அனுபவமிக்க செவிலியராக பார்க்க தெரிந்தார். முகத்திலும் அவ்வளவு கனிவும், மரியாதையும்.
“அதி எழுந்தாச்சா வரு?…” என சுபத்ரா மருமகளிடம் கேட்க,
“இல்லை த்தை. தூங்கறாங்க. என்ன குடுக்கனும்னு தெரிஞ்சா எழுப்பிடுவேன்…”
“இவங்க சொல்லுவாங்க. கேட்டுக்கோ. நானும் பேசிட்டேன்…” என்று சொல்ல நர்ஸிடம் மேகா ஒவ்வொன்றாய் கவனமாக கேட்டுக்கொண்டாள்.
அதன் பின்னர் சுபத்ராவையும், செவிலியரையும் மாறி மாறி என்னவோ சொல்ல முயன்று மேகா பார்க்க,
“நீங்க இருங்க இப்ப வரேன்…” என்று மேகாவை அழைத்துக்கொண்டு சென்றார் சுபத்ரா.
“என்ன வரு? என்னவோ சொல்லனும்னு நினைக்கற?…”
“கோவிச்சுக்கமாட்டீங்க தானே?…” என்றாள் தயக்கமாக.
“என்னம்மா நீ? நேத்து நான் உன்னை வீட்டுக்கு போக சொன்னதுக்கு காரணமே வேற. அதி சொல்லவும் தான் எனக்கும் தப்புன்னு புரிஞ்சது. கஷ்டமா இருந்துச்சு…” சங்கடத்துடன் அவர் சொல்ல,
“ப்ரஷ் ஆகனும். ப்ரெஷ் பண்ணனும். முதல்ல குளிக்கனும்…” அவனை பிடித்து இழுக்காத குறையாய் அழைக்க,
“இன்னைக்கு குளிக்க முடியாதுடா. மூணு நாளைக்கு டவல் பாத் தான்…”
“நேத்து சொன்னீங்க நீங்க…”
“அது சும்மா உன்னை கலாட்டா பண்ண…” என்றதும் மேகாவின் முகம் வாடியது.
“ஓகே ஓகே, சில் மேகா…” என்று அவளை தோளோடு அணைத்தவன்,
“நான் என்னால முடிஞ்சதை முடிச்சுட்டு வருவேனாம். நீ எனக்கு ட்ரெஸ் எடுத்து வைப்பியாம்…”
“ட்ரெஸ்…” என்று அவனின் கையை பார்க்க,
“வெஸ்ட் மட்டும் போட்டுக்கலாம். எடுத்து வை. வரேன்…” என்று உள்ளே நுழைந்துவிட்டான்.
முதல் நாள் இருந்த வலியின் சாயல் கூட முகத்தில் தெரியவில்லை. திடாகாத்திரமான உடல்வாகு, அவனால் அதனை தாங்கிக்கொள்ள முடிந்திருந்தது.
அதிரன் வரவும் அவனுக்கான உடையை எடுத்து வைத்திருந்தவள் முழித்துக்கொண்டு நின்றாள்.
“கண்ணை மூடிட்டே அப்ரோச் பண்ணாத பொண்ணே. என்னை பாரு…” என ஏக கலாட்டாக்களுடன் கிளம்பி வந்தான் அதிரன்.
அதற்குள் மேகாவை அத்தனை படுத்தியிருந்தான். அடிபட்டதன் சாயல் அவன் முகத்தில் இல்லவே இல்லை.
மேகா தடுமாறி அவனை பார்க்கமுடியாமல் பார்வையை விலக்க அதற்கும் அவனின் பேச்சுக்கள் சிரிப்புடன் அவளை சுற்றிவளைத்தது.
“இப்படி செஞ்சீங்கன்னா…”
“ஒன்னும் இல்லை நர்ஸ் ஹெல்ப் பண்ணுவாங்க…” என்றான் அலட்டிக்கொள்ளாமல் குறும்பாய் புன்னகைத்து.
“இது என் ரூம். நம்ம ரூம். இங்க நான் தான் பார்ப்பேன்…” என்றாள் வேகமாய்.
“பாரு. பார்க்காம என்ன பன்ற?…” என்றவன்,
“நான் ஒரு ஆக்டர் மேடம். சில மூவில இப்படி சீன்ஸ் நடிச்சிருக்கேன்…”
“அது அதிரன் இல்லை…” என்றாள் அதற்கும் முறைப்பாய்.
“மேகா…”
“ஏன் இப்படி கலாட்டா பன்றீங்க? அதுவும் வம்பு பண்ணிட்டே இருக்கீங்க?…”
“தெரியலையேடா?…” என்று சிரித்து வைக்க மேகா தான் திணறி போனாள் பதில் பேச முடியாமல்.
ஒரு ட்ராக் பேண்ட், வெஸ்ட் மட்டும் அணிந்து அதன்மேல் பெரிதாய் ஒரு டவலை போர்த்தியபடி வந்தான் அதிரன்.
கீழே வரும் பொழுதே தேவராஜ் வந்துவிட நர்ஸ் அவனுக்காக காத்திருந்தவர் தன்னுடைய வழக்கமான செக்கப்களை கவனித்தார்.
“வலி இருக்கா இங்க…” என்று கையை பரிசோதித்து பார்த்துவிட்டு அவனின் பிபி லெவல் எல்லாம் குறித்துக்கொண்டவர்,
“ஓகே தான் ஸார். சிலருக்கு ஃபீவர் இருக்கலாம். உங்களுக்கு எதுவுமில்லை. நீங்க டயட் ஃபூட் தான் எடுக்கனும்னு இல்லை. ஹெல்தியா எடுத்துக்கோங்க. ஈவ்னிங் டாக்டரோட வருவேன். அவசரம்ன்னா கால் பண்ணுங்க…” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.