Skip to content
Post Views: 3,832
” என் விக்ரமுக்கு ஒன்னும் ஆகாது, அவர் ராஜா மாதிரி வாழ்வார்,, உன்ன மாதிரி, உன் பொண்டாட்டி மாதிரி கேடுகெட்ட ஜென்மங்களே இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் போது, என் விக்ரம் ஜம்முன்னு வாழ்வார்”, என்று சொல்லி விட்டு போனை ஆப் பண்ணியவள்,, பக்கத்தில் அவளுக்கு போன் குடுத்தவர் நிற்க, அவரிடம் நன்றி சொன்னவள்..
திரும்பி இந்த பக்கம் பார்க்க,.. பல்லவியின் அக்கா, விஷால் மற்றும் அவளின் மொத்த குடும்பமும் வர..
Advertisement
அவளுக்கு விக்ரமை விட்டு, விஷாலோடு வாழ முடியாது, இந்த நிலைமையில் விக்ரமிடமும் போக முடியாது, வானத்தை பார்த்தவள் ஈஸ்வர விக்ரமை காப்பாத்து, என் உயிரை எடுத்துக்கோ என்றவள்..
பாலத்தின் கீழ் பார்க்க, டேம் திறந்து விட்டு இருந்தனர், தண்ணீர் பொங்கி பாய்ந்து சென்று கொண்டு இருந்தது..
Advertisement
Advertisement
பல்லவி தூரத்தில் அவளை தேடி வந்துகொண்டு இருக்கும் குடும்பத்தை பார்த்தவள், பாலத்தின் மேல் நின்று பார்க்க,, அவளின் மொத்த குடும்பமும், ஏய் வேண்டாம் பல்லவி, பல்லவி என்று கத்தியதை கேட்டவள், பால் போல் பொங்கிய நீரில் குதித்திருந்தாள் பல்லவி,, தன்னால் இனிமேல் ஒரு நிமிசம் கூட வாழ முடியாது என்று தன் உயிரை விட நினைத்து குதித்தாள்..
ஆனால் அவளுக்கு ஆயிசு கெட்டி என்று தெரியாத பெண்..
Advertisement
ஜோதி ஐயோ பல்லவி, பல்லவி என்று தங்கை குதித்த பாலத்தின் மேல் நின்று கொண்டு அழுது கொண்டே தங்கையை நீரின் மேல் தேட…
விஷாலோ ஸ்தம்பித்து நின்று இருந்தான், தன்னிடம் சன்று முன், மச்சான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிய பெண் எங்கே? அவன் பேசிய வார்த்தை கடினமாக இருந்தாலும், 4 வருடமாக மனதில் வைத்திருந்த காதலியை கல்யாணம் பண்ணி வாழ போறோம் என்று சந்தோஷம் எங்கே, ஒரு நொடியில் எல்லாம் முடிந்தது…
அவர், அவர் சந்தோஷம், வரட்டு கௌரவத்துக்கு பலியானாள் பல்லவி…
பைரவி நெஞ்சை பிடித்து கொண்டு பாலத்தின் மீது அமர்ந்து விட்டார்..
போய்ட்டாளா, போயிட்டாளா,, சொன்னா சொல்லை நிரூபிச்சுட்டாளா, ஐயோ பல்லவி என்று கதறி அழ..
செல்லத்துரை பைரவிக்கு கன்னத்தில் ஒரு அறை விட்டு இருந்தார், போதுமாடி போதுமா, என் பொண்ணை கொன்னுட்டியே என்று சொன்னவர், வாய மூடு என் பொண்ண நெனச்சி அழ கூட உனக்கு உரிமை இல்லை என்ற செல்லத்துரை,, மகள் விழுந்த இடத்தையே பார்த்து நின்றார்,
மாப்பிள்ளை என்று விஷாலிடம் வந்தவர், “போலிஸ்சுக்கு ஆம்புலன்ஸ் சொல்லுங்க, பல்லவி கண்டிப்பா கிடைப்பா, எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொல்ல, அனைவரும் பல்லவியை தேட, தண்ணீரில் விழுந்தவரை தேடி கண்டு பிடிக்கும் ஆள்களை வர வைத்தனர்.
அன்று பகல், இரவு முழுவதும் பல்லவியை தேட கண்டு பிடிக்க முடியவில்லை, ஒரு வாரம் கழித்து பல்லவியின் வயதில் ஒரு பெண் உடல் கிடைக்க, இறந்த பெண்ணில் உடை நகையை வைத்து அடையாளம் கண்டவர்கள் அவள் பல்லவி தான் என்று போலிஸிடம் சொல்ல பல்லவி இறந்தது உறுதியானது..
ஆனால் பல்லவியோ ஒரு இஸ்லாமிய குடும்பத்துடன் தனி விமானத்தில் சுயநினைவு இல்லாமல் மலேசியா சென்று கொண்டு இருந்தாள்…
*****
அத்தனை மகிழ்ச்சியாக இருந்தான் விக்ரம் ஒரு வாரம் முன்னாடி,, சுந்தரிடம் நாம் இருவரும் சேர்ந்து இந்தியா போகனும், என்று கூற..
சுந்தர் என்னவென்று கேட்க..
“பல்லவியும் நானும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கோம்” என்றான் விக்ரம்..
” நல்ல முடிவு கண்டிப்பா போலாம் என்றவர், தன் மகளிடம் சொல்லி மாப்பிள்ளை சத்தீஸிடம் சொல்ல சொன்னவர்.. விக்ரமனிடம் மகளை அழைத்து கொண்டு வர போற மருமகளுக்காக திருமணம் பேச பல்லவிக்கு நகை, உடை வாங்கி வருமாறு கூற…
விக்ரம், விக்ரமனின் தங்கை, அவளின் கணவர் சத்தீஸ், தங்கை மகன் சூர்யஜித்தையும் அழைத்துக்கொண்டு காரில் பயணம் சென்று கொண்டு இருக்கும் போது,, அவனின் போனில் ஒரு போட்டோ வந்தது காண நோட்டிபிகேஷன் வர..
விக்ரம் காரை ஓட்டிக்கொண்டே போனில் வந்த போட்டோவை பார்க்க..
விக்ரமுக்கு பூமி தலை கீழ் சுத்துவது போல் தெரிய, இது உண்மை இல்லை என்று மனது சொல்ல போட்டோவை மறுபடியும் பெரிது பண்ணி பார்க்க, பல்லவியின் முகம் அவனுக்கு நன்றாக தெரிய, அதிர்ச்சியில் ப்பேர்க்கை அமுக்கி இருந்தான்..
விக்ரமனின் கார் பின்னாடி வந்த கார், விக்ரமனின் கார் மீது வேகமாக இடித்து விட, விக்ரமனின் கார் நீண்ட தூரம் உருண்டு சென்று விழுந்து நொருங்கியது…
விக்ரமனின் தங்கை, தங்கையின் கணவர் ஆக்சிடன்ட நடந்த இடத்திலே இறந்து விட.. விக்ரமும், சூர்யஜித்தையும் ஹாஸ்பெட்டலில் சேர்த்தனர்.. சூர்யஜித்துக்கு சிறு, சிறு காயமே, ஆனால் விக்ரமுக்கு தலையில் அடி, கை, கால் எலும்பு முறிவு என்று உடல் முழுவதும் அடிப்பட்டு,இறக்குற ஸ்டேஜில் இருந்தான்… அவன் உயிர் பிளைப்பதே பெரிய விசயமாக இருந்தது..
ஞானதுரைக்கு விக்ரம் கார் ஓட்டிக்கொண்டு இருப்பது தெரிந்து தான்,, தன் மகன் போனில் இருந்து, விக்ரம் போனுக்கு பல்லவியின் கல்யாண போட்டோவை அனுப்பியதே,, ஞானதுரைக்கு ஒன்னு விக்ரம் சாகனும், இல்ல அதுக்கு மேல அவன் அனுபவிக்கனும் என்றே நினைத்தார்…
விக்ரமுக்கு ஆக்சிடன்ட் ஆகிவிட்டதை முதலில் தெரிந்த ஞானதுரை முதல் ஆளாக ஹாஸ்பெட்டல் வந்தார். சுந்தருக்கு தகவல் சொல்வது போல் சொல்லி வர வைத்தவர், மீண்டும் தனது சகுனி வேலையை ஆரம்பித்து இருந்தார்..
விக்ரமனை நான் தான் காப்பற்றி ஹாஸ்பெட்டலில் சேர்த்தது போல் சுந்தரிடம் நாடகம் ஆட..
சுந்தருக்கு மகனின் நிலை என்னவென்று தெரியவில்லை,,?. பெத்த மகள், மருமகன் இறந்து விட்டனர் அந்த துக்கம் தாளாமல் அழ…
ஞானதுரை சுந்தரை ஆருதல் சொல்லி தாங்கி கொண்டார், ஞானதுரை அவர் மகன் அஜ்யை வர சொன்னவர், விக்ரமனை பார்த்துக்க சொல்லிவிட்டவர்.. பின்பு மகளை அழைத்து வந்து சூர்யஜித்தை பார்க்கும் மாறு சொல்லி விட்டு..
சுந்தரிடம் உடன் இருந்து, சுந்தரின் மகள், மருமகன் இறுதி சடங்கை செய்து முடிந்தனர்…
சுந்தருக்கு விக்ரம் சென்று கார் வெறும் கார் ஆக்சிடன்ட் என்று நினைத்திருந்தார்.. அவருக்க இன்னும் பல்லவிக்கு திருமணம் முடிந்தது தெரியாது..
ஞானதுரைக்கு பல்லவி விசயத்தை எப்படியாவது சுந்தரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று இருக்க, ஞானதுரையின் நண்பர் ஒருவர் இவருக்கு தவறாக போன் பண்ணி, பின்பு போன் ஆப் பண்ணி விட..
ஞானதுரை தன் வேலையை ஆரம்பித்தார், அண்ணா, சொல்லுணா, அண்ணி சொல்லுங்க என்று பேசுவது போல் போன் பேசிக்கொண்டே சற்று தள்ளி சென்றவர், சிறிது நேரம் கழித்து வந்து, சுந்தரிடம் வந்து அழ,,.
” என்னாச்சு என்று சுந்தர் ஞானதுரையிடம் கேட்க”.
” என் அண்ணன் பொண்ணு பல்லவி இறந்துட்டா என்று அழ”..
பதறி போன சுந்தர் “என்னாச்சு பல்லவிக்கு” என்று கேட்க..
ஞானதுரை எதுவும் தெரியாதது போல், பல்லவி பாட்டிக்கு உடம்பு சரியில்லான்னு, இந்தியா போனா, எங்க அண்ணி பல்லவிக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க போல”..
” என்னது” என்று அதிர்ந்த சுந்தர் கல்யாணமாச்சா பல்லவிக்கு” என்றார்…
” ஆமாம், பல்லவிக்கு பிடிக்காத கல்யாணமாம் அதனால அவ சூசைட்டு பண்ணிகிட்டா” என்றுஅழுதவரை, சுந்தர் சமாதானம் பண்ண,,.
சுந்தரின் மனதில் விக்ரம் இதை எப்படி தாங்குவான், ஒருவேலை அவனுக்கு தெரிஞ்சுயிருக்குமோ..
என்று நினைத்தவர், பல்லவியை நினைத்தவர் எவ்வளவு தங்கமான பொண்ணுக்கு இப்படி ஆகிபோச்சே…என்று வருந்தினார்..
ஞானதுரை விக்ரமிடம் இருந்து பல்லவியை தூக்கி ஆச்சு,, இனி என் மகளை மீண்டும் விக்ரமனின் பக்கம் சேர்க்க வேண்டும் என்று காய் நகத்த ஆரம்பித்தார்..
விக்ரம் 20 நாள் கழித்து கண் விழித்தான், முதலில் கண்டது தன் தந்தையை தான், மகனின் கைகளை பிடித்துக்கொண்டு இருந்தவர், “ஆர், யு ஓகே, பா” என்றார்.. விக்ரம் மெதுவாக தலையாட்ட, வலி உயிர் போனது,, வேண்டாம் விக்ரம் தலையில் ஆப்ரேசன் பண்ணியிருக்கு என்று சொன்னவர்,..
மகனை தொட்டு தடவியவர், “நீ மீண்டு வருவேன்னு நான் நெனச்சேன், அதே மாதிரி வந்துட்ட”,. என்று மகனிடம் பேசியவர், விக்ரமனை கண்ணும் கருத்தும்மாக பார்த்துக்கொண்டார்.. அவர் இல்லாத நேரம் விக்ரமை பார்த்துக்க இரண்டு பேரை நியமித்து இருந்தார்…
ஞானதுரை அடிக்கடி ஹாஸ்பெட்டல் வந்து விக்ரமிடம் வந்து பேச,.
அவனோ “உம், ஓகே, தவிற வேற் ஏதுவும் பேசவில்லை..
விக்ரமுக்கு ஞானதுரையின் மீது ஏதோ தப்பு இருப்பது போல் தெரிந்தது,, தனது போனுக்கு வந்த லாஸ்ட் மெஜேஜ் யாருடையது என்று விக்ரம் அவன் நண்பனிடம் கேட்க..
விக்ரமனின் நண்பன் அந்த போன் நம்பர் அஜ்யை என்ற பேரில் உள்ளது என்று கண்டு பிடித்து சொல்ல..அஜ்யை ஞானதுரையின் மகன் என்று தெரிந்து கொண்டவன்..
ஞானதுரையின் குடும்பத்தை தன் குடும்பத்தோடு இணையாமல் பார்த்து கொண்டான்…
விக்ரமுக்கு தெரிந்தது ஏதோ பெரிய பிரச்சனை பல்லவி விசயத்தில் நடந்து இருக்குதுன்னு,, அது என்ன ஏதுன்னு கண்டு பிடிக்கனும் என்றது ஒரு மனம்..
பின்பு அவளோ வேற் ஒருவரின் மனைவி என்று அவளை நினைக்காத, பார்க்காத, என்று ஒருமனம் சொல்ல..
விக்ரமுக்கு தங்கை, தங்கையின் கணவர் இருவரும் இறந்ததை தாங்க முடியவில்லை.. தனக்கு தாய் மட்டும் தான் இல்லை,, இந்த சிறு வயதில் தந்தை, தாய் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம் என்று நினைத்தவன்,, சூர்யா ஜித்துக்காக வாழ ஆரம்பித்தான்,, பல்லவியின் நினைவை மனதில் வைத்து பூட்டியவன்,,
தான் பெறாத தங்கை மகனுக்கு தகப்பனாக மாறியிருந்தான்.. சூர்யா ஜித்தை தன்னோடு வைத்து கொண்டவன், அவனுக்கு தாய்யாக, தந்தையாக மாறி இருந்தான்..
சுந்தர் மகனிடம் பல்லவி இறந்ததை சொல்லவில்லை..
விக்ரமும் தந்தையிடம் பல்லவியை பத்தி கேட்க வில்லை..
“இனி நான்கு வருடம் கழித்து பார்க்கலாம்””…
error: Content is protected !!