Skip to content
Post Views: 1,238
“என்னக்கா சொல்றீங்க ஒரு கையெழுத்து போட்டா 2000 ரூபா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க எனக்கு ஒண்ணுமே புரியல” என்றாள் புரியாமல் இந்திரா
“ உனக்கு என்னதான் புரியும் சரி நான் சொல்றது நல்லா கேளு” என அழுத்துக் கொண்ட சுதா
“இந்த காலத்துல நம்மளுக்கு ஒரு பண கஷ்டம் வரும்போது கூட பிறந்தவங்க கூட உதவ மாட்டாங்க”
“இதான் எனக்கே தெரியுமே திரும்ப ஏன் சொல்லிட்டு இருக்கீங்க”
Advertisement
“குறுக்க பேசாம நான் சொல்றத மட்டும் கேளு சரியா”
“சரிக்கா சரிக்கா இனி நான் பேச மாட்டேன் நீயே சொல்லு”
“அதான் டி இப்போ உனக்கு காசு தேவைப்படுது இல்ல அதனால ஒரு லோன் எடுக்க எழுதி கொடுத்தனா ஒரே வாரத்தில் உனக்கு லோன் வந்துரும்”
Advertisement
“லூசாக்கா நீங்க டிரஸ் எடுக்குறதுக்கு போய் நான் பேங்க்ல லோன் கேட்க முடியுமா என்ன”
Advertisement
“அதுக்கு ஏன் டி நீ பேங்க்கு போற இப்ப தான் குடும்ப தலைவிக்கு பிரைவேட் ஏஜென்சில லோன் தராங்களே”
“அது சரிக்கா எனக்கு தேவை ஆயிரமோ இரண்டாயிரமோ தான. இதுக்கெல்லாம் லோன் தருவாங்க”
“அவங்க ஒன்னும் தர மாட்டாங்க”
Advertisement
“அப்ப யார் தருவா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுக்கா”
“அதான் இந்திரா நம்ம மேல தெரு லட்சுமி அக்கா இருக்காங்களா”
“ஆமா இருக்காங்க இப்ப அவங்களுக்கு என்ன”
“ சும்மா குறுக்க குறுக்க கேள்வி கேக்க கூடாது சரியா. இப்போ உனக்கு டிரஸ் எடுக்க எவ்வளவு காசு தேவைப்படுது”
“ஒரு 2000 ரூபாய் இருந்தா கூட போதும் அக்கா”
“2000 ரூபாய் போதுமா. ஒரு வயசு பையனுக்கும் பொண்ணுக்கும் டிரஸ் எடுக்க உனக்கு 2000 போதுமா”
“ போதும் கா நான் மெட்டீரியல் துணி எடுத்து அத அவங்க சைஸ்க்கு தைச்சு கொடுத்துடுவேன்கா. மெட்டீரியல் துணி எடுக்கறதுக்கு 2000 போதும் ஏன் கேக்குறீங்க”
“ஓ நீ அப்படி வரியா அப்போ இந்த வழி உனக்கு கரெக்ட் தான்”
“என்ன வழிக்கா”
“ சொல்றேன் இரு. அந்த மேல தெரு லட்சுமி அக்கா இருக்காங்கல அவங்களுக்கு நம்ம பேர்ல ஒரு லோன் எடுத்து கொடுத்தோம்னா. 2000 ரூபா பணமும் ஒரு பிரியாணி சாப்பிடும் வாங்கி தருவாங்க. நீ வேணும்னா அந்த அக்காக்கிட்ட போய் பேசி பாக்கியா”
“என்னக்கா சொல்றீங்க அவங்களுக்கு நம்ம லோன் எடுத்து கொடுத்தா 2000 ரூபா தருவாங்களா”
“அட ஆமாபா அந்த காசு கூட நம்ம கட்ட வேண்டியது இல்ல அவங்களே நம்ம பேர்ல கட்டி முடிச்சிடுவாங்க இந்த 2000 ரூபா கூட கேட்கவும் மாட்டாங்க. இது நம்ம அவங்களுக்கு எடுத்துக் கொடுக்கிறதுக்கு சம்பளம் மாதிரி”
“என்னக்கா சொல்றீங்க இதுல ஏதாவது நமக்கு பிரச்சனை வருமா”
“ ஒரு பிரச்சனையும் வராது நம்ம அவங்களுக்கு லோன் எடுத்துக் கொடுக்கப் போறோம் அவங்க அந்த காச கட்ட போறாங்க இதுல நம்ம ஒரு நாள் அவங்க கூட போறதுக்கு வண்டி வேற அரெஞ்ச் பண்ணி தருவாங்க. போயிட்டு வர்ரதுக்கு ஒரு பிரியாணி சாப்பாடு 2000 ரூபாய் சம்பளமும் தரப்போறாங்க. இதுல நம்மளுக்கு எந்த கஷ்டமும் இல்லை போனோமா கையெழுத்து போட்டோமா காசை வாங்கி அவங்க கையில கொடுத்தோமா நம்ம சம்பள காச வாங்கினமா வந்தமான்னு இருக்கலாம்”
“எப்படி அக்கா இதுல நமக்கு எந்த பிரச்சினையும் வராதா. அவங்க மாசம் மாசம் கரெக்டா காசு கட்டிடுவாங்களா” என்றாள் சந்தேகமாக இந்திரா.
“அதெல்லாம் கரெக்டா காட்டிடுவாங்க இதுவரைக்கும் நானே அவங்களுக்கு ரெண்டு லோன் எடுத்து கொடுத்து இருக்கேன் தெரியுமா”
“அப்படியா அக்கா உண்மையிலேயே இதுல ஒரு பிரச்சனை வரலையா”
“ ஒரு பிரச்சனையும் வரல. ஆட்டோல போனோமா அந்த ஆபீஸ் வாசல்ல போய் இறங்கி அவங்க காட்டுற பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு அவங்க ஒரு கார்ட் தருவாங்க அத வாங்கிட்டு வர வேண்டியது தான். அதுக்கப்புறம் ரெண்டு நாள் கழிச்சு நம்ம பேர்ல லோன் அமௌன்ட் ஏறும் அத அவங்களே அந்த கார்டுல இருந்து எடுத்துக்குவாங்க. நமக்கு கூட்டிட்டு போன அன்னைக்கே 2000 ரூபாய் சம்பளமா ஒரு பிரியாணி பொட்டலமும் வாங்கி தந்துருவாங்க” என்றாள் அசால்டாக சுதா.
“நம்ம ஊர்ல இப்படி எல்லாம் கூட நடக்குதா அக்கா”
“ஆமா இந்திரா இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லட்சுமி அக்கா எனக்கு போன் பண்ணி ஒரு லோன் எடுத்து தர முடியுமான்னு கேட்டாங்க. ஆனா எனக்கு இந்த மாசம் என் பொண்ணுக்கு பீஸ் கட்ட காசு வேணும் அதனால ஒரு லோன் நானே எடுத்துக்குறேன்கா சொன்னேன். அவங்க சரின்னு சொல்லி உனக்கு தெரிஞ்சவங்க யாராவது லோன் எடுத்து தருவாங்களான்னு கேட்டு சொல்லுன்னு சொன்னாங்க அதான் உன்கிட்ட கேட்டேன் நீ எப்படி பண்றியா”
“இதனால ஒரு பிரச்சனை வராது தானக்கா”
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. இப்ப கூட பாரு நானா சொல்ல போய் தான நான் அவங்களுக்கு ரெண்டு லோன் எடுத்து கொடுத்தேன்னு உனக்கு தெரிஞ்சுச்சு. அதே மாதிரி தான் எந்த பிரச்சனையும் வராது நீ தைரியமா அவங்களுக்கு எடுத்து கொடுக்கலாம்” என்றாள் உறுதியாக
“ஏதோ நீங்க சொல்றீங்க உங்க மேல வச்ச நம்பிக்கையால அவங்களுக்கு நான் எடுத்துக் கொடுக்கேன்கா நீங்க அவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க”
“சரி இந்திரா நான் லட்சுமி அக்காகிட்ட பேசிட்டு அப்புறமா சொல்றேன்” என்று சொல்லி அவர் வீட்டிற்கு சென்றாள்.
“கடவுளே எப்படியோ ஒரு பிரச்சனை முடிஞ்சிடுச்சு” என்று நிம்மதி மூச்சு விட்டாள் இந்திரா. ஆனால் அவளுக்கு தெரியாது இதனால் தனது உயிர் மூச்சு நிற்கக்கூடிய அபாயம் உள்ளது என்று.
error: Content is protected !!