Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 10 1

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம்  – 10



Advertisement

  விஷால் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் நின்ற தங்கையை பார்த்த  ஜோதி  என்னடி  சொன்னான்..

Advertisement

Advertisement

”  என்னக்கா  இப்படி பேசுறான்”..

” அவன் அப்படி தான்டி பேசுவான், உன்ன முதல் முதலில் என் கல்யாணத்துல  பார்த்ததுல இருந்து, அவன்  உன் மேல் பைத்தியமாக  இருக்கான், இந்த அம்மா வேற,  முந்தா நேத்து நைட்டு  நம்ம சித்தப்பான்,கட்டி இருக்கான் பாரு ஒரு  லூசு   அந்த ரோசி   அவ போன் போட்டதுல இருந்து. இந்த அம்மா என் வீட்டுக்கு வந்து, இந்த  விஷால் பய கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் பொண்ண கல்யாணம் பண்ணிங்கோ என்று சம்மதம் கேட்டாங்க.. இந்த பய உடனே சம்மதம் சொல்லிட்டான்..

Advertisement

 துல்லி குதிக்காத கொற தான்,, உடனே எல்லாரும் பேசி கல்யாணத்த ஏற்பாடு பண்ணிட்டாங்க”…

”  என்னால  முடியாதுக்கா,  என் விக்ரமுக்கு துரோகம்   பண்ண என்னால  முடியாது ”  என்றாள் பல்லவி…

  “ஏன்டி  இப்படி பேசுற, கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகும்”..

”  பைத்தியகாரி, பைத்தியகாரி  என்ன பாத்தா உனக்கு எப்படி இருக்கு, நான் சின்ன  பொண்ணா, இல்ல 16  வயசு பொண்ணா, அறிய வயசு  பொண்ணு  லவ் பண்ணுற மாதிரி  மறந்துறு, கல்யாணம் பண்ணுயின்னு  சொல்லுற.. எனக்கு 25  வயசாகுது   என் மனசு பூரா என் விக்ரம் தான் இருக்காரு,,. அவர என்னால  ஒரு நிமிசம்  கூடா மறந்து  தனியா இருக்கு முடியாது,,  நான்   ஒன்னு  சாகனும், இல்ல  இந்த கல்யாணம் நிக்கனும்..

“அவ்வளவு லவ்வாடி  அந்த விக்ரம் மேல”..

”  ஆமாம்”  என்று  தலையாட்டியவளை..

”  ஏன்டி இவ்வளவு பிடிவாதம்  பண்ணுற..

 “எனக்கு என்ன பண்ணுறதுன்னுஸ தெரியல ஜோதி?.”   பேசிக்கொண்டு இருக்குப்போதே,, கதவு தட்டு ஓசை கேட்க,, ஜோதி கதவின் அருகே சென்று  கதவை திறங்க..

பைரவி தான் வந்திருந்தார், பல்லவிக்கு பூ மாலை என்று அனைத்தையும்  கொண்டு வந்தவர்.. பல்லவியை பார்த்து ”  நீ இன்னும் குளிக்காம இருக்க”  என்றவர்..

  கோபத்தில் ஜோதியை ஒரு அறை விட,  “அம்மா”   என்று  ஜோதி கன்னத்தை பிடித்து கொண்டு அழுதாள்..

 மூகூர்த்த நேரம் வர போகுது, அக்காளும்  தங்கச்சியும்  என்ன திட்டம் போடுறீங்க,,,.

ஜோதி பைரவியிடம் ”  அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா”..

பல்லவி  கடைசியாக  ஒரு முறை பைரவியிடம் பேசிவிடுவோம்  என்று  அருகில் வந்தவள்..

”  அம்மா”  என்று  கமரிய குரலில் அழைத்தவள்  “என்ன விட  உங்களுக்கு இந்த  கல்யாணம் பெருசா.. “

” ஆமா  எனக்கு உன் வாழ்க்கை நல்லா அமையனும், “.

 ”  சரி எனக்கு இப்போ இந்த  கல்யாணம் நடந்தா, உன் பொண்ணு  பல்லவி  உயிரோட  இருக்க  மாட்டா பராவயில்லையா”?…

”  நீ  கல்யாணம் பண்ணிட்டு சாவு, இப்போ இந்த கல்யாணம் இன்னைக்கு நடக்கனும்”   மகளை பார்க்காமல் திரும்பி நின்று  கூற..

”  ஓ பெத்த பொண்ணு  செத்தாலும்  பராவயில்ல, உங்க  கௌரவம்  போக  கூடாது,  அப்படி தானே இப்போ சொல்லுறேன்  கேளுங்க, இந்த கல்யாணம் முடிஞ்சா நான் செத்ததுக்கு  சமம்,, பொணத்துக்கு தான்  இன்னைக்கு கல்யாணம்  நடக்க போகுது,, நீங்க யாரும் என்கிட்ட பேச கூடாது,, இந்த கல்யாணம் முடிஞ்ச  அடுத்த நிமிசம், நீங்க யாரோ,நான் யாரோ உங்க  கடமை  முடிஞ்சதுல”,.. என்றவள் ஜோதியிடம்  ” உன் தங்கச்சி   செத்துட்டான்னு  நெனச்சிக்கோ”  என்றவள் புடவையை  எடுத்துக்கொண்டு பாத்ரூம்  நோக்கி சென்றாள்..

ஜோதி தங்கை சொல்லியதை  கேட்டு அழ…

  பைரவி பெரிய மகளை  பார்த்து ”  கல்யாணம் ஆனா  சரியாகும்”  என்று பெரிய மகளை சமாதானம் பண்ணிவிட்டு, ”  பல்லவியை  ரெடி பண்ணி கூட்டிட்டு வா” என்று வெளியே சென்று விட்டார்..

பல்லவி ஒரு கோபத்தில் புடவையை எடுத்து கொண்டு  பாத்ரூம் வந்து விட்டாள், அவளால் முடியவில்லை அவளின்  தாயை பற்றி அவளுக்கு நன்றாக தெரியும், அவர் எப்போதும் இவ்வளவு பிடிவாதம்  பிடித்தது இல்லை,  எந்த விசயமாக இருந்தாலும் தங்களின்   முடிவையும் எப்போது கேட்பார்,  ஏன் இப்படி, தன் கல்யாண விசயத்தில் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஏன்?. எல்லாம் இந்த ரோசி சித்தி பண்ண வேல…

ஐயோ என்னால முடியாது  பேசமா செத்துரலாமா என்று யோசிச்சு பாத்ரூமில் ஏதாவது  சாவதற்கு கிடைக்குத என்று பார்த்தாள்,

ஒன்றும் கிடைக்கவில்லை,,

 விக்ரம், விக்ரம் மனது முழுவதும் விக்ரமனின் நினைவே  தனக்கு கல்யாணம்  ஏற்ப்பாடு நடக்குது என்று தெரிந்தால், அவர் என்ன நிலைமைக்கு  போவார், எவ்வளவு வேதனை படுவார்,,  ஏர்போர்டில் வைத்து  எவ்வளவு ஆசையாக பேசினார், நீ இங்கே திரும்பி வராதே,, நானும், அப்பாவும்  வர்ரோம் உங்க அம்மா கிட்ட  கல்யாணத்தை பத்தி பேச,, நம்ம திரும்ப  வரும் போது  இருவரும் ஜோடியாகத்தான் வருவோம்முன்னு எவ்வளவு சந்தோஷமா பேசுனார்.., இப்ப எல்லாம் தப்ப போச்சே… பாத்ரூம்பில்  ஓரு மூச்சு அழுது தீர்த்தவள்,  புடவை கட்டி வெளியே வந்தாள்..

ஜோதி தங்கையை பார்த்து பயந்து விட்டாள், பல்லவி ஏதோ சிந்தனையில் முனங்கிய படியே இருந்தாள்,  பல்லவியின் கை, கால்கள் ஓய்ந்தது போல இருந்தது. தன்னை சுத்தி என்ன நடக்குது என்று தெரியாமல், மனதில் கோடி முறை சாரி விக்ரம், என்னை மன்னிச்சுரு, உன்கூட வாழ குடுத்து வைக்கல, என்று முனக்கிய படியே இருந்தவளை, ஜோதி தங்கையின் கன்னத்தை தட்ட, அவளோ இந்த உலகில் இல்லை, அவள் மொத்த மனசும் விக்ரமிடம் பேசிக்கொண்டு இருந்தது,,.

பல்லவி சொன்னா மாதிரியே எந்த ஒரு உணர்வும் இல்லாமல், செத்து பொணம் மாதிரியே  மணமேடையில் வந்து நின்றாள்பல்லவி,. மண்டபத்தில் உள்ளவர்கள் பல்லவின் கண்ணுக்கு தெரியவில்லை, என்ன நடக்குது, எது நடக்குது, யார் தன்னிடம் பேசுகிறார் என்று எந்த எதிர் வினையும் காட்டாமல், ஜோதி உங்கார  வைத்த இடத்தில் அமர்ந்து இருந்தாள், அவள் மனதில் சாரி விக்ரம், சாரி விக்ரம் நான் பேசுறது கேட்குத விக்ரம், என்னால இவங்ககிட்ட போறாட முடியல என்று புலம்பிய படியே இருந்தவளின் கழுத்தில் ஏதோ விழுவது போல் தெரிய மயங்கி சரிந்தாள் பல்லவி,,..

 விஷால் தாலிகட்டிய மறுநோடி மணமேடையில்  மயங்கியவதை கன்னத்தை தட்டி பார்க்க, பல்லவி சுயநினைவு இல்லாமல் இருந்தாள்..

 கல்யாணத்துக்கு வந்த ஒருவர் பொண்ணு லண்டனுல இருந்து வந்து இருக்குல, அதான் அசதியில மயங்கியிருச்சி  வீட்டுக்கு கூட்டிட்டு போயி ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க, என்று கூற..

பல்லவியை  காரில்  ஏற்றி, விஷால் வீடு நோக்கி செல்ல,, திருச்சி மேம்பாலத்தை  ட்டிராபிக்  ஜாம் ஆகி நிறைய வண்டிகள் காத்து இருக்க.. நீண்ட நேரம் கார் நிற்பதால், பல்லவிக்கு விளிப்பு வர மெல்ல  கண்திறந்தாள்.. முதலில் தன் கலுத்தை தொட்டு பார்த்தவள்,  அதிர்ந்து போனால், நான் இன்னும் உயிரோடு தான்  இருக்கேனா?  என் உயிர் இன்னும் போகலையா, என்று  உணர்வு வந்தவளாக , நன்றாக கண்திறந்து  பார்த்தாள்,, பக்கத்தில் அமர்ந்து இருந்த  விஷால் இவளை முறைத்து பார்க்க,,..

சிறிது நேரம் கழித்து பல்லவியின் பின் ஏதோ உருவது போல் தெரிய.

பல்லவி நிமிர்ந்து  விஷாலை பார்க்க..

அவனோ கோணலாக பல்லவியை பார்த்து சிரித்தவன்,  அவளின் பின் இருந்து பல்லவியின் இடுப்பை வருட..

சீ என்றவள், அவனின் கையை தட்டி விட்டு, ஈஸ்வரா என்னால இனிமேல் முடியாது, என்னை எடுத்துக்கோ என்றவள்..

விஷால் கட்டிய தாலியை பிய்த்து எடுத்தவள்.. ”  நான் செத்துட்டேன்னு  நெனச்சுக்கோ”   என்று, தாலியை  விஷால்  கையில் கொடுத்த நொடி காரில் இருந்து  இறங்கி  வெளியே வந்து, பாலத்தின் மேல்  ஓட ஆரம்பித்தாள்..

விஷாலுக்கு  பல்லவி செய்த காரியத்தை  நம்ப முடியாமல் அப்படியே  அமர்ந்திருந்தான்,. முன்னாடி அமர்ந்திருந்த ஜோதி தங்கை  செய்த  காரியத்தால் அதிர்ச்சியாகி  இருக்க…

விஷாலும் , ஜோதியும்  பல்லவி செய்ய காரியத்தால் உரைந்து, பின்பு அவளை பின் தொடர..

பல்லவி பாலத்தின் மீது சிறிது தூரம்  ஓடியவள், ஒருவரிடம்  போன் வாங்கி விக்ரமை போனில்  அழைத்து ”  விக்ரம், விக்ரம்  என்று இவள்  மூச்சு வாங்கியபடியே பேச..

“ஏய்!”  என்ற குரல்  போனில் கேட்டது.

பல்லவி மறுபடியும்” விக்ரம், விக்ரம் போன் தானே”   இது என்று  பல்லவி போன் நம்பரை  சரி பார்த்து கேட்க..

“இது விக்ரம் போனுதான் பேசுறது யாருன்னு தெரியலையா”?..

”  சித்தப்பா”  என்றாள் பல்லவி..

 “அப்படி என்னை கூப்பிடாத”..

 ”  விக்ரம் போன் உங்ககிட்ட எப்படி?..

”  சாகப்போறவன்  கிட்ட போன் எப்படி இருக்கும்”..?..

”  யாரு சாகப்போறா?.. “

 ”  அந்த  விக்ரம் பய தான்”  என்றார் ஞானதுரை..

”  ஏன் என்னாச்சு என் விக்ரமுக்கு?”.

”  உன் விக்ரமா, ஏய் உனக்கு தான் கல்யாணம்  ஆகிருச்சுல, அப்பறம் எதுக்கு விக்ரமுக்கு போன் போடுற வை போனை. “

”  சித்தப்பா விக்ரமுக்கு என்னாச்சுன்னு  சொல்லுங்க இனிமே தான் விக்ரமுக்கு போன் போட மாட்டேன்… “

” ஆக்சிடன்ட்”..

”  எப்படி?.  ஆக்சிடன்ட் ஆச்சு?.

”  அது, அவன் காதலி  பல்லவி இருக்காளா  அவளுக்கு  கொஞ்ச நேரம் முன்னாடி  கல்யாணம் ஆச்சா, அந்த போட்டோவை நான் அவனுக்கு அனுப்புனேன்னா,, காதலி  கல்யாணம் போட்டோவை காதலன்  பார்த்த என்ன ஆகும்,,  அதிர்ச்சியாகி வண்டியை பிரேக் போட்டான், பின்னாடி வந்தவன் இடிச்சுட்டான்,விக்ரம் சாகப்போறான் ”   என்று ஞானதுரை சிரிக்க…

”  சித்தப்பா ”  என்று பல்லவி கத்தியிருந்தாள்…

”  வாய மூடுடி!  யாரு  சித்தப்பா  உனக்கு, நம்பிக்கை  துரோகி, என் வீட்டுல  இருந்து கிட்டே என் மக வாழ்க்கையை  அழிச்சுட்ட,, “..

” சித்தப்பா ” நான் உங்க மக வாழ்க்கையை  கெடுக்கல, ஆனா நீங்களும், உங்க பொண்டாட்டியும் என் குடும்பம் நிம்மதியா அழிச்சி, என்ன என் விக்ரம் கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க “..

 ”  என்ன ஓவரா கத்துர, நீயும் விக்ரமும் லவ் பண்ணுறது  தெரிஞ்சவுடனே, உன்ன லண்டனுல  வச்சு  கொன்னு இருக்கனும் தப்பிச்சுட்ட,, ஆனா என் பொண்டாட்டி ரோசி தான், ஐடியா குடுத்தா, உன் அண்ணி பைரவிக்கு போன் போட்டு அவமகளை பத்தி  அசிங்கமா  பேசுன, அவளே  மகளை  இந்தியாவுக்கு  கூப்பிட்டு போய்  கல்யாணம் பண்ணி வச்சுருவான்னு சொன்னா, அதே மாதிரியே  ஆகிருச்சு எப்படி எங்க தந்திரம்”…

” நீயெல்லாம் ஒரு மனுஷனா  உன்னை சித்தப்பான்னு  கூப்பிட்டாலும் அப்பா  மாதிரி தானே  நெனச்சேன் பாரு, தூ!..  நீங்க  சதி பண்ணி  என்னைய , என் விக்ரம் கிட்ட இருந்து பிரிச்சுட்டீங்க என்று அழுதவளை  ஜோதி பல்லவி என்று தூரத்தில்  இருந்த கூப்பிட்டு  கொண்டே வர….

”  சொல்லு என் விக்ரமுக்கு என்னாச்சு”…?.

 ஞானதுரை பல்லவியிடம், ”  ஒன்னு  விக்ரம் சாவ்வான், இல்லை கோமாவுக்கு போவான், அப்படி இல்லன்னா, காலம் பூரா  நடக்க முடியாத படி பெட்டுல இருப்பான்.. “..என்று சொன்னவுடனே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!