Skip to content
Post Views: 5,096
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 3
Advertisement
பல்லவியை விக்ரம் ஜித் அணைத்து ஆறுதல் படுத்தி கொண்டு இருக்க, அவளின் இதய துடிப்பை அவன் உணர.
Advertisement
“என்ன? பல்லவி உன் ஹார்ட் இப்படி வேகமா துடிக்குது” என்றான்..
Advertisement
” தெரியலையே ” என்றவளின், கை, கால்கள் கூட நடுங்குவதை கண்டவன். டிரைவரிடம் காரை எடுக்க சொன்னவன்.
Advertisement
விக்ரம் அவளை தோள் அணைத்தவாறே காரில் ஏற்றி தண்ணீரை குடிக்க வைத்து. காரின் ஏசியை அதிக படுத்தி “ரிலாக்ஸ் பல்லவி” என்றான்..
” நான் ஓகே தான் சார் ” என்றவளுக்கு தனக்கு ஏதோ நடக்க போகுது என்று தெரிந்தவள். அவளின் மொபைலை விக்ரமிடம் தந்து விட்டு மயக்கமானாள்..
அவனோ பல்லவியின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவளோ மயக்கம் தெளியாமல் இருக்க.
அவளை தெரிந்த ஹாஸ்பெட்டலில் அட்மிட் பண்ணினான்.
அவளை செக் பண்ண டாக்டர். ஆங்கிலத்தில் “ஷி இஸ் ஓகே என்று. அவங்க காலையில இருந்து ஒன்னும் சாப்பிட போல அப்பறம் ஏதோ பயந்த மாதிரி இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை ஒரு டிரிப்ஸ் போட சொல்லுறேன், அவங்க முளிச்சா குடிக்க டிரிங்கு மாதிரி குடுங்க. டிரிப்ஸ் முடிச்சவுடன் சாப்பிட குடுங்க”.. பேசன்ட் நார்மலா இருந்த கூட்டிட்டு போலாம்..
விக்ரம் “தாங்யூ டாக்டர்” என்றான்..
டாக்டர் சிரித்து விட்டு சென்றார்..
விக்ரம் ஜித்துக்கு கடும் கோபம். அவள் போலிஸ் ஸ்டேஷனில் நடந்தது மற்றும் அவளின் பேக் தொழைந்ததற்குகாக பயந்து மயங்கி விட்டாள் என்று அவன் நினைத்து இருக்க.
இவள் சாப்பிடாமல் மயங்கியதை தெரிந்து கோபமாக அமர்ந்து இருந்தான். அப்படி சாப்பிடாம என்ன பண்ணுற, அத விட என்ன வேலை இவளுக்கு ஒரு வேலை இங்கே உள்ள புட் பிடிக்கவில்லையா? என்று அவள் கண்முழிக்கும் வரை புலம்பினான்.
மெல்ல கண் விழித்து பார்த்தவளை, பார்த்து சிரித்தவன் “இப்போ ஓகேவா” என்றான்..
பல்லவி கண்களை மூடி, திறந்து ஓகே என்று கண்களாலே பேச.
வாய்ய திறந்து பேசுறாலா பாரு, சும்மாவே இவ கண்ண என்னால பாக்க முடியல, இதுல இவ வேற, கண்ணுலயே பேசுறாங்கலாம் ஏன்டி? என்று மனதில் அவளை திட்டியவன்.
“சூஸ் குடிக்கிறீயா” என்றான்..
“ஓகே” என்று தலையாட்ட.
ஹாஸ்பெட்டலில் உள்ள கேன்டினில் சொல்லி சூஸ்சை வர வைத்தவன்.
அவளிடம் சூஸ்சை தர.
“நன்றி சொல்லிவிட்டு கொஞ்சம், கொஞ்சமாக குடித்து முடித்து, டம்புளரை மேஜை மீது வைத்து விட்டு, மெல்ல கண் மூடி சாய்ந்து படுத்து இருந்தாள்.
“இப்போ ஓகே வா” என்றான் கண் மூடி இருந்த பல்லவியிடம்..
” உம்” என்றவள்.
படுத்த படியே கண் திறந்த விக்ரம் ஜித்தை பார்த்து நன்றி சொல்ல.
“உன் நன்றி எல்லாம் வேண்டாம், ஏன் சாப்பிடாமா இருந்த”.
“அதுவா இன்னைக்கு சனி பிரதோஷம் அது தான் சாப்பிடலை”.
” சனி பிரதோஷமுன்ன என்ன “? என்றான்.
” இது கூட தெரியாதா சார்? பிரதோஷமுன்ன சிவனுக்கு நடக்குற பூஜை. “
” பிரதோஷ பூஜைனா என்ன.”? என்றான்.
“அது மாசத்தில் இரண்டு தடவை வரும், பௌர்ணமிக்கு இரண்டு நாள் முன்னாடி வர்ரது வளர்பிறை பிரதோஷம், அம்மாவாசைக்கு இரண்டு நாள் முன்னாடி வர்ரது தேய்பிறை பிரதோஷம்., பூஜை செய்யம் நேரம் 4.30 மணிமுதல் 6 மணி வரை. இன்றைக்கு சனிபிரதோஷம், இன்னைக்கு விரதம் இருந்தால் கண்டிப்பா வேண்டியது நடக்கும் சார்.”.
” ஸ்டுப்பிட்டு, இடியட் “. என்றவன் “அறிவு இருக்கா உனக்கு யாராவது சாப்பிடாம இருப்பாங்களா என்றான்.
” உம் இருப்போமே” என்றாள், அவன் கேட்டதற்கு.
“நீ சாப்பிடாம மயங்கி, உனக்கு ஏதாவதுன்னா சாமியா வந்து உன்ன காப்பாத்தும்”..
” சாமி வராது, அதான் நீங்க வந்தீங்களே”.
“ஏய் நான் என்ன சாமியா”.
“நீங்க சாமி இல்ல, ஆனா எனக்கு
உங்க மூலமா எல்பு பண்ண வச்சு இருக்காரு என் சிவா”..
” யாரு அந்த சிவா”.
” சிவா தெரியாத? அவர் தான் லார்டு சிவா, ஈஸ்வரன், கடவுள் அவரு தான் உங்கள வரவச்சு என்னை காப்பாத்தி இருக்காரு”.
” சாமியை சொல்றீயா” என்றவன்.
“முத்தி போச்சு உனக்கு, நான் ஒன்னும் , உன் லார்டு சிவா அனுப்பி உன்ன காப்பாத்துல, என் ஒர்க் முடிச்சுட்டு போற வழியில நீ போலிஸ் காரர்கிட்ட சண்ட போட்டுகிட்டு இருந்த, தமிழ் பேசுன, அதான் உதவி பண்ணுலாமுன்னு வந்தேன். இதுல உன் கடவுள் எங்கே இருந்து வந்தாரு, நான் தான் வந்தேன்.
“அது வந்து சார் “.
“நீ ஒன்னும் சொல்லாதே ” என்றவன், அவளின் கையை பார்க்க டிரிப்ஸ் முடியும் தருவாயில் இருக்க. அதை நிருத்திவிட்டு, அங்கே உள்ள நர்சை அழைத்தான்.
அங்கே வந்து பார்த்த நர்ஸ் டிரிப்ஸ் போட்ட கையில் இருந்த ஊசியை எடுத்தவிட்டு, ” நீங்க கிளம்பலாம் என்றாள்”.
“உனக்கு ஒகேவா பல்லவி”, என்றான்.
” உம், நல்லா இருக்கு சார்”.
“வா” என்றவன், அவளை கீழே அழைத்து வந்து, அங்கே உள்ள சேரில் அமரவைத்துவிட்டு, ஹாஸ்பெட்டலின் பில்லை கட்ட போக..
” சார் ” என்றவள் நான் போனுல பே பண்ணுறேன் என்று போனை எடுத்துக்கொண்டு வர.
வேண்டாம் பல்லவி நான் கட்டுறேன், என்றவன் அவனின் கார்டை குடுத்து பணத்தை கட்டி விட.
அவன் பணம் கட்டுவதை பார்த்தவள். விக்ரமிடம் நான் அப்பறம் அமொன்டை போனில் அனுப்புறேன் என்றவளை, கண்டு கொள்ளாதவன்.
” உன்ன உங்க வீட்டுல விட்டுடவா” என்றான்.
“சரி சார் என்றவள், அட்ரஸ் சொல்லவர”.
“தெரியும் வா ” என்று காரில் அழைத்து செல்ல.
விக்ரமனை பார்த்து “சார்” என்றாள்.
” என்ன பல்லவி? ” என்றான்.
” உங்க போன் நம்பர்”.
மெல்ல சிரித்தவன், “அவனின் போன் நம்பரை சொல்ல”.
அதை “ஹீரோ ஜித்” என்று பதிந்தவள். “அமொண்டை சொல்லுங்க சார்” என்றாள்.
“என்ன அமொண்ட்” என்றான்.
அது தான் எனக்கு நீங்க ஹாஸ்பெட்டலில் கட்டுனீங்கலே அந்த பணம், எவ்வளவு சொல்லுங்க, நான் ஜீ, பே பண்ணுறேன்.
” ஒன்னும் வேணாம் ” என்றான்.
” அட சொல்லுங்க சார், கடன் அன்பை முறிக்கும் என்றாள்..
” என்ன முறிக்கும்” என்றான்.
“அன்பை” என்றவள், சார் நீங்க ரொம்ப நல்ல வாங்கலா இருக்கீங்க, மேடமுக்கு தெரிஞ்ச திட்ட போறாங்க. “
“என்னது மேடம்மா, எந்த மேடம்”என்றான்.
” அது தான் உங்க மேடம், உங்க வைப்பு ” என்றாள்.
அவளை பார்த்து சிரித்தவன் ” “எனக்கு மேடம் இன்னும் வரல, இனிமே தான் வருவாங்க.”
“ஓ மேடம் இல்லையா அது தான் இப்படி செலவு பண்ணுறீங்க” என்றாள்.
உங்க உதவிக்கு நன்றி சார், ஆனா அமொண்டை மட்டும் சொல்லுங்க என்றாள்.
சொல்ல முடியாது என்றவன், உன் வீடு வந்துருச்சு , இடத்தை காலி பண்ணு எனறு காரின் கதவை திறந்து விட்டான்.
“வீடு வந்துருச்ச” என்றவள், மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி காரில் இருந்து இறங்க.”
“பல்லவி என்றவன் போலிஸ் டேசனுல இருந்து போன் பண்ண. நீ போய் உன் பேக்கை வாங்கிக்கோ” என்றான்..
” சரி என்றவள், என் வீட்டுக்கு வர்றீங்களா சார்” என்றாள்.
“இன்னொரு நாள் வர்ரேன், விடிய போகுது நீ போய் ரெஸ்ட் எடு, பாய் ” என்று சொல்லி கிளம்பி விட்டான்.
பல்லவி மனதில் அவன் யாரோ, எவரோ, தன்னை காப்பாற்ற வந்த கடவுள் போலவே அவளுக்கு தெரிந்தான்.
பல்லவி இரண்டு நாள் வேலைக்கு செல்ல வில்லை, உடல் அசதி, போலிஸ் அரஸ்ட் பண்ணியது என்று மனம் ஏதோ நினைத்து குழம்பி போக, அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோவிலில் சென்று வினாயகரை வணங்கி விட்டு அமர்ந்து இருந்தாள்.
அந்த நேரம் பார்த்து போலிஸ் டேஷனில் இருந்து கால் பண்ணி உங்க பேக் கிடைச்சுருச்சு வந்து வாங்கிட்டு போங்க என்றனர்.
“சரி என்றவள்”.
எந்த போலிஸ் டேஷன் அட்ரஸ் தெரியாதே, தனியா போக பயமா, இருக்கு, சித்தப்பா வேற ஊரில் இல்லை. நம்ம ஹீரோ சாரை கூப்பிடுவோமா, என்று நினைத்தவள்.
“உனக்கு முதல்ல உதவி பண்ணுனதே பெருசு, மறுபடியும், மறுபடியும் உதவி கேட்பீயா?”.
அவரு என்ன சும்மாவா இருப்பாரு.
அவருக்குன்னு வேலையிருக்குமுள்ள என்றவள்.
போலிஸ் ஸ்டேஷனுக்கு மறுபடியும் போகனுமா, என்று நினைக்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.
விக்ரம் ஜித்துக்கு வாட்சப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்பினாள்.
அவனோ ஒரு மீட்டிங்கில் இருப்பதால் போனை சத்தமில்லாமல் வைத்து இருக்க.
இவளின் மெசேஜை பார்க்காமல் இருந்தான். மீட்டிங் முடியும் தருவாயில் இருந்தது.
பல்லவி விக்ரம் ஜித் போனுக்கு ஒரு ரிங் குடுத்து கால் கட் பண்ண.
விக்ரம் போன் கால் வந்து கட் ஆகும் போது லைட் எரிந்து போன் ஆப் ஆகியதை பார்த்தவன்.
யாரோ போனில் அழைக்கிறார்கள் என்று போனை எடுத்து பார்த்தான், கண்ணழகி மிஸ்டு கால் என்று இருக்க. அதை பார்த்து சிரித்தவன்.
ஓகே கைஸ் மீட்டிங் முடிஞ்சது நேக்ஸ்டு வீக் மீட்டிங்ல மீட் பண்ணுவோம். பாய் என்று சொல்லி, அவனது அறைக்கு சென்று பல்லவியை போனில் அழைத்தான்.
” ஹாய் சார் உங்கல தொந்தரவு பண்ணிட்டேனா “.
“நோ பல்லவி சொல்லு” என்றான்.
” உங்க கிட்ட பேசலாமா இப்போ “.
“பேசு பல்லவி என்ன விசயம்.”
” சார் என்றவள், நீங்க என்கூட போலிஸ் டேஷசன் வர முடியுமா? ” என்றாள்.
” கால் பண்ணாங்களா? உனக்கு “.
” ஆமாம் சார்”.
” சரி நீ எங்கே இருக்க”.
” நானா என்றவள், இங்க எங்க வீட்டு பக்கத்துல உள்ள பிள்ளையார் கோவிலுல உட்கார்ந்து இருக்கேன்” என்றாள்.
” நீ இருக்குற இடத்துல இருந்து லோகேஷன் சேர் பண்ணு பல்லவி நான் வர்ரேன் “.
” ஓகே சார்” என்றவள் அவனின் போனிற்கு லோகேஷன் அனுப்பி வைத்து விட்டு கோவில் வாசலில் வந்து நின்று கொண்டாள்.
விக்ரம் அவனே காரை தனியே ஓட்டி கொண்டு வந்தான். எப்பொழுதும் டிரைவர்தான் அவனின் காரை ஓட்டுவார்.
இன்று பல்லவிடம் சேர்ந்து போகலாம் என்று அவனே கார் எடுத்துக்கொண்டு அவனின் கண்ணழகியை பார்க்க வந்திருந்தான்.
பல்லவி கோவிலில் வெளியே நிற்பதை பார்த்தவள், அவளின் அருகில் வந்து காரை நிறுத்தியவன், முன் பக்கம் கதவை திறந்த ” வா பல்லவி” என்றான்.
” என்ன சார் நீங்களே காரை ஓட்டிட்டு வந்தீங்களா” என்றவன், “தாங்யூ சார் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு “.
” நல்லா உட்காரு பல்லவி, சீட் பெல்டை போடு” என்றான்.
” சரி சார்” என்றவள் சீட் பெல்டை போட வண்டி கிளம்பியது.
அவனை உத்து, உத்து பார்த்தவளை.
“என்ன என்றான்”.
” இல்ல என்றவள், மீட்டிங்கில் இருந்து வந்தீங்களா” என்றாள். அவனின் உடையை பார்த்து.
“ஆமாம் என்றான்”.
” சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது”.
“சொல்லு” என்றான்.
“நீங்க என்றவள், நிஜமாவே ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார்” என்றாள்.
“அது என்ன? நிஜமாவே ஹீரோ அப்படினா என்ன சொல்ல வர்ர.”
” அது நீங்க அன்னைக்கு எனக்கு ஹீரோ மாதிரி வந்து எனக்கு போலிஸ் ஸ்டேஷனுல எல்பு பண்ணீங்களா? அதனால உங்களுக்கு நான் ஹீரோ சார் பேரு வச்சேன். போனுல கூட ஹீரோ சாருன்னு தான் சேவ் பண்ணி வச்சுருக்கேன்” என்றாள்.
“ஓ அப்படியா” என்றவன், போலிஸ் டேஷனுக்கு வந்து இருந்தான். இருவரும் சென்று அவளின் பேக்கை சரிபார்த்து வாங்க, அதில் பணம் மட்டும் இல்லை மத்தபடி அனைத்துமே இருந்தது.
அப்பாட என்று இருந்தது பல்லவிக்கு. என் செயின் என்று போலிசிடம் கேட்க. அதை இன்னும் கண்டு பிடிக்கல, கிடைச்ச கால் பண்ணுறோம்.
“சரி ” என்றவள் , சோகமாக வெளியில் வர.
அவளின் பின்னாடி வந்தவன். “என்ன பல்லவி, அந்த செயின் ரொம்ப ஸ்பெஷல்லா ” என்றான்.
“ஆமாம் என்றவள் அது என் தாத்தா வாங்கி குடுத்தது” என்றாள்.
” தாத்தானா உனக்கு பிடிக்குமா” என்றான்.
“ஆமாம் ” என்று தலையாட்டியவளை. “வா போலாம்” என்று, இருவரும் காரில் ஏறி வரும் பொழுதே “என்ன? பல்லவி, அமைதியா இருக்க பேசு என்றான்.”
அவளோ ” என்ன? பேச”, என்றாள்.
” நீதான் பேசிட்டே இருப்பியே பேசு என்றான்”.
” நான் இப்போ பேசுற மூடுல இல்ல சார்” என்றாள்.
” உன் மூடு சரியாக நான் என்ன பண்ணனும்” என்று கேட்க.
அவளோ ஞாபகம் வந்தவளாக “சார் உங்களுக்கு நான் ஏதாவது நான் வாங்கி தந்த வாங்கிபீங்களா” என்றாள்.
” எனக்கா ” என்றான்.
“ஆமாம் சார், உங்களுக்கு என்ன பிடிக்கும், சொல்லுங்க வாங்கி தர்ரேன்”. என்றாள்.
அவளை பார்த்து சிரித்து, பின்பு “எனக்கு ஒன்னும் வேண்டாம் பல்லவி, நீ வாங்கி தர்ரேன்னு சொன்னதே போதும், நீ எனக்கு வாங்கி தந்த மாதிரி, வேண்டாம் ” என்றான்.
” அவளோ நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்க, நான் அதற்கு உங்களுக்கு ஏதாவது கண்டிப்பா வாங்கி தரணும் வாங்க” என்றவள்.
ஒரு சாப்பிங் மாலை பார்த்து “அங்கே போலாம் சார் ” என்று அவனை அழைக்க.
அவனுக்கு அவளோடு இருக்க வேண்டும் என்று நினைத்து, காரை சாப்பிங் மாலில் நிப்பாட்டினான்.
இருவரும் சேர்ந்து அந்த சாப்பிங் மாலினுள் நுழைந்தார்கள்.
அவனிடம் ” என்ன வேண்டும் சார் என்று கேட்க”.
“உன் இஷ்டம் பல்லவி” என்றான்.
அவள் ஒரு வாச் சோ ரூமுக்கு விக்ரமை அழைத்து சென்றவள்.
” விக்ரமிடம் நான் வாச் வாங்கி தந்த கையில் போட்டுபீங்களா” என்றாள்.
” கண்டிப்பா” என்றான் அவளை பார்த்து.
“சரி ” என்றவள், நிறைய வாச்சை பார்த்து கடைசியில் மூன்றை தேர்வு செய்து, அவனிடம் ” எது புடிச்சுருக்கு? உங்களுக்கு” என்றாள்.
” நீயே செலக்ட் பண்ணு பல்லவி” என்றான்.
“எனக்கு குழப்பமா இருக்கு, மூனுமே எனக்கு பிடிச்சுருக்கு” என்றாள்.
” அப்படியெல்லாம் பிடிக்க கூடாது பல்லவி, அந்த மூனையும் டேபிளில் வைக்க சொன்னவன், கொஞ்சம் தூரம் இருந்து பாரு , எது நல்லா இருக்குன்னு, அப்போ ஒன்னும் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியும், அது தான் உனக்கு புடிச்சது, ” என்றான்.
அவளும், அவன் சொல்லியதை போலவே , தூரத்தில் இருந்து பார்த்தாள், அவன் சொல்லியதை போலவே ஒன்று மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது, அதையே வாங்கியவள், அவனிடம் தர.
” நீ யே, மாட்டிவிடு” என்று கையை நீட்டினான்.
அவளும் அவன் கையில் வாச்சை மாட்டிவிட்டு ” அழகா இருக்கு இந்த வாச் உங்க கைக்கு” என்றாள்.
இருவரும் பேசிக்கொண்டே லிப்டில் ஏற வர, லிப்டில் யாரும் இல்லை இருவரும் மட்டுமே ஏற,
” நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் ” என்றாள்.
” கேளு பல்லவி” என்றான்.
“அது நீங்க சொன்னீங்களே, நாமா ஒரு பொருள் வாங்கும் போது, எதவாங்க என்று குழப்பமா இருந்த தூரத்தில் வச்சு பாத்த தெரியுமுன்னு, அது எல்லா விசயத்துக்குமா” என்றாள்.
” அப்படி இல்ல பல்லவி, அது அந்த பொருளை பொறுத்து” என்றான்.
“அப்போ நம்ம லைப் பார்ட்டனர் சூஸ் பண்ணும் போது “.
“அத தூரத்தில் வச்சு பார்த்து செலக்ட் பண்ண கூடாது பல்லவி, இப்படி பக்கத்துல வச்சி, என்று அவளை தன்னோடு இழுத்து, தன் முகம் பார்க்க வைத்தவன், நல்லா பாத்து பிடிச்சுருக்கானு கேட்கனும், பிடிச்சுருக்கா பல்லவி” என்றான்,
அவள் அவன் கண்களை பார்த்து தலையாட்ட, ” இப்படி தான் கேட்கனும் பல்லவி என்றான் அவளின் நெத்தியில் முட்டி”.
லிப்டு திறந்து கொள்ள, அவனிடம் இருந்து பிரிந்தவள். லிப்டில் இருந்து வெளியில் வந்தாள்.
” வா பல்லவி காரில் போலாம்” என்றான்.
” எனக்கு கொஞ்சம் பொருள் வாங்கனும், நீங்க போங்க சார்,” என்றாள்.
“நான் வெய்ட் பண்ணுறேன் பல்லவி நீ போய் வாங்கிட்டு வா, இல்ல நான் கூட வரட்டுமா. “
“நீங்க போங்க சார் கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு ” என்றாள் அவனை பாராது.
“சரி பல்லவி பாய்” என்று காரில் ஏறி சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து டாக்சி புக் பண்ணி வீட்டிற்கு சென்றாள்….
error: Content is protected !!