ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ஆரம்பித்து வைத்து விட, சில நிமிடங்கள் கழித்தே, மிருதுளாவுக்கு தன் செயலின் வீரியம் உரைத்தது.
‘போச்சு, இதை வைச்சு முதல்லேர்ந்து ஆரம்பிக்கப் போறார்’ என சற்று பதட்டமாகவே அலெக்ஸைப் பார்க்க, அவன் முகத்தில் பூரிப்பு.
‘என்ன தான் செய்கிறாள், பார்க்கலாம்’ என அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.
“லெக்ஸி, அ….அது நான் ஏதோ ஒரு வேகத்துல என்னவோ பண்ணிட்டேன். நீ..நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”
அவ்வளவு தூரம், பக்கம் பக்கமாக அவனுக்கு விதிமுறைகளைக் கொடுத்து விட்டு, அதற்கு எதிர்மறையாக தான் நடந்து கொள்வதும் சரியான விஷயம் இல்லையே. அதுவே அவள் பதட்டத்துக்குக் காரணம்.
அலெக்ஸும் அதை உணர்ந்தவன் போல்,
“ரிலாக்ஸ் மிரு. இதுல தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? சொல்லப் போனா, எனக்கு சந்தோஷம் தான்.
உன்னோட ரூல் புக்கையும் தாண்டி, எனக்காக ஒரு விஷயம் செய்ய நினைக்கிற அப்டின்றதே உன்னோட அன்பின் வெளிப்பாடு தானே. அதெல்லாத்தையும் தாண்டி இதெல்லாம் கொயட் நேச்சுரல் மிரு.
பட், யூ டோண்ட் ஹேவ் டு டூ தேட். நான் முன்னாடியே சொன்ன மாதிரி, நீ உனக்கு கம்ஃபோர்ட் இல்லாத எந்த விஷயத்தையும் எனக்காக கஷ்டப்பட்டு பண்ண வேண்டாம்.
நான் என் எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லுவேன் தான். எனக்கு ஒரு அவுட்லெட் வேணும்ல. உன்னைப் பத்தி, நம்மளைப் பத்தி நான் என்ன ஃபீல் பண்றேன்னு உங்கிட்ட மட்டும் தானே சொல்ல முடியும். சொல்லிட்டா அந்த நேரத்தில முடிஞ்சுடும். இல்லாட்டி, அது மூளைய கொடைஞ்சிட்டே இருக்கும்.
ஆனா அது உன்னைய பிரசரைஸ் பண்றதுக்காக இல்லை. பார்க்கலாம், நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன பண்றதுன்னு. ரெண்டு பேருக்கும் மியூச்சுவலா ஒத்து வர்ற மாதிரி தான் முடிவெடுக்கனும். நம்ம அது வரைக்கும் வெயிட் பண்ணலாம்.
சோ இனிமே என்னைய ப்ளீஸ் பண்றதுக்காக கூட, டோண்ட் டிரபிள் யுவர்செல்ஃப்” என்று நிறுத்தியவன்,
“ஆனாலும் நீ சரியான கேடி மிரு. இது வீட்டுக்குள்ளயே கொடுத்திருந்தா, கிஃப்ட் எக்ஸ்டெண்ட் ஆயிருக்கும்னு வாசல்ல கொண்டு நிறுத்திட்ட.
பட், ஐ என்ஜாயிட் இட். பிளசண்ட் சர்ப்ரைஸ். நான் எதிர்பார்க்கவே இல்லை, இப்படியொரு கிஃப்ட்ட. தேங்க்ஸ் ஃபார் யுவர் ரிடர்ன் கிஃப்ட்.
டேக் கேர், பை” என அவள் கன்னம் தட்டி விடை பெற்றான்.
அலெக்ஸ் சரியான விதத்தில் புரிந்து கொண்டான் என்பதை அறிந்த பின் தான், மிருதுளாவுக்கு மூச்சே வந்தது. அவன் கிளம்பியதும் சிரிப்புடன், கதவை தாளிட்டு வந்தவள் முகத்தில் வெட்கம் இன்னும் மிச்சம் இருந்தது.
புடவையை கூட மாற்றாமல், அவன் வரைந்த ஓவியத்தைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்க. ஜெனி வந்ததும் தான், அடித்துப் பிடித்து எழுந்து கதவை திறந்தாள்.
“வாவ், லவ்லி ரொம்ப அழகா இருக்கு இந்த டிரெஸ்” என தலை முதல் கால் வரை அவளை ரசித்துப் பார்த்தவள்,
“ஹேப்பி பேர்த்டே மை ஸ்வீட் லவ்லி கேர்ள்” என அவளை வாழ்த்தி, அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்ன விஷயம் லவ்லி, உன் ஃபேஸ் எக்ஸ்ட்ரா பிரைட்டா இருக்கு?” என அவளை குறுகுறுவெனப் பார்த்தாள். அதில் இன்னமுமே முகம் சிவந்தது மிருதுளாவுக்கு.
“ஹேய், யூ ஆர் ப்ளஷிங். வாட் டிட் ஐ மிஸ்” என ஆர்வமாகக் கேட்டாள்.
அவளுக்கு பதிலளிக்காமல், அலெக்ஸின் பரிசை எடுத்து ஜெனியின் முன் நீட்டினாள். அதைக் கையில் வாங்கிப் பார்த்த ஜெனிக்கும் ஆச்சரியமே. அலெக்ஸ் இந்தத் துறை என்று தெரியும் தான். ஆனால் இவ்வளவு திறமை சாலி என்பது தெரியாதே.
அதைப் பார்த்து சிலாகித்தவள், கவனமாக மிருதுளாவின் கைகளில் கொடுத்தாள்.
“இட்ஸ் அமேசிங். ஃப்ரேம் பண்ணி மாட்டிடு” என்க, மிருதுளாவும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.
“சோ இன்னிக்கு ஒரே பார்ட்டி தான் போலயே அலெக்ஸ் கூட. டெல் மி ஆல் அபவுட் இட்” என தோழியை ஊக்கினாள்.
மேலோட்டமாக ஜெனியிடம் அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டே, ஜெனிக்காக செய்திருந்த பாயாசத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.
“ம்ம்ம், ஐ ஆம் நாட் சர்ப்ரைஸ்ட். நான் தான் முன்னாடியே கேட்டேனே உங்கிட்ட. எப்போ அலெக்ஸ் கூட மூவ்-இன் பண்ணப் போறன்னு.
இங்க தேட்ஸ் ஹௌ இட் வொர்க்ஸ். உனக்கு தெரியும்ல. நானும், பீட்டரும் வீ ஆர் ஹை ஸ்கூல் ஸ்வீட் ஹார்ட்ஸ். நான் ஸ்கூல் முடிச்ச உடனே வீ மூவ்ட் இன் டுகெதர் இன் அ ஸேர்ட் ரூம்.
பார்ட் டைம் வொர்க் பண்ணிட்டே தான் படிச்சோம். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா தான் வீ அப் கிரேடட் டு திஸ் ஹவுஸ். கல்யாணம், குழந்தை எல்லாம் பெரிசா ஆர்வம் இல்லை. எனக்குத் தெரிஞ்ச பல பேரும் இந்த மாதிரி லைஃப்ஸ்டைல் தான் ஃபாலோ பண்றாங்க.
சோ அலெக்ஸ் எதிர்பார்க்குறது தப்பு இல்லை. சொல்லப் போனா, அவன் ரொம்ப கன்சிடரேட்டா தான் எல்லாம் பண்றான். நீ தான் அவனுக்கு சரியா புரிய வைக்கணும். வாட் வொர்க்ஸ் ஃபார் யூன்னு நீங்க ரெண்டு பேரும் ஓப்பனா பேசினா தான் சரியா வரும்.
நீ எதுவும் சொல்லாம, அவனே புரிஞ்சுக்கிறது கஷ்டம். பேசாம அப்படியே விட்டுட்டா எல்லாம் எதுவும் சரி ஆகாது. உள்ளேயே எல்லாம் பில்ட் அப் ஆயிட்டு ஒரு நாள் வெடிச்சிடும்” என்க, மிருதுளாவுக்கும் இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே.
“பை த வே, ரைஸ் புட்டிங் ரொம்ப நல்லா இருக்கு லவ்லி, தேங்க்ஸ்” என பாராட்டினாள் ஜெனி.
“சரி, பொறுமையா யோசிக்கலாம். இப்ப ஃபன் டைம் கிளம்பு, கிளம்பு” என அவளை அவசரப்படுத்தினாள். மிருதுளாவும், அப்படியே கிளம்ப,
“ஹேய், இப்படியேவா வர போற. அழகான டிரெஸ், பாழ் ஆகிரும். முதல்ல மாத்திட்டு, கம்பர்ட்டபிளா ஏதாச்சும் போட்டுட்டு வா” என அறிவுறுத்த,
“ஓ, ஆமால. மறந்தே போய்ட்டேன்” என அசடு வழிந்தவள், உடையை மாற்றி விட்டு ஜெனியுடன் கிளம்பினாள்.
“பார்த்தாலே, தெரியுது. நீ ட்ரீமி ஐஸோட திரு திருன்னு பாக்குறதுலயே, இந்த உலகத்துலயே இல்லைன்னு புரியுது” என ஜெனி வழி நெடுக மிருதுளாவை சீண்டினாள்.
ஸ்பாவை அடைந்ததும் அவர்களுக்கான சேவைகள் தொடங்க, தோழிகள் இருவரும் பேச்சைத் தொடர்ந்தனர்.
“ஜெனி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?”
“எனிதிங் ஃபார் யூ லவ்லி. என்ன பண்ணனும்?”
“எனக்கு உங்க பிரிட்டிஷ் கல்ச்சர், டிஷ்சஸ் எல்லாம் எனக்கு சொல்லி தர்றீயா?”
“பார்றா, அவ்வளவு டெவலப் ஆகிட்டீங்களா. வித் பிளஷர் லவ்லி. கஸ்டம்ஸ் எல்லாம் பெரிசா எதுவும் இல்லை. முக்கால் வாசி உனக்கு எல்லாமே தெரியும். ஃபுட்…” என்று இழுத்தவள், கலகலவென சிரித்தாள்.
“யு ஆர் ஆஸ்கிங் த ராங் பேர்சன். உனக்கே தெரியுமே, பீட்டர் தான் எங்க வீட்டு குக்கிங் எக்ஸ்பேர்ட். வேணும்னா அவன் கிட்ட கேக்கலாம். இல்லாட்டி, இருக்கவே இருக்கு, பிபிசி. அங்க இருந்து ஆரம்பிக்கலாம். ஆமா என்ன திடீர்னு, இங்கிலீஷ் ஃபுட் எல்லாம் லிஸ்ட்ல வந்திருக்கு?”
“தேங்க்ஸ். இன்னிக்கு அலெக்ஸ் வீட்டுக்கு போயிருந்தேன்ல. அவர் பெரிசா எதுவும் சமைக்கிற மாதிரியே தெரியல. எப்பக் கேட்டாலும் சாண்ட்விஜ், சூப், சேலட் இது தவிர எதுவும் சாப்பிடற மாதிரி தெரியல. ஹோட்டல்ல ரொம்ப இண்டிரெஸ்டட்டா சாப்பிட்டாங்க.
அது தான் ஒரு ஆர்வம். உங்களோட ஸ்பெஷல் அயிட்டம் எதாவது செஞ்சு கொடுக்கலாம்னு.”
“நீ இவ்ளோ மெனக்கெட தேவை இல்லை. நாங்க எது கொடுத்தாலும் சாப்பிடுவோம்” என கண் சிமிட்டியவள்,
“இது மட்டும் போதுமா, இல்லை வாட் அதர் திங்க்ஸ் இங்கிலீஷ் ப்ளோக்ஸுக்கு பிடிக்கும்னு சொல்லட்டுமா” என்றவள் மிருதுளாவை நமுட்டு சிரிப்புடன் பார்க்க,
“இல்லை வேண்டாம், அதெல்லாம் எனக்கே தெரியும்” என மிடுக்காக கூற,
“அடிப்பாவி” என வாய் பிளப்பது ஜெனியின் முறையாயிற்று.
“பரவாயில்லை, க்ரை பேபி இப்போ ஹாப்பி பேபியா இருக்குறதே பெரிய விஷயம். ஐ ஆம் ஹாப்பி ஃபார் யு லவ்லி” என்ற ஜெனிக்கும், மிருதுளா கொஞ்சம் கொஞ்சமாக புது உறவு மேம்பட முயற்சி எடுப்பது மகிழ்ச்சியே.
அலெக்ஸின் மீதும் அவளுக்கு நல்ல அபிப்பிராயமே. மிருதுளா சொல்லாமலே, பீட்டர் மூலமாக அவனைப் பற்றி விசாரித்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பேக்கிரவுண்ட் செக் அளவுக்கு செய்திருந்தான் பீட்டர். சந்தேகப்படும் படியாக எதுவும் இல்லாததால், பீட்டருக்கு திருப்தியே.
அவ்வப்போது அலெக்ஸ், ராபர்ட்டுடன் ‘டிரிங்க்ஸ் மீட்’டும் நடக்கும். அதெல்லாம் ஜெனியுடன் அவன் பகிர்ந்திருக்க, தோழி மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற எண்ணமே ஜெனிக்கு. இருவரும் பொதுவாக அடுத்தவர் விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடுபவர்கள் இல்லை தான். ஆனால் மிருதுளாவைப் பொறுத்த வரை அவர்களுக்கு ஒரு தனி அக்கறையும், பொறுப்புணர்வும் வந்திருந்தது.
அவள் ஒரு தனித்தீவாக ஒரு வட்டத்துக்குள் தன்னை ஒடுக்கி வைப்பதை முடிந்த அளவு மாற்ற முயன்றனர். அதனாலேயே அவள் மீது ஒரு கவனமும் வைத்து, வாய்ப்பு கிடைக்கும் போது அவளையும் அவர்களது திட்டங்களில் இணைத்துக் கொள்வர்.
பெண்கள் இருவரும் வம்பு வளர்த்த படி தங்களை மெருகேற்றுவதில் மூழ்கி இருக்க, இங்கிருந்து கிளம்பிய அலெக்ஸ் நேராக ராபர்ட்டின் வீட்டில் போய் நின்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்த ராபர்ட், கதவைத் திறந்து அலெக்ஸை வீட்டினுள் அழைத்தான்.
“என்ன ப்ரோ, அதிசயமா இருக்கு? எத்தனை வாட்டி கூப்பிட்டாலும் இந்தப் பக்கம் தலை வைச்சு பார்க்க மாட்ட. இன்னிக்கு என்ன சொல்லாம கொள்ளாம வந்து நிற்கிற” என வினவினான்.
அலெக்ஸ் அவனை முறைக்க, ‘வேண்டாம் ராபி, இவன் இருக்குற மூடுக்கு நீ சிக்கினா அவ்ளோ தான்’ என உஷாரானவன்,
“ஆல்ரைட், நீ எப்ப வேண்ணா வரலாம்னு தான் சொன்னேன். வேற ஒன்னும் இல்லை. சேல் ஐ ஃபிக்ஸ் யூ அ டிரிங்க்?” என கேட்டான்.
“சம் திங் ஹாட் ப்ளீஸ்” என்ற அலெக்ஸ், அங்கிருந்த பால்கனியில் போய் நின்றான்.
சில நிமிடங்களில், ராபர்ட் இரு கோப்பைகளுடன் வந்து ஒன்றை அலெக்ஸிடம் நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவன், ஒரு மிடறு விழுங்கியவன்,
“இன்னிக்கு மிருவுக்கு பேர்த்டே” என அமைதியாக சொன்னான்.
“நைஸ். கன்வே மை விஷ்ஷஸ் டு ஹெர்” என்றவன்,
“நீ ஏன்டா அவ கூட இருக்காம என்னைய தேடி வந்திருக்க? அவளை மீட் பண்ணலையா இன்னிக்கு?” என வினவினான்.
“ம்ம்ம், மீட் பண்ணேன். ஈஸ்ட்ஹேம் போனோம். தென் ஷி ஸ்டாப்ட் பை மை ஹோம். அவளை வீட்ல விட்டுட்டு தான் நேரா இங்க வர்றேன்.”
நண்பனின் தயக்கமும், ஆதங்கமும் ராபர்ட்டிற்கு புரியாமல் இல்லை. இதில் அவன் சொல்வதற்கு எதுவும் இல்லையே. எனவே அவனே பேசட்டும் என காத்திருந்தான்.
“முடியலை ராபி. ஷி இஸ் அ லவ்லி கேர்ள். ஒரு வாட்டி ரொம்ப ஹர்ட் ஆகிட்டா. திரும்பவும் அந்த டிரஸ்ட் பில்ட் பண்றது கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப டிஃபரெண்ட் பெர்சனாலிட்டி. இதுல லாங்குவேஜ், கல்ச்சுரல் வேறு.
ஐ ஆம் ஸ்டரக்கிளிங். எப்படி நெக்ஸ்ட் ஸ்டேஜ் எடுத்துட்டு போறதுன்னு தெரியல. நெக்ஸ்ட் ஸ்டெப் என்னன்னு கூட தெரியல. ஃபீல் ஸ்டரக்”
“ம்ம்ம், கொஞ்சம் டெலிகேட் சிச்சுவேஷன் தான். கவனமா ஹேண்டில் பண்ணாட்டி ரெண்டு பேருமே ஹர்ட் ஆகுற மாதிரி ஆய்டும். என்ன பண்ணலாம்னு இருக்க?”
“அது தான் தெரியல. இன்னிக்கு ஒரு ப்ராகிரஸ். மிருவோட அண்ணன் கிட்ட பேசினேன். மகி சீம்ஸ் டு பி அ நைஸ் கய். ரெண்டு பேரும் நிறைய நேரம் பேசினோம். அவர் நம்பர் கூட வாங்கியாச்சு. ஐ’ம் பிளானிங் டு பி இன் டச் வித் ஹிம்”
“வாவ், தேட்ஸ் குட் நியூஸ். வாட் இஸ் த பிளாக்கர் சேண்டி? எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு”
“மிரு இஸ் வெரி மச் இண்டு ஹெர் கல்ச்சர் அண்ட் வேல்யூஸ். இது வேலைக்காகனும்னா நெக்ஸ்ட் ஸ்டெப் இஸ் பாப்பிங் த கொஸ்டியன். டோண்ட் சீ எனி அதர் ரூட்”
“ம்ம்ம், அப்ப கஷ்டம் தான். ஐ சீ வாட் யூ மீன். மித்த விஷயத்தை விட்டிரு. உனக்கு மேரேஜ்கு ப்ரோபஸ் பண்றது என்ன பிரச்சனை”
“ஐ ஆம் ஸ்கேர்ட் ராபி. ஸ்கேர்ட் ஆஃப் ஹர்ட்டிங் ஹெர். அவ பூ மாதிரி இருக்கா. எந்த டென்ஷனும் இல்லாம அவள கொண்டாடுற ஒருத்தன் தான் அவளுக்கு சரியா இருப்பான். நான் அப்படி இருப்பேனான்னு எனக்கு தெரியல.
சில நாளைக்கு ஒரு தடவை பார்த்து ஹாய், ஹலோ சொல்றதுல்ல என்ன தெரிஞ்சிடும் சொல்லு. எனக்கு வாழ்ந்து பார்க்கனும் ராபி. டே இன், டே அவுட், ஆல் சீசன்ஸ் த்ரூ த இயர் ஐ வாண்ட் டு பி வித் ஹெர்.
அவ அதுக்கு கண்டிப்பா ஒத்துக்க மாட்டா. அந்த மாதிரி அவளுக்கு நெருக்கடி கொடுக்கிறதுக்கும் எனக்கு இஷ்டம் இல்லை. சோ, ஐ ஆம் டார்ன்”
அலெக்ஸ் அவனிடம் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதே ஒரு அதிசயம் என்றால், அவனால் ஒரு விஷயம் முடியவில்லை என்பது போல் பேசுவது மற்றொரு அதிசயம். ஆனால் அலைப்புறும் நண்பனுக்கு என்ன ஆறுதல் சொல்வதும் அவனுக்கு தெரியவில்லை.
“எனக்கு ஒரு விஷயம் சொல்லு சேண்டி. நீ வாழ்ந்து பார்த்து என்ன முடிவு எடுப்ப? உனக்கு பிடிக்கலைன்னா மிருவ விட்டுடுவியா? அதுக்கு தான் யோசிக்கிறயா?”
“ஷட் அப் ராபி, அவளை விடறத பத்தியா நான் பேசுறேன். விட முடியலைன்னு தானே சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன உளர்ற” என அவனை அதட்ட,
“அப்புறம் என்னடா இடியட் உனக்கு குழப்பம்? உனக்கு வேற யாரையும் பிடிக்க போறதில்ல. நீ அவளுக்காக தான் எல்லாம் யோசிக்கிற, சோ கண்டிப்பா அவள ஹர்ட் பண்ண மாட்ட.
கோ, பாப் த கொஸ்டீன் மேன். ரிங் வாங்கிட்டியா?”
“ஹ்ம்ம்ம், அந்த அளவு எல்லாம் எதுவும் யோசிக்கல. மகி என்ன சொல்றாருன்னா கல்யாணம்னா அவங்க அம்மா, அப்பா கிட்ட எல்லாம் பெர்மிஷன் வாங்கனுமாம். அது கொஞ்சம் கஷ்டம் அப்டின்றத மாதிரி தான் சொன்னாரு”
“வாட்…பொண்ணுக்கு தானேடா ப்ரோபோஸ் பண்ணனும். ஆனா நீ யோசிக்கலைன்னு சொல்லிட்டு அவங்க அண்ணன் கிட்ட என்னடா பேசின” என ராபர்ட் குழம்பி போய் கேட்க,
“இல்லை, அவங்க எல்லாம் இன்னும் அரேஞ்ச்ட் மேரேஜஸ் தான் பண்ணுவாங்களாம்” என அலெக்ஸ் சோகமாக சொன்னான்.
“நீ பச்சைப் புள்ளையாவே இருக்க ப்ரோ. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூ டியூப் எல்லாம் எதுக்கு இருக்கு. தமிழ் மூவிஸ் இன்னிக்கு நைட் ஃபுல்லா பாக்குறோம். நாளைக்கே தமிழ் கல்ச்சர்ல பி.ஹெச்.டி வாங்குறோம்” என உற்சாகமாக சொல்ல, அலெக்ஸுக்கும் மறுக்க தோன்றவில்லை.
ராபர்ட் ஆர்வமாக கூகுள் துணை கொண்டு தேடி, ஒரு திரைப்படத்தைப் போட்டான்.
அரை மணி நேரம் தான் கடந்திருக்கும். அந்த ஆக்சன் படத்தை தாங்க முடியாமல், அலெக்ஸ் ராபர்டை கொலை வெறியோடு பார்த்தான்.
“என்ன ப்ரோ பிடிக்கலியா? இரு லிஸ்ட்ல அடுத்து என்ன இருக்குன்னு பார்க்கிறேன்” என்றவன், மற்றொரு படத்தைப் போட, அது முன்னதை விட மோசமாக இருந்தது.
ராபர்ட் அசடு வழிய, அலெக்ஸைப் பார்க்க, அவன்,
“நீ பண்ண வரைக்கும் போதும். இப்ப நம்ம ரியல் லைஃப்ல நடக்குறது தெரிஞ்சுக்கனும்னா மூவி பார்த்தா போதுமாடா. எல்லா இங்கிலீஷ் மூவிலயும், பார்த்த பத்து நிமிசத்துல பொண்ணு பெட்ல இருக்குற மாதிரி காண்பிப்பாங்க. அது உண்மையா என்ன?
உனக்கும் எனக்கும் தான் தெரியும் ரியாலிட்டி என்னன்னு. பொண்ணுங்கள பார்த்தாவே தெரிச்சு ஓடுறது படத்தைப் பார்த்து எப்படி தெரியும்.
நீ சொன்னன்னு, இதை பார்த்து ரெண்டு மணி நேரம் வேஸ்ட். நான் கிளம்புறேன்” என்று கிளம்ப எத்தனித்தான்.
“எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான். நான் உனக்கு இன்னும் ரிசெர்ச் பண்ணி நல்ல படமா போடுறேன்” என ராபர்ட் இன்னும் விடாமல் வாக்குறுதி கொடுத்தான்.
“சேண்டி, எனி வே, நீ மிரு கிட்ட உன்னோட அதர் லைஃப் சொல்லிடு, பிஃபோர் ப்ரோபோசிங். நீ அவளுக்கு கண்டிப்பா சாய்ஸ் குடுக்கனும். இவ்ளோ நாள் தள்ளி போட்டதே சரி இல்லை” என நண்பனை எச்சரிக்கவும் மறக்கவில்லை.