Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் தேடும் காதல் நீ

நான் தேடும் காதல் நீ….3

நான் தேடும் காதல் நீ…..3

தனது அறையில் தன் கணவன் புகைப்படத்தின் முன் நின்று கொண்டிருந்த அகிலாடேண்ஸ்வரிக்கு கணவனின் நினைவுகள் ஆட்டிப்படைத்தன என்ன தான் அவர் வெளியில் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாலும் இது போல் யாராவது அவரை நினைவு படுத்திவிடுவர்.பாண்டியன் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனாலும் அகிலாவினால் அந்த இழப்பை கடந்து வரமுடியவில்லை.

சற்குணம்,வேலனுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவள் கற்பகம்,இளையவன் பாண்டியன்.கற்பகம் அமைதி பேர்வழி என்றால் பாண்டியன் அடாவடி.கற்பகம் திருமணமான ஒருவருடத்தில் வேலவன் உடல்நலக்குறைவால் இறந்துவிட வீட்டின் முழு பொறுப்பும் பாண்டியன் தான் பார்த்துக் கொண்டது.பாண்டியன் மண்டியில் அடியெடுத்த வைத்தவுடன் தனது அடாவடி தனத்தால் பல வாடிக்கையாளர்களை இழக்க நேரிட்டது.வேலவன் வியாபாரத்தில் பல நெளிவுசுளிவுகளை நன்கு அறிந்தவர் அதனால் வருபவரிடம் அமைதியாகவே பேசிவிடுவார்.ஆனால் பாண்டியன் அப்படியல்லாமல் நேர்மையுடன் தான் நான் இருப்பேன் நீயும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று பலரை பகைத்துக் கொண்டுவிட்டார்.

மகனின் அடாவடி தனத்தை அடக்க சற்குணம் மகனிற்கு திருமணம் செய்ய நினைக்க பாண்டியனோ தன் தூரத்து அத்தை மகளான அகிலாடேணுஸ்வரியை விரும்புகிறேன் அவளை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட சற்குணத்திற்கு அதிர்ச்சி தான்.  அகிலாவின் குடும்பம் இவர்கள் அளவிற்கு வசதியில்லை என்றபோதிலும் வசதி சற்று கம்மியான வீட்டில் பெண்ணெடுத்தால் தங்களுக்கு அடங்கி இருப்பாள் என்று திருமணத்தை நடத்தி வைத்தார்.



Advertisement

ஆனால் அகிலாண்டேஸ்வரி அவர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆக்கினார் அகிலா.அவர் பாண்டியனுடன் தொழிலில் இறங்கிவிட அது சற்குணத்திற்கு பிடிக்காமல் போனது.அவர் தன் எதிர்ப்பை வீட்டில் காட்ட தொடங்கினார்.தந்தையைக்கு பின் பாண்டியனிற்கு அனைத்தும் சற்குணம் தான் அதனால் எப்போதும் தாயின் சொல்லை தட்டாமல் கேட்பவர் முதன் முறை எதிர்த்து நின்றுவிட அது சற்குணத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

அதே நேரத்தில் கற்பகமும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று அவரின் புகுந்த வீட்டார் பிறந்தகத்திற்கு அனுப்பிவிட்டுவிட மொத்தமாக உடைந்துவிட்டார் சற்குணம்.ஆனால் கற்பகத்தின் கணவன் பசுபதி தங்கள் வீட்டில் நடக்கும் விடயங்கள் பிடிக்கவில்லை என்று அவர் தன் வீட்டை எதிர்த்து தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் புகுந்துவிட்டார். அந்த நேரத்தில் அகிலா கரு தரித்துவிட சற்குணத்திற்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மகளின் நிலையை எண்ணி கவலை மனதை அரிக்க தொடங்கியது.சற்குணத்திற்கு மனதில் மகளிற்கு குழந்தையில்லை என்பது பெருத்த குறையாகவே இருந்தது.

அதை அறிந்த அகிலா சற்குணத்திடம்,

Advertisement

“அத்தை நீங்க வருத்தப்படாதீங்க அண்ணிக்கு கூடிய சீக்கிரமே குழந்தை தரிக்கும்…..”என்றுவிட்டு கற்பகத்தை பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடமும் அழைத்து செல்ல அவரோ கற்பகத்திற்கு விட்டமின் குறைபாடு உள்ளது என்று கூறி அதை சரி செய்து விடலாம் என்று மருந்துகள் எழுதி தந்தார்.அகிலாவிற்கு அமரன் பிறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பு தான் கற்பகத்திற்கு தாமரை பிறந்தாள்.மகன்,மகள் இருவரின் வம்சமும் செழித்துவிட சற்குணத்திற்கு மனது நிறைந்த உணர்வு.குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியில் திளைத்தது.

Advertisement

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி ஆயுட்காலம் மிகக்குறைவு போல அவர்களின் முதல் அடியாக பசுபதியின் இழப்பு மண்டியில் நடந்த தகராறில் பாண்டியனை சிலர் தாக்க வர அவரை காப்பாற்றும் பொருட்டு பசுபதி உள் புக பாண்டியனின் உடலில் புக வேண்டிய கத்தி பசுபதியின் உள் புகுந்து அவரின் உயிரைக் குடித்தது.

பசுபதி இறந்துவிட கற்பகத்தையும்,குழந்தையும் தன் மகனின் இறப்பிற்கு காரணம் காட்டி முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டனர் பசுபதி வீட்டினர்.சற்குணத்திற்கு வயதின் முதுமையில் உடலநலக்குறைவு இருக்க இப்போது தன் முன் தன் மகள் கணவனை இழந்து நிற்பதை பார்க்க முடியாமல் அவரும் அடுத்த இரண்டு மாதத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டார்.பாண்டியனிற்கோ தன்னால் தான் தன் மாமா மற்றும் அன்னை இருவரும் இறந்துவிட்டனர் என்று துயரம் மனதை அரிக்க தொடங்கியது.அவரால் தொழிலை சரிவர செய்யமுடியாமல் போனது.

அகிலாடேண்ஸ்வரி தான் வீட்டின் நிலையை கருத்தில் கொண்டு தொழிலை கையில் எடுத்தது.அப்போது அமரனிற்கு பத்து வயது,தாமரைக்கு ஐந்து.இருவரும் பள்ளி படித்துக் கொண்டிருந்தனர்.அகிலா தொழிலில் முழுமையாக இறங்க பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது.ஒரு பெண் தனியாக இருந்தால் அவளை பலர் சூழ்ந்து கொள்வர் இதில் வெகு சிலர் மட்டுமே அவளின் நலன் கருதபவர்களாக இருப்பார்கள் ஏனையோர் அவளின் தன்னம்பிக்கையை எப்படி உடைத்து எறியலாம் என்று தான் நினைப்பர்.அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அவளின் ஒழுக்கத்தை சீர்குலைப்பது.அப்படி தான் செய்தனர் சிலர் அகிலா மண்டியை பார்த்துக் கொள்வதை பாண்டியனிடம் தவறாக கூற தொடங்க ஏற்கனவே விரக்த்தியில் இருந்தவருக்கு இந்த விஷயம் மேலும் வதைக்க தொடங்கியது.

Advertisement

மற்றவர்கள் நினைத்தது போல் பாண்டியன் அகிலாவை சந்தேகப்படவில்லை ஆனால் தான் இப்படி இருப்பதினால் தான் மற்றவர்கள் தன் மனைவியை தவறாக சித்தரிக்கின்றனர் என்று நினைத்தவர் தன்னை முயன்று தேற்ற தொடங்கினார்.தனக்காக இல்லை என்றாலும் தன் குடும்பத்திற்காக.

பாண்டியன் அகிலாவுடன் மீண்டும் மண்டிக்கு வர தொடங்கினார்.முன்பு போல் அல்லாமல் அவரால் முடிந்தவரை அகிலாவிற்கு உதவினார்.நாச்சியப்பனும் தன்னால் முயன்ற உதவிகளை பாண்டியனுக்கு செய்ய ஒரளவிற்கு நட்டமில்லாமல் சென்றது தொழில்.அமரன் பத்தாவது படிக்கும் போது திடீர் என்று பாண்டியன் ஒரு பக்க கை,கால் இரண்டும் இழுத்து பக்கவாத்தில் விழுந்தார்.அதுவரை தைரியமாக இருந்த அகிலாவும் கணவனிற்கு என்று வந்ததும் மனதொடிந்துவிட்டார்.

தந்தை படுக்கையில் விழுந்துவிட தாய் செய்வதறியாமல் நிற்க தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தொழில் இறங்கினான் அமரன்.முதலில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் தான் இருந்தது.ஆனால் நாச்சியப்பன் மற்றும் அகிலாவின் துணை கொண்டு அனைத்து தடைகளையும் உடைத்து தாழ்ந்திருந்த தங்கள் நிலையை மீட்டுக் கொண்டு வந்துவிட்டான்.தன் பிள்ளையின் வளர்ச்சியில் அகமகிழ்ந்து போனார் அகிலா.இதில் கற்பகம் தான் கணவனின் இழப்பிற்கு பின் மிகவும் ஒடுங்கியது ஏதோ தாங்கள் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ என்னும் உணர்வும்,தனக்கு பிறகான தன் மகளின் நிலை என்று இவ்வற்றை நினைத்தே அவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது.

இந்தநிலையில் தான் அகிலா கற்பகத்திடம்,

“இங்க பாருங்க அண்ணி….இந்த வீட்டுல உங்களுக்கும் சம உரிமை இருக்கு….அதோட தாமரை பத்தி நீங்க கவலைப்பட தேவையே இல்லை அவ என்னோட மருமகளா வரப்போறவ….இதை நான் உங்களுக்காக சொல்லை இது தாமரை பிறந்தவுடனே நாங்க முடிவு பண்ணினது தான்….இப்ப சொல்லுறேன்….அதனால நீங்க கண்டதை நினைச்சு உடம்பையும்,மனசையும் கெடுத்துக்காதீங்க….”என்று கூற,

“அகிலா…எல்லாம் நீயா முடிவெடுக்காதமா…கண்ணா…”

“கண்ணா…கண்ணாக்கு என்ன….அவன் நான் சொன்னா கண்டிப்பா கேட்பான்….அவன் என்னோட வளர்ப்பு அண்ணி…”என்று அகிலா கற்பகத்திடம் கூறியது மட்டும் அல்லாமல் அமரனிடமும் கூறிவிட்டார்.தாமரை தான் இந்த வீட்டு மருமகள் என்றும்.அன்றிலிருந்து தான் கற்பகம் சற்று தெளிந்தார் என்று கூறலாம் இருந்தும் அவ்வபோது இப்படி சந்தேகங்களும் வந்துவிடும்.அந்த சமயங்களில் அகிலா தான் மிகவும் திண்டாடி விடுவார் என்ன தான் தைரியமான பெண்மணி என்றாலும் சில நேரங்களில் அவராலும் சிலவற்றை சமாளிக்க முடியாமல் தான் போய்விடுகிறது.

#########################

தனது அறையில் கலைந்து கிடந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த தீர்த்தாவின் பார்வை நொடிக்கு ஒருதரம் தனது கைபேசியை பார்த்து மீண்டு கொண்டிருந்தது.ஆனால் அவள் எதிர்பார்க்கும் நபரிடமிருந்து இன்னும் அழைப்பு தான் வரவில்லை.

“எருமை என்ன செய்யுதுனு தெரியலை….மணி எட்டாக போகுது….இன்னும் போன் பண்ணலை….போன் போடட்டும் இருக்கு அவளுக்கு….”என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்த நேரம் தீர்த்தாவின் கைபேசி இசைந்தது முகப்பு திரையில் தீர்த்தாவும் அவளின் ஆருயிர் தங்கையுமான சிவன்யாவும் கட்டிப்பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.அதனை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் அழைப்பை ஏற்க,

“ஹலோ…க்கா….எப்படி இருக்க…”என்று உற்சாகமான குரலில் தீர்த்தா மனதிற்கு சற்று இதம் அளித்தது.

“ம்ம் நான் நல்லயிருக்கேன்டீ….நீ எப்படி இருக்க…உன் வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு…”

“ப்பா கரெட்டா கண்டுபிடிச்சிடுவியே….லைட்டா சளி பிடிச்சிருக்கு வேற ஒண்ணுமில்ல….அதை விடு நீ ஏன் ஒருமாதிரி பேசுற….அங்க எல்லாம் ஓகே தான….”என்று கவலையுடன் கேட்க,தீர்த்தாவின் உள் மனது அனைத்தையும் கூறிவிடு என்று கூறினாலும் மூளையோ வேண்டாம் சிறு பெண் பயந்துவிடுவாள் என்று கட்டளையிட்டது.தான் கேட்டு பதில் இல்லாமல் போகவே ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைத்த சிவன்யா,

“க்கா…..க்கா…..”என்று கத்த தொடங்க,

“ச்சு….ஏன்டீ கத்துற….நான் நல்லா தான் இருக்கேன்…”

“நீ சொல்லுற ஆக்கத்துலேயே தெரியுது ஏதோ பிரச்சனைனு…..சொல்லுக்கா என்ன பிரச்சனை….”

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை….நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டு படிப்பை கெடுத்துக்காத புரியுதா….இந்த சனிக்கிழமையாவது வரியா….இல்லை நான் வரவா…”என்று கேட்க,

“பிடிவாதம் பிடிச்சவ….நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுறாளா பாரு….”என்று மனதிற்குள் திட்டிய சிவன்யாவிற்கு புரிந்து போனது இனி கேட்டாலும் பதில் வராது என்று.

“இல்ல இல்ல நான் வந்துடுவேன்….நீ அலையாத….”

“எனக்கு என்னடி அலைச்சல்…உனக்கு தான பரிட்சை இருக்குனு சொன்ன இப்ப வரேனு சொல்லுற….”

“திங்கள் வைக்க வேண்டியதை ப்ரீ போன்ட் பண்ணி நேத்து வச்சிட்டாங்க….அதனால இந்த வாரம் நான் ப்ரீ…..நானே வரேன்….”

“ம்ம் சரிடீ…..சாப்பிட்டியா….”

“நான் சாப்பிட்டேன்….நீ போய் சாப்பிடு….சனிக்கிழமை பார்க்கலாம்…..”என்று கூறிவிட்டு அவள் வைத்துவிட.அதுவரை இருந்த உற்சாக மனநிலை மீண்டும் சோர்ந்து போனது.ஒருவித அயர்வுடன் தன் கைபேசியை கட்டிலில் போட்டவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“இன்னும் ஐந்து மாதம் தான் தீர்த்தா உனக்கு டையம்….அதுக்குள்ள உன்னோட கல்யாணம் நடக்கலனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது….”என்று வக்கீல் சதாசிவத்தின் வார்த்தைகள் மனதில் ரீங்காரமிட தொடங்கின,தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்றவள் பக்கத்தில் இருந்த ஜக்கை தூக்கி சுவற்றில் அடித்துவிட சுவரில் மாட்டப்பட்டிருந்த தீர்த்தாவின் அன்னை வைதேகியின் படம் கீழே விழுந்து நொருங்கியது.நொருங்கிய படத்தை கையில் எடுத்தவளுக்கு கோபம் இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை.

“உன்னால தான்….எல்லாம் உன்னால தான்மா….நீ ஒழுங்கா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி நானும்,சிவாவும் இருந்திருப்போமா….எல்லாத்துக்கும் காரணம் நீ தான் உன்னால தான்…..”என்றவள் அவரின் புகைப்படத்தை சுவற்றில் விசிறி அடித்துவிட்டாள்.அதே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் தாத்தா நாச்சியப்பனின் படத்தை பார்த்தவாரே,

“யோவ் தாத்தா….என்னை பத்தி தெரிஞ்சி தான இப்படி பண்ணியிருக்க…”என்று கண்கள் கலங்க கேட்டவளுக்கு கேவல் வெடித்தது,

“எனக்கு மட்டும் என்ன ஆசையில்லையா என்ன….எதோ அறியாத வயசுல கல்யாணம் வேணம்னு சொன்னேன்….இப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல பிரச்சனையில்லை ஆனா என் மனசுல ஒருத்தன் இருக்கான் அவனை தவிர….”என்று கேவி அழுதவள் பின் தன்னை தேற்றிக் கொண்டு,

“இல்ல…இனி அதை பத்தி நான் பேசக் கூடாது….அமரன் எனக்கானவன் இல்லை….அதுக்காக எல்லாம் என்னோட கடையை விட்டுக் கொடுக்க மாட்டேன்….”என்று தீர்க்கமாக மனதிற்குள் முடிவு எடுத்தவளுக்கு அதனை எப்படி செயலாற்றுவது என்று தான் தெரியவில்லை.அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்களில் அவர்களின் இறந்தகாலம் நிழற்படமாக தெரியத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!