சந்திரா இவ் உலகை விட்டு பிரிந்து ஒரு வாரம் கடந்து விட்டது..
26 வயது வரை அவர் கைக்குள் ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த திருநா தாய் இல்லாமல் மிகவும் உடைந்து போய்விட்டான்..
அவன் குளியல் அறைக்கு செல்வதற்கு முன்பு சந்திரா சென்று அவனுக்கு தேவையான சோப் மற்றும் சம்போ,டவல் அவனுக்கு உடை என அனைத்தையும் தயார்படுத்தி விட்டு வருவார்..
இதுவரை காலமும் அவன் தானே ஒரு உடைய தெரிவு செய்து உடுத்தியதில்லை..
உணவு, உடை ஏனைய அவன் தேவைகள்.. பள்ளிக்கு அழைத்துச் செல்வது.. வெளியே அழைத்து செல்வது.. கோவிலுக்கு போவதாக இருந்தாலும் தாயும் மகனும் போவது.. என்று இத்தனை வருடமும் சந்திராவின் கைக்குள் இருந்தவன் இன்று தாய் இல்லாது தவிக்கும் கை குழந்தை போல் ஆகிவிட்டான்..
ஆம் சந்திராவிற்கு 26 வயது நிறைந்த மகன் என்றும் கை குழந்தை தான்..
அப்படித்தான் அனைத்திற்கும் அவரை சார்ந்தே அவன் பழகி விட்டான்..
அவனை தனித்து இருக்க வைத்து அனைத்தையும் சொல்லிக் கொடுக்க எவ்வளவோ போராடினார்..
எப்பொழுது பள்ளியை விட்டு அவன் நின்றானோ அப்பொழுதே இன்னும் அனைத்திற்கும் தாயுடனே அதிகம் ஒட்டிக்கொண்டன்..
சந்திராவின் இழப்பு திருநா-வை மிகவும் பாதித்துவிட்டது..
மூன்றாம் நாள் காரியத்தை மாறன் வந்து திருநாவை அழைத்துக் கொண்டு சென்று செய்து முடித்தான்..
ஒருவரது வழிகாட்டலிலேயே வாழ்ந்து பழகி விட்டான் திருநா..
மாறனுக்கும் விடுபட்ட வேலைகள் அழுத்தியதால் சற்று நேரம் ஓய்வு எடுத்து இடையே திருநாவை பார்த்து வர அவனுக்கு நேரம் இல்லை..
அதனால் மூன்று வேளை உணவையும் பவானி செய்து நட்டுவிடம் கொடுக்க அவன் எடுத்துச் சென்று கொடுத்து விட்டு வந்தான்..
அவனுக்கு பிடித்தவை பிடிக்காதவை அறிந்து பார்த்து சுடச்சுட உணவை செய்து அவனுக்கு பக்கத்தில் இருந்து பரிமாறிய தாய் போல் யாரும் வருவார்களா என்ன?..
சந்திராவின் படத்திற்கு முன்பு அப்படியே மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தவன் உணவை பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டான்..
பசிக்கும் ஆனால் உணவு உண்ண விருப்பமில்லாமல் அப்படியே இருந்து விட்டான்..
ஒரு நேர உணவு கூட சற்று அரை மணி நேரம் தாமதமாக ஆனால் அவனால் பசி தாங்க முடியாமல் பசியில் துடித்து விடுவான்.. அப்படிப்பட்டவன் இவ்வாறு இருக்கிறான் என்றால் தாயின் இழப்பு அவனை அவ்வளவு பாதிக்கிறது என்று அர்த்தம்..
பாலச்சந்திரன் மூன்று நாட்கள் வரை வெளியே செல்லாமல் இருந்தவர் அதன் மேல் அவரால் இருக்க முடியவில்லை போல் மீண்டும் நான்காவது நாளில் இருந்து ஆபீஸ் செல்ல ஆரம்பித்து விட்டார்..
கூப்பிட்ட குரலுக்கு வரும் மனைவி இன்று இல்லை என்பது அவருக்கு புத்தியில் உரைத்தாலும் அதையே நினைத்துக் கொண்டு காலத்தை கடத்த முடியுமா என்பதை உணர்ந்து அவர் வேலையை அவர் பார்த்தார்..
வகை வகையான ருசியான உணவு மட்டுமே அவருக்கு பிரச்சினையாக அமைந்தது..
அதற்கும் பழகி விடுவார்.. இல்லை வேறு திருமணம் செய்து அந்த குறையை நீக்கி விடுவார்..
அன்றும் நட்டு மதிய உணவை எடுத்துக் கொண்டு வரும் பொழுது திருநா நிலத்தில் விழுந்து கிடந்தான்..
பாலச்சந்திரன் வீட்டில் இல்லை..
பசி அதிகம் வந்தால் ருசி அறியாது என்பது போல் பசி வந்ததால் பாலச்சந்திரன் நட்டு கொண்டு வந்து வைத்த உணவை முதலில் விருப்பமில்லாமல் தான் பசிக்காக உண்ண ஆரம்பித்தார்.. இந்த உணவில் தன் மனைவி சந்திராவின் கை பக்குவம் அடங்கியிருந்ததை உணர்ந்து திருநாவுக்கும் வைக்காமல் அளவுக்கு அதிகமாக உணவை உண்டு விட்டார்..
பசி எடுத்தும் தாயின் இறப்பினால் அவன் உண்ணாமல் இருந்தபோது பசி அதிகமாக வாட வைத்தது.. இனி அழுவதற்காவது உடலில் பலம் வேண்டும் என்பதால் சரி ஏதாவது உண்ணலாம் என்று எழுந்தான்..
அவனால் எழ முடியாமல் போகவும் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து டைனிங் டேபிளுக்கு சென்றான்.. அங்கே உணவுகள் இல்லாமல் பாத்திரங்கள் மட்டும் இருந்தது..
தண்ணீரை குடித்தும் பசியை அடக்க முடியாமல் தாயின் படத்திற்கு அருகே வந்து அமரும் பொழுது தலைசுற்றி கீழே விழுந்து விட்டான்..
அப்பா இல்லாத போது அப்பாவின் அருமையும் உப்பு இல்லாத போது உப்பின் அருமையும் தெரியும் என்ற பழமொழி போல்..
தாய் இல்லாது தன்னிலை என்ன என்பதை நன்கு உணர்ந்து கொண்டான் திருநா..
நட்டு வந்து கதவை திறக்க கதவு திறந்து கொண்டது..
முதலில் உள்ளே செல்லாமல் திருநாவை அழைத்தான் எந்த சத்தமும் வராமல் போகவே தான் அவன் உள்ளே சென்றான்..
முதலில் சாதாரணமாக தாயின் படத்திற்கு முன்பு படுத்திருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டு உணவு பாத்திரத்தை அங்கே வைத்தான்..
உணவு எடுத்து வந்திருப்பதை திருனா-விடம் சொல்வோம் என்று அருகே இருந்து அழைத்தும் அவனிடம் எந்த அசைவும் இல்லை..
திருநாவிற்கு அருகே நட்டு அமர்ந்து அவனை அசைத்துப் பார்த்தான்.. அப்பொழுதும் அவன் எழுந்து கொள்ளவில்லை..
தண்ணீர் தெளித்தும் அவன் எழவில்லை..
நட்டு விற்கு பயம் வந்துவிட்டது.. அவனிடம் இருக்கும் பட்டன் கைபேசியின் மூலம் மாறனுக்கு அழைத்து விஷயத்தை கூறி மாறனை உடனடியாக வருமாறு அழைத்தான்..
மாறனும் அவசரம் புரிந்து அருகே உள்ள கடைக்காரரிடம் தன் கடையையும் சற்று நேரம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவன் பைக்கை எடுத்துக்கொண்டு திருநா வீட்டுக்கு வேகமாக வந்தான்..
நட்டுவிடம் மாறன் சொன்னபடி அருகே இருந்த ஆட்டோவை அழைத்து வந்து இருவரும் மல்லுக்கட்டி திருநாவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகே இருந்த ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்..
இரண்டு நாட்களாக தொடர்ந்து உணவு உண்ணாமல் இருந்ததால் அவன் உடல் எடையும் , பலகினமும் சேர்ந்து ஆழ்ந்த மயக்கத்திற்கு அவனை ஆழ்த்திவிட்டது..
திருநா- விற்கு சேலன் ஏற்றி அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தார்கள்..
உடலுக்கு சற்று பலம் கிடைத்ததும் அவன் கண்கள் திறந்து கொண்டான்..
சரியான நேரத்திற்கு அவன் உணவு உண்ணவில்லை என்றால் அவன் உடல் பசி தாங்க இயலாமல் அப்படித்தான் அடிக்கடி வரும் என்பது அவர்களுக்கு தெரியாது..
நட்டுவை அவனுக்கு துணைக்கு வைத்துவிட்டு மாறன் மெக்கானிக் ஷாப் வந்து விட்டான்..
மீண்டும் திருநா கண்முழித்ததும் நட்டு மாறனுக்கு அழைத்துச் சொல்ல இதோ இரவு உணவை வீட்டிற்கு சென்று எடுத்து கொண்டு வந்துவிட்டான்..
இட்லியும் அதிக காரமில்லாத சாம்பாரும் திருநா-க்கு பிடித்த சுவையில் இருந்ததால் அதிகம் சாப்பிட்டு விட்டான்..
அன்று மட்டும் மருத்துவமனையில் இருக்கும்படி டாக்டர் கூறியதால் அவனை அங்கே விட்டுவிட்டு மீண்டும் நட்டுவும் மாறனும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்..
எவ்வாறு மனைவி இறந்தது பாலச்சந்திரனுக்கு தெரியாமல் போனதோ அப்படி மகனுக்கும் உடல்நிலை முடியாமல் போனது தெரியாமல் போய்விட்டது..
அந்த வீட்டில் ஏதாவது ஒன்று என்றால் அவருக்கு அழைத்துச் சொல்ல வேண்டும் என்று தாய் மற்றும் மகன் இருவருக்கும் தோன்றுவதில்லை..
அந்த நிலையில் தான் பாலச்சந்திரன் அங்கே வாழ்ந்திருக்கிறார்..
ராதாவிடம் அவனை ஒப்படைத்தும் இதுவரைக்கும் ராதா அவனை சென்று பார்க்கவில்லை.. இதைப்பற்றி நாளை அவளிடம் பேச வேண்டும் என்று மாறன் முடிவெடுத்து விட்டான்..
இவற்றை யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் பொழுது தான் வீட்டின் முன்பு சம்மந்தமே இல்லாமல் ஆட்கள் கூடி நின்றார்கள்..
பவானி ஒரு பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்ப்பாள்.. தலிக்கொடி சீரியல் சந்தியா தன் வீட்டிலேயே இருக்கிறாள் என்று அவள் வந்ததும் எல்லாரையும் போல் பரவசத்தில் மகிழ்ந்து போனாள்..
ஆனால் அடுத்தவர் விஷயத்தில் தான் தலையிடக்கூடாது என்பதற்காக எப்படி அவள் இங்கே வந்தார்கள்? ஏன் வந்தார்கள்.? என்ற கேள்வியை இதுவரைக்கும் பவானி அவர்களிடம் வைத்ததில்லை..
இந்த ஒரு வாரத்தில் இசையும் அவளிடம் எதைப் பற்றியும் கூறவில்லை..
வீட்டுக்கு வந்திருப்பவர்களை பற்றி அலசி ஆராய்வது நாகரிகம் இல்லை என்பதால் பவானியும் விட்டுவிட்டாள்..
இன்று மாலை பத்திரிக்கையில் ‘ மீண்டும் தாலிக்கொடி நடிகை சந்தியாவின் புது காதல் ..’
என்ற தலைப்பில் முன்பக்கத்தில் இசையும் வில்லன் நடிகனின் அந்த புகைப்படமும்..
மாறனும் இசையும் மருத்துவமனையில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியாகி பத்திரிக்கையில் அவர்களுக்கு வாய்க்கு வந்தது அனைத்தையும் எழுதி போட்டிருந்தார்கள்..
சந்திராவின் மரணத்தின் அன்று இசையும் மாறனும் வைத்தியசாலையில் அருகருகே நின்ற படம்தான் அது..
காதலனுடன் ஏற்பட்ட உறவின் காரணமாக உருவான குழந்தையை கருக்கலைப்பு செய்ய சென்றிருக்கிறார் நடிகை சந்தியா..
என்றும் இன்னும் மிகைப்படுத்தி அதிக வார்த்தைகளும் எழுதி இருந்தார்கள்..
பத்திரிகை வாசிக்கும் பழக்கம் உள்ள அக்கம் பக்கத்தினர்கள் இதை பார்த்துவிட்டு தான் அவளை இங்கே பார்த்ததால் அதையும் எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கேட்டு சத்தமிட்டு கொண்டிருந்தார்கள்..
அவர்கள் ஏன் மருத்துவமனைக்கு சென்றார்கள் என்று அவர்களுக்கு தெரியும்..
அதை அனைவரிடமும் போய் விளக்கிக் கொண்டிருப்பது அவர்கள் வேலையும் இல்லை..
ஒன்றை பத்தாகவும் பத்தை நூறாகவும் திரிப்பதே வம்பு வளர்க்க நினைக்கும் பத்திரிகைத்துறை மற்றும் நிருபர்களின் வேலை..
இவர்களால் நேர்மையான பத்திரிகை துறையினரும் பாதிக்க படுகிறார்கள்..
எவ்வாறு அவளது நடிப்பை பார்த்து அவளை நேரில் பார்த்து பூரித்து சந்தோஷப்படுகிறார்களோ..!
அப்படியே அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு கிசுகிசு வந்தால் அவதூறாக பேசவும் செய்வார்கள்..
அப்படித்தான் இப்பொழுதும் நடந்தது.. அந்த பத்திரிகையில் வந்ததை வைத்து உண்மை என்று நம்பி பவானி வீட்டின் முன்பு வந்து அவதூறக வாய்க்கு வந்தது எல்லாம் இசையை பேசி திட்டி அவர்கள் மனதை தேற்றிக்கொண்டு இருந்தார்கள்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.