மாறன் வீட்டில் பவானியும் மாறனும் மட்டும் இருப்பதால் பவானிக்கு அதிகமான வேலைகள் இருந்ததில்லை..
அதுவும் மாறன் வேலைக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவதால் மாலை நேர பலகாரம் செய்வது மிகவும் குறைவு..
இவர்களுடைய தம்பி ஹாஸ்டலில் இருந்து படிப்பதால் சுவையான உணவை அவன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை..
ருசி அறியாது பசியை போக்குவதற்காக கிடைக்கும் உணவை உண்பதால் அவனை நினைத்து இவர்களும் கறி விருந்து வீட்டில் அவன் வராமல் செய்வதில்லை..
மாறன் கடினமாக உழைப்பதால் அவனுக்கு தினமும் மீனும், முட்டையும் உணவில் சேர்த்துக் கொள்வாள் பவானி..
விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் பொழுது தான் அக்காவின் கையில் விரும்பிய உணவுகளை கேட்டு அவள் செய்து கொடுக்க பூரணமாக உண்பான் கார்த்தி..
அவன் வந்திருக்கும் போது மட்டன், சிக்கன், என்று விருந்துகள் அமர்க்களப்படும்..
மாலை நேர பலகார வகைகள் விசேஷமாக செய்து கொடுப்பாள் பவானி..
தம்பி மனமார சந்தோசமாக உண்பதை பார்த்து அவள் மனம் நிறைந்து விடும்..
இன்று அவர்கள் தம்பி விடுமுறையில் வீட்டிற்கு வருகிறான்..
அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பின்பு மாறனும் சாயந்தரம் நேரத்தோடு வீட்டிற்கு வருகிறான்..
அதனால் அவர்கள் அனைவரும் மாலையில் பலகாரம் மற்றும் காபியுடன் அவர்கள் ஒன்று கூடி பேச உகந்த நாள் என்பதால் இன்று பவானி தம்பிக்கு பிடித்த காரம் மற்றும் இனிப்பு வகைகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்து கோமதி உதவியுடன் செய்து முடித்து விட்டாள்..
இதோ இன்னும் சற்று நேரத்தில் மாறன்,கார்த்தி மற்றும் நட்டு மூவரும் வந்துவிடுவார்கள்..
அதனால் பவானி குளித்து தயாராகிவிட்டு வாசலுக்கு வரவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.
ஆட்டோவில் இருந்து இறங்கிய கார்த்தி பெட்டியை எடுத்து கீழே வைத்து விட்டு ஓடி வந்து அவனது “அக்கம்மா” பவானியை கார்த்தி அப்படித்தான் அழைப்பான் கட்டிக்கொண்டு ..
அதாவது உறவில் அவள் அக்கா உணர்வில் அவனுக்கு அம்மா..
அதனால்“ அக்கம்மா” என்று தான் அழைப்பான் கார்த்தி..
அவளுக்கும் நீண்ட நாட்கள் கழித்து தான் ஆசையாக வளர்த்த பிள்ளையை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டது..
“ உள்ள வாடா தம்பி பையா.. நட்டு தம்பியோட பெட்டிய எடுத்துட்டு வா..” என்று கூறிவிட்டு தம்பியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் பவானி..
தாய் தந்தை இல்லாமல் நன் நெறி மாறாமல் வளர்ந்து நிற்கும் இந்த மூன்று முத்துக்களையும் பார்த்து கோமதியே ஆச்சரியப்பட்டார்..
தன் மகளையும் மகனையும் இவர்களுக்கு மனம் முடித்து வைத்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்தார்..
கார்த்தி மாதிரியும் ஒரு அருமையான பையனை இழக்க விரும்பாமல் இன்னொரு மகள் பெறவில்லையே என்று கவலைப்பட்டார்..
மூவரும் குளித்து சுத்தம் செய்து கொண்டு வந்ததும் காபியும் பலகாரமும் கொண்டு வந்து கொடுத்தாள் பவானி..
மாறன் கொடுத்ததை உண்டு விட்டு அமர்ந்து இருந்தான்.. கார்த்தி இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்டான்..
கார்த்தி பற்றி தெரிந்து தான் பலகாரங்கள் அதிகமாக செய்து இருந்தாள்.. அவன் கேட்கும் அனைத்தும் கொடுத்து விட்டு நட்டுகும் கொடுத்து கோமதிக்கும் கொடுத்து அவளும் உண்டாள்..
இவர்கள் சத்தம் கேட்டதும் இசை வெளியே வரவே இல்லை..
நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக அக்காவின் கை பக்குவத்தில் உண்டபடியால் தற்போதுதான் கண்விழித்து எதிரே நின்ற கோமதியை பார்த்து யார் என்று கண்களால் அக்காவிடம் வினாவினான் கார்த்தி..
“ கார்த்தி இவங்க கோமதி.. இவங்க பொண்ணு இசை..
இசை உள்ள வேலையா இருக்காங்க போல அழைத்து வரேன்..” என்று கூறி பவானி அறையை நோக்கி செல்லவும்.
“ பவானிம்மா நில்லு.. நாங்க வந்த சத்தம் அந்த பொண்ணுக்கு கேட்டிருக்கும்.. விரும்பினால் அவ வெளியே வருவா.. இல்லையா? உள்ளயே இருக்கட்டும்.. யாரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..
எங்களோட இருக்க பிடிக்காட்டி அவங்களுக்கு நீ தனியா அறைக்கே டீ, காபி,பலகாரம் எல்லாம் அவங்க அம்மா கிட்ட கொடுத்து அனுப்பு..
என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது திருநா வந்தான்..
திருநா வை பார்த்து கார்த்தி யார் என்று அக்காவிடம் கேட்டான்..
சிறு வயதில் அத்தை என்று ஒரு ஆள் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் சந்திராவை கூட அவன் ஒழுங்காக பார்த்ததில்லை.. அப்படி இருக்கும் பொழுது எப்படி திருநா-வை தெரிந்திருக்கும் தெரியவில்லை அவனுக்கு..
சுருக்கமாக திருநா யார் என்று பவானி கார்த்திக்கு கூறி முடித்தாள்..
அத்தையின் கடிதத்தை படித்ததில் இருந்து திருநா மேல் கொஞ்சம் கோபம் குறைந்து இருந்தது மாறனுக்கு..
“ உள்ள வா திருநா இப்ப எப்படி இருக்கு?..” என்று மாறன் கேட்கவும்..
“ இப்ப பரவாயில்லைங்க அத்தான்.. ” என்று கூறி தயங்கி நிற்கவும்..
மாறனே எழுந்து வந்து அவனை தோளில் தட்டி உள்ளே அழைத்து வந்து இருக்க வைத்து காபி பலகாரம் கொடுக்க வைத்தான்.
நீ எப்பவோ வீட்டுக்கு வந்துட்டேன்னு பவானி சொல்லிச்சு இப்ப எங்க போயிட்டு வர?. என்று மாறன் கேட்கவும்
பயந்து கொண்டே “ வீட்டுக்கு போய் துணி எல்லாம் எடுத்துட்டு வந்தேன் அத்தான். ” என்றான் திருநா..
“ நீ இப்படி எல்லாம் பயந்து தயங்கி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல திருநா..
உன் பயந்த சுபாவத்தையும் மாத்து. இனி உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. எப்பவுமே அதை நினைவில் வைத்துகொள்.. நீ தான் அந்த குடும்ப தலைவன். உன்னை பார்த்து தான் அந்த குடும்பம் இனி முன்னேற போகுது..
இன்னும் குழந்தை புள்ளைமாதிரி கார்ட்டூன் பாக்குறது வீட்டுக்குள்ளே அடஞ்சு கிடக்கிறது இதெல்லாம் சரி வராது..
ராதாவையும் வரவழைச்சிருக்கேன். ராதா வந்ததும் முதல் உங்க பஞ்சாயத்தை பேசி சரிகட்டி உங்களுக்கு உரிய வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும்..” என்று மாறன் பேசிக் கொண்டிருக்கும்போது
இனி அந்த சேலையில் நிறம் மங்குவதற்கு நிறம் ஒன்றுமே இல்லை.
உடல் மெலிந்து, கறுத்து கண்கள் உள்ளே போய் கழுத்து எலும்பு உள்ளே போய் இருக்கும் பள்ளத்தை அடைக்க சிமண்ட் தான் வாங்க வேண்டும் போல.
அப்படி ஒரு தோற்றத்தில் ராதாவும் ஒரு வயதே ஆனா அழகு குட்டி பாப்பாவும் வந்தார்கள்..
குழந்தை ஆறு மாதம் ராதாவின் வயிற்றில் இருக்கும் போது அவள் கணவன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டான்..
வீட்டில் பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் தான்..
ராதாவின் தாய் ராதாவிற்கு 10 வயது இருக்கும் பொழுது கேன்சர் வந்து இறந்துவிட்டார்..
வழமை போல் ராதாவின் அப்பா மறுமணம் செய்து கொண்டார்..
வீடு வயல் தோட்டம் இதுதான் அவர்கள் சொத்து..
சித்தியாக வந்த கனகா ராதாவை ஒழுங்காகத்தான் பார்த்துக் கொண்டார்..
ஆனால் அவருக்கு காலங்கள் போகவும் பிள்ளை வரம் கிடைக்காததால் மருத்துவம் செய்து பார்த்தும் பிள்ளை உண்டாகவில்லை..
ராதாவின் தந்தை நமக்கு தான் ராதா இருக்கிறாளே ஏன் இன்னும் பிள்ளை ஆசை என்று கேட்டுப்பார்த்தார்..
எவ்வளவு தான் அன்பாக பார்த்தாலும் தன் வயிற்றில் பிறக்கும் பிள்ளை போல் வராது என்று கனகா கூறவும் அதைக் கேட்ட மாரிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..
எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்..
எப்பொழுது கனகா தனது ஜாதகத்தை பார்த்து அவளுக்கு இரண்டாம் தாரத்தில் பிள்ளை பிறக்கப் போவதில்லை என்று தெரிந்து கொண்டாரோ அப்போது இருந்து அவரது குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது..
மாரி எது கேட்டாலும் சிடு சிடுவென எரிந்து விழுந்தாள்..
ராதா அருகே வந்தால் பிடித்து தள்ளி விட்டாள்..
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவள் குணம் மாறி முழுவதும் அரக்கியாகவே மாறிவிட்டாள் கனகா..
ராதாவிற்கு தந்தையின் அன்பையும் கிடைக்க விடாமல் தன் அன்பையும் கொடுக்காமல் நல்வழிப்படுத்தி செல்ல வேண்டிய தந்தையையும் கெடுத்து தன் கைக்குள் போட்டுக் கொண்டு சிறு பெண் என்றும் பாராமல் ராதாவிற்கு உணவு கொடுக்காமல், நல்ல உடை கொடுக்காமல் படிப்பை நிறுத்தி வீட்டு வேலையை அந்த 12 வயதிலேயே செய்ய வைத்தாள் கனகா..
கனகா தன் மகளுக்கு செய்த கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கும் விபத்து மூலமாக தண்டனை கிடைத்தது..
கணவனும் இறந்ததும் யாரும் இல்லாமல் தனிமை வாட்டியது.. அதன் விளைவாக மன அழுத்தம் தாங்க முடியாமல் அவளது உடல் நலம் கெட்டு நோயில் விழுந்தாள் கனகா..
தன் குடும்ப வறுமையை பயன்படுத்தி தன்னை இரண்டாம் தாரமாக கட்டிக் கொடுத்து தன் வாழ்க்கையை சீரழித்த அவளது ஒன்று விட்ட அக்காவின் மகனை தன் வளர்ப்பு மகள் ராதாவிற்கு 17 வயதில் திருமணம் செய்து வைத்தாள்..
அவனுக்கு இதய நோய் பிரச்சினை உள்ளது என்பது நன்றாக கனகாவுக்கு தெரியும்..
தெரிந்தும் ராதாவை படுகுழியில் தள்ளி விட்டாள்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.