Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 1 2

” ப்பா., முட்டை தோசை போடவா.,”  என்றபடியே அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன் டைனிங் டேபிளை கண் காட்ட தமயந்தி சென்று அமர்ந்தார். மூவருக்கும் ஊற்றி எடுத்தவன் ஹாட் பாக்ஸில் வைத்து அனைத்தையும் கொண்டு வந்தான். தாயின் அருகே மாத்திரையையும் சேர்த்து எடுத்து வைத்து விட்டு, உண்ண ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியில் கழிய,

” ப்பா., நாளைக்கு சேம்பர்ல பன்னெண்டு மணிக்கு மீட்டிங் இருக்கு. ராஜா குரூப்ஸ் கம்பெனியும் இந்த வருஷம் கலந்துக்கிறாங்க. என்னோட சீப் அங்க வரணும்னு சொல்லி இருக்காங்க. கரெக்டா வந்துருங்க. ” பேச்சு தந்தையிடம் இருக்க பார்வை தாயிடம் இருந்தது. மகனை ஆழ்ந்து  பார்த்தவர் தலையசைக்க எழுந்து சென்று விட்டான்.



Advertisement

” மாலாக்கா..,  ஐ லவ் யூ..,” அன்னையை விட அக்காவிடம் பாசமும், நேசமும் அதிகம் இளாவிற்கு. இரவில் தூங்கும் முன் அனைத்தையும் ஒப்பித்து விட்டு தான் படுப்பது வழக்கம். வீடியோ காலில் இணைப்பில் வந்த மச்சானிடம்.,

Advertisement

“வந்துட்டான்.., உன் பொண்டாட்டிகிட்ட சொல்ல வேண்டியது எல்லாம் என் பொண்டாட்டிகிட்ட சொல்றியேடா.”   வம்பு வளர்க்க ஆரம்பித்து மனைவியின் முறைப்பில் கொஞ்சம் அடங்கி அமர்ந்தான் முரளி.

Advertisement

” சொல்லுடா.., சாப்பிட்டியா., ” அப்போது தான் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்து முடித்து, இவள் முரளியோடு சாப்பிட அமர்ந்திருந்தாள்.

Advertisement

” ம்ம்ம்ம்., முடிச்சாச்சு. பசங்க எங்க..,? “

” இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் எழுதணும். இப்ப தான் ரெண்டு அடிபோட்டு, ரூம்மில் ஒழுங்கா உட்கார்ந்து எழுத சொல்லிருக்கேன். அப்புறம் அவங்கட்ட பேசலாம்.,” என்றவளிடம் காலையில் அலுவலகத்தில்  நடந்த அனைத்து விசயத்தினையும் பகிர்ந்து கொண்டான்.

பின் மாலா மெதுவே ” அப்பா எதுவும் சொன்னாங்களாடா? ..,” என்றாள் தயங்கி.

” ப்ச்.. இல்லை. ஆனால் அம்மா ஏதோ சொல்ல சொல்லி அப்பாட்ட சைகை காட்டிட்டு இருந்தாங்க. அவரு மாட்டேன்னு தலையாட்டுனாரு. என்னவாம்…”  என்றவனிடம்

” ஊமை பாஷையில செய்தி வாசிச்ச மாதிரியா மச்சான்..,” என முரளி கூற சட்டென அவன் தலையில்  தட்டினாள் மாலா..

” பெத்த பையன்ட பேசாம சைகை காட்டுனவங்களை விட்ருங்க. இங்கே மட்டும் வெட்டு குத்து தான்..” மெதுவே முனங்க தான் முடிந்தது அவனால்.

” உன் கல்யாணம் விஷயம் பேச தான்…” ஆரம்பித்தவள் முடிக்கும் முன்பே.

சட்டென்று, ” அப்போ நான் ஓடி போய் தாலி கட்டுனவளை என்ன செய்ய போறிங்க?  ” என்றான் இளா.

” டேய்!.. என அதட்டியவள் ” அதையே புடிச்சி தொங்கிட்டு இருப்பியா, இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லுவ .., விடுடா…நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா,  நடக்குறது கூட நடக்காம போகும்டா.

” மாலா அழுத்தமாய் அவனை பார்த்தப்படி கூற.

” எனக்கு தோணினா பண்ணுவேன். யாரும் அதை பத்தி இனி பேச வேண்டாம். தட்ஸ் இட். ” அவனும் அழுத்தமாய் அவளை பார்த்தப்படியே  கூறி முடித்தான்.

சற்று நொடி ஒன்றும் பேசாமல் அமைதியில் கழிய தம்பியை முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் மாலா.

” நீ உள்ளே போய் தம்பியை பாருடா… ” அவளை உள்ளே அனுப்பி விட்டு, அவனை சகஜமாக்கும் பொருட்டு,

 ” அப்புறம் சொல்லு மச்சான் இன்னைக்கு வேற என்ன பண்ண? “

” வேற..,” என சற்று யோசித்தவன் ” ஒரு பொண்ணை பார்த்தேன் மாம்ஸ். ” என்க.

” ஐஐ..  பொண்ணா.. எப்படிடா இருந்தா? ” ஆர்வமாய் கேக்க

“ரொம்ப கோபமா இருந்தா.. ” என்றான் நக்கலாய்.

” டேய் பொண்ணு அழகா இருக்காளா, இல்லையான்னு சொல்லுடா. இது என்னடா பதில், போயும் போயும் உன்கிட்ட போய் கேட்டேன் பாரு, என்னை சொல்லனும்.”  கண்ணை சுருக்கி முறைக்க.

” இல்லை மாம்ஸ். நிஜமா அவ எப்படி கத்துனா தெரியுமா? ” காலையில் பார்த்தவற்றை சுருக்கமாய் சொல்லி முடிக்க.

” எது கையை வெட்டி கையில கொடுப்பாளா? பயபுள்ள உன்னை விட கோபக்காரியாய் இருக்கா., எப்புடிடா ” என இளாவை ஆச்சரியமா பார்த்தபடி கூறியவன் ” அவளை நீ பார்த்தியா மச்சான். நல்லா இருக்காளா ”  என்க.

உதடு பிதுக்கி இல்லையென தலை அசைக்க  ” பிகர பார்த்து கணக்கு பண்ணி பண்ணி உன் மண்டை காலியா போச்சு. அதான் பிகர பார்த்தா கூட உனக்கு கணக்கு பண்ண தெரியல ” என்று இளாவை பார்த்து நையாண்டி செய்து சிரிக்க ஆரம்பித்தவன், அடுப்படியில் இருந்து முறைத்தபடி வந்த மாலாவை கண்டு ஜெர்க் ஆகி அமைதி ஆனான்.

” நம்ம வீட்டுக்கு இன்னொரு கோபக்காரி வேணாம் மாப்பிள்ளை. ரிஜெக்ட் பண்ணிருவோம். வேற பொண்ணை பாரு..,” என்க இதழ் விரித்து சிரிக்க ஆரம்பித்தான்.

” நிஜமாடா.. நல்லா ஜாலியா பேசி சிரிக்கிற பொண்ணா பாரு. சிடுமூஞ்சி எல்லாம் வேணாம்…,”

” நான் உங்கட்ட பொண்ணு பார்க்க போறேன்னு எப்போ சொன்னேன்..,” என்றான் சிரிப்பை நிறுத்தி.

“கொஞ்சம் யோசிடா இன்னும் எத்தனை நாளைக்கு கோபத்தை இழுத்து புடிச்சிட்டு இருப்ப.”

” நான் யார்ட்ட கோபப்பட்டேன்.”

” பேசாம இருந்தாலும் கோபம் தான். எல்லாரும் கோபத்துல வார்த்தையை விடுவாங்க, நீயும் உன் அம்மாவும் பேசாம கொல்லுவீங்க. போங்கடா,  நல்ல வேலை என் பொண்டாட்டி உங்க அப்பா மாறி அமைஞ்சா, இல்லைனா என் பாடு திண்டாட்டம் தான்.”

அவன் மனதில் கணரும் நெருப்பினை யார் அணைப்பாரோ? யார் அறிவார்? எதுவும் பேசாமல் அமைதியாக தலையாட்டி இமை மூடியவனை பார்த்து முரளி மனதில் இவன் மாறுவான் என்ற நம்பிக்கை தோன்றியது.

” மாமா……!” என கத்தியப்படியே மூச்சு வாங்க ஓடி வந்தனர் இருவரும். ” இன்னைக்கு நீ வல்ல., ” மழலை மாறா குரலில் மிலற்ற

” உன்னை மாதிரியே பாம்பு காதுடா.. கதவை பூட்டி வச்சி தான், எழுத வச்சேன். அதிலேயே கேட்டு ஓடி வந்துட்டாங்க.. ” என மாலா குற்றம் சுமத்த.

பதிலுக்கு ஹர்ஷித் ” மாமா, இன்னைக்கும் அதே தோச தான். பேட் மம்மி ” என்றான் தாயை முறைத்து கொண்டு.

” ம்ம்க்கும் .. டெய்லி தோசை தான்.. வேற வழி.., நீ வந்தா தான் எங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்.,  ”  முரளியும் சேர்ந்து அவளை வம்புக்கு இழுக்க.

இருந்த கடுப்பில் ” நாளைக்கு அதுவும் இல்லை. போங்கடா.. வெளியே போய் கொட்டிக்கோங்க… அப்போ தான் தெரியும் என் அருமை ..,  ” என்ற தாயின் வார்த்தையை சட்டை கூட செய்யாமல் ,

“மாமா நேத்து வருவியா.., ”  என்றான் ரோஹித்.

” அடேய் அது நாளைக்குடா.. இவனோட…” மாலா அழுத்து கொள்ள இருவரும் இணைந்து இடுப்பில் கையை வைத்து கொண்டு தாயை திரும்பி பார்த்தனர். ஹோம் ஒர்க் என்று விளையாட கூட விடாமல் இத்தனை நேரம் படுத்தி எடுத்து விட்டு, இப்போதும் கத்த, மாமன் இருக்கும் தைரியத்தில் தான் அவளை முறைத்தும் பார்த்தனர்.

” உன் மாமன் நாளைக்கும் வர மாட்டான். என்கிட்ட தான் இருக்கனும். ஒழுங்கா இருங்க., ” ஒற்றை விரலை நீட்டி இருவரையும் அதட்ட,

அதுவரை அமைதியாக இருந்தவர்கள் அவன் வர மாட்டான் என்பதை அறிந்ததும் முகம் சுணங்கி, தேம்பி கொண்டே, வீடியோவில் தெரிந்த அவன் முகம் தொட்டு பார்த்து ” மாமா… வல்லையா..நீ.. ” என அழுகை குரலில் ஆரம்பிக்க

” அக்கா.. சும்மாயிருக்க மாட்டியா. சேம்ப் மாமாக்கு நாளைக்கும் வேலை இருக்குடா.. நெஸ்ட் வீக் புல்லா பிஸி. கண்டிப்பா அடுத்த வாரம் வரேன். செல்லம்ல அது வரை சமத்தா அழுகாம இருக்கனும் குட் பாய் தானே நீங்க… ” மேலும் பலவற்றையும் பேசி, செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்தி தான் உறங்க அனுப்பி வைத்தான்.

இரட்டை குழந்தைகளோடு பணியும் சேர்ந்து மாலாவை ஆட்டுவிக்க, தமயந்தி உடன் வந்திருக்க இயலாத சூழ்நிலையில், மாலாவின்  மாமியாரோடு இணைந்து இளா தான் அவர்களை கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டான். இங்கேயே தங்கி படித்து, மீதி நேரத்தில் தனக்கும் தன் குழந்தையையும் கவனித்து, தாய் மாமானாய் மட்டும் அல்லாது, தாயாய் கூட பலநேரம் மாறி நின்றிருக்கிறான்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்கட்கு ஊட்டி விடுவது வரை இளா தான். ஆதலால் தான் பிள்ளைகள் கூட தாயை விட மாமனை தான் அதிகம் தேடுவது. அவர்களது மூன்று வயது வரை இங்கேயே இருந்தவன் தற்போது தான் தாயோடு சென்று சேர்ந்துள்ளான் சற்று பிணக்கு குறைந்து. அவன் பாசமும், நேசமும், அன்பும், பண்பும் கொண்ட பிடிவாத குணம் கொண்டவன் என்பதை இனி வரும் காலங்களில் இன்னும் நீங்கள் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!