“அலெக்ஸ் தூங்கிட்டு இருக்கான். உள்ள வாங்க” என்ற ராபர்ட் ஒதுங்கி அவளுக்கு வழி விட,
“இல்லை, பரவாயில்லை. இதை அலெக்ஸ் கிட்ட குடுத்துடுங்க” என்றவள் வாசலில் இருந்தே அவள் எடுத்து வந்திருந்த டப்பாவை நீட்டினாள்.
“ஹேய், கமான் இன். நான் உங்களை இப்படி வாசலோட அனுப்புச்சிட்டேன்னு தெரிஞ்சா அலெக்ஸ் என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவான்.
எப்படியும் நான் வெளியே கிளம்புறதுக்கு தான் ரெடி ஆகிட்டு இருந்தேன். நீங்க உள்ளே வந்து வெயிட் பண்ணுங்க. நான் அவனை எழுப்புறேன்” என்று மீண்டும் அவளை அழைக்க, தயங்கிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
ஹாலில் பல இடங்களில் ஏதோ ஓவியத்தின் பல பாகங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அமர்வதற்கு ஏதுவாக, நீள்விருக்கையில் அவன் உபயோகித்த தலையணை, போர்வையை படுக்கை அறைக்கு எடுத்து சென்றான் ராபர்ட்.
அதுவரை அமைதியாக நடந்து வந்தவன், படுக்கை அறைக்குள் நுழைந்தவுடன் பரபரப்பாக, அலெக்ஸை எழுப்பினான். அவன் வந்தது தெரியாமல், அலெக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
“சேண்டி, எழுந்திரு” என அவனை ராபர்ட் உலுக்க, கண்ணை திறக்க முடியாமல் திறந்து பார்க்க, அலெக்ஸின் விழிகள் சோர்ந்து சிவந்து இருந்தது.
லேசாக கண்ணைத் திறந்து ராபர்டைப் பார்த்தவன், மீண்டும் கண்ணை மூடி,
“ராபி, நீ கிளம்புறதுன்னா கிளம்பு. மீதிய நான் இன்னிக்கு நைட்டு முடிச்சிடுவேன். நான் தமிழ் கிளாஸ் போற டைம் தான் எழுந்துப்பேன்” என்றுவிட்டு புரண்டு படுத்தான்.
“ப்ரோ, நான் கிளம்புறது எல்லாம் இருக்கட்டும். யூ ஹேவ் அ சர்ப்ரைஸ் விசிட்டர். எழுந்து வா” என்றவன் போர்வையை உருவ முற்பட, அதை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்ட அலெக்ஸ்,
“ம்ப்ச், எனக்கு யாருடா விசிட்டர்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல. சும்மா கதைய விடாத” என்றவன் மீண்டும் உறக்கத்தைத் தொடர முற்பட்டான்.
“சரி இன்னிக்கு நீ அடி வாங்கனும்னு எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?” என தோளைக் குலுக்கியவன், மிருதுளாவிடம் குடிக்க ஏதாவது வேண்டுமா எனக் கேட்டுக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலைந்து விட்ட நிலையில், பேச்சுக் குரல் கேட்க,
‘உண்மையிலே யாரோ வந்திருக்காங்களா? இவன் யார் கிட்ட பேசிட்டு இருக்கான்?’ என யோசித்த அலெக்ஸ், ஒரு அரைக்கால் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கண்களை கசக்கிக் கொண்டே வரவேற்பறைக்கு வந்தான்.
அங்கு அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த மிருதுளாவைப் பார்த்து ஆச்சரியமாக விழி விரித்தான்.
“ஹேய் மிரு, வாட் எ பிளசண்ட் சர்ப்ரைஸ்” என அவள் அருகில் வர, வெறும் கால் சட்டையுடன் அவன் வந்து நிற்பான் என எதிர்ப்பார்க்காதவள், சங்கடமாக முகத்தை வேறு பக்கம் திரும்பினாள்.
அதன் பின்பே, தான் வந்து நின்ற கோலத்தை உணர்ந்தவன்,
“ஓ *** ” என்றவன் வேகமாக உள்ளே சென்று “ராபி” என கத்தினான்.
இங்கு அரங்கேறிய மௌன நாடகத்தைப் பார்த்தபடி, உள்ளே வந்த ராபர்ட் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
அவனை முறைத்த அலெக்ஸ்,
“ஏன்டா மிரு தான் வந்திருக்கான்னு சொல்ல வேண்டியது தானே. பாரு நான் இப்படியே போய் நின்னு ஒரே பப்பி ஷேமா போயிடுச்சு” என அவன் கைகளைப் பிடித்துத் திருக,
“டேய் முரடா, விடுடா. நான் உனக்கு வார்னிங் கொடுத்தேன்னு சந்தோஷப்படு. அவளையே வந்து உன்னை எழுப்ப சொல்லிருந்தா, நீ இருந்த நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாரு” என்று அலெக்ஸை கலாய்த்து விட்டு, கைகளை இழுத்துக் கொண்டவன்,
“ஆனா சேண்டி, உனக்கு ஒரு ஒளி மயமான எதிர்காலம் இருக்குறது அப்படின்றது எனக்கு தெளிவா புரிஞ்சிடுச்சு. என்ஜாய்” என்றவன் கண் சிமிட்டி விட்டு, மிருதுளாவிடம் விடை பெற்று சென்று விட்டான்.
அதற்குள் வேகவேகமாக கையில் கிடைத்த சட்டையையும், முழு கால் சட்டையை அணிந்து, வரவேற்பறைக்கு அலெக்ஸ் வர, மிருதுளா அந்த நீள்விருக்கையின் நுனியில் கைகளை பிரித்துப் பிரித்துக் கோர்த்தபடி பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவள் பதட்டத்தை கவனித்தவாறே, அலெக்ஸ் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஓய் ஸாஃப்டி, என்ன டென்ஷன் உனக்கு?” என அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“சாரி அலெக்ஸ். சொல்லாம கொள்ளாம இந்த மாதிரி வந்து நான் நின்னிருக்கக் கூடாது” என தயக்கமாகக் கூற, பற்றி இருந்த அவள் கரங்களில் மென்மையாக முத்தமிட்டவன்,
“நோ சாரி, நான் உனக்கு தேங்க்ஸ் தான் சொல்லனும். நீ வந்தது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ஐ மிஸ்ட் யூ அ லாட்” என அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“ஒன்னும் தேவை இல்ல” என அவனின் கையை உதறியவள்,
“நீங்க மிஸ் பண்ண லட்சணம் தான் நல்லா தெரிஞ்சுதே. என்னைப் பார்க்க எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வந்துட்டீங்க” என நொடித்தாள்.
அவள் ஊடலில் அட்டகாசமாக சிரித்தவன்,
“வேலை இருந்துச்சு ஸாஃப்டி. நீ தான் பார்த்தேல்ல” என அங்கு அடிக்கி இருக்கும் ஓவியப் பகுதிகளைக் சுட்டிக் காட்டி,
“இது தான் ஓடிட்டு இருந்துச்சு லாஸ்ட் ஃப்யூ வீக்ஸ். நான் வீட்டை விட்டு அவ்வளவா வெளிய போகவே இல்லை. ராபி தான் என்னோட ஃபுட் சாப்பிங் கூட பார்த்துக்கிறான்.
அல்மோஸ்ட் முடிஞ்சுது. மே பி ஃப்யூ அவர்ஸ் டுடே. அப்புறம் லைவ் போயிடும். நாளைக்கு நானே உன்னைய வந்து பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. ஐ ஆம் வெரி ப்ளீஸ்ட்” என்றவன் மீண்டும் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
இந்த முறை வாகாக அவனோடு பொருந்தியவள், அவன் தோளில் சாய்ந்து கொண்டு,
“உங்களுக்கு மட்டும் தான் வேலையா? நாங்க எல்லாம் வெட்டியா இருக்கோமா? ஃபோன்லயும் ஒழுங்கா பேசுறது இல்லை.
நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். என் பிறந்த நாள் அன்னிக்குப் பார்த்தது. எதுவும் பிரச்சனை போல, நான் ஏதோ உங்களை அப்செட் பண்ணிட்டேனான்னு யோசிச்சி குழம்பிட்டு இருந்தேன்” என உள்ளே போன குரலில் சொல்ல, அலெக்ஸிற்கு உருகிற்று.
“ஹேய், அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஸாஃப்டி. சில விஷயங்கள் நான் சால்வ் பண்ணனும் தான். ஆனா அதெல்லாம் என்னோட சைட் இஸ்யூஸ். உன்னால எதுவும் இல்லை. நீ எதையாச்சும் யோசிச்சு குழப்பிக்காதே” என்றவன் எழுந்து நின்று,
“ஐ ஹேவ் அ சர்ப்ரைஸ் ஃபார் யூ. கிவ் மீ டென் மினிட்ஸ்” என்றவன் வேகமாக குளித்து தயாராகி வந்தான்.
வெளியே வந்தவனை மிருதுளா கண் கொட்டாமல் பார்த்தாள்.
வெள்ளை வேஷ்டியும், நீல நிற கதர் சட்டையும் அணிந்து வந்தவனைப் பார்த்து வாய் பிளந்து நின்றாள்.
“ஹேய், சூப்பர். இதெல்லாம் யாரு சொல்லிக் கொடுத்தா?” என வேகமாக அவன் அருகில் வந்து நின்றாள்.
“ஹௌ டு ஐ லுக்?” என்றவன் புருவத்தை ஏற்றி இறக்க,
“செமயா இருக்கீங்க. ஒன்னே ஒன்னு தான் மிஸ்ஸிங்” என்ற மிருதுளாவுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.
அவர்களது கடைசி சந்திப்பில் அலெக்ஸ் அடுத்த கட்டத்திற்கு போவதைப் பற்றி பேசி இருக்க, அதற்குப் பின் தொடர்பு குறைந்து விட்டதை அவள் வேறு மாதிரி யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை அவனது எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி ஆகாததால் ஏமாற்றமாக உணர்கிறானோ, அதனால் தங்களுக்குள் இடைவெளி அதிகரித்து விட்டதோ என்று நினைத்து வருந்தியவளுக்கு, அவன் அதற்கு எதிர்பதமாக அவளது வட்டத்திற்குள் வருவதற்கான முயற்சியில் இருப்பது ஆனந்த அதிர்ச்சியே.
அவளது முகத்தின் பூரிப்பை உள் வாங்கிய படியே,
“வாட் இஸ் மிஸ்ஸிங்” என்றவன் அவள் இடுப்பில் கை கோர்த்து அணைத்துக் கொண்டு, தன் கால்கள் மேல் அவளை நிறுத்தி, அவள் முகம் பார்த்த படியே கேட்டான்.
பிடிமானத்திற்காக அவன் தோள்களில் இரு கைகளையும் வைத்து இறுக பிடித்துக் கொண்டவள், மெதுவாக
“மீசை இஸ் மிஸ்ஸிங்” என்க, அவள் மூக்கை உரசியவாறே,
“அதுவும் என் லிஸ்ட்ல இருக்கு. ஆனா உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு பார்த்தேன். உனக்கு ஓகேன்னா அதையும் டிரை பண்ண நான் ரெடி” என அவள் கண்களைப் பார்த்க் கொண்டே, கண் சிமிட்ட,
“நோ நோ, நீங்க எனக்காக எல்லாம் எதுவும் பார்க்க வேண்டாம். நீங்க எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்களோ அப்படி இருங்க” என பெரிய மனதுடன் மிடுக்காக பின் வாங்க, அலெக்ஸ் வாய் விட்டு சிரித்தான்.
“பார்றா, மேடம் எவ்ளோ அலெர்ட்டா இருக்காங்க. சரி பொழச்சுப் போ” என்றவன் அவளை அவனின் கால்களில் இருந்து கீழ் இறக்கி நிறுத்தினான்.
“ரொம்ப பிளசண்ட் சர்ப்ரைஸ் லெக்ஸி” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைக்க,
“இன்னும் சர்ப்ரைஸே ஆரம்பிக்கல ஸாஃப்டி” என கண் சிமிட்டியவன்,
“கம் லெட்ஸ் கோ அவுட் டு ஈட்” என்றான்.
“நான் உங்களுக்கு லன்ச் எடுத்துட்டு தான் வந்தேன்” என்றவள் அவள் எடுத்துட்டு வந்த டப்பாவை நீட்ட,
“வாவ், தேட்ஸ் நைஸ், தேங்க்ஸ் மிரு” என்றவன் அதை வாங்கி, ஒரு ஸ்பூனை எடுத்து சுவைத்துப் பார்த்தான்.
“ம்ம்ம்ம், அமேசிங். டேஸ்ட்ஸ் டிவைன்” என்றவன், அந்த டப்பாவை திரும்பவும் மூடி, குளிர் சாதனப் பெட்டியில் வைத்து,
“ஐ’ல் சேவ் இட் ஃபார் லேட்டர். ப்ரிட்ஜ்ல வைக்கலாம்ல?” எனவும்,
“ம்ம்ம்ம். ஏன் நல்லா இல்லியா? உங்களுக்கு பிடிக்கலையா?” என மிருதுளா கேட்க,
“ஹேய், சூப்பரா இருக்கு. இப்ப ஐ வாண்ட் டு கிவ் யூ அ சர்ப்ரைஸ். அதுனால நம்ம ரெண்டு பேரும் வெளில போய் சாப்பிடலாம்” என்றவன், அவளை அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு வந்த அதே உணவகத்திற்கு அழைத்து வந்தான்.
“ம்ம்ம், ஆமா. எவ்ளோ பிடிச்சிருச்சுன்னா வாழ்நாள் முழுசும் அதை சாப்பிடறதுக்கு, சூப்பரா சமைக்கத் தெரிஞ்ச அந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ற அளவுக்கு” என்ற அலெக்ஸ் அவளை குறுகுறுவென்று பார்த்தான்.
அவன் கேலி புரிந்தவள்,
“ஓ, அப்ப சவுத் இண்டியன் ஃபுட் சாப்பிடறதுக்கு வேண்டி போனா போகுதுன்னு என்னைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கீங்க?” என அவனை போலியாக முறைக்க,
“எக்ஸாக்ட்லி” என்று தோளைக் குலுக்கினான்.
அவனைப் பார்த்து உதடு சுளித்தவள், அவனுக்கு எது வேண்டும் என்று பார்த்து ஆர்டர் செய்யப் போக, அவள் கைப் பிடித்து தடுத்தவன், அவர்களுக்கு தேவையானதை தூய தமிழில் அங்கிருந்த பணியாளரிடம் கேட்க, மிருதுளாவுக்கு மயக்கம் வராத குறை தான்.
அதற்கும் மேல், ஏதோ நெடு நாள் பழகியவன் போல் அந்தப் பணியாளரும்,
“ஏண்ணா, இன்னிக்கு செஃப் ஸ்பெஷல் ஐட்டம் டிரை பண்ணலியா?” என வினவ, அலெக்ஸ்,
“இல்லை, அக்காக்கு இது தான் ஃபேவரைட். அது அடுத்த வாரம் நான் மட்டும் வர்றப்போ டிரை பண்றேன்” என்றான்.
‘என்னடா நடக்குது இங்க?’ என நினைத்த மிருதுளா எல்லாவற்றையும் அமைதியாக பார்த்திருந்தாள்.