“டேய் வெளிய வாடா. அது நீ நனைந்த மாதிரி இல்ல” அவனது கணத்தில் சில முறை தட்டி பார்த்தும் பயன் இல்லை விஷ்ணுவின் கண்களில் அதே போதையின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது…
போதையின் வீரியமோ, தாக்கமோ ஆதியின் கையிலிருந்து திமிறி அந்த அமெரிக்கனை நாடினான், “டூ யு ஹவ் சம் மோர் ஹெவன் ட்ரின்க்? (உன்கிட்ட இன்னும் கொஞ்சம் அந்த ட்ரின்க் இருக்கா?)”
சாதுர்யமாக, “சாரி மேன் ஐ திங்க் யு மிஸ்அன்டெர்ஸ்டூட் மீ, தட்’ஸ் எ ஆர்டினரி ட்ரின்க் (சாரி மேன் நீ தப்பா நினைச்சிட்டானு நினைக்கிறன், அது சாதாரண ட்ரின்க் தான்)”
“யு ஆடேட் சம்திங் டு இட் டோன்ட் ளை (அதுல என்னமோ சேத்த பொய் சொல்லாத)”
தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அவனிடம் ஒப்படைக்க அவனும் வேகமாக ஒரு சிறிய பாக்கெட்டை அவனிடம் கொடுத்த நேரம் சரியாக அவனுக்கு பின்னே வந்த ஆதியை பார்த்தவன், “சாரி ஜென்டில் மேன்” என்று நகர அவனது கையை பிடித்து மன்றாட ஆரமித்தான் விஷ்ணு…
தனது கையில் தந்த பொட்டலத்தை திறந்து வாயில் போட, கோபமுற்ற ஆதி விஷ்ணுவை தனது புறம் திருப்பி அவனது கன்னத்தில் ஒரு முறை பலமாக அறைந்தான். அதில் சற்று நிதானம் திரும்பியவன் தரையில் அப்படியே அமர்ந்து விட்டான்…
அவனை முழுவதும் ஆராய்ந்த ஆதி அவனுக்கு அருகில் மண்டியிட்டு, “என்ன பன்னிட்டு இருக்கன்னு உனக்கு தெரியிதா இல்லையா? எதுக்குடா உனக்கு இவ்வளவு கோவம், வாழ்க்கையே வெறுத்த பைத்தியம் மாதிரி பன்னிட்டு இருக்க? உன் அண்ணனுக்கு தெரிஞ்சா எவ்ளோ பீல் பண்ணுவான்னு தெரியுமா?”
“தெரியும்” ஆத்திரத்தில் அறிவை இழந்து கத்தினான் விஷ்ணு, “எல்லாமே தெரியும்” அழுந்த தலையை கோதி முகத்தை முட்டியில் வைத்து கால்களை கட்டி அமர்ந்துவிட்டேன்… அவனை பார்க்க பாவமாக இருந்தது ஆதிக்கு. அவனுக்கு அருகில் அவனை போலவே அமர்ந்து விட்டான்…
“டேய் ஆம்பள பையன் அழுக கூடாதுடா… உங்க அண்னே சொல்லி குடுக்கல?” விஷ்ணுவின் விசும்பல் சத்தம் கேட்டு ஆதி கேட்க சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து, “யோவ் மூக்கு உறிஞ்சிட்டு இருந்தேன் கோல்டு வந்துருச்சு போல” மூக்கை மீண்டும் உறிஞ்சினான் விஷ்ணு.
“ச்ச நான் கூட நீ திருந்திடியோனு நெனச்சேன்” என்று தனது பேண்டில் வைத்திருந்த ஒரு மதுபானத்தை எடுத்து குடிக்க ஆரமித்தான் ஆதி…
“எனக்கு கொஞ்சம் வேணும்” – விஷ்ணு
“உள்ள போய் வாங்கிக்கோ” – ஆதி
“எனக்கு வேணும்” – விஷ்ணு
“சரி ஒரு நூறு ரூபாய வச்சிட்டு வாங்கிக்கோ… அதுவு இல்லாம இது லோக்கல் சரக்கு… ஆனா இது தான் டா கிக்கா இருக்கு ப்ப்ப்பா” பானத்தை அனுபவித்து ஒரு மிடறு அருந்தினான் ஆதி, ஆனால் விஷ்ணுவை பத்திரமாக வீட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து நிதானத்தில் இருக்கும்படியும் பார்த்துக்கொண்டான்.
“பரவாயில்ல எனக்கு வேணும்” அழுத்தமாய் விஷ்ணு கூற வேறு வழி இல்லாமல் ஆதி அவனிடம் அந்த பாட்டிலை நீட்டினான். அதை வாங்கிய விஷ்ணு ஆதியை விட்டு சற்று தள்ளி அமர்ந்து மது பாட்டில் அவனுக்கு கண்ணில் படாமல் வைத்து அந்த போதை பொருளை அதில் கொட்ட போக ஆதி கண்டு விட்டான்…
தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து, “வகுந்துருவேன். இப்ப தான சொன்னேன் குடிக்காதான்னு” என்று அந்த பாக்கெட்டை வாங்க அதை விடாது இருக்க பற்றி இருந்தான் விஷ்ணு…
“பக்கிங் பாஸ்டர்ட் லீவு இட்” – விஷ்ணு
“என்னடா பொசுக்குன்னு கெட்ட வார்த்தைல திட்டிட? இதுக்காகவே தர மாட்டேன் போடா” இருவரும் சிறு குழந்தை போல அந்த சிறு பாக்கெட்டிற்காக சண்டை போட்டி கொண்டிருக்க அது கிளிவேனா என்று அடம் பிடித்தது, “எனக்கு அது வேணும் விடுடா”
“டேய் சொன்னா புரிஞ்சுக்கோ டா இதுக்கு அடிக்ட் ஆகிட்டா ரொம்ப கஷ்டம். ஜஸ்ட் டெம்ப்ரவரி சொல்யுஷன் தா கிடைக்கும். நீயே உன்ன கெடுத்துக்காத” – ஆதி
“ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற? இது இருந்தா தான் என் பேமிலி என் கூட இருக்கு ஐ நீட் தெம் பிசைடு மீ ரைட் நொவ் (எனக்கு அவங்க இப்பயே என் பக்கத்துல வேணும்)”
“அப்ப உன் அண்ணண் உனக்கு வேணாமா?” – ஆதி
“அவனுக்காக தான் டா நான் இதையே குடிக்கிறேன். ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டிக்கிற?” விஷ்ணு அழுகை பாதி கோவம் பாதி சேர்ந்து கத்தினான்… “அவன் என்கிட்டே பேசி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு… இத குடிச்சா அவன் என்கூட என் தோள்ல கை போடு பேசுறான். இப்ப சொல்லு நான் குடிக்கிறதுல என்ன தப்பு?”
“சரி டா குடி ஆனா தற்காலிகமான சந்தோஷத்துக்கு நிரந்தரமா உன் அண்ணனை நீ இலக்கணும்ன்னு ஆசை பட்டா தாராளமா குடி. ஆனா நான் போனதும் குடி”
“என்னமோ அவனை முழுசா தெரிஞ்ச மாதிரி பேசுற உங்க பிரச்சனைல என்ன ஏண்டா இழுக்குற?” இன்னும் அந்த பாக்கெட்டில் இருந்து பிடியை இருவரும் தளர்த்தாமல் இருந்தனர்
“டேய் அவனுக்கு அவனை பத்தி தெரிஞ்சதை விட எனக்கு அவனை பத்தி நல்லா தெரியும்… இந்தா கைல இருக்கே… இந்த போதை இத ஒரு வாரம் யூஸ் பன்னதுக்கு உன் அண்ணண் ரெண்டு வாரம் என்கூட பேசாம இருந்தான்… ஆனா இப்ப உன் மேல இருக்க கோவத்துக்கு காலம் முழுக்க பேச மாட்டான் உன்கிட்ட… முடிவு பண்ணிக்கோ”
நொடிகள் கழிய விஷ்ணுவின் நிதானமும் குறைய தொடங்கியது. சரியாக அந்த நேரம் பார்த்து உதய்யின் ஆட்கள் வர அவர்கள் இருவரும் அந்த போதை பொருளை கையில் பிடித்து நின்ற காட்சி படமாக்கப்பட்டு ஜெயனுக்கு அனுப்பப்பட்டது… ஆதியை சுற்றி ஆட்கள் வைத்திருந்த ஈஸ்வரனும் அந்த இடத்திற்கு சைரியாக வந்து சேர்ந்தார் மருமகனும், ஆதியும் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்து…
உதய்யின் ஆட்கள் விஷ்ணுவை நோக்கி வர உடனே விஷ்ணுவின் பிடியிலிருந்து அந்த பாக்கெட்டை எடுத்து தானே வைத்துக்கொண்டான்… இதை பார்த்த ஈஸ்வரன் கண்டும் காணாதது போல் விஷ்ணுவிடம் சென்று, “என்ன மாப்பிள்ளை இதெல்லாம்?” அக்கறையாக.
“ஏன் மாமா நீங்க தண்ணி அடிக்க மாட்டிங்களா? நாம ஒரு தடவ சேந்து கூட அடிச்சிருக்கோமே நியாபகம் இல்லையா?”
“இது நல்ல குடும்பமா இருக்கே” ஆதி எதார்த்தமாக கூற ஆதியை ஒரு அடி விஷ்ணுவை விட்டு தள்ளியே வைத்தனர்…
அதை கவனித்த விஷ்ணு அவர்களை பார்த்து வேகமாக தனது மாமனிடம் சென்று மெதுவாக, “அவன் எதுவும் பண்ணல மாமா அவரை விட்ருங்க…”
“சரி மாப்பிள்ளை நா பாத்துக்குறேன் நீ போ. யோவ் மாப்பிள்ளையை வீட்டுல பத்திரமா விட்டுருங்க” தனது ஆட்களிடம் ஏவி அவனை காரினுள் அமர வைத்து உதய்யின் முதன்மை காவலாளியை அழைத்தார்…
“வலுக்கட்டாயமா மாப்பிள்ளைக்கு போதை குடுத்துருக்கான் அவன்… மாப்பிள்ளையே இத என்கிட்டே சொன்னான்… உதய் வரைக்கும் கொண்டு போக கூடாது தான். ஆனா மறைச்சா நல்லா இருக்காது… ஆனாலும் அவன்கிட்ட இத சொல்லாதீங்க” கட்டளையாய் கூற அவருக்கு தெரியும் தானே தனது முதலாளியிடம் இவர்கள் எதையும் மறைப்பது இல்லை என்று அதனால் வேண்டும் என்றே அவர் கூறினார்… மறு புறம் காவல் துறையினருக்கும் மறக்காமல் தகவல் தெரிவித்திருந்தார்…
“ஓகே சார்” என்று அவன் நகர…
“என்ன பெருசு என்ன பிளான் போடுற?” தெனாவெட்டாக ஈஸ்வரனை பார்த்து ஆதி கேட்டான்…
“ஒன்னும் இல்ல தம்பி குடும்ப விசியம்…” – ஈஸ்வரன்
“ஓஹோ… அப்ப கிண்டில ரத்தினம் நகர், 3 nd ஸ்ட்ரீட், பச்சை கலர் வீட்டு, மேல் மாடில நடக்குறத்தையும் இப்டி தான் இவங்ககிட்ட எல்லாம் சொல்லுவிங்களா மாமா?” அந்த மாமா வார்த்தையில் அழுத்தம் கொடுத்து…
என்று தன்னை தேடி வந்து தனது மருமகனுக்கே எதிரான ஆதாரங்களை மூன்றாவது மனிதனிடம் கொடுத்தாரோ அன்றே அவர் மீது தனது நண்பர்களை வைத்து விசாரிக்க ஆரமித்து விட்டான் அதன் பதில்களே அவருடைய சின்ன வீட்டின் தகவல் ஆதியின் கையில்…
சற்றும் பதட்டம் அடையாமல் அவனை உற்று நோக்கியவர் ஒரு மெச்சுதல் பார்வையை அவன் மீது பதித்தார்… முழுமையான நிதானத்தில் இல்லாவிட்டாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை அளவெடுக்கும் பார்வையும், திமிரான பேச்சும் அவரை சிலிர்க்கவைத்தது என்று தான் கூற வேண்டும்…
தனது அலைபேசி ஒழிக்க அதை ஆதியை பார்த்து உயிர்பித்தவர், “சொல்லுபா உதய்”
“….”
“இல்லப்பா பிரச்சனை எதுவும் இல்லை நான் பாத்துக்குறேன்”
“….”
“ம்ம்ம்ம்”
“….”
“ஆமா விஷ்ணு வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்…”
“….”
“இல்ல உதய் நீ நெனைக்கிற மாதிரி அவன் மேல எந்த தப்பும் இல்ல…”
“….”
“சொல்றத கேளு உதய்… அவன்…”
“….”
“நீ பண்றது தப்புனு எனக்கு என்னமோ தோணுது…”
“….”
“உதய்… உதய்…” அவர் கத்த அந்த பக்கம் இணைப்பு துண்டிக்க பட்டிருந்தது…
“நீ இந்த இருந்து வேகமா போய்ட்டு” ஈஸ்வரன் நல்ல பிள்ளையாக மாற முயன்றார்.
“நான் என்னாத்துக்கு போகணும் போயா அடிச்ச போதைய உன் மருமகன் எறக்கி விட்டுட்டு போய்ட்டான் இப்ப மொத இருந்து ஆரமிக்கணும்”
“மிஸ்டர் ஆதி கேசவன், உதய் போலீஸ் கிட்ட கம்ப்லைன் பன்னிட்டான் கம்பி எணணும்னு ஆசை இருந்தா தாராளமா நீங்க இங்கையே இருங்க”
ஈஸ்வரனின் ஐந்து அடி எட்டு அங்குலம் உயரத்தை தனது ஆறடியில் எளிதாக அடக்கி அவருக்கு நேராக நின்று, “அது இப்டி… உன் மருமகன் உதய் தவற மத்த எல்லாரையும் நீ நண்பனாகிக்கிற? எதாவது திருட்டு வேலை பாக்குறியா?” சரியாக கேட்டுவிட்டான் ஒரு வியூகத்தில்.
அடக்கப்பட்ட கோபத்துடன், “பெத்தவங்க இருந்திருந்தா இன்னேரம் மரியாதை எல்லாம் சொல்லி குடுத்துருப்பாங்க… இல்ல தம்பி?”
“அப்ப உன் அப்பா அம்மாவும் உன்ன பெத்து போட்ட ஒடனே போய் சேந்துட்டாங்களோ?” வற்றாத திமிருடன் ஆதி.
“சரி தம்பி பாத்து பத்திரமா போயிடு வாங்க. உதய் சொல்லி போலீஸ் வருது இன்னும் ஆயுசுக்கும் நீ அங்க தான்…” – ஈஸ்வரன்
“யோவ் மூடிட்டு போயிரு போதைல இருந்தா நா கொஞ்சம் அதிகமாவே கேட்ட வார்த்தை பேசுவேன் கேக்க ரெடியா?” – ஆதி
‘உன் வாய உனக்கே திருப்பி விடுறேண்டா அது வரைக்கும் ஆடிக்கோ’ மனதில் க்ரோதத்துடன் அந்த இடத்திலிருந்து விடைப் பெற்றார் ஈஸ்வரன்…
அவர் சரியாக அந்த இடத்திலிருந்து செல்லவிருந்த நேரம் போலீஸ் வண்டி வந்தது, “ஆத்தி போலீஸு” பயத்தில் தனது வண்டியை எங்கு நிறுத்தினோமென்று தெரியாமல் சுற்றி சுற்றி தேடியும் கிடைக்கவில்லை. அதற்குள் ஈஸ்வரனின் பார்வையை உணர்த்த அந்த இன்ஸ்பெக்டர் நேராக ஆதியின் அருகில் வந்து ஒரு கேள்வி கேட்காமல் அவன் கையில் விலங்கை மாட்டினார், “என்ன சார், எதுக்கு என்ன அர்ரெஸ்ட் பண்றீங்க?”
“கஞ்சா வித்தா அர்ரெஸ்ட் பண்ணாம பாரத் ரத்னா குடுக்க சொல்லவா?” இறுக்கமான முகத்துடன் காவலர்களுக்கே உரித்தான தோரணையுடன் அந்த இன்ஸ்பெக்டர் வினவினார்.
“சார் நீங்க தப்பா நனைக்கிறிங்க நா அதெலாம் யூஸ் பண்ண மாட்டேன்”
“எங்களுக்கு இன்பர்மேஷன் வந்துச்சு கிளம்பு மதத்தை போலீஸ் ஸ்டேஷன்ல உனக்கு தெளிவா சொல்றேன்”
அவரது கையி உதறியவன், “என்ன போலிஸ்ங்கிற திமிரா போயா மொத. நீ பாத்தியா நான் கஞ்சா விக்கிறத? இல்ல எவன் உன்ட்ட இன்பர்மேஷன் குடுதான்னு சொல்லு அவன்ட்ட நான் பேசணும்”
“ஓ துரைக்கு ஆதாரம், சாட்சி எல்லாம் இருந்தா தான் வருவீங்களோ”
“சார் தப்பே பண்ணாம நான் எதுக்கு சார் வாய மூடிட்டு வரணும் அதையும் மீறி நீங்க என்ன கூட்டிட்டு போகணும்னு நெனச்சா உங்கள கூட அடிப்பேன்”
“காட்டுறேன் டா உன்னோட மண்டவாளத்தை காட்டுறேன் போலீஸ் காரனையே அடிக்கிறேன்னு சொல்ற அளவு உனக்கு தைரியம்… அத எப்படி குறைக்கிறேன்னு பாரு… யோவ் கான்ஸ்டபில் இவனை செக் பண்ணுயா”
இன்ஸ்பெக்டர் பேச்சை கேட்டு ஒருவர் வந்து ஆதியை ஆய்வு செய்ய அப்பொழுது தான் அவனுக்கு நினைவில் வந்தது விஷ்ணுவிடமிருந்து வாங்கிய பாக்கெட் அவனது பாக்கெட்டில் இருப்பது, ‘சோழமுத்தா போச்சா’ என்றிருந்தது அவனுக்கு…
சரியாக அதை எடுத்தவர், “சார் இது கெடச்சது” என்று எடுத்து நீட்டினார் அதை பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் முகத்தில் ஒரு கேலி புன்னகை, “என்ன சண்டியரே போகலாமா? உனக்கு அங்க போய் நா கம்பு சுத்துற விதையை சொல்லி குடுகுறேண்டா வா”
“சார் இது என்னோடது இல்ல…”
“பின்ன உங்க அப்பனோடதா?”
சுறு சுறுவென தலைக்கு கோவம் ஏறியது ஆதிக்கு… கொத்தாக அவரது காலரை பிடித்து, “டேய் வயசுல பெரியவன்னும் பாக்க மாட்டேன் உன் பதவிக்கும் மரியாதை குடுக்க மாட்டேன் கொன்னு பொதச்சிடுவேன் ஜாக்கிரதை” அடிக்குரலில் அந்த இடமே அதிரும் வகையில் சீறினான்…
இன்ஸ்பெக்டர் மீது அவன் பாய்ந்ததும் மற்ற காவல்துறையினர் ஆதியின் பிடியை முறிக்க பாடு பட்டனர்… ஒரு வழியாக அவனை அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து பிரித்து அவனது கையை மடக்கி துவைத்தெடுத்தனர்… அடி பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தமாய் அடி விழுக வலியில் துடித்தவன் சிறிது நேரம் கூட நீடிக்காமல் மயக்கம் அடைந்தான்…
கண் விழித்து பார்த்த பொழுது ஒரு இருட்டு அறையில் தரையில் கிடந்தான். இன்னும் இரவு மாறாமல் இருந்தது… கண்களை அந்த இருளில் படர விட்டு தான் சிறையில் தான் உள்ளோம் என்று உறுதி செய்த பின்னர் முதுகு பகுதியில் இருக்கும் வலி தாளாமல் மீண்டும் தரையில் வீழ்ந்தான்… வலியில் கண்களை திறக்க இயலாவிடினும் செவிகளில் வெளியிலிருந்து சத்தம் தெளிவாக கேட்டது…
“சார் அவன் பாக்கெட்ல போதை பொருள் இருந்தது ஆனா அவன் அத விக்கிறான்னு எந்த ஆதாரமும் இல்ல… எத வச்சு அவனை உள்ள தள்ள சொல்றிங்க… என்ன அடிச்சான்னு வேணும்னா ரெண்டு வருஷம் உள்ள தள்ளலாம் மத்தபடி வேற எந்த தண்டனையும் குடுக்க முடியாது சார்” இன்ஸ்பெக்டரின் சோர்வான குரல் தெளிவாக அந்த அமைதியை கிழித்து அவன் காதில் ஒலித்தது…
“யோவ் இந்த கதை எல்லாம் எனக்கு தேவ இல்ல… இவன் மேல எந்த தப்பும் இல்லனு விஷ்ணு சொல்றான் ஆனா உதய் எப்படி ஆவது அவனை உள்ள வைக்க சொல்றான்… பாரு இந்தா மறுபடியும் போன் வருது, இவிங்களுக்குள்ள என்ன தா பிரச்சனையோ இவனை அழிக்க பதினெட்டு வயசுல இருந்து என்னையே ஏவி விடுறான். தங்கச்சி பையன்னு வேற வழியே இல்லாம நானும் இவன் பண்ணுற தப்புக்கு எல்லாம் தூது போறேன்… எதாவது போட்டோஷாப் பண்ணி ஆதாரத்தை ரெடி பண்ணு… கொறஞ்சது பத்து வருஷம் இவன் உள்ள இருக்கனும்… காலைல எப்.ஐ.ஆர் பைல் பண்ணிட்டு தகவல் அனுப்பு இல்ல மேல இருந்து பிரஷர் வரும் உனக்கு”
உணர்ச்சிகளற்ற முகத்தை இருளில் பதித்து சுயத்தை இழக்க ஆரமித்தான் ஆதி…
Epdi iruku? Comments please……
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.