அடுத்த நாள் காலை தேவா எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு தேனீர் வைத்து எடுத்து வந்தாள்..
மனைவி மேல் உள்ள கோபத்தில் முத்து அவளிடம் சொல்லாமலே ஆட்டோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்..
அவள் மாமனார் சந்திரன் நேரத்தோடு எழுந்து விடுவார்..
ரவி, மாணிக்கம் இருவரும் சரியாக ஏழு மணிக்கு எழுந்து வந்து விடுவார்கள்..
சிவகாமி எழுவதற்கு தாமதம் ஆகும்..
அவர் எழுந்ததும் மீண்டும் தேவா தேனீர் வைத்து கொடுக்க வேணும்..
இங்கே தினமும் வாசல் [முற்றம் ] கூட்டி சுத்தம் பண்ணுவதே பெண்களின் காலை நேர முக்கிய வேலை..
தேவா வீட்டை சுற்றி உள்ள இடத்தை கூட்டி சுத்தம் பண்ணும் போதே பாதி களைத்துவிடுவாள்..
அது மிகப்பெரிய வேலை..
அதை முடித்துவிட்டு மீண்டும் முகம் கழுவி சுத்தம் செய்துகொண்டு வர சிவகாமி எழுந்து வந்தார்..
அவருக்கும் தேனீர் வைத்து கொடுத்துவிட்டு அவளும் ஒரு கப் எடுத்துக்கொண்டு வந்து வெளியே மா மரத்தின் கீழே கதிரை போட்டு அமர்ந்தாள்..
அப்போது அங்கே வந்த அமுதா “ என்ன தேவா வேலை எல்லாம் முடிஞ்சுதா?..” என்றார்..
“ வாங்க ஆன்டி.. இப்பதான் முடிஞ்சுது.. இருங்க.. மாமி உள்ள இருக்காங்க வர சொல்லுறேன்..” என்று கூறி விட்டு உள்ளே சென்று அமுதா வந்ததை சிவகாமியிடம் சொல்லிவிட்டு அமுதாவிற்கு தேனீர் வைத்து எடுத்து வந்தாள்..
“ உனக்கு இங்க என்ன வேலை.. போ போய் மீன் வெட்டி சுத்தம் பண்ணி வை..” என்றார்.. அமுதாவிற்கு தேநீர் கொடுத்துவிட்டு அருகே அமர்ந்தவளை அப்படி கூறி அனுப்பி வைத்தார் சிவகாமி..
அவள் அதை எதிர்த்து பேசினாலும் கணவனிடம் திட்டு விழும் கணவன் அவளுக்கு ஆதரவாக இல்லாத பட்சத்தில் அவள் என்னதான் செய்வாள்..
நேற்று இரவு கூறியதற்கே எந்த பதிலும் இல்லை.. மீண்டும் இதயும் கூறினால் அவ்வளவுதான்.. தாய் பிழையே செய்தாலும் அவள் மீது தான் பிழை உள்ளது போல் பேசி அந்த விஷயத்தை தவிர்த்து விடுவான் முத்து..
ஒரு ஆண் குடித்துவிட்டு வந்து வீட்டில் காசு கொடுக்காமல் அடித்து கொடுமை படுத்துவது மட்டுமே கொடுமை இல்லை..
அப்படி அடித்து கொடுமைப்படுத்தினால் அது அவர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட விஷயம்..
ஆனால் ஒரு குடும்பத்துக்குள் மனைவியை சம்பந்தமே இல்லாமல் தொட்டதற்கும் திட்டுவதை கணவன் தட்டிக் கேட்காமல் விட்டால் அது அவர்களுக்கு பெரிய ஒரு பாதகச் செயலை செய்ய மீண்டும் தூண்டுதலாக இருக்கும்..
தன்னை நம்பி வந்த மனைவிக்கு ஒன்று என்றால் அதை தட்டி கேட்காமல் அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய குற்றம்..
கணவன் துணை இருந்தால் தான் மற்றவர்கள் அவளுக்கு தவறு செய்தால் எதிர்த்து கேட்டு சண்டை பிடிக்க முடியும்.. கணவன் துணை இல்லாத பட்சத்தில் கணவன் வீட்டில் எவ்வாறு அவள் தனக்கான அடையாளத்தை உறுதிப்படுத்துவாள்..
முத்துக்கு குடி, சூது அப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. உழைத்தால் வரும் பணத்தில் சிறிய அளவு பணத்தை அவனுக்கு எடுத்து வைத்து விட்டு தேவாவிடம் தான் கொண்டு வந்து கொடுப்பான்..
அவர்கள் இங்கே வந்து ஒன்றரை வருடத்தில் முத்து அவளை வெளியே எங்கேயும் அழைத்துச் சென்றதே இல்லை..
தேவாவுக்கு இந்த புதிய ஊரை சுத்தி பார்க்க மிகவும் விருப்பம்.. அவள் எவ்வளவோ கேட்டு பார்த்து விட்டால்.. அவனுக்கு அது விருப்பமில்லை.. என்பதால் அவன் அதற்கு செவி சாய்த்து இதுவரை அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதே இல்லை..
கோவிலுக்கவாது கணவனுடன் செல்ல வேண்டும் என்று ஆசை.. ஆனால் அது கூட இதுவரை நிறைவேறியதில்லை..
அவள் பொழுது அந்த வீட்டிலே ஆரம்பித்து அந்த வீட்டிலேயே முடிந்து விடும்..
இங்கு வந்த புதிதில் அருகே உள்ள வீட்டில் போய் அவர்கள் நன்றாக இருக்கிறாயா?.. என்று கேட்டதற்கு அங்கே நடந்தவற்றை சொல்லி மன கஷ்டத்தை தீர்த்துக் கொள்ள நினைத்தாள்.. அதை ஒன்றுக்கு இரண்டாக திரித்து அவர்கள் சிவகாமியிடம் சொல்லி சிவகாமி அவளை திட்டி சண்டை பிடித்த கதை எல்லாம் வேறு..
அதனால் எங்கும் செல்வதையும் நிறுத்திவிட்டாள்..
இதோ அரைமணி நேரம் தாண்டிவிட்டது இப்பொழுதுதான் அவள் மீனை வெட்டி முடித்து இருக்கிறாள்.. இனி அதை சுத்தம் செய்ய வேண்டும்.. அப்போது அங்கே வந்த சிவகாமியும் அமுதாவும் தேவா-வை பார்த்துவிட்டு
“ உன் மருமக வேலையில கடும் சுனக்கம் போல.. கொஞ்சம் மீன் வெட்டுவதற்கு இவ்வளவு நேரம்.. இனி அதை கழுவி சுத்தம் பண்ணி எடுத்துட்டு போக இன்னும் அரை மணி நேரம் போகும் போல.. இப்படியே இருந்தா மதிய சாப்பாடு மூன்று மணிக்கு தான்..” என்றார் அமுதா..
“ இவளைப் பற்றி விடு அமுதா.. சொல்லப்போனால் நாள் முழுக்க சொல்லணும்.. அவங்க ஊர்ல எல்லாம் இப்படி துடிக்க துடிக்க பெரிய மீன் எல்லாம் இல்லை.. அதனால சீக்கிரம் வெட்டி சுத்தம் பண்ண தெரியாது.. அது மட்டும் இல்லை ஒரு வேலை எடுத்தாலும் சீக்கிரம் பண்ண மாட்டா.. ஆடி அசைஞ்சு செய்து முடிக்க விடிஞ்சிடும்.. எங்க இருந்து தான் புடிச்சிட்டு வந்தானோ தெரியல?.. சீக்கிரம் இதை முடிச்சிட்டு. தேங்காய் திருவி வை தேவா.. நீ வா போகலாம்.. ” என்று அமுதாவை அழைத்துக் கொண்டு சிவகாமி செல்லவும் முத்து வரவும் சரியாக இருந்தது..
மனைவி அருகே முத்து வந்ததும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் தேவா..
“ அம்மா பேசினது எல்லாம் கேட்டேன் டி தேவா.. உன் மேலதானே தவறு.. நீ எப்ப மீன் வெட்ட எடுத்த?.. இன்னும் முடிக்கலை யாரும் திட்டுவாங்க தானே..
இதுவே அம்மா இந்த வேலை எடுத்து இருந்தால் இந்நேரம் மீன் குழம்பு அடுப்பில் இருக்கும்.. ஆனா நீ வெட்டி சுத்தம் பண்ணியே முடியல.. இதுல அவங்க கிட்ட நான் என்ன கேட்க முடியும்..
நானும் உன்கிட்ட பல முறை சொல்லுட்டேன்..
நான் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணியதை அவங்க தப்பா பேசவோ?.. இல்லை ஏன்டா இவளை கல்யாணம் பண்ணினோம்னு நானோ நினைக்கிற அளவுக்கு வச்சிக்காதன்னு சொல்லிருக்கேன்.. நீ அதுக்கு ஏற்ற போல உன்னை மாத்திக்கொள்ள முயற்சி கூட செய்யலையே தேவா..
அப்போ அவங்க பேசத்தானே செய்வாங்க.. நீ கேட்கத்தான் வேணும்.. இதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது..
இந்த குடும்பம், இந்த ஊருக்கு ஏற்ற போல நீதான் உன்னை மாற்றிகொள்ளணும்..
உங்க ஊர் பழக்கம் எல்லாம் இங்க சரிவராது..” என்றான்..
“ நீங்களே பாருங்க.. இப்ப பிடிச்ச மீன் துடிக்கிது.. இந்த தாக் கத்தி
[ வெள்ளாமை வெட்ட பயன் படும் வளைந்த கத்தி ] இதை வச்சி எனக்கு வெட்ட வரவே மாட்டேங்கிது..
எவ்வளவு கஷ்டமா இருக்கு.. தெரியாத நான் எப்படி சீக்கிரம் வெட்ட முடியும்..
உங்க அம்மா முப்பது வருஷம் மீன் வெட்டுறாங்க.. அவங்க வேகம் இப்ப பழகுற எனக்கு உடனே எப்படி வரும்னு எதிர்பார்க்குறீங்க?.. வனிதா அம்மா கிட்ட போய் இப்படி பேசுறாங்க.. அவங்க எல்லா இடத்துலயும் சொல்லி திரிவாங்க.. நீங்க ஆக மோசமா போய்ட்டிங்க.. நான் லவ் பண்ணின கிருஷ்ணன் இல்லை நீங்க..
உங்க ஊருக்கு வந்ததும் உங்களை பார்த்தால் வேற யாரையோ பார்க்குற போல இருக்கு..
நீங்க சிரிச்சி பேசியே இங்க வந்து நான் அதிகம் பார்க்கவே இல்லை..
இப்படி இருக்காதீங்க எனக்கு மூச்சு முட்டுது..” என்று கூறிவிட்டு சுத்தம் பண்ணிய மீனை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் தேவா..
இந்த ஊர் சமையல் அவளுக்கு வரவே இல்லை.. அவளும் சமைத்து பார்த்தாள்.. ஆனால் சிவகாமி மீன் குழம்பு வைப்பது போல் அவளுக்கு வரவே இல்லை..
ஆனால் அந்த குழப்பு மணம், சுவை தேவாக்கு பிடிப்பதில்லை..
எந்த மசாலவும் இல்லை.. தாளிப்பு இல்லை, எண்ணெய் பாவிப்பது இல்லை..
மீனை சட்டியில் சுத்தம் செய்து வைத்து விட்டு. தேவையான அளவு உப்பு, கொறுக்கா புளி, மிளகாய் தூள் போட்டு சிறு அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துவிட்டு அது கொதிக்கும் போது மிளகு, வெள்ளைபூண்டு தேவையான அளவு இடித்து அதை குழம்பில் போட்டதும் திருவிய தேங்காயில் ஒரு கை பிடி தேங்காய் பூ எடுத்து பால் பிழிந்து அதை விட்டு மீண்டும் கொதி வந்ததும் இறக்கி விடுவார்கள்..
இது தேவாக்கு பிடிப்பதில்லை.. அப்படி மீன் குழம்பு வைக்கும் போது சாப்பாடு ஒழுங்காக சப்பிடமாட்டாள்..
அதற்கும் திட்டு விழும்..
நேரம் நண்பகல் 12மணி.. அமுதாவுடன் சென்ற சிவகாமி ஊர் சுற்றி புரணி பேசிவிட்டு அப்போது தான் வந்தார்..
தேவா சோறும் சமைத்துவிட்டு மற்ற எல்லா வேலையும் செய்து வைத்து விட்டாள்..
இனி சிவகாமி மேல் குறிப்பிட்ட முறையில் மீன் குழம்பு வைத்து சுட சுட பிள்ளைகள் மற்றும் கணவருக்கு உணவு பிரிமாறினார்..
சிவகாமி அவர் அருகே சந்திரன்.. அவர்களுக்கு முன்பு முத்து, ரவி, மாணிக்கம் மூவரும் அமர்ந்து இருந்தார்கள்..
அவர்கள் போதுமான அளவு சாப்பிட்டு அந்த தட்டில் கை கழுவி விட்டு எழுந்ததும் அவர்கள் தட்டை எடுத்து எச்சி தண்ணீரை ஊத்தி விட்டு அந்த இடத்தை சுத்தம் பண்ணிய பின்பு தான் சிவகாமி மற்றும் தேவா இருவரும் சாப்பிடுவார்கள்..
அதை அப்படியே சிவகாமி அந்த வீட்டில் பழக்கி வீட்டார்..
இப்படியே நேரம் போய் மாலை வந்தது..
மாலை நேர தேநீரையும் தயாரித்து கொடுத்தாள் தேவா..
அப்போது முத்து அங்கே வந்து அன்றைய நாள் அவனது உழைப்பு பணத்தை தேவா-வின் கையில் கொடுத்தான்..
ஆட்டோ ஓட்டும் பணம் மாதம் முடிவடையும் போது மொத்தமாக கைக்கு வந்துவிடும்..
இது மீன் பிடிக்கும் பணம்..
அவளுக்கு தெரியும் எவ்வளவு இன்றைய உழைப்பு என்று அதில் ஆயிரம் ரூபாய் குறையவும் ஏன் என்று
கேள்வி கேட்டாள்..
“ 2000ம் வரவேண்டியது ஆயிரம் ரூபாய் தான் தந்து இருக்கீங்க.. மிச்சம் எங்க?..” என்றாள்..
அவனா இருக்கவும் நீ கணக்கு கேட்க பொறுமையா பதில் சொல்லுறான்.. இதுவே வேறு யாராவது இருந்தால் இந்நேரம் பல்லு கலண்டு இருக்கும்..
முத்து நீ ஏன் இவளுக்கு எல்லாம் பதில் சொல்ற?..” என்றார்.
தாய் கேட்டும் முத்து பேசாமல் இருக்கவும்
“ சரி மாமி அவர் எனக்கு பதில் சொல்ல வேணாம்.. நாளைக்கு நீங்க எடுத்த லோன் கட்ட 2000ம் ரூபாய் வேணும்.. இந்தாங்க என் கிட்ட 1000ம் தான் இருக்கு மிச்சம் நீங்களே போட்டு கட்டிக்கோங்க..
மூணு நாள் தந்த காசு சேர்த்து 5500 ரூபாய் தந்துட்டேன் அரிசி வாங்க.. இனி என்கிட்ட வேற காசே இல்லை..
காலையில் நான் சொன்னேன் நாளைக்கு லோன் கட்டணும்னு தெரிஞ்சே உங்க பிள்ளை இப்படி பண்ணிட்டு வந்தால் நான் கேட்க கூடாது..
சரி தான் இதை பிடிங்க இனி உங்க பாடுதான்..
லோன் காட்டினாலும் சரி இல்லேன்னாலும் சரி ஆளை விடுங்க..” என்று கூறி விட்டு சென்றுவிட்டாள் தேவா..
சிவகாமி அப்போதான் வழமை போல் வாய் விட்டு காரியத்தை கெடுத்து விட்டோம் என்று உணர்ந்தார்..
அவரிடம் போதுமான அளவு பணம் இருக்கு ஆனால் அதை எடுத்து செலவு பண்ண பிடிப்பதில்லை..
அவளிடம் இல்லை என்று சொல்லும் போது இனி கேட்டும் பயன் இல்லை..
நாளைக்கு கட்டாயம் லோன் காட்டியே ஆகவேண்டும்.
இன்னும் இரண்டு கிழமை கட்டினால் ஒரு லட்சம் எடுக்கலாம்..
ரவி கல்யாணத்திற்கு தேவை அதையும் நம்பி உள்ளார்..
அதனால் அவர் பணம் எடுத்து தான் கட்ட வேண்டும்..
இரவு உணவு முடித்துவிட்டு சமையல் அறையை ஒதுக்கி வைத்துவிட்டு அறைக்கு வந்தாள் தேவா.
முத்து கண்முடி படுத்திருந்தான்..
நாளை அவர்கள் திருமண நாள்..
அதற்கு இதுவரை அவன் பரிசு கொடுத்ததே இல்லை..
இன்று அவளுக்கு முக்குத்தி ஒன்று வாங்கி வந்தான்..
அவனிடம் இருந்த பணம் போதவில்லை..
அதனால் இன்றும் 1000ம் ரூபாய் எடுத்து 5000ம் ரூபாய்க்கு மூக்குத்தி வாங்கினான்..
அவளுக்கு கல் வைத்தது பிடிப்பதில்லை..
அதனால் தங்கத்தில் விலை அதிகமாக கொடுத்து வாங்கினான்..
ஊரில் இருக்கும் போது போட்டிருந்தாள்..
இங்கே வந்த புதிதில் அது தொலைந்து விட்டது..
சிவகாமிக்கு பெண்கள் மூக்குத்தி போடுவது பிடிப்பதில்லை..
அவர் கேலி பேசவும் தேவா மீண்டும் வாங்காமல் விட்டுவிட்டாள்..
மனைவியை பார்க்கும் போது முத்துக்கும் மூக்குத்தி இல்லாமல் அவள் முகம் வெறுமையாக இருப்பது தெரியும்
இன்று தான் வாங்க சந்தர்ப்பம் அமைந்தது போல் வாங்கி வந்து விட்டான்..
இதுவரையும் பரிசு என்று எதுவும் கொடுத்ததில்லை அதனால் தயக்கமும் இருந்தது..
அவனுக்கு மனைவி தினமும் வேண்டும்..
ஆனால் அவளுக்கோ உறவில் கணவனை போல் அதிக ஆர்வம் காட்டமுடிவதில்லை..
நல்ல பிள்ளை போல் தேவாவிடம் முத்து அனுமதி கேட்பான்..
அவள் சம்மதித்தால் மனைவியை நாடுவான்..
உடல் வலி, அசதி இன்று வேண்டாம் என்று தேவா கூறினால்..
ஒதுங்கி கட்டிலின் ஓரத்தில் போய் உறங்கி விடுவான்..
ஆனால் அடுத்த நாள் ஏன் தேவாக்கு விடியுது என்பது போல் இருக்கும் முத்துவின் நடவடிக்கை..
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவள் எது பேசினாலும் எரிந்து விழுவான்..
நன்றாக பேசவே மாட்டான்..
இன்னும் அதிகமாக வார்த்தையால் காயப்படுத்துவான்..
அதை தாங்கி கொள்வதற்கு கணவனின் விருப்பதிற்கு சம்மதம் சொல்லி ஒத்துழைப்பு கொடுத்தால் அவனது தொல்லையில் இருந்து தப்பி விடுவாள்..
மாமியார், மாமனார், கொழுந்தன் தொல்லைகள் தான் இருக்கும்.. அதை ‘இன்னும் எத்தனை நாளைக்கு நான் வீடு கட்டி போகும் வரை தானே..’ என்று அவளே கூறி மனதை தேற்றிக்கொண்டு
கடந்து வந்துவிடுவாள்..
நாளை திருமண நாள் அது அவளுக்கும் தெரியும் அவள் வழமை போல் அவனுக்கு டி ஷேர்ட். எடுத்து வைத்திருக்கிறாள்..
அதை காலையில் கொடுத்தும் விடுவாள்..
வழமை போல் கணவன் அதை வாங்கிக்கொண்டு கடந்துவிடுவான்..
என்று நினைத்துக்கொண்டு உறங்க கட்டிலுக்கு சென்றாள் தேவா..
வழமை போல் முத்து அவள் மீது கை போட்டு கூடலுக்கு அழைப்பு விடுத்தான்..
“ தேவா என்ன ஓகே வா டி..” என்றான்..
நாளைய நாளை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவள் சம்மதித்தாள்..
“சரிடா ஓணாங்குஞ்சு..” என்றாள்..
முத்து அதிக வளர்த்தி ஆனால் மெலிந்த உடல்.. அதனால் அவர்கள் அறையில் கணவனை அவள் அப்படித்தான் செல்லமாக பட்ட பெயர் வைத்து அழைப்பாள்..
அவள் சம்மதம் சொன்னதுதான் தாமதம் அவள் மேல் படர்ந்து விட்டான்..
எதற்கு பயந்து அவள் சம்மதம் சொன்னாளோ..
நாளை அவர்கள் கல்யாண நாள் சந்தோசம் கெடப்போவது தெரியாமல்
அழகிய கூடலை முடித்துக்கொண்டு அவன் முடி அடர்ந்த மார்பில் முகம் புதைத்து இருக்கி அணைத்துக்கொண்டு இருவரும் உறங்கி விட்டார்கள்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.