ஸ்ருதியின் கையை பிடித்தபடி தயாரிப்பாளரின் மனைவி நின்றுகொண்டார் அவள் அருகில்.
அவரின் முகமெல்லாம் புன்னகை. அது அவரின் பார்வையிலும் பேச்சிலுமே தெரிந்தது.
“ரொம்ப சந்தோஷம் ம்மா ஸ்ருதி….” என்றார் மீண்டும் கிளம்பும் பொழுது.
“உன்னை பத்தி நிறைய சொல்லியிருக்கார் என் வீட்டுக்காரர். உன்னோட பாட்டு ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். ரொம்ப தைரியமான பொண்ணுன்னு பெருமையா பேசுவார்…” என்றவர் மேலும் பேசும் முன்,
“விட்டா நீ பேசிட்டே இருப்ப. கிளம்புவோம். அடுத்த கெஸ்ட் வெய்ட்டிங்…” என்று சொல்லி மனைவியை அழைத்து சென்றார் தயாரிப்பாளர் பி.எஸ்.
“பாரேன் மோளே எல்லார் வீட்டுலையும் ஒன்னு போல தான் போல. ஆனா இங்க வந்ததுலையே ரொம்ப பார்மலா இல்லாம சொந்தக்காரங்க மாதிரி பேசினது இந்தம்மா தான்…” என சுபஷ்வினி சொல்ல,
“எனக்கு விசிலடிக்கனும் போல இருக்கு. ஆனா முடியலை…” என ஸ்ருதி பாராட்டுதலாக சொல்ல,
“அடியேன், யார் வேண்டாம்ன்னு சொன்னா?…” என்றான் பார்த்திவ்.
இருவருமாக பேசிக்கொண்டிருக்க அதிரன் அருகில் மேகா வந்ததும் அவளை பார்த்து குறுஞ்சிரிப்பு சிந்தியவன்,
“என்னடா மேகா? கிளம்பனுமா?…” என கேட்க,
“ஹ்ம்ம் போகலாம். நான் ரெடி தான்…” என்றாள் அவள்.
“டான்ஸ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே மேகம்?…”
“நான் சொல்லனுமா என்ன?…” என அவனிடமே கேட்டவள் பார்த்திவ் வரவும் நகர்ந்து அதிரன் பக்கம் நின்றாள்.
“ஓகே பார்த்திவ். நாங்க கிளம்பறோம். இன்னொருநாள் கண்டிப்பா ஸ்ருதியோட நீங்க வீட்டுக்கு வரனும் பார்த்திவ். அப்பாவும் சொல்ல சொன்னாங்க…” என அதிரன் அழைக்க,
“கண்டிப்பா அதிரன்…” என்றான் பார்த்திவ்வும்.
“ஓகே, ஸ்ருதி உங்க ஜர்னி இப்படியே சந்தோஷமா தொடரனும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் ஜர்னின்னு சொன்னது உங்க ஃபேமிலியும், பிரபஷனும் சேர்த்து தான்….” என மனதார வாழ்த்தினான்.
அதிரனும் மேகவர்ணாவும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அடுத்தடுத்து வந்தவர்களும் வைத்துவிட்டு கிளம்ப வீடு வர நள்ளிரவாகிவிட்டது.
மஞ்சுளா அதற்கு மேல் சுபஷ்வினி விடுதிக்கு கிளம்ப அனுமதிக்கவில்லை. அவர்களுடனே அழைத்து வந்துவிட்டார்.
ஸ்ருதிக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவளுடனே வீடு வரும்வரை சலசலத்தபடி வர பார்த்திவ் முகத்தில் புன்னகை.
சுபஷ்வினிக்கு ஒரு அறையை காண்பித்து இருக்க சொல்லிவிட்டு அவள் அறைக்கு வர பார்த்திவ் உடைமாற்றி கட்டிலில் சாய்ந்திருந்தான்.
“இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா தூங்குவியே…” என்றான் அவளை தன்னை நோக்கி கை நீட்டியபடி.
“யார் சொன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால தூங்க போறதில்லை மாஸ்டர், உங்களையும் தூங்க விட போறதில்லை….” என அவனின் மடியில் அமர்ந்தவள்,
“டான்ஸ் பண்ணுவோமா மாஸ்டர்?…” என விஷமமாய் புன்னகைக்க,
“பண்ணலாமே. பர்ஸ்ட் லிப் டான்ஸ், அடுத்து….”
“பரதம், குச்சிப்புடி, கதகளி எல்லாம் உங்க டான்ஸ் லிஸ்ட்ல வராதாமா?…” என்று அவனின் மீசையை பிடித்து இழுத்தவள் கிள்ளியும் வைக்க,
“முதல்ல இதை படிக்கலாம். ஸ்டெப் பை ஸ்டெப்பா மூவ் பண்ணுவோம்டா ஸ்ருதிம்மா…” என்ற பார்த்திவ்வின் கள்ளப்புன்னகையில் மனம் மயங்கிய ஸ்ருதி அவன் மடி சாய்ந்தாள்.