Skip to content
Post Views: 631
“அப்பா”என்று அழைத்து அதிர்ச்சியோடு அவரை நெருங்கும் முன் “அத்தான்” என்று பாசமாக அழைத்துக்கொண்டு அவரை வேகமா நெருங்கினாள் பிரபாவதி.
“அத்தான் எப்படி இருக்கீங்க. உங்கள பாத்து ரொம்ப நாள் ஆகிட்டுல. அக்கா, பெரிய அக்கா எல்லாரும் நல்லா இருக்காங்களா. ஏன் அங்கவே நிக்கீங்க உள்ள வாங்க”என்று அவரை உள்ளே அழைத்து வந்து, “மாமா இது தான் என் ரெண்டாவது அக்கா வீட்டுக்கார் இவர் பேர் பாண்டியன்”என வீட்டில் இருந்த அனைவருக்கும் தனித்தனியா அறிமுகம் செய்து வைத்தாள். தனது வீட்டில் இருந்து ஒருவர் வந்ததில் சந்தோசமாக சிறு குழந்தை போல அனைவருடனும் சொல்லி சொல்லி மகிழ்ந்து கொண்ட அவளின் முகத்தை பார்த்து, “எவ்வளவு பாசம் வைச்சி இருக்குற உனக்கு போய் எப்படிம்மா துரோகம் பண்ண அவங்களுக்கு மனசு வந்துச்சி” என்று பிரபாவதி கையை பிடித்து அழுதவர் திடிரென்று வள்ளியம்மை பாட்டியின் பக்கத்தில் நின்றவளின் கையை பிடித்து உலுக்கி, “நல்ல பாரு யாழினி யாரு இங்க தப்பு யாரு சரின்னு உனக்கு இன்னும் புரியலையா. உன்னோட கண்மூடித்தனமான அன்ப தூர வச்சிட்டு நல்லா கண்ண திறந்து பாரு. இப்பவும் உனக்கு புரியலையா நீ போற வழி தப்புனு. சொல்லுமா இன்னும் ஏன் அமைதியா இருக்க”என்றார் கோவமாக பாண்டியன்.
தன் முன் கோவமாக கத்தி கொண்டியிருந்த தனது தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து சத்தமில்லாமல் அழ தொடங்கினாள் கவியாழினி.
அவளின் இந்த அழுகையை பொறுக்க முடியாமல், “மாமா போதும் விடுங்க. அவளே இங்க ஏமாந்து தான் போய் இருக்கா.என்ன நம்மளுக்கு எல்லாம் தெரியும் அவளுக்கு தெரியல அவ்வளவு தான். அதான்ல ப்ளீஸ் மாமா அவகிட்ட எந்த கேள்வியும் இப்ப கேக்காதீங்க”என்றான் கண்டிப்பு கலந்த ஆதங்கத்தில் இன்பா.
Advertisement
“இருந்தாலும் மாப்ள”என்று ஆரம்பித்தவரை, “கொஞ்சம் நிறுத்துங்க இங்க என்னதான் நடக்குது மாப்ள. மாறன் என்னனா ஏதோ ஒரு பொண்ணக் கூட்டிட்டு வந்து இதுதான் அமிழ்தினி சொல்லுறான். இவர் என்னனா இவ்வளவு நாளா நம்ம கூட அமிழ்தினியா இருந்தவள அவரோட பொண்ணு யாழினி சொல்றார் என்ன நடக்குது யாராவது கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றீங்களா. அதோட இவ்வளவு பிரச்சினை நடந்தும் அப்பா நீங்க அமைதியா இருக்குறத பார்த்தா உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் நினைக்கேன் அப்படித்தான” என்றார் கோபமாக செந்தில் முருகன்.
“அப்பா அண்ணா சொல்றது சரியா உங்களுக்கு முன்னாடியே எல்லாம் தெரியுமா. இந்த ரெண்டுல யாரு என் பொண்ணு ப்ளீஸ் சொல்லுங்கப்பா. அவள பெத்த அப்பன் என்னாலேயே என் பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க முடியல எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்குப்பா. ப்ளீஸ் சொல்லுங்கப்பா யார் தான் இதுல என் பொண்ணு என் பொண்ணுக்கு என்ன தான் நடந்துச்சி சொல்லுங்கப்பா சொல்லுங்க என்னோட வாழ்க்கையில என்னதான் நடக்குது சொல்லுங்கப்பா ப்ளீஸ் சொல்லுங்க” என கெஞ்சி அழத் தொடங்கினார் பழனி முருகன்.
அவரின் அழுகை பார்த்து மாறன் அருகில் இருந்த அமிழ்தினி கண்ணீருடன் அவரை நெருங்க அடியெடுத்து வைக்க அவள் கையை இறுக்கப்பற்றிய மாறன், “எங்க போறீங்க மேடம் நீங்க தான் எங்க அமிழ்தினி இல்லய. நீங்க இப்ப ஆனந்தி டீச்சர். அவர் ஒன்னும் உங்க அப்பா இல்ல. டீச்சர் அப்ப அப்ப உங்க கேரெட்டர மறத்துறீங்க”என்றான் நக்கலாக அவளுக்கு மட்டும் கேக்கும் விதம்
Advertisement
“மாமா ப்ளீஸ் என்ன விடுங்க அப்பா அழறார்”என்றாள் தவிப்புடன்
Advertisement
“ஓ இப்ப தான் உங்க அப்பா அழறது தெரியுதா. உங்க அம்மா உன்ன நினைச்சு இவ்வளவு நாள் அழுதாங்க அது உனக்கு தெரியல. ஏன் இந்த குடும்பமே அழுதுச்சி அது உனக்கு தெரியல . இப்ப கூட உன்னால நான் அழறது உனக்கு தெரியலல்ல”என்றான் வேதனையாக
“மாமா ப்ளீஸ்”என்றாள் கண்ணீருடன்
அதில் தெளிந்தவன், “கொஞ்சநேரம் உன் பாசத்த மூட்டக்கட்டிட்டு பேசாம நில்லு”என்றான் காட்டமாக
Advertisement
அதில் அமைதியாக அவன் அருகில் நின்று நடப்பதை கவனிக்கத் தொடங்கினாள்.
@@@@@@@
“மாமா தாத்தாவுக்கும் முழுசா நடந்தது தெரியாது என்ன நடந்ததுனு நான் சொல்லுறேன். தாத்தாவ கேக்காதீங்க”என்றான் கவின்
“அப்ப என்ன தான் நடந்துச்சி சொல்லுங்க தம்பி. எனக்கு ஒண்ணுமே புரியல தம்பி நான் என்னதான் தப்பு செஞ்சேன்னு. எல்லாரும் என்ன சொல்றீங்கனு எனக்கு சுத்தமா புரியல சொல்லுங்க தம்பி. நான் ஆசைப்பட்ட மாதிரி என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தேன் இது ஒரு தப்பா. அம்மா அப்பா இல்லாத எனக்கு என் வாழ்க்கை தேர்ந்தெடுக்க கூட உரிமை இல்லையா. சொல்லுங்க தம்பி அப்படி என்னதான் தப்பு செஞ்சேன்னு நானும் தெரிஞ்சுக்க வேணாம்னு சொல்லுங்க” என்றாள் பிரபாவதி அழுகையுடன் மூச்சு வாங்க.
“அத்தை ப்ளீஸ் காம்டவுன். நான் எல்லாத்தையும் சொல்றேன் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க”என்று அவளை இருக்கையில் அமரவைத்தான்.
அதற்குள் அவள் அருகில் வந்த ஈஸ்வரி தண்ணீரை கொடுத்து பருக செய்து, “அதான் சொல்றேன் சொல்லுறானே அவன். நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு பிரபா. நீ சொல்லுடா ” என்று அவள் அருகில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு கவினை பார்த்து சொன்னார்.
“ம் சொல்லுறேன்” என்று சொல்லி தாத்தாவை பார்க்க அவர் சொல் என்பது போல் தலையை ஆட்டிய பிறகே தனது மனைவியை பார்த்து பெருமூச்சி விட்டுக் கொண்டு சொல்ல தொடங்கினான் கவின்.
“அத்தை இப்போ நான் சொல்ல போறது உங்களுக்கு ரொம்ப வலிய கொடுக்கும்னு தெரியும் இருந்தாலும் உங்க மனச திடப்படுத்திங்க. அத்த உங்க அப்பா அம்மா எப்படி இறந்தாங்கன்னு உங்களுக்கு தெரியுமா”
“ம் தெரியும். எனக்கு அப்ப பத்தாவது பிறந்தநாள் காலைல அத நல்லா கொண்டாட்டிட்டு மதியத்துக்கு மேல எங்க அப்பாவும் அம்மாவும் சொந்தத்தில் ஏதோ கல்யாண வீட்டுக்கு போகணும் சொல்லி கிளம்பினாங்க. என்னையும் கிளம்ப சொன்னாங்க. ஆனா அன்னைக்கு நான் வரமாட்டேன்னு சொல்லி அவங்கக்கிட்ட சண்டை போட்டு உங்க அம்மா கூட விளையாட அவங்க வீட்டுக்கு போயிட்டேன். அவங்க போய் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி ஈஸ்வரியோட அப்பா வந்து என்ன ஒரு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க. அங்க போன பிறகு தான் தெரிஞ்சிச்சி என் அம்மாவும் அப்பாவும் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அந்த ஒரு நாள்ல என் வாழ்க்கையே மாறிட்டு எல்லாத்தையும் இழந்து அனாதையா நின்னேன். அப்போ எனக்கு ஆறுதல் இருந்தது ஈஸ்வரியும் அவங்க குடும்பம் தான்” என்று ஈஸ்வரி கையை அழுத்தி பற்றி விட்டு, “அதுக்கப்புறம் எங்க கைலாசம் பெரியப்பா வந்து என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. அத ஏன் நீ இப்ப கேக்க”
“ எல்லாம் காரணமா தான். உங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க சரி ஆனா உங்க சொத்து ஒரு 25 ஏக்கர் உங்க அப்பா பேர்ல இருந்துச்சே அது என்ன ஆச்சு”
“அது அப்பா ஏதோ கடன் வாங்கி இருக்காங்கன்னு சொல்லி பெரியப்பா எங்க வீட்டையும் அந்த நிலத்தையும் வித்து கடன் அடைச்சாங்க”
“அது எப்படி அத்த உங்க அப்பா பேருல இருந்தத உங்க பெரியப்பா விக்க முடியும் இரண்டு பேரும் என்ன ஒரே தாய் பிள்ளைகளா”
“இல்ல அம்மாவும் பெரியம்மாவும் தான் ஒண்ணா பிறந்தவங்க. அந்த நிலம் அம்மாவுக்கு பாட்டி கொடுத்த சொத்து அதனால அத பெரியம்மா பெயருக்கு மாத்தி அதை வித்தாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் குழப்பமாக
“அது எப்படி அத்த பெத்து பொண்ணு நீங்க உயிரோடு இருக்கும்போது உங்க பெரியம்மா பேருக்கு அத மாத்த முடியும்.
“ஆமா இல்ல. எப்படி மாத்த முடியும். ஆனா அத ஏன் நீ இப்ப கேக்க எனக்கு ஒன்னுமே புரியல தெளிவா சொல்லு”
error: Content is protected !!