Skip to content
Post Views: 2,019
முதலில் எழுந்தது ஆண்டவர் கனி தான், தன் கை அணைப்பில் தூங்கிக்கொண்டு இருந்த திவ்யாவை சிறிது நேரம் பார்த்து ரசித்தவன். பின்பு மெல்ல எழுந்து அவளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய, அவளை எழுப்பாமல் எழுந்தவன். குளித்த உடை மாற்றி கீழே சென்று யோகாவை தேட.
யோகா அனைவருக்கும் காபி கொடுத்துக்கொண்டு இருப்பதை பார்த்தவன்.
Advertisement
சித்தி என்று அருகில் வர,
வா கனி காபி எடுத்துக்கோ என்று காபியை அவனிடம் தர.
Advertisement
Advertisement
அதை வாங்கி குடித்தவன். திவ்யா வுக்கு இரவு உடம்பு முடியல. இப்பவும் காய்ச்சல் அடிக்குது என்றான்.
அப்படி யா என்று யோகா மேலே உள்ள ஆண்டவர்கனியின் ரூம் சென்று, திவ்யாவை பார்க்க.
Advertisement
அவள் அப்பொழுதுதான் எழுந்து பெட்டில் அமர்ந்திருந்தாள்.
யோகா திவ்யாவின் கழுத்தை தொட்டு பார்த்து இன்னும் பீவர் இருக்கு என்றவர். நைட்டு என்னை எழுப்பி இருக்கலாம். நானும் வந்து இருப்பேனே ஹாஸ்பெட்டலுக்கு என்றவர். நான் போய் கஞ்சி குடுத்து விடுறேன் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு இரண்டு நாளுல சரியாகிடும், போய் மூஞ்ச கழுவிட்டு வா என்று, கீழே சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து பார்கவி திவ்யாவுக்கு கஞ்சி எடுத்து மேலே உள்ள ரூம் வந்தவள். ஆண்டவர்கனி ரூம்பில் இருப்பதை பார்த்து தயங்கி நிற்க.
வாம்மா என்றான் பார்கவியை பார்த்து.
தயங்கிய படியே ரூம்பிற்குள் வந்தவள். திவ்யாவிடம் கஞ்சி யை குடிக்க சொல்லி விட்டு, என்ன பண்ணுது என்றாள்.
திவ்யா தன்னை பற்றி சொல்ல.
சரி என்றவள் மருந்து எடுத்து வருவதாக ரூம் சென்றாள்.
ஆண்டவர் கனி திவ்யாவிடம் என்ன சொல்லிட்டு போற..
அவ சித்த டாக்டர் உங்களுக்கு தெரியாத என்றாள்.
தெரியாது என்றவன், சித்த டாக்டரா அவ என்றான்.
ஆம் என்ற திவ்யா. பார்கவியின் தந்தை ஆதிநாராயனின் அப்பா பழங்கால சித்த வைத்தியம் பார்க்கும் சாலை வைத்து நடத்தினார்.
இப்போ அதை பார்கவி தான் நடத்தி வருகிறாள்.
ஆன் லைன் மூலமாக, கன்சல்ட் பண்ணுற. அவ கூட படிச்சவங்க அந்த வைத்திய சாலையை பாக்குறாங்கலாம்.
இவ இங்கே இருந்து டெய்லி ஆன்லைன்ல பாத்துக்குறா.
வெரி குட் என்ற ஆண்டவர்கனி, ஒரே வீட்டுல இருந்தும் இது தெரியாம போச்சே என்றான்.
பார்கவி கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவள். சில மாத்திரை களை சாப்பிட்ட பிறகு சாப்பிட சொன்னவள் , பின்பு ஒரு காசயத்தை குடிக்க சொல்லி விட்டு , வேற தொந்தரவு இருந்த என்கிட்ட சொல்லு மருந்து தர்ரேன் என்றாள்.
திவ்யா பார்கவிக்கு நன்றி சொல்ல.
திவ்யாவை பார்த்து சிரித்தவள் கிளம்ப.
ஆண்டவர் கனி பார்கவியிடம் அவளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டவன்.
கல்யாணத்திற்கு பிறகு நீ இங்கே தானே மா இருப்ப, அங்கே இலங்கையில் உள்ள வைத்திய சாலையை எப்படி பார்ப்ப என்று கேட்க.
அப்பா அடிக்கடி போய் பாத்துப்பாரு.
நான் கிட்னி பெஷல்லிஸ்டு மச்சான், அங்கே மற்ற வியாதி பார்க்கும் டாக்டர் இருக்காங்க பாத்துப்பாங்க, எனக்கு வர பேஷன்ட நம்பர் வாங்கி ஈமேயில் ஐ, டி, க்கு அனுப்பி வைப்பாங்க நான் வீடியோ கால் மூலமா பேசி மெடிசன் வாட்சப் பண்ணியிருவேன். எங்க வைத்திய சாலையில் இருந்து மருந்து கொரியர் பண்ணியிருவாங்க.
சூப்பர் மா வாழ்த்துக்கள், நீ எங்கே இருந்தாலும் உன் வேலை சரியா செய்யுற வெரிகுட் என்று பாராட்ட.
தாங்யூ, மச்சான் என்று சொல்லிவிட்டு சென்றாள்.
நான் கூட இந்த பொண்ணை தப்பா நெனச்சுட்டேன் என்றான்.
என்னவென்று திவ்யா கேட்க.
பார்கவி பெரிய சாமிகிட்ட ரொம்ப பேசமா ரூம்புக்குள்ளே இருக்குறத பார்த்து.
ஆமாம் ரொம்ப நல்ல மாதிரி பார்கவி தேவைக்கு பேசுவா.
சரி நீ கஞ்சியை குடி என்றவன் அன்று முலுவதும் திவ்யாவுடன் இருந்து அவளை பார்த்துக்கொள்ள.
அவளோ உங்களுக்கு வேலையிருக்குமே நீங்க போங்க என்றாள்.
அவனோ உன்னை விட வேலை பெருசு இல்ல என்று அவளோடு சாயங்காலம் வரை இருந்தவன். ஒரு முக்கியமான வேலை வரவும் திவ்யாவிடம் சொல்லி விட்டு ஷோரும் சென்றான்.
திவ்யாவுக்கு காய்ச்சல் குறைந்து இருந்தது. மாத்திரை போட்டு இரவு தூங்க போகும் முன் மணியை பார்த்தாள், இரவு 10 மணிக்கு மேல் ஆக. அவனை காணவில்லையே என்று போனில் அழைத்தாள்.
அவன் போனை எடுக்காமல் இருக்க, என்ன போனை எடுக்கலை என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.
ஒரு பத்து நிமிடம் கழித்து வீட்டுக்கு வந்தான்.
திவ்யா தூங்காமல் இருந்தாள். பகலில் தூங்கியதால்.
ஆண்டவர் கனி பார்த்தவள் சாப்டீங்களா என்றாள்.
உம் கடையில் சாப்பிட்டேன், நீ சாப்டியா?
உம் சாப்டேன், மாத்திரையும் போட்டேன்.
இரு குளிச்சிட்டு வர்றேன் என்று, குளித்து உடை மாற்றி திவ்யாவின் அருகில் வந்தவன். அவளின் கழுத்தை தொட்டு பார்த்தான். பீவர் இல்ல என்று அவளின் காலில் மருந்திட.
வேண்டாம் என்றவள், காலையில் போடலாம் படுங்க என்றாள்.
இல்ல திவ்யா, தினமும் போடனும் என்று மருந்திட்டு லைட்டை ஆப் பண்ணி விட்டு திவ்யா அருகில் வந்து படுத்தவன். அவளை தொடாத வாறு படுத்து இருந்தான்.
அவளும் அவனின் முகத்தை பார்த்தவாறு படுத்து இருக்க.
சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி படுக்கும் போது ஆ என்று சத்தம் போட.
என்னாச்சு என்றவள் அவனின் தோளில் மீது கை வைக்க, மீண்டும் ஆவென்றான் வலியில்.
திவ்யா லைட்டை போட்டு அவனிடம் வந்து என்ன ஆச்சு என்று கேட்க.
ஒன்னும் மில்லை என்றவன். அவனின் தோளை மெதுவாக பிடித்து விட.
அவனின் அருகில் வந்தவள் டிசர்ட்டை கலட்டுங்க என்றாள்.
அவனோ ஒன்னுமில்லை திவ்யா, ஒரு கட்டிலை தூக்கிக் கொண்டு போகும் ஒருத்தன் தெரியாம இடிச்சுட்டான். காலையில் சரியாகிரும் வா வந்த படு.
அவன் அருகில் வந்தவள், அவனின் டிசர்டை கழட்டவர..
ஏய் என்ன பண்ணுற.
உம்.. என்ன பண்ணேன், வாயை மூடுங்க என்று அவனின் டிசர்டை கழட்டி பார்க்க, வலது தோளில் சிவந்து, வீங்கி இருக்க, இது சின்ன அடியா, ஸ்பேரே அடிச்சீங்களா என்றாள்.
உம்.. ஒரு பாட்டிலே காலி, எரியுது என்றான்.
இருங்க என்று, பார்கவி அறைக்கு சென்று அவளிடம் ஆண்டவர் கனிக்கு அடி பட்டதை சொல்ல.
அவளோ வலிக்கு ஒரு மாத்திரை கொடுத்தவள், ஒரு பாட்டிலில் வீங்கிய இடத்தில் தேய்க்க ஆயிலை கொடுத்து நன்றாக தேய்த்து விட சொன்னாள்.
சரி என்றவள். அவளிடம் நன்றி சொல்லிவிட்டு ரூம் வந்தாள்.
சாய்ந்து அமர்ந்திருந்தவனிடம் மாத்திரையை விழுங்க சொன்னவள்.
அவனின் பனியனை கழுட்டி விட்டு தோளில் எண்ணை வைத்து தேய்க்க.
அவனுக்கு வலி பொறுக்க முடியாமல், திவ்யாவின் இடுப்பை பிடித்து இருந்தான்.
அவளோ வலிக்குதா அத்தான் என்று கேட்டு கொண்டே மெதுவாக அவனின் தோளில் ஆயிலை வைத்து தேய்க்க.
அவனுக்கு வலிபோய் இதமாக இருந்தது திவ்யாவின் கைப்பட்டு.
போதுமா என்று திவ்யா கேட்க.
இல்லை கொஞ்சம் நேரம் தேய்ச்சு விடு என்றான் கல்ல சிரிப்போடு.
இவளோ வலிக்குது போல என்று மீண்டும் கொஞ்சம் ஆயிலை எடுத்து தேய்க்க வர. இடது பக்க தோளில் தேய்க்க சொன்னான்.
சரி என்று தனக்கு பக்கத்தில் வந்து தேய்த்து விட்டு கொண்டிருப்பவளை ஆசையாக பார்த்திருக்க.
போதுமா என்று அவனின் முகம் பார்க்க.
அவனோ இது எனக்கு போதாது, இன்னும் வேணும் என்று அவளை விழுங்குவது போல் பார்த்து இருக்க.
அந்த பார்வை அவளுக்கு வேற கதை சொல்ல. தேய்ப்பதை நிறுத்தியவள். வலி போயிருச்சா என்றாள்.
உம்.. என்றவன் அவளின் இரண்டு கையை தன் தோள் மீது வைத்து க்கொண்டு, எனக்கு வலி போயிருச்சு. உனக்கு கைவலிக்குமுள்ள என்றவன். அவளை இடுப்பை பிடித்து தன்னோடு சேர்ந்து இழுத்து கொண்டு அவளிடம் அத்துமீற.
ஆவென்று பார்த்தவளின் அதரங்கள் ஆண்டவர்கனியின் இதழால் மூடப்பட்டது…..
error: Content is protected !!