அந்த வீடியோவை சிவா தான் அனைவரிடமும் காட்டினான்… “பாத்தியா அவனுக்கு உன் மேல லவ் எல்லாம் இல்ல…. உன்னை இப்போ கழட்டி விட்டுட்டு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறான்…. இது தான் உங்க லவ்வா…. இவனுக்காக எங்க கூடாது பேசாம உன்னோட வேலையை விட்டுட்டு உட்காந்து இருக்க….” என்று கோவமாக கூறினான்…
“மரியாதை முக்கியம்… அத்தானை அவன் இவன்னு சொன்னிங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…. என் அத்தான் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு…. அவங்க யார் கிட்டயும் பேசல…. ஆனா உண்மை என்னனு உனக்கு இப்போவே புரிய வைக்குறேன்….” என்று கூறிவிட்டு அருகில் இருந்த திவ்யாவின் போனை எடுத்து யாஷிகாவின் தோழி பல்லவிக்கு அழைத்தாள்…
பல்லவி கடைசி ரிங்கில் தான் எடுத்தாள்…. “ஹெலோ யாரு பேசுறது” என்று கேட்டாள்…
ஆராவோ “ஹெலோ பல்லவி நான் ஆரா பேசுறேன்… நான் நிறைய வீடியோஸ் பாத்தேன்… எனக்கு தெரியும் அதுல சொல்றது பொய்னு… அஸ்வினுக்கு யாஷிகாவுக்கும் தான் கல்யாணம்னு எனக்கு தெரியுது… ஆனா ஏன் இப்படி அவசர அவசரமா… எல்லாரும் நல்லா இருக்காங்க தானு….” என்று கேட்டாள்…
“அண்ணி நல்லவேள நீங்க அந்த வீடியோஸ் எல்லாம் பாத்து எப்படி ரீயாக்ட் பண்ணுவீங்களோ பயந்தேன்…. வீட்டுல இருக்குறவங்களும் பயந்தாங்க…. அது அரசு மாமாவுக்கு ஏற்கனவே ஹார்ட்ல பிளாக் இருந்து இருக்கு… ஆனா அவர் அதை கவனிக்கவே இல்ல போல… பட் இப்போ சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு… டாக்டர் ரெண்டு மூனு நாள் தான் உயிரோட இருப்பாருனு சொல்லிட்டாங்க.. அவர் தான் அஸ்வின் அண்ணாவுக்கும் யாஷிகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்லிட்டாரு… அது தான் இப்போ சடன்னா மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க…” என்று கூறினாள்…
“பல்லவி என்ன சொல்ற… அப்பா எப்படி இருக்காங்க…. யாஷி எப்படி இருக்கா… எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க…” பதட்டமாக கேட்டாள்…
“அக்கா ஹோப் குடுக்க விரும்பல… யாஷி அப்பா ரொம்ப கிரிடிகல் தான்… யாஷி அழுதுட்டே தான் இருக்கா…. இப்போ யாருக்குமே கல்யாணம் வைக்க விருப்பம் இல்ல… ஆனா டாக்டர் டூ ஆர் த்ரீ டேஸ் தான் அவர் உயிரோட இருப்பாருன்னு சொல்லிட்டாங்க… அது தான் மருதமலை கோவில்ல நாளைக்கு கல்யாணம் வெச்சு இருக்காங்க….” என்று சோகமாக கூறினாள்…
“பல்லவி நாளைக்கு காலைல நான் அங்க வரேன்…. யாஷிய பாத்துக்கோ… அப்பா எப்படி இருக்காங்கனு இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லிட்டே இரு பல்லவி நாளைக்கு நான் அங்க வரேன்” என்று கூறி வைத்துவிட்டாள்…
“கேட்டியா… யூடூப்ல வரது எல்லாம் உண்மை இல்ல… இனிமே அவரை பத்தி ஒரு வார்த்தை பேசுன அவளோ தான்….” என்று கூறி அவள் ஓட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்…
ஆரா சேலம் வந்ததில் இருந்து அந்த வீட்டில் தான் இருக்கிறாள்… அவள் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை… அந்த வீடு தான் அவளின் உலகம் என்பது போல் ஆகிவிட்டது அவளுக்கு….
ஆரா அந்த வீட்டிற்கு சென்றதும் அவள் பின்னே திவ்யாவும் சஞ்சயும் வந்தனர்…. வீட்டிற்குள் வந்த சஞ்சயை பார்த்தவள் “ண்ணா நாளைக்கு கோவை போகனும் ண்ணா…. நீங்க கேட்டீங்கல நான் போன்ல பேசுனதை…. நாளைக்கு கூட்டிட்டு போறியா ண்ணா…” என்று கேட்டாள்….
“டேய் என்ன இப்படி கேட்குற… கண்டிப்பா நாளைக்கு போறோம்…. இப்போ நீ தூங்கு” என்று கூறினான்… அவள் தூங்கியவுடன் திவ்யாவிடம் திரும்பி “இன்னிக்கு இங்கயே தூங்கு திவி…. கதவை லாக் பண்ணிக்கோ நான் மார்னிங் வரேன்” என்று கூறி வெளியில் சென்றுவிட்டான்….
கதவை அடைத்த திவ்யா அந்த வீட்டை தான் சுற்றி பார்த்தாள்…. அவளுக்கு வீட்டில் இருக்கிறோமா இல்லை ஆர்ட் கேலரியில் இருக்கிறோமா என்ற சந்தேகமே வந்துவிட்டது….
அந்த அறையில் பெரும்பாலும் ஓவியங்கள் மட்டுமே இருந்தது…. அனைத்தும் ஒருவனின் ஓவியம்… ஆராவின் அத்தானின் ஓவியம்….
ஆம் அனைத்தும் அக்னியின் ஓவியங்கள் தான்…. அவனுடன் இருக்கும் ஓவியங்கள்…. அவள் அங்கு இருந்த போது இருவரின் தனிமையை அழகாக வரைந்து இருந்தாள்….
அந்த ஓவியத்தை பார்த்தாலே ஆராவின் காதல் அனைவருக்கும் புரிந்து விடும்…. ஆனால் புரிய வேண்டிய இருவருக்கும் புரியவில்லை…. சிவா ரங்கசாமியிடம் வீட்டில் உள்ளோர் யாருமே பேசுவது இல்லை….
திவ்யா சிவாவின் மேல் கடும்கோவத்தில் உள்ளாள்…. தன் வாழ்க்கையை விட அவனின் ஈகோ தான் பெரியதா என்ற கோவம்… அவனின் வாரிசு பூமிக்கு வர போகிறது அது தெரியாமல் இருக்கிறானே என்ற கோவம்…
ஆம் அஞ்சனா கருவுற்று இருக்கிறாள்… ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது… அன்று பெண் கேட்டு வந்த போது சண்டையிட்டு வந்தவள் அதன் பின் அவனை காணவே இல்லை.. வீட்டில் உள்ளோரிடம் கூட சொல்லவே இல்லை… புவனா தான் அவள் வயிறு பெரிதான பின் கண்டுகொண்டு கேட்டார்… அவளும் ஒத்துக்கொண்டாள்…
அதன் பின் வீட்டிலுள்ளோருக்கு சிவாவின் மேல் கோவம் அதிகரித்தது… இதுவரை சிவாவிற்கு அது தெரியாது…
கோவை….
வேந்தன் மருத்துவமனை….
ஐசியூ முன்பு வேந்தனின் குடும்பமே சோகத்தில் மூழ்கி இருந்தது… பார்வதி பாட்டி தான் அக்னியை மட்டும் மருத்துவமனையில் இருக்க கூறிவிட்டு அனைவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றார்…. யாஷிகாவோ பொம்மை போல் பல்லவியுடன் நடந்து சென்றாள்….
இங்கு அக்னியோ இந்த மூன்று மாதத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்தான்…. எப்போதும் அவன் முகத்தில் தாடியே இருக்காது… ஆனால் தற்போது முகம் முழுவதும் தாடியாக தான் இருந்தது…
அவன் முகம் எப்போதும் இறுக்கமாக தான் இருக்கும்… ஆனால் தற்போது எல்லாம் மிகவும் இறுகி இருந்தது… கண்ணை மூடி சேரில் தலை சாய்த்தவன் மூன்று மாதங்கள் முன்பு நடந்ததை நினைத்து பார்த்தான்… அதே சமயம் அங்கு ஆராவும் தூக்கத்தில் இருந்து எழுந்தவள் மூன்று மாதங்கள் முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்…
அன்று அவளை வெளியில் இழுத்து கொண்டு விட்டவன் கதவை மூடிவிட்டு அவன் அறைக்கு மேலே சென்றுவிட்டான்…. அவன் மேலே சென்றவன் ஜன்னல் ஓரம் வந்து நின்று வெளியேறும் காரை தான் பார்த்து கொண்டு இருந்தான்… ஆனால் அந்த காரில் ஆரா செல்லவில்லை… சஞ்சயிடம் காரை எடுத்து கொண்டு கொஞ்சம் தூரம் சென்றுவிட்டு வருமாறு அனுப்பிவிட்டவள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்… யாரையும் அவள் பேச விடவில்லை…
வேகமாக மேலே சென்றவள் பார்த்தது அங்கு அவளின் போட்டோவை அணைத்து கொண்டு குப்புற படுத்து கொண்டு இருந்த அக்னியை தான்…. ஒருமுறை கண்களை மூடி திறந்தவள் வேகமாக அவன் மேல் சாய்ந்து படுத்து கொண்டாள்…
தன்மேல் விழுந்த ஆராவை உணர்ந்த அக்னி எதுவும் பேசாமல் கண்களை மூடி கொண்டான்… ஆனால் அவனின் கண்களோ கண்ணீரை கொட்டியது…. ஆரா எழுந்து அவனின் முதுகின் மேல் அமர்ந்தவள் “நான் உனக்கு வேண்டமா அத்தான்.. சொல்லுடா வேண்டாமா நான்… அவன் பண்ணதுக்கு என்ன வேண்டாம்னு சொல்லுவியா… அவன்மேல கோவம் இருந்தா நேரா போய் அவன் வாயை உடைச்சு இருக்கனும்… ஆனா என்னை வேண்டாம்னு சொல்லுவியா நீ… வாயை திறந்து பதில் சொல்லுடா….” என்று கூறி அவனை முகம் பார்க்குமாறு படுக்க வைத்தவள் அவனின் வயிற்றின் மேல் அமர்ந்தவள் “சொல்லுடா.. எனக்கு பதில் சொல்லு… நான் வேண்டாம்னு என் கண்ணை பாத்து சொல்லுடா” என்று கண்களில் நீர் வடிய கோவமாக கேட்டாள்…
அவன் எதுவும் கூறாமல் அவளை தன்மீது சாய்த்து கொண்டான்… அவன் கண்களில் கண்ணீரை பார்த்தவள் “அத்தான்…” என்று கூறிக்கொண்டே சத்தமாக அழுக ஆரம்பித்துவிட்டாள்…
“சாரி தங்கமே நான் அப்படி பேசி இருக்க கூடாது… ரொம்ப சாரி… உங்க அண்ணன் மேல கோவத்துல அப்படி பண்ணிட்டேன்… சாரி சாரி…” என்று அவள் உச்சியில் முத்தமிட்டாவாறு கூறினான்… அவள் எதுவும் பேசாமல் அவனை அணைத்து கொண்டாள்…
அவனே “தங்கமே நீங்க இப்போ சேலம் கிளம்புங்க… பொறுமையா வீட்டுல பேசுங்க… எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க தான் என் பொண்டாட்டி…. அது மட்டும் மாறாது…. ஆனா நம்ம கல்யாணம் ரெண்டு வீட்டோட முழு சம்மதத்தோட தான் நடக்கும்…” என்று கூறியவன் அவளை அமர வைத்து தானும் அவளின் காலுக்கு கீழ் அமர்ந்தவன் “இது தான் நாம மீட் பண்றதுல லாஸ்ட் மீட்… பேசுறதும் அப்படி தான்… இனிமே நாம பேசுறது பாக்குறதும் உங்க வீட்டுல சம்மதம் சொன்ன பின்னாடி தான்…. கீழ எல்லாரும் பயந்து இருப்பாங்க… நீங்க சொல்லிட்டு சேலம் கிளம்புங்க… நல்லா ஞாபாகம் வெச்சுக்கோங்க… வீட்டுலயும் யார்கிட்டயும் பேசக்கூடாது…..” என்று கூறி எழுந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்தவன் அந்த அறையில் இருந்த இன்னொரு அறைக்கு சென்றுவிட்டான்….
ஆரா அவன் சென்ற பாதையை பார்த்தவள் தன்னை சமன் செய்துகொண்டவள் கீழே சென்றாள்.. அவளை சூழ்ந்து கொண்ட அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்… முதலில் அனைவரையும் அமைதி படுத்தியவள் “அஞ்சும்மா அத்தான் கோவத்துல பேசிட்டாரு… இப்போ ஓகே அவரு… ஆனா கொஞ்ச நாள் ரெண்டு பேரும் பார்க்காம பேசாம இருக்கலாம்னு சொல்லிட்டாரு… அதே மாதிரி உங்களையும் பேச கூடாதுனு சொல்லிட்டாரு… கொஞ்ச நாள் அஞ்சும்மா நான் எப்பயும் இந்த வீட்டு பொண்ணு தான்… சீக்கிரமா இந்த வீட்டுக்கு வருவேன்… நான் இப்போ கிளம்புறேன் அஞ்சும்மா” என்று கூறியவள் அனைவரையும் பார்த்தவள் சஞ்சயுடன் காரில் ஏறி சேலம் சென்றுவிட்டாள்… அதன்பின் இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை….
சேலம் சென்ற ஆரா யாரிடமும் அதிகம் பேசவில்லை… அவள் அந்த ஓட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்…
அதற்குள் அடுத்த நாள் விடிய கோவையில் மருதமலையில் அஸ்வின் யாஷிகாவிற்கு கல்யானம் பிரம்ம முகர்த்தத்தில் முடிந்து இருக்க அரசுவிடம் ஆசீர்வாதம் வாங்க மருத்துவமனை சென்றனர்….. தன் பெண்ணை திருமண கோலத்தில் பார்த்தவர் கண்கள் நிரம்ப அவளை பார்த்துவிட்டு அவள் இனிமேல் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் தன்னுடைய உயிர் மூச்சை நிறுத்திகொண்டார்…
அதை பார்த்த யாஷிகா அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாள்… அவள் விழுவதை பார்த்த அஸ்வின் அவளை தன்மேல் சாய்ந்து கொண்டான்… அனைவரும் அவரின் இறப்பில் அதிர்ந்துவிட்டார்…. யாராலும் அதில் இருந்து மீள முடியவில்லை….
மதி தாத்தா தான் கொஞ்சம் தெளிந்து மற்றவர்களை அடுத்த வேலைகளை பார்க்க அனுப்பி வைத்தார்….
அரசுவின் உடலை அவர் முன்பு இருந்த அவரின் சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தனர்…. அவருக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் என அனைவரும் பார்க்க வந்தனர்….
மற்றவர்கள் மற்ற வேலைகளை பார்க்க யாஷிகா மயக்கத்தில் இருந்து எழுந்தவள் ஒரு சொட்டு கண்ணீர் கூடவிடவில்லை…. அரசுவின் உடலையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்….
ஆரா சஞ்சய் திவ்யா மூவரும் ஏற்கனவே கோவை புறப்பட்டு இருந்தனர்… அவர்கள் ஈரோடு தாண்டி இருக்க பல்லவி திவ்யாவின் அலைபேசிக்கு அழைத்தாள்…. அந்த எண்ணை பார்த்த திவ்யா ஆராவிடம் கொடுத்தாள்….
“அண்ணி அரசு மாமா இஸ் நோ மோர்… ஒன் ஹவர் முன்னாடி தான் டெத் ஆனாரு… இப்போ அவங்க சொந்த வீட்டுக்கு அவரை கொண்டு வந்து இருக்காரு… நீங்க கிளம்பிட்டிங்கா…” என்று கேட்டாள்…
ஆரா அதிர்ச்சியாகி அப்படியே அமர்ந்துவிட்டாள்… பல்லவி “அண்ணி அண்ணி “என்று இரண்டு முறை அழைத்த பின் தான் சுயநினைவு வந்தவள் “ஈரோடு தாண்டிட்டோம்… எனக்கு அந்த வீடு தெரியாது… லொகேஷன் அனுப்பு பல்லவி நான் வந்துடுவேன்… யாஷி கூடயே இரு…” என்று கூறி வைத்தவள் மற்ற இருவரிடமும் கூறினாள்… இருவருக்கும் அதிர்ச்சி தான்…
ஆரா அம்பிகாவிற்கு அழைத்து கூறியவள் “ம்மா நீயும் அங்க வரியா… நீ வந்தா யாஷி கொஞ்சம் பெட்டர்ரா இருப்பா….” என்று கேட்டாள்…
“ஹா நான் வரேன் ஆரா…” என்று கூறி வைத்தவர் உடனடியாக டிரைவரை அழைத்து கொண்டு வசந்தா புவனாவிடம் கூறிவிட்டு கோவை கிளம்பினார்….
ஆரா கோவை சென்று சேர்ந்து இருக்க அரசுவின் உடலையே வெறித்து கொண்டு இருந்த யாஷிகாவை சுயநினைவு கொண்டு வந்தாள்…. அதன்பின் தான் அடக்கி வைத்து இருந்த கண்ணீரை கொட்டி தீர்த்தாள்…. ஆராவும் அழ அஞ்சலி அவளை மடி தாங்க அனுசுயா யாஷிகாவை தன் தோளில் சாய்த்து கொண்டார்….
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.