Skip to content
Post Views: 4,478
நிறம் பாராத காதல்
அத்தியாயம் 17
ஒரு பெண்மணியைப் பார்த்துத் தன் அத்தை மகன் என்று வைதேகி சொன்னதை கேள்வியாகப் பார்த்தான் ரணதீரன்.
“ஏங்க… நம்ம இங்க இருந்து கிளம்பலாம் வாங்க” என்று வைதேகி ரணதீரனை அழைத்தவள் வேகமாக ஜீப்பில் ஏறி அமர்ந்தவளை, “சித்ரா நில்லு… சித்ரா இரு மா…” என்று அழைத்துக்கொண்டே அந்தப் பெண்மணி அவளை நோக்கி மேல் மூச்சு வாங்க ஓடி வந்தவர், “சித்ரா நீ எப்படி இருக்க? நீ கனடா போய் இருப்பன்னு தானே நான் நினைத்தேன்!” என்று கேட்டதும், “தீரா…வாங்க, வந்து வண்டியை எடுங்க நம்ம போகலாம்” என்று பயத்தில் ரணதீரனை அழைத்தாள் வைதேகி.
Advertisement
“என்ன சித்ரா நீ! என்னைப் பார்த்து ஏன் பயப்புடுற, நான் உன்னை என்ன பண்ணேன்?” என்ற பெண்மணியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
“பவானி… நீங்க என்னை ஏதும் பண்ணல, ஆனா எனக்கு நீங்க யாரும் வேண்டாம், என்னை இந்த ஊருல பார்த்தேன்னு தயவு செய்து யாரிடமும் சொல்லிடாதீங்க” என்ற வைதேகி தன் கைகளைக் கூப்பி கெஞ்சுதலாகச் சொன்னவள், “தீரா வாங்க நம்ம போகலாம்” என்று ரணதீரனை கையைப் பிடித்து அழைத்ததும் அவனும் ஜீப்பில் ஏறி அமர்ந்தவன்,”யாரு இவங்க” என்று கேட்டான்.
“அவங்க யாரா இருந்தா உங்களுக்கு என்ன! நீங்க வாங்க நம்ம இங்க இருந்து போகலாம்” என்று வைதேகி பதற்றத்துடன் சொன்னதும், ரணதீரனும் அந்தப் பெண்மணியைச் சந்தேகமாகப் பார்த்தப்படியே வேகமாகக் கோவிலிலிருந்து தன் வீட்டை நோக்கி வண்டியை விரட்டினான்.
Advertisement
வைதேகி தன்னை பார்த்துப் பயத்துடன் சென்றதைக் கண்டு பவானி என்கிற நபர் வேதனையோடு அங்கிருந்து சென்றதை கோவில் வாசலில் நின்று இருந்த நபர் கைபேசி வாயிலாக யாரிடமோ தெரியப்படுத்தினான்.
Advertisement
ரணதீரன் வைதேகியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது.
மழை பொழிந்தால் என்ன! புயல் வீசினால் என்ன! இங்கே இருந்து நாம் தப்பித்தால் போதும் என்று நினைத்த வைதேகியின் கண்களில் கலவரம் கூடி போனது.
பதற்றத்துடன் தன் அருகே அமர்ந்து இருக்கும் பெண்ணவளை கண்டு,
“என்னாச்சு எதாவது பிரச்சனையா?” என்று ரணதீரன் அவனாக முன் வந்து கேட்டதும், “எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நான் உங்க வீட்டுல இருக்குறத தெரிஞ்சிகிட்டு எங்க குடும்பத்துல இருக்குற யாராவது உங்ககிட்ட வந்து பிரச்சனை பண்ணா நான் என்ன பண்ணுறது” என்று பயத்துடன் கேட்ட வைதேகி ரணதீரனின் இடது கரத்தை இறுக்கமாகப் பற்றிகொண்டவளை புரியாமல் பார்த்தான் ரணதீரன்.
Advertisement
இதே கேள்வியை அவள் நேற்றைய தினம் கேட்டு இருந்தால் கூட அவனின் பதில் வேற விதமாகத் தான் இருந்து இருக்கும், ஏன்? கோவிலில் பார்த்த அந்த நபரிடமே வைதேகியை அவன் அனுப்பி வைத்து இருந்தாலும் கூட ஆச்சிரியப்படுவதற்கு இல்லை, ஆனால் வைதேகி எப்போது அவள் மூச்சை கொடுத்துத் தன் உயிரைக் காப்பாற்றினாளோ அந்தக் கணமே ரணதீரன் மனதில் வைதேகி மீது நல்ல அபிப்ராயம் துளிர் விட ஆரம்பித்தது.
தன் உயிரைக் காப்பாற்றிய வைதேகிக்கு எதாவது சன்மானம் தர வேண்டும் என்று நினைத்தவனுக்கு அவளை அவள் ஆசைப்படி கனடாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் தோன்றியது.
“இங்க பாரு… இந்த நொடிவரை நீ யாரு? உனக்கு என்ன பிரச்சனை? நீ ஏன் உன் வீட்டை விட்டு வெளிய வந்த? இப்படி எந்தக் கேள்விகளுக்கு உண்டான பதிலையும் நான் தெரிஞ்சிக்க விருப்பபடல, ஆனா எப்போ நீ நம்ம நண்பர்களா இருக்கலாம்னு சொன்னியோ அப்போவே உனக்கு என்ன பிரச்சனையா இருந்தாலும் அதைச் சரி பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்குனு நினைக்கிறேன், சொல்லு உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் அந்த நபரைப் பார்த்து அப்படி பயப்புடுற?” என்று ரணதீரன் கேட்டதும் வைதேகி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“இப்படி அழுதா என்ன அர்த்தம்!? என்ன பிரச்சனை உனக்கு?” என்று மீண்டும் ரணதீரன் பொறுமையாகக் கேட்க, தன் புறங்கையால் அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட வைதேகிக்கு தன் பிரச்சனையை எப்படி சொல்வது என்று தயக்கமாக இருந்தது.
பகலில் கூட இருள் சூழ்ந்த மேகத்தில் வானிலிருந்து மழை துளிகள் அதிகமாகப் பொழிந்துக் கொண்டு இருக்க, ஊட்டியின் மலை பிரேதேசத்தில் ரணதீரனின் ஜீப் மேட்டின் மேல் ஏறும் சமயத்தில் அவன் ஜீப்பின் முன் கண்ணாடி வழியே பெரிய காரில் நான்கு ஐந்து நபர்கள் கையில் கத்தி அரிவாளுடன் வருவதை ரணதீரன் பார்த்தான்.
“நம்ம பின்னாடி ஒரு வண்டியில ஐந்து ஆறு பேர் யாரையோ துரத்திட்டு போறாங்களே, என்ன எதாவது சண்டையா இருக்குமோ” என்று ரணதீரன் கேட்டதும், வைதேகி தலையைத் திருப்பிப் பார்த்தவளின் கண்களில் பயத்தில் அகலமாக விரிந்து,”அவங்க ஒன்னும் யாரையோ துரத்துகிட்டு போகல, என்னைத் தான் துரத்திகிட்டு வராங்க” என்று பதற்றத்துடன் சொன்னாள்.
“என்ன உன்னைத் துரத்துறாங்களா!? ஏய் யாரு நீ… உன்னை ஏன் அடியாட்கள் துரத்திகிட்டு வரணும்” என்று ரணதீரன் புரியாமல் கேட்டதும், சும்மா என்கிட்ட பேசிக்கிட்டே இல்லாம வேகாம ஜீப்பை விரட்டுங்க… இப்போ நம்ப மட்டும் அவங்க கிட்ட மாட்டனா உங்க கழுத்தை அறுத்துப் போட்டுட்டு என்னை அவங்க கூட அழைச்சிகிட்டு போயிடுவாங்க” என்று வைதேகி சொன்னதும், “என்ன? என் கழுத்தை அறுத்துப் போட்டுடுவாங்களா?” என்ற ரணதீரன் சட்டென்று வண்டியைப் பிரேக் பிடித்து நிறுத்திய வேகத்தில் முன் டயர் சேற்றில் இறங்கி வண்டி அதே இடத்தில் நகராமல் சிக்கிக் கொண்டது.
“ஐயையோ என்னங்க இது! சுத்த வேஸ்ட்ங்க நீங்க, உங்களுக்கு வண்டியே ஓட்டத் தெரியாதா? எப்போ பாரு இப்படி மேடு பள்ளத்துல வண்டியை இறக்குறதே உங்க வேலையா போச்சு, அங்க பாருங்க என் மாமா ஆளுங்க நம்மள துரத்திட்டு வராங்க வாங்க இங்க இருந்து தப்பித்து ஓடலாம்” என்ற வைதேகி வேகமாக ஜீப்பிலிருந்து இறங்கியவள் கொட்டும் மழையில் கால் போன போக்கில் ஓடத் தொடங்கினாள்.
“ஏய் குட்டி சாத்தான்… எங்க போற நீ? அது காட்டு பகுதி, அங்க காட்டு எருமை எல்லாம் இருக்கும்” என்று ரணதீரன் கத்தி சொன்னதும், போன வேகத்தில் திரும்பி வந்தவள்,” ஐயோ… நம்மள துரத்திகிட்டு வர ஜந்துகளை விடக் காட்டு விலங்கு எவ்வளவோ மேலானது வாங்க போகலாம்” என்ற வைதேகி ரணதீரனின் கையைப் பிடித்துக் காட்டுக்குள் ஓடத் தொடங்கினாள்.
பணி மூட்டத்தை மழை துளிகள் கலைத்து விட, ரணதீரனின் ஜீப்பை துரத்திக்கொண்டு வந்த பெரிய காரிலிருந்து இறங்கிய ஐந்து அடியாட்களும் காட்டுக்குள் இறங்கி வைதேகியை தேட ஆரம்பித்தார்கள்.
கொட்டும் பேய் மழையில் அடியாட்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் வைதேகியை தேடி அலைய, அவளோ ரணதீரனின் கரங்களைப் பிடித்துக்கொண்டு மூச்சு வாங்க காட்டுக்குள் ஓடினாள்.
மழைக்காற்று அந்தக் காட்டு பகுதியை ஆட்கொண்டு இருக்க,”அடியே…இப்போ ஏன் நீ இப்படி ஓடிக்கிட்டு இருக்க, அவங்களுக்கு என்ன தான் வேணுமாம்” என்று ரணதீரன் மூச்சி வாங்கியப்படி கேட்டவன் மேற்கொண்டு அவளை ஓட விடாமல் அவள் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான்.
“அவங்களுக்கு நான் தான் வேணும். நம்ம கோவில்ல பார்த்தோமே ஒரு லேடி, அவங்க தான் என் மாமன் மகன் பவானி” என்று வைதேகி சொல்ல, “என்ன மாமன் மகனா?ஆனா அவங்க பார்க்கப் பொண்ணு மாதிரி இருக்காங்களே!? ” என்ற ரணதீரனின் கேள்விக்கு
“அவரு பிறப்பால் ஆண், ஆனா அவரு இப்போ திருநங்கையா மாறிட்டாரு, அவருக்குத் தான் என்னைக் கல்யாணம்” என்று வைதேகி அவளைப் பற்றிச் சொல்லும் முன்னே
“டேய் இதோ சித்ரா அம்மா இங்க இருக்காங்க டா” என்ற ஒருவனின் குரலில், “ஐயோ வாங்க தீரா… அவங்க நம்மள பார்த்துட்டாங்க வாங்க ஓடிடலாம்” என்றவள் வேகமாகக் காட்டுக்குள் ஓடியவளை ஒருவன் துரத்திக்கொண்டு ஓட, அருகே இருந்த பெரிய மூங்கிலை எடுத்து அந்த நபரின் ஓங்கி அடித்தான் ரணதீரன்.
இயல்பாகவே மூர்க்க குணம் கொண்ட ரணதீரன் அவன் பங்களாவில் இருந்தப்படியே உடற்பயிற்சி மேற்கொண்டு சில தற்காப்பு கலையையும் அறிந்து இருந்தவனுக்கு வைதேகியை துரத்திக்கொண்டு வந்த ஐந்து நபர்களை அடித்துத் தும்சம் பண்ணுவது பெரிய விஷயமாக இல்லாத காரணத்தால் இரண்டே அடியில் ஐந்து பேரையும் அடித்து அங்கிருந்து ஓடவிட்டு இருந்தான்.
“சார் சார் அடிக்காதிங்க” என்று ஐந்து பேரும் உயிருக்குப் பயந்து அங்கிருந்து ஓடியவர்களை பார்த்துத் தன் முகத்தில் வடிந்துக்கொண்டு இருந்த மழை நீரை துடைத்துக்கொண்டவன், “ஏய்… குட்டி சத்தான் எங்க இருக்க நீ, அவங்க எல்லாம் ஓடிட்டாங்க, நீ வா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று ரணதீரன் வைதேகியை கத்தி அழைக்க, எதிர்முனையிலிருந்து எந்தப் பதிலும் வராமல் போனது.
“என்ன இவ… ஒரு வேள ஓடியப்படியே கனடாவுக்கு போயிட்டாளா” என்று தனக்குள் பேசிக்கொண்டு வைதேகியை தேடி ரணதீரனும் மழையில் நனைந்த வண்ணமாகக் காட்டுக்குள் நடந்தவன் காதுக்கு, “தீரா… தீரா ஹெல்ப் மீ… ” என்ற வைதேகியின் குரல் அவன் காதில் கேட்டு, குரல் கேட்ட திசையை நோக்கி வேகமாக நடந்தான்.
“வைதேகி எங்க இருக்க நீ? “என்று ரணதீரன் கத்தி கேட்டதும், தீரா….” என்று தூரத்தில் ஒலித்த குரலை நோக்கி வேகமாக ரணதீரன் ஓடியவன் காதுக்குப் பள்ளத்தாக்கிலிருந்து வைதேகியின் குரல் கேட்டு அவன் எட்டி பார்க்க, அங்கே மரத்தின் கிளையில் வைதேகி வாழ்வா சாவா என்ற நிலைமையில் தன் மேல் சட்டையின் நுனி பிடிமானத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தவளை பார்த்து ரணதீரனுக்கே ஒரு நொடி தூக்கி வாரிப்போட்டது.
“தீரா ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க… ஓடி வந்த வேகத்துல நான் பள்ளத்துல விழுந்துட்டேன், ப்ளீஸ் தீரா என்னைக் காப்பாத்துங்க.பழசை எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என்னைச் சாக விட்டுடாதீங்க ப்ளீஸ் தீரா என்னைக் காப்பாத்துங்க” என்று கண்களில் கண்ணீருடன் வைதேகி கதறி அழும் காட்சியைப் பார்த்த ரணதீரன்,
“அழாத இரு இரு நான் வரேன்.இரு பயப்படாத” என்று வைதேகிக்கு தைரியம் சொன்னவன் கொட்டும் மழையில் தேடி பிடித்துப் பெரிய மூங்கிலின் உதவியுடன் பள்ளத்தாக்கில் தொங்கிக்கொண்டு இருந்த வைதேகியை கலியைக் கொடுத்துக் காப்பாத்தியதும், பள்ளத்திலிருந்து மேல வந்தவளின் மேலாடை முழுவதுமாகக் கிழிந்து இருந்தது.
வைதேகியை அந்த நிலைமையில் பார்த்த ரணதீரன் சட்டென்று அவன்மேல் சட்டையைக் கழட்டி அவள் முன் நீட்டியவனை திடீரெனப் பயத்தில் அவன் கழுத்தை கட்டி அணைத்துக் கொண்டவள்
“தேங்க்ஸ் தீரா… நீங்க மட்டும் காப்பாத்தலைனா இந்நேரம் நான் உயிரோடவே இருந்து இருக்க மாட்டேன், நான் ரொம்ப பயந்துட்டேன்” என்று கண்கள் கலங்கி தேம்பி அழுதவளின் ஈர தேகம் முழுதும் ரணதீரன் மேலே படர்ந்து இருக்க, சில நொடிகள் தன்னை மறந்து அவனைக் கட்டி அணைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,
அவனுடைய கரடுமுரடான தேக அரவணைப்பில், முதன்முறையாக வைதேகியின் மனதில்
அவன்மீது புதிய உணர்வு பிறந்தது.
அது பயமல்ல… வெறும் நன்றி அல்ல…
அது தான் அவள் இதயத்தில் விழுந்த முதல் காதல் விதை என்று இருவரும் முழுதாக உணரும் முன்னே, “பயப்புடாத அதான் நான் வந்துட்டேனே, சரி என் சட்டையைப் போட்டுக்கிட்டு வா, ஜீப்ல தான் என் போன் இருக்கு, மாமாவுக்குக் கால் பண்ணி வேற காரை எடுத்துட்டு வரச் சொல்லாம்” என்ற ரணதீரன் அந்த நிலைமையிலும் கண்ணியம் தவறாமல் நடந்துக்கொண்டவனை நினைத்து வைதேகிக்கு அவன்மீது அதித நம்பிக்கை ஏற்பட்டது.
“சட்டை போட்டாச்சா? போகலாமா?” என்று ரணதீரன் வேறு பக்கமாகத் திரும்பி நின்றப்படி கேட்டதும், அவனைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே அவன் கருப்பு நிற சட்டையை அணிந்துக்கொண்ட வைதேகியின் காலில் ரத்தம் கசிந்துக்கொண்டு இருந்தது.
ஒரு நொடியில் மரண வாசலை மிதித்து மீண்டு வந்த வைதேகிக்கு கைக்கால்களில் ஏற்பட்ட காயம் பெரிதாகத் தெரியவில்லை எனினும் அவளால் ஒரு அடி கூடக் காலை முன்னே எடுத்து வைக்க முடியாத நிலையில், “ஆ…. அம்மா…” என்று வலியால் அலறியவளை நோக்கி வேகமாக அருகே வந்தான் ரணதீரன்.
வைதேகியின் காலில் உள்ள காயத்தைப் பார்த்து, “ஐயோ என்ன இது இவ்ளோ ரத்தம் வருது!?” என்று பதறியவன் வைதேகியின் கிழிந்த மேலாடையயை மேலும் கிழித்து அவள் காயத்துக்குக் கட்டை கட்டியவனின் தோள்களை வலியால் இறுக பற்றிக்கொண்டாள் வைதேகி.
மழை நின்று குளிர்ந்த காற்று வீச… காட்டில் உள்ள மரங்களின் இலைகளிலிருந்து துளி துளியாய் மீதம் ஒட்டி இருந்த மழை நீர் தவழ்ந்து வந்து பூமியை முத்தமிட,
“கால் ரொம்ப வலிக்குதா… இந்த வலியோட எப்படி நீ ஜீப் வரைக்கும் நடந்து வர முடியும்?” என்று கேட்டான் ரணதீரன்.
“பரவாயில்ல தீரா… நான் பொறுமையா நடந்து வரேன். எனக்கு ஒரு குச்சி மட்டும் ரெடி பண்ணி தாங்க” என்று வைதேகி கேட்டதும், “நா… நான் வேணும்னா உன்னை ஜீப் வரைக்கும் தூக்கிட்டு போகவா?” என்று ரணதீரன் தயக்கத்துடன் கேட்டான்.
பார்த்த நொடியிலிருந்து தன்னை வெறுத்து பேசிய ரணதீரன் இன்று அக்கறையுடன் அவளிடம் பேசுவதை ரசித்த வைதேகி சற்றும் தாமதிக்காமல் தன் இரண்டு கரங்களை நீட்டித் தந்தையிடம் தன்னை தூக்கும்ப்படி அன்பாகக் கட்டளையிடும் பெண் குழந்தையைப் போல, “என்னைத் தூக்கிட்டு போங்க” என்று அதிகாரமாக இல்லாமல் ஆசையாகக் கேட்டாள் வைதேகி.
இதுவரை எந்தப் பெண்ணின் சுவரிசத்தையும் தீண்டாத ரணதீரன் அவன் வாழ் நாளில் முதல் முறையாக வைதேகியை தன் வலிய கரங்களில் தூக்கியவனின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்ட வைதேகியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன் காதில்
“நான் தான் சொன்னேனே ராணா… உனக்காகப் பிறந்த பொண்ணு வைதேகி தான்னு நான் தான் சொன்னேனே!” என்ற குரல் அவன் செவிகளில் மட்டும் ஒலித்த தருணம், வைதேகியை மேலும் தன் வசம் இறுக்கி அணைத்துக் கொண்டு ஜீப்பை நோக்கி நடந்தவனின் அணைப்பில் வைதேகியும் பாதுக்கப்பாக இருப்பதை போல உணர்ந்தாள்.
ஊட்டியின் மையழகில், இருள் சூழ்ந்த மேகத்தில், மழை பொழிந்து ஓய்ந்த காட்டில், வைதேகியின் இதயமும் ரணதீரனின் இதயமும் முதன்முறையாக மௌனமாகப் பேசிக்கொண்ட நிலையில் சேறும் சகதியுமாக இருக்கும் காட்டில் அடிமேல் அடி வைத்துப் பொறுமையாக ஜீப்பை நோக்கி நடந்தவன் கரங்களில் கைக்கால் முளைத்த காற்றை போலத் தவழ்ந்துக்கொண்டு இருந்தாள் வைதேகி.
“நான் ரொம்ப வெயிட்டா இருக்கேனா?” என்று வைதேகி கேட்க, “என்ன ஒரு ஐம்பது கிலோ இருப்பியா?” என்ற ரணதீரனை பார்த்து, “இல்ல! இன்னும் ஐந்து கிலோ அதிகமா இருப்பேன்” என்றவள் மேலும் விழாமல் இருக்க அவன் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
தன் மேல் சட்டையை வைதேகிக்கு கழட்டி கொடுத்தபின், சிலந்தி வலைபோலப் பின்னப்பட்ட உள் பணியுடன் ரணதீரன் காட்டுப்பகுதியில் குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி வைதேகியை தூக்கிச் செல்பவனுக்கு உடலில் உஷ்ணம் குறைந்து குளிர் தொற்றிக் கொண்டது.
“தீரா…உங்களுக்குக் குளிர போகுது. நான் வேணும்னா ஏதாவது குச்சியைப் பிடிச்சுக்கிட்டு நடந்து வரவா! நீங்க வேகமா வண்டிகிட்ட போயி மாறன் அண்ணனுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கள்” என்று வைதேகி சொல்ல,
“ஏன்? உன்ன நான் தூக்கிட்டு போறது உனக்குக் கஷ்டமா இருக்கா?” என்று கோவமாகக் கேட்டான் ரணதீரன் “
“எப்பா…உங்ககிட்ட ஒரு வார்த்தைக்கூட இயல்பா பேசவே முடியல, எத பேசினாலும் அதைக் குதர்க்கமா எடுத்துக்கறீங்க, சரியான முசூடு நீங்க” என்று உதட்டைச் சுழித்த வைதேகி மேலும் வாட்டமாக அவன் கழுத்தை பற்றிக் கொண்டவளை பார்த்து அவன் இதழ்களே அறியா வண்ணம் சிறு குறு நகையை உதிர்த்தான் ரணதீரன்.
ஒரு வழியாகக் காட்டுப்பகுதியிலிருந்து தன் ஜீப்பின் அருகே வந்த ரணதீரன் பொறுமையாக வைதேகியை வண்டியின் முன் இருக்கையில் அமர வைத்தவன்,
“சட்டையை ஒழுங்கா போட்டுக்கிட்டு உட்காரு” என்று சொன்னதும், சட்டையின் மேல் பட்டனை சரியாக அணிந்து கொண்டவள் கால் வலியைக் கூட மறந்து ரணதீரனின் நட்பு கலந்த அரவணைப்பை ரசிக்கத் தொடங்கி இருந்தாள்.
ஜிப்பில் இருந்த தன் கைபேசியை ரணதீரன் தேடிக் கொண்டிருந்த சமயம் ரணதீரனின் வண்டியின் பின்னே மாறனின் கார் வந்து நின்றது.
“மச்சான் என்ன இது! நான் அப்பவே நினைச்சேன், வண்டி பிரேக் டவுன் ஆகிடுச்சா?கொட்ற மழையில நீங்க ரெண்டு பேரும் எங்க மாட்டிக்கிட்டீங்கன்னு தெரியாம அத்தை புலம்பிக்கிட்டே இருந்தாங்க”என்றபடி மாறன் ரணதீரனின் அருகே வர, காலில் கட்டுடன் ரணதீரனின் சட்டையை அணிந்தப்படி அமர்ந்திருந்த வைதேகியை பார்த்த மாறனுக்கு ஏதும் புரியாமல் போனது.
வைதேகியை அந்த நிலைமையில் பார்த்த மாறன்,”ஐயோ மச்சான் வைதேகிக்கு என்ன ஆச்சு!?” என்று பதறியதும், “மாமா… வீட்ல போய்ப் பேசிக்கலாம்.என் ஜீப் இங்கேயே இருக்கட்டும். வேலு கிட்ட சொல்லி வண்டியை எடுக்கச் சொல்லலாம். வாங்க முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்” என்ற ரணதீரன் சற்றும் தாமதிக்காமல் வைதேகியை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு மாறனின் காரை நோக்கி நடந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மாறன்.
“என்ன மச்சான் நீ! சட்டுனு வைதேகியை தூக்கிட்ட!?” என்று மாறன் கேட்க,
“இப்ப என்ன? நான் உங்க தங்கச்சியை தூக்கி மலையிலிருந்து கீழ உருட்டியா விட்டுட்டேன், நம்ம வீட்டுக்குத் தானே அழைச்சிட்டு வரேன். வாங்க போகலாம்” என்ற ரணதீரன் சாந்தமான முகத்துடன் வைதேகியை மாறன் காரின் பின் இருக்கையில் அமர வைத்தவன், தானும் அவள் அருகே அமர்ந்து அவளுக்குச் சீட் பெல்ட்டை அணிவித்து
“இப்போ நீ ஓகே தானே? ” என்று கேட்டவனை பார்த்து,
“ஓகே…”என்று தயக்கத்துடன் வைதேகி பதில் சொல்ல,
“ஓ… அப்போ எனக்கும் ஓகே ஓகே தான்…” என்று மாறனும் சிரித்தபடியே சொன்னவன் வண்டியைத் தங்களின் பங்களாவை நோக்கி விரட்டினான்.
error: Content is protected !!