“தேங்க் யூ ஸார். உங்ககிட்ட இருந்து இந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம். தி பெஸ்ட் சிங்கர் அதிரன் தேவராஜ் கூட பாடியிருக்கேன். தேங்க் யூ ஸார்…” என்றாள் ஸ்ருதி.
“அதிரன் பெஸ்ட் ஆக்டரும் கூட ஸ்ருதி…” என்றான் பார்த்திவ் அவளிடம்.
“அஷ் ஸ்ருதியோட ப்ரெண்ட்…” என அதிரனிடம் கூறினான் பார்த்திவ்.
“ஓஹ்…” என்ற புன்னகையுடன் ஸ்ருதியை அதிரன் பார்க்க,
“ஓகே ஸார். கேரியான்…” என சொல்லிவிட்டு ஸ்ருதி நகர்ந்து வந்தமரவும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்த்திவ் அதிரனிடம் பாடலை போட்டு காண்பிக்க சிலபல ஆலோசனைகள் நடந்தேறியது.
“இந்த சரணம் சரியா? இல்லை திரும்ப ஒருதடவை பாடனுமா?…” என்றான் அதிரன் பார்த்திவ்வின் தீவிரமான யோசனையை பார்த்துவிட்டு.
“இல்லை அதிரன். இதுவே பெர்பெக்ட். ரொம்ப அழகா வந்திருக்கு. எனக்கு திருப்தி. இல்லைன்னா நானே பாட சொல்லிடுவேன்…” என்று சொல்ல,
“ஆமாமா…” என்றாள் ஸ்ருதி மெல்லிய குரலில்.
சட்டென பார்த்திவ் அவளை திரும்பி பார்க்க கண்களை விரித்தவள் அவனின் முறைப்பில் திரும்பிக்கொள்ள இன்னுமே அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் வேற எதோ ஒரு யோசனையில…” என ஸ்ருதி சொல்லவும் பார்த்திவ் பல்லை கடித்தான்.
“ஈஸி பார்த்திவ்…” என அதிரன் புன்னகையுடன் சொல்ல,
“கொஞ்சம் விளையாட்டு பிள்ளை…” என கூறினான் பார்த்திவ்.
“வெல், சீக்கிரம் குட் நியூஸ் சொல்லிருவீங்க…” என அதிரன் புன்னகைக்க,
“அதிரன்…” என திகைத்தான் பார்த்திவ்.
அதிரன் அதற்கு பதில் சொல்லும் முன் அவனின் கைபேசி ஓசை எழுப்ப எடுத்து பார்த்தவன் முகத்தில் ஆயிரம் வர்ணஜாலங்கள்.
“ஹ்ம்ம், மேகா…” என்று அவன் சொல்லுகையில் தான் எத்தனை உணர்வுகள் அதில்.
“நான் கீழ பார்க்கிங்ல இருக்கேன் அதி…” என்றாள் அதிரனின் மனைவி மேகவர்ணா.
“ஓகே, வசந்த் கூட மேல வா. ஒரு சின்ன வொர்க் முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்…” என அழைக்க,