’ என்பது போல் வாய் பிளந்து பார்த்தான் அலெக்ஸ்.
“நீ பொழைச்சுக்குவமா. என்ன அறிவு? சே, அப்படியே புல்லரிக்குது” என கையை சொரிய, மிருதுளாவுக்கு சிரிப்பாக இருந்தது.
அலெக்ஸிடம் இருக்கும் போது அவளது இயல்பு மீண்டு கொண்டு இருப்பதை அவளே உணரவில்லை.
“சரி, ரூல்ஸ் அவ்ளோ தானா, இன்னும் இருக்கா?” என தலையில் கை வைத்துக் கேட்டான்.
“இன்னும் நிறைய இருக்கே” என அவள் ஒரு பெரிய பட்டியலை அடுக்க, அலெக்ஸ் அலறினான்.
“தெரியாம உன் கிட்ட இந்த ஐடியா குடுத்துட்டேன் மிரு. விட்ரு, ப்ளீஸ். இதுக்கெல்லாம் நான் தாங்க மாட்டேன்.
அண்ட் சில ரூல்ஸ்சுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். எனக்கு எப்படி கூப்பிடனும்னு தோனுதோ அப்படி தான் கூப்பிடுவேன். வாரத்தில எப்ப எல்லாம் பார்க்கனும்னு தோனுதோ அப்ப எல்லாம் வந்து பார்ப்பேன்.
சோ அந்த ரூல் எல்லாம் அழிச்சிடு ப்ளீஸ். மித்த ரூல்ஸ் வேணும்னா உனக்காக டிரை பண்றேன். ஒரு மாசம் கழிச்சு ரிவ்யூ பண்ணி, இன்னும் கொஞ்சம் ரூல்ஸ் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.
ஆனா நீ இப்படி ஒவ்வொரு ரூலா சொல்ல சொல்ல, அதை எல்லாம் அப்பவே பிரேக் பண்ணணும் தான் தோனுது” என்று அவன் கண் சிமிட்ட, தன் வலது முழங்கையை வைத்து, லேசாக அவன் விலாவில் இடித்தாள்.
“ஹா ஹா” என சிரித்தவன்,
“சரி கிளம்பலாமா. நீ அவ்ளோ தூரம் வேற டிராவல் பண்ணனும்” என்க, அவனுடனே கிளம்பினாள்.
ஸ்ட்ராட்ஃபோர்ட்டில் அவள் இறங்கி, லைன் மாறுவதற்கு செல்ல, அலெக்ஸும் அவளுடனே கூட வர,
“நீங்க கிளம்பலையா?” என்றாள்.
“இல்லை, உன் கூட வந்துட்டு வரேன்” என்றவன் அவளுடனே நடந்தான். சரி, அன்று போல் நடை மேடை வரை வருவான் போலும் என்று நினைத்தவள், பேசிக்கொண்டே நடந்தாள்.
நடைமேடையை அடைந்து சில நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பின், அவள் ஏற வேண்டிய தொடர்வண்டி வந்து விட்டது. அவனிடம் விடை பெற்று ஏறியவள், கோட்டை கழட்டி வைத்து விட்டு வசதியாக அமர்ந்து கொண்டு, புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கவும், யாரோ அருகில் வந்து அமரவும் சரியாக இருந்தது.
ஏதோ உந்துதலில் திரும்பி பார்த்தாள். அலெக்ஸ் அவளைப் பார்த்து, புன்னகை முகமாக கண் சிமிட்டினான்.
‘நிஜமாகவே அவன் தானா, இல்லை தான் இருக்கும் நிலையில் யாரைப் பார்த்தாலும் அவனைப் போல் தெரிகிறதா’, என நினைத்தவள், நாசூக்காக கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு பார்க்க, அவனே தான்.
“லெக்ஸி. இங்க என்ன பண்றீங்க?” என ஆச்சரியமாகக் கேட்டாள்.
“நத்திங், உன் கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கனும் போல இருந்துச்சு. அது தான் இந்த டிரெயின்ல ஏறிட்டேன்” என்றவனைப் பார்த்து மிருதுளாவுக்கு உருகியது.
பதில் எதுவும் கூறாமல், அவன் கை வளைவுக்குள் கைகளை விட்டு, அவன் தோளில் சாய்ந்து விட, அலெக்ஸுக்கு வீடு வந்த உணர்வு.
“லேட் ஆகிடாதா உங்களுக்கு? ரிடர்ன் டிரெயின் இந்த டைம்கு மேல குறைஞ்சிடும்.”
“பரவாயில்லை ஒரு நாள் தானே. பார்த்துக்கலாம்”
அவன் கூறியது என்னவோ ஒரு நாள் தான். ஆனால் இதுவே பல நாள் தொடர் கதை ஆகி விட்டது.
வாரத்தில் சில தினங்கள் காலையிலோ, மாலையிலோ அவள் பயண நேரத்தைக் கணக்கிட்டு அவளுடன் இணைந்து கொள்வான். அவள் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கி, மிருதுளாவின் வீடு வரை நடந்து வருபவன், அதற்கு பின் விடை பெற்று திரும்பி விடுவான். மிருதுளாவுக்கு தான் அவன் அலைச்சலைப் பார்த்து பாவமாக இருக்கும்.
‘வேண்டாம்’ என்றாலும் கேட்க மாட்டான். அலைபேசியில் எல்லாம் பெரிதான பேச்சுக்கள் இல்லை இருவருக்கும். எப்போதாவது வார இறுதிகளில் சில மணி நேரங்கள் சந்திப்பதுண்டு. அதை விட்டால், இந்த பயணங்கள் தான் அவர்களது காதல் பயிரை வளர்த்தது எனலாம்.
நாட்கள் நகர நகர புரிதலும், நெருக்கமும் மேம்பட்டது. சில சமயம் கருத்து வேறுபாடுகளினால், ஊடலும் நடக்கும் தான். அலெக்ஸை அமைதிப்படுத்த, மிருதுளாவுக்கு வழி தெரிந்தது போல், அவளை மலையிறக்க இவனுக்கு தான் இன்னும் வழி தெரியவில்லை.
சில சமயம், ராபர்ட் உடனோ, இல்லை ஜெனி, பீட்டருடனோ சேர்ந்து எங்காவது சுற்றுலா செல்வதும் நடக்கும். அப்போதெல்லாம் அலெக்ஸின் பாடு தான் திண்டாட்டம்.
அவளை அருகில் வைத்துக் கொண்டு எட்ட நிற்பது அவனுக்கு கொடுமையான விஷயம். மிருதுளாவுக்கும் அவனது அலைப்புறுதல் தெரிகிறது தான். ஆனால் அவளால், அவளமைத்த வட்டத்தை விட்டு வெளியே வரவும் முடியவில்லை. இதுவே அவர்களுக்கிடையே பிணக்காக மாறும் என்று தெரிந்தால், இன்னும் கவனமாக இருந்திருப்பாளோ என்னவோ.