டாக்டர் வேலாயுதம், இரண்டு நாட்களுக்கு முன்னே, வருட கடைசி விடுமுறையை தான் குடும்பத்துடன் கழிக்கஅவள் என்று லீவில் செல்லும் முன்
அவளை வந்து பார்த்து, தலையில் கை வைத்து, ” புது வருடத்தில் பார்ப்போம் ” என்று கூறி விட்டு சென்றிருக்க,
அவர் லீவு முடிந்து வரும்போது, அவள் இருப்பாளா என்று ஒரு நிலையில், இருந்து, மகனை வழி அனுப்பி வைக்க வீடு வந்தது சாதனை என்றே ஆனது.
இந்த முறை வெகு ஜாக்கிரதை என்று கூறியே அனுப்பி இருந்தனர்.
அதனால், அவள் இந்த முறை ரூமை விட்டு வெளியே வராமலே இருக்க, அவள் அம்மாவுக்கு தான் சுமை அதிகமானது.
பத்திய சாப்பாடு சமைத்து, அதை அவள் ரூமுக்கே கொண்டு வந்து கொடுத்து,அவள் ரெஸ்ட் ரூம் சென்றால் கூட, கூடவே இருந்தார்.
இதில் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவள் கண்ணில் படாமல், இருந்தது தான் கணவர் வேலை ஆனது.
ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும், மாஸ்க் போட்டப்படி, தூரத்தில் நின்றப்படி அவளை பார்த்து விட்டு போவது வழக்கம்,
மகனும் அது போல் இரவு டூட்டி முடிந்து எந்நேரம் ஆனாலும் அவளை பார்த்து நலம் விசாரித்து விட்டே சென்றான்.
இரண்டு மூன்று நாட்கள் நன்றாக இருந்தபின், மறுபடி அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.
படி படியாக, அது வளர, பேசுவதே சிரமம் ஆனது,மருந்தும் கொடுத்து, ஊசியின் பாதுகாப்பும் இருப்பதால், பெரிதாக ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை, என்று போதும், சும்மா இருக்க முடியாது என்பதால் மறுநாள், டாக்டரை பார்க்க,அவர்கள் எக்கோ, இ ஸி ஜி எடுத்து பார்த்தும் எந்த பாதிப்பும் தெரியவில்லை, என்பதால் மறுபடி ஒரு ‘ சி டி ‘ எடுக்க அதில் த்ரம்போசிஸ் , எனப்படும் உறைந்த ரத்த கட்டி, நுரையீரலில் நிரம்பி இருப்பதால், மறுபடி அது கரைய மருந்து எடுக்க,
நீண்ட நெடும் மூன்று மாதங்களுக்கு பிறகு அது சற்றே குறைந்தது.
இதற்கெல்லாம் சலிக்காமல் கூட வந்து, அவளை இடம் பார்த்து உட்காரவைத்துவிட்டு, ஓடி ஓடி, பணம் கட்டி, பின் மறுபடி அவளை அழைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய டாக்டர் ரூம் சென்று, மறுபடி அவளை இடம் பார்த்து உட்கார வைத்து, அங்கே அவர்கள் முறை வரும் போது அவளை பொறுமையாக அழைத்து சென்று, காட்டி கேட்க வேண்டியதை கேட்டு, கூறும் அறிவுரைகளையும், கேட்டுக்கொண்டு, என்று தான் ஆரம்ப கால, புரிதல் இல்லாத நடத்தைக்கு, நன்றாகவே பரிகாரம் தேடி கொண்டார்.
அவர்களின் சிங்கப்பூர் ட்ரிப்புக்கு பின்னே, அவர்கள் ஆசைப்பட்ட அடுத்த பிள்ளையும் வந்து பிறக்க…
அது முற்றிலும் வேறான சுபாவமாக இருந்தது.
ஒரு இடத்தில் ஒரு நிமிடம் உட்காராமல், பறந்தது. எக்கி டேபிள் மேல் கைகளால் துழாவி, அகப்பட்ட சாமானை தள்ளி உடைத்தது!
அனைத்து பொம்மைகளும், கை வேறு கால் வேறாக கிடந்தது, அது தவிர அண்ணன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவன் பின்னே நாய் குட்டி போல் அலைந்தது.
ஸ்கூல் சென்ற போதும் அதே போல் மண்ணில் விழுந்து புரண்டு, விளையாடி, தலையில் கொள்ளாத மண்ணோடு வீட்டுக்கு வந்தது.
ஆனால் படிப்பில் அண்ணனை விட ஒரு படி மேலே, தன் போட்டோ கிராபிக் மெமரி வைத்து சாதித்தது.
கண் மூடி திறக்கும் முன் வளர்ந்து கூட்டை, விட்டு பறக்க, அவளுக்கு பழையபடி, கணவனை சுற்றி வருவதே வேலை என்று ஆனது.
பெரியவன், படிப்பு முடிந்து, திரும்பி வர, அவன் கல்யாணம், அடுத்து தம்பி கல்யாணம் என்று கிரமபடி நடக்க, வாழ்க்கை, ஒரு வட்டம் என்பது போல் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தது.
இருவர் சேர்ந்து ஆரம்பிக்கும் வாழ்க்கையில், மிக முக்கியமானது மரியாதையும், நம்பிக்கையும், அத்துடன் கொஞ்சம் தோழமையை சேர்த்தால், இன்னும் முழுமை அடைந்துவிடும்.
முற்றும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.