இசை என்னடா திடீரென்று அம்மா உதவி செய்தவர்களை மாப்பிள்ளை என்று கூறுகிறார் என்று யோசித்தாள்..
“ அம்மா என்னம்மா எல்லாம் தெரிஞ்ச நீயே யாரோ தெரியாதவங்களை போய் மாப்பிள்ளை என்று சொல்லுற?.. உனக்கு கோட்டி பிடிச்சிருக்கா?.. “ என்றாள்..
கோமதியும் அண்ணனை மாப்பிள்ளை என்று கூறவும் இனியும் சும்மா இருந்தால் சரிவரது என்று பவானி பேச மீண்டும் ஆரம்பித்தாள்..
பவானி வாய் திறந்து உண்மையை கூறினால் அனைத்தும் கெட்டு விடும் என்று நினைத்த கோமதி “ இங்க பாருமா உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும் தானே.. என் பொண்ணு சுத்தமானவ.. புத்திகிட்டு நடிக்க போறேன்னு போய் இப்படி அவ பேர் எடுத்துட்டு வந்து இருக்கா..
நான் இங்க வந்த இத்தனை நாள் பார்த்ததில் எனக்கு மாறன் தம்பி தான் இவளுக்கு நல்ல ஜோடின்னு இப்ப தோணுது.. திரும்பவும் நடிக்க போறேன்னு நினைக்கிறா.. எனக்கு அப்படியே பகிர்னு இருக்கு..
முதலாவது எனக்கு சப்போர்ட்டுக்கு அண்ணே இருந்தார்.. இப்ப எங்க அண்ணன் எங்களை ஒதுக்கி வைத்திருக்கும் போது என்னால அதிகமா அவளோட போராட முடியாது..
நீ கொஞ்சம் அமைதியா இரும்மா.. இப்படியே எல்லாரும் பேசினால் அவளே அவ வாயால அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஒத்துக் கொள்வா.. அதை புடிச்சுகிட்டு நம்ம கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம்.. ” என்றார்..
“ ஐயோ என்னங்க நீங்க இப்படி எல்லாம் சொல்றீங்க எங்க அண்ணா ரெண்டு கண்டிஷன் போட்டு இருக்கு..
அதை மீறி எப்படி இவங்களை கட்டி வைக்கிறது?..
அப்புறம் எங்க அண்ணனுக்கு இவங்கள புடிக்கணுமே அவருடைய வாழ்க்கையில விளையாட முடியாது..
எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வாழுற எங்க அண்ணா அது கல்யாண வாழ்க்கை தான் அதுக்கு சந்தோசம் கொடுக்கணும்..
எங்க அண்ணனுக்கு இவங்களை பிடிச்சா ஓகே.. இல்லன்னா இது சரிப்படாது.. ” என்றாள் அண்ணன் மேல் பாசம் வைத்திருக்கும் தங்கையாக..
கோமதி என்ன கண்டிஷன் என்று கேட்டு அதை தெரிந்து கொண்டார்..
“ உன் அண்ணன் போட்டு இருக்கும் கண்டிஷனுக்கும் என் பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்குமா.. எல்லாம் சரிவரும்.. நீ எதையும் யோசிக்காத இப்ப கொஞ்சம் அமைதியா இருந்தா போதும்.. ” என்று பவானியை கொஞ்சம் அமைதிப்படுத்திவிட்டார்..
அவளும் வயதில் பெரியவர்களுடன் இதற்கு மேல் வாதாட விருப்பம் இல்லாமல் அண்ணன் சம்மதித்தால் தானே திருமணம்.. அண்ணனுக்கு இவங்களை கண்டாலே பிடிப்பது இல்லை.. பார்க்கும் போது எல்லாம் முறைத்து வைக்கிறார்.. அண்ணன் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று ஒதுங்கி கொண்டாள்..
“ இசை இனி நீ வாய் திறந்து எதுவும் பேசக்கூடாது.. அது மாப்பிள்ளைக்கு தான் கெட்ட பெயர் அமைதியாக உள்ள வா..” என்றார் கோமதி..
“ அட என்ன பொண்ணுமா நீ?.. உங்க அம்மாவே மாப்பிள்ளைன்னு சொல்லுறாங்க.. இன்னும் நீ இல்லன்னு என்னவோ உளறிட்டு இருக்க..
எனக்கு அப்பவே இந்த பொண்ணு மேல சந்தேகம் தான்.. ” என்று மதி பேசவும்..
அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் இல்லாதது எல்லாம் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்..
கோமதி நினைத்தது போல தான் நடந்தது.. மகள் குணத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.
அவள் வாயாலயே அவளுக்கும் மாறனுக்கும் சம்பந்தம் இருக்கிறது அவர் குழந்தையை தான் நான் கலைக்க போனேன்.. இந்த பத்திரிகையில் வந்திருப்பது உண்மைதான்.. அதற்கு இப்போ உங்களால் என்ன பண்ண முடியும்.. என்று கோபத்தில் உளறினாள்..
அவள் அப்படி பேசவும் சரியாக ஹாஸ்பிடலில் இருந்து மாறனும் நட்டுவும் வரவும் சரியாக இருந்தது..
அவனைப் பார்த்ததும் “ இதோ அவரே வந்துட்டார். அவர்கிட்டயே கேளுங்க இந்த பத்திரிகையில் இருப்பது உண்மையா இல்லையா என்று பதில் சொல்வார்..
என்னங்க நாம கல்யாணத்துக்கு முன்னாடி உண்டாக்கின குழந்தையை வேண்டாம் என்று சொல்லி தானே ஹாஸ்பிடல் போய் கலைச்சிட்டு வந்தோம்.. எல்லாரும் கேக்குறாங்க பதில் சொல்லுங்க…” என்றாள் இசை..
என்ன நடந்தது என்று அவனுக்கு முழுதாக தெரியாது.. ஆனாலும் அவள் பேசியதை வைத்து கோபம் வந்ததால் தான் ஆட்களுக்கு முன்பு அவள் இருக்கிறாள் என்று எதுவும் யோசிக்காமல் அடித்தான்..
“ அண்ணே.. என்ன இது இங்க எவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு. அதை பற்றி எதுவும் தெரியாம வந்ததும் ஒரு பொண்ண கைநீட்டி அடிக்கிற?.. நீ இப்படியே இல்ல உனக்கு ஏதோ டென்ஷன் போல.. அவங்ககிட்ட சாரி கேட்டுட்டு இந்த கூட்டத்தை கலைச்சிட்டு அவங்களை உள்ள கூட்டிட்டு வா.. உனக்கு விவரமா எல்லாத்தையும் சொல்லுறேன்.. ” என்றாள் பவானி..
இந்த பெண் எல்லாத்தையும் சொல்வேன் என்றாளே.. தானும் மாப்பிள்ளை என்று சொல்லி பேசியதையும் சொல்லிவிட்டால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று நினைத்தார் கோமதி..
அவன் எப்பொழுதும் தங்கையின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசியது இல்லையே..
அதே போல் இன்றும் பவானி சொன்னதை கேட்டான்..
கோபம் சற்று தணிந்ததும் அவனும் உணர்ந்து கொண்டு இத்தனை ஆட்களுக்கு முன்பு வைத்து யார் என்று தெரியாத ஒரு பெண்ணை கை நீட்டி அடித்து விட்டோம். இது தவறு என்று புரிந்தபடியால் “ நீங்க அப்படி பேசினதும் எனக்கு கோவம் வந்துடுச்சு அதனால கை நீட்ட வேண்டியதா ஆகி விட்டது.. என்னை மன்னிச்சுக்கோ..” என்று கூறிவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று விட்டான்..
“ சரிங்க என்னென்னமோ நடந்து ஏதேதோ பேச்சு வார்த்தை வந்து இப்ப நிலைமை மோசமாக போய் விட்டது.. அண்ணே இப்பதானே வந்திருக்கு ரொம்பவே தாமதம் ஆயிடுச்சு.. நடந்தது எல்லாத்தையும் காலைல அண்ணன் கிட்ட சொல்லி அது முடிவை தெரிஞ்சுகிட்டு உங்க எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்லுறேன்..
தப்பா நினைச்சு கொள்ளாம இப்ப எல்லோரும் இங்க இருந்து கிளம்புங்க..”
என்று கூடியிருந்தவர்களை பார்த்து சொல்லிவிட்டு
இசையின் பக்கம் திரும்பி “ எங்க அண்ணனுக்காக நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. மன்னிச்சுக்கோங்க. வாங்க வீட்டுக்குள்ள போகலாம்..” என்று கூறி இசையின் கையை பிடித்து அழைத்துச் சென்றாள் பவானி..
அவர்களைத் தொடர்ந்து கோமதியும் நட்டுவும் உள்ளே சென்றார்கள்..
கோமதிக்கு ஒன்று புரிந்து விட்டது..
இவ்வளவு பெரிய ஆண்மகன் தங்கை சொல்லி இத்தனை பேர் மத்தியில் ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அவனின் முடிவு அவனிடம் இல்லை அவன் தங்கையிடம் இருக்கிறது..
நம் திட்டத்திற்கு பவானி தான் சரி.. என்று தன் திட்டத்தை இன்னும் வழு படுத்தினார்..
அனைவரும் கலைந்து போகும் பொழுது “ நாம் இவ்வளவு திட்டம் தீட்டியும் இப்படி ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே.. இந்த மானிடர்களைப் பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை..
வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.. நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார்கள்.. ” என்று கூறி திருமகள் மிகவும் கவலை பட்டாள்..
“ ஒன்றை நன்றாக புரிந்து கொள் இளவரசியே.. அங்கு இருப்பவர்களின் மனதை நாம் குழப்பி விட்டு வந்திருக்கிறோம்..
குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்கலாம் என்று இந்த மனிதர்களின் பழமொழி ஒன்று உள்ளது..
அதன் படி அந்த ஜோடி சேர்வது தற்காலிகமாக தள்ளிப் போய் உள்ளது.. இன்னும் நிரந்தர முடிவை யாரும் எடுக்கவில்லை..
நம் திட்டத்திற்கு எதிரான முடிவை யாரும் எடுக்க நாம் அனுமதிக்க மாட்டோம்..
இப்பொழுது ஒன்றை கவனித்தாயா நம் திட்டத்திற்கு அந்த பெண்ணின் தாயும் உடந்தையாகி விட்டார்..
அப்படி என்றால் நம் பக்கம் ஆள் பலம் சேர்ந்து விட்டது என்று அர்த்தம்..
இன்று இல்லை என்றால் என்ன நாம் நினைத்தது வெகு விரைவில் நடக்கும் இளவரசியே மனதை தளர விடாதே..” என்று பேசிக்கொண்டே ராமசாமியின் வீட்டிற்குள் திருமதியும் திருமகளும் சென்றார்கள்..
பவானி இசையை உள்ளே அழைத்து சென்றதும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய் அடைந்து கொண்டாள் இசை..
அப்படி அவர் அடிக்கும் அளவிற்கு என்ன பேசினோம் என்பது தான் தற்பொழுது இசையின் யோசனையாக இருந்தது..
அவள் பேசிய எதுவும் அவளுக்கு நினைவு இல்லை..
இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து பவானி அண்ணனுக்கு குளித்துவிட்டு வந்ததும் உணவை கொடுத்து அவனுக்கு உறங்க அறையை தயார்படுத்தி கொடுத்தாள்..
இந்த நேரத்தில் பேச வேண்டாம் மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து எதுவும் கேட்டுக் கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்று விட்டான் மாறன்..
அனைவரும் உறங்கியதும் மாறனின் அருகே ஒரு உருவம் வந்து படுத்துக் கொண்டது..
உடல் அசதியில் அதை தெரிந்து கொள்ளாமல் நன்றாக உறங்கி விட்டான்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.