Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 4

꧁☆☬  லயம் – 4 ☬☆꧂

” சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சசிவர்ணம் சதுர்புஜம்



Advertisement

பிரஸந்ந வதனம் த்யாயேத்

ஸர்வ விக்னோப சாந்தயே…”

Advertisement

ஸ்பீக்கரில் முழங்கிய மந்திரத்தோடு இணைந்து பாடியபடி கொலுசு சப்திக்க மெல்ல அறைக்குள் வந்தாள். தலையில் துண்டோடு, தழைய தழைய சேலை கட்டி,  பூஜை அறையை ஒழுங்குபடுத்தி, சுத்தம் செய்து புத்தம் புதிதாய் அன்று மலர்ந்த மல்லிகை மொட்டுக்களை அடுக்கடுக்காய் அழகாய் வைத்து, தீபமேற்றி வழிபட்டு, நெற்றில் விபூதி, குங்குமமிட்டு வெளி வந்தாள்.

Advertisement

வெளியே சென்று பேப்பரையும், பால் பாக்கெட்டையும் எடுத்து கொண்டு வந்தவள், டிப்பாய் மேல் பேப்பரை வைத்து விட்டு, சமயலறைக்கு சென்றாள். சுடசுட காபி போட்டு குடித்தவள், சடுதியில் மணக்க மணக்க தக்காளி பொங்கலையும், தயிர் வெங்காயம், சட்னி அனைத்தையும் ரெடி செய்து, டைனிங் டேபிள் மேல் வைத்து விட்டு மேலே தன் அறைக்கு சென்றாள்.

Advertisement

சட்டென தலைவாரி, மெல்லிய ஒப்பனை செய்து அழகு பதுமையாய் வெளிவந்து சாப்பிட அமர்ந்தாள். ” வாசனையே இன்னைக்கு தூக்குதே, நல்லா சமைக்க கத்துகிட்ட, குட், கீப் இட் அப் ” தனக்கு தானே புகழாரம் சூட்டி கொண்டு, ஆசையாய் ஒரு வாய் அள்ளி சாப்பிட ஆரம்பிக்கும் போது அலுவலகத்தில் இருந்து போன் வர பேச்சும், உணவும் முடித்து, அடித்து பிடித்து ரெடியாகி வெளியே வந்தாள்.

பனியில் மலர்ந்திட்ட ரோஜாவின் ஒற்றை நீர் துளியாய் சிவந்த வதனத்தில் சிறு சிவப்பு பொட்டு எடுப்பாய் இருந்தது. கருப்பு சேலையில் முழுதும் வெள்ளை வர்ண பெயிண்ட்டிங் செய்யப்பட்ட காட்டன் புடவையும், கழுத்தை ஒட்டிய நெக் டிசைனிலும், முழுக்கை கரத்திலும் அதே பெயிண்ட்டிங் டிசைன் வருமாறு தைத்திருந்த பிளவுசிலும் அவளின் ரசனை மிளிர்ந்தது.

மெல்லிய வெள்ளை முத்துக்கள் கோர்க்கப்பட்ட செயின் கையிலும், கழுத்திலும் ஒட்டி உறவாட, அதற்கேற்ப சிறு முத்து ஜிமிக்கியும் என கருப்பு வெள்ளை ஓவியமாய் வெளிவந்தவளை, வழியில் கண்டோர் நின்று ரசித்து விட்டு தான் சென்றனர். இத்தனை அழகும் எவனுக்கோ என அவர்கள் விட்ட பெருமூச்சில் ஒரு மூச்சு கூட அவனிடம் இன்னும் மூச்சு காட்டவில்லை. அவளை  கடத்தி தோளில் தூக்கி செல்லும் ராஜகுமாரனை இன்னும் காணவில்லையோ? எங்குள்ளானோ?

” குட் மார்னிங் மேம்….,” என்ற குரல்களுக்கு மத்தியில் புன்னகையோடு தலையசைத்து பதில் வணக்கம் சொல்லியபடி கம்பீரமாய் நடந்து வந்து, தன் கேபினில் நுழைந்தாள் லயா. அன்று அனுப்ப வேண்டிய டெஸ்பாட்ஸ் டீடெயில்ஸ், மெட்டரியல் லிஸ்ட் அனைத்தும் பார்வையிட்டு டெஸ்பாட்ச் பிரிவிற்கு சென்றாள். பெட்டிகளில் அடுக்குவதற்கு குவித்து வைக்கபட்ட துணி வகைகளை சாம்பிளுக்காக செக் செய்தவள் திருப்தியாய் உணர்ந்து, அடுத்த சப்பிள்ளையர்க்கு அனுப்ப வேண்டியதை செக் செய்ய,  அதன் குவாலிட்டியில் வேறுபாடு இருந்தது.

“சதிஷ்..! நான் இந்த வெப்ரிக் மெட்ரியல் வேணான்னு சொல்லி இருந்தேன். இதுல எப்படி ஸ்டிச்சிங்க் முடிச்சி இங்க வந்துருக்கு. ” என முறைப்பாய் கேட்க.

“மேடம்…! அது…. வந்து ..,” தலையை சொறிந்தபடி மென்று விழுங்க.

” டெல் மீ, யார் சொல்லி இதை பண்ணீங்க? ” அவள் ஓகே செய்ததும், இந்த துணியும் பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றினாலும் அதன் ஸ்திர தன்மை மாறுபடும் என்பதாலே  அதை ஒதுக்கி இருந்தாள். இப்போது அதுவே ரெடி செய்து வந்திருக்க அத்தனை கோபம் வந்தது.

“கட்டிங் சூப்பர்வைசர் சார் தான் அப்ரூவல் பண்ணாங்க. இந்த குவாலிட்டி மெட்டெரியல் போதும்னு அவரு தான் பைனலிஸ் பண்ணாரு. ” என்றான் மெதுவே தயங்கி.

“வாட், அவரு பண்ணா நீங்க எப்படி அலோவ் பண்ணலாம். என்கிட்டயும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க., ” என சப்தம் போட.

அவரோ ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்து நின்றார். சென்ற வாரம் தான்  கை பகுதிகளை வெட்டி தர லேட் செய்து, ஸ்டிச்சிங் டிலே ஆனதில் அத்தனை பிரச்சனை ஆனது. அதற்கு சப்தம் போட்டவளை பழி  வாங்கவே அந்த சூப்பர்வைசர் இவளுக்கு தெரியாமல் மெட்ரியல் மாற்றி வைத்தது. அதையும் கண்டு கொண்டாலே என முழி பிதுங்கி நினறான்.

” இதை டெஸ்பாட்ச் பண்ண அனுப்ப வேணாம்.பெண்டிங் வைங்க. அவரை  மொத என்னை வந்து பார்க்க சொல்லுங்க..,” என கோபத்துடன் தன் கேபினுக்கு செல்ல இவனுக்கோ பகிர் என்றானது. நடந்ததில் இவன் தவறு ஒன்றுமில்லை என்பதாலே அவள் மேலும் கடிந்து கொள்ளாமல் சென்று விட்டாள். இல்லை வெளியே அனுப்பி இருப்பாள் என பயத்துடன் தான் வெளியேறினான்.

அடுத்த வாரம் ஸ்டாக் அனுப்புவதாக சம்பந்தப்பட்ட கம்பனிக்கு போன் செய்து பேசி முடிக்க.,

“மேடம்!  .,” என அழைத்தபடி உள்ளே வந்து நின்றவனை மேலும் கீழும் அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க , தன்னாலே அவன் கை நிண்டு சட்டையின் மேல் பட்டனை ஒழுங்காய் போட்டு கொண்டு, ஏற்றி இருந்த சட்டையின் கை பகுதியை ஒழுங்காய் மடித்து விட்டு அவளை பார்த்தும், ஒன்றும் கூறாமலே மௌனம் சாதித்து நின்றான்.

சரி பார்த்து கொண்டிருந்த பைலில் கையெழுத்து போட்டு முடித்து ஓரங்கட்டியவள், பேனா முனையை பிடித்தபடி, கைகளால் சுழற்றியபடி கேள்வியே கேட்காமலே முறைத்து பார்க்க, தன்னால் அவன் தலை   குனிந்து, என்ன சொல்வதென மென்று முழுங்கினான்.

” இங்க உங்க ஜாப் என்ன ” என்றாள் மிடுக்காய்.

“கட்டிங் செக்சன் சூப்பர்வைசர்., ” என்றான் தயங்கி.

” தென் மெட்ரியல் பர்ச்சேஸ்ல போய் ஏன் குளறுபடி பண்றீங்க., “

” இல்ல., அவங்க கோட் பண்ண ரேட் ரொம்ப காஸ்டிலியா இருந்தது. இந்த கம்பெனியில ரேட் கம்மி. அதான்.., “

” யாருக்கு என்ன குவாலிட்டில, என்ன ரேட்ல வாங்கணும்னு முடிவு பண்ண இங்கே நிறைய பேரு இருக்காங்க. அதுக்கு மேனஜரா  நானும் இங்கே தான் இருக்கேன்.இதில நீங்க இன்டர்வீர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க., எதாவது சஜஸ் பண்ண நினைச்சா என்கிட்டே வந்து சொல்லுங்க., நீங்களா முடிவு பண்ணி பிரச்சனை பண்ண பார்க்காதீங்க .., ” என்றவள் தொடர்ந்து அவரை பார்த்து அழுத்தமாக பேச ஆரம்பித்தாள்.

“குறுக்கு வழியில் கமிஷன் அடிச்சு பணம் சம்பாதிக்க நினைக்காதீங்க., உழைச்சு வாழ பழகுங்க., அதான் ஒட்டும்., ” என்றாள் அவரை கண்டு கொண்டவளாய்.

மேலும்  “இது செகண்ட் வார்னிங்., இன்னொரு தடவை தப்பு பண்ணா, நல்லா கேட்டுக்கோங்க தெரிஞ்சே தப்பு பண்ணா வேலையை விட்டு அனுப்பி வச்சிருவேன்., “

” சாரி மேடம்  ., புத்தி பிசகி போய் பண்ணிட்டேன்., இனி பண்ண மாட்டேன்., வேலையை விட்டு மட்டும் அனுப்பிராதிங்க..,” என்றார் மன்றாடி கேட்டு கொண்டு.

“இந்த ஸ்டாக் நிப்பாட்ட சொல்லி இருக்கேன். வேற யாராவது கேக்கும் போது கொடுக்கலாம். நெஸ்ட் வீக்குல்ல புது ஸ்டாக் ரெடி பண்ணி அவங்களுக்கு அனுப்பனும்., சீக்கிரம் ரெடி பண்ணுங்க ..,போங்க “

பல வருடம் வேலை பார்த்து கொண்டிருந்தவர் புதிதாய் சேர்க்கை சரி இல்லாமல் தவறு செய்ய துணிக, கண்டித்து அனுப்பியவள் மேலும் இது போல் ஏதேனும் செய்துள்ளாரா என கண்காணிக்க உடனே பேக்டரி உள்ளே சென்று விட்டாள்.

தலையை மறைக்கும் அளவுக்கு மலை போல் துணிகளை அள்ளி கொண்டு ஒரு பெண் அவளை கடந்து செல்ல, அவளை கை பிடித்து நிறுத்தினாள் லயா.

துணிகளை தன் கைக்கு மாற்றி கொண்டு விறுவிறுவென அந்த பெண்ணின் இடத்திற்கு செல்ல பதறிய படி அவள் பின்னே மெதுவே வந்தாள்.

அதனை வைத்து விட்டு திரும்பியவள் “உங்களை இது மாதிரி தூக்கிட்டு அலைய கூடாதுன்னு தானே செக்கிங் செக்சன்ல உட்கார்ந்து வேலை பார்க்க சொன்னேன். எதுக்கு இந்த வேலை பார்க்குறீங்க ” என்றாள் அவளை கூர்ந்து பார்த்தபடி.

” இல்லை மேடம்., இன்னைக்கு ஒரு ஆள் லீவு. அதான் நானே போயி .., ” அவள் வார்த்தையை முடிக்கும் முன்பே

” இங்கே பாருங்க., வேலை எந்தளவுக்கு முக்கியமோ, அதே மாதிரி உங்களையும் பாருங்க., எட்டு மாச வயித்து பிள்ளையோட இதை தூக்கிட்டு வரீங்க., சப்போஸ் எதாவது ஆனால் என்ன பண்ணுவீங்க., கொஞ்சம் யோசிங்க., இனிமே இடத்தை விட்டு எந்திரிச்சி அங்கே  இங்கே அலையுறத பார்த்தேன்., கூட்டிட்டு போய் என் ரூம்ல உட்கார வச்சி செக் பண்ண வைப்பேன்., போக்கா., போய் செக் பண்ணு.., ” என அதட்டல் போட்டவளை பார்த்து உள்ளம் நெகிழ தான் செய்தது பார்த்தவர்களுக்கு. தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை துச்சமாய் மதித்து பேசும் மனிதர்க்கு நடுவே அக்கா என்று அன்போடு அழைத்து, அக்கறை காட்டி பேசும் லயாவை அங்கே பலருக்கும் பிடிக்கும். அன்பும் அரவணைப்புமாய் வழி நடத்தி செல்வாள். எந்த நேரமும் யாரும் அவளை அணுகி உதவி பெறலாம். நினைத்ததை  கூறலாம்., தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னிப்பவள் தெரிந்து செய்தால், கண்டித்து தண்டனை தராமல் விட மாட்டாள். வெளியேற்றவும் அஞ்ச மாட்டாள்.

***********************************

“டேய் எருமை!” என கேட்ட குரலில் கடுப்பானவன் போனை  கட் செய்ய போக ” மவனே!  நீ மட்டும் கட் பண்ணனனு வையேன். வீட்டுல வந்து உட்கார்ந்துடுவேன். ஒழுங்கா பேசு ” என கத்திய கத்தலில் மீண்டும் காதில் வைத்து ” சொல்லுங்க சார்.., ” என்றான் பல்லை கடித்து கொண்டு.

“என் ப்ரண்ட்ட சாகடிக்க உன்னால எல்லாம்  முடியாது. நான் அவன்கிட்ட பேசிட்டே தான் இருப்பேன். ” வீம்புக்கு மல்லுக்கு நிற்க.

” டெல் மீ சார், வாட் கேன் ஐ டூ போர் யூ ” என பொறுமையை இழுத்து பிடித்து இளா பேச.

” அதுவா கேனை…., ” என நக்கலாய் ஆரம்பித்து ” அது என்னன்னா, என் ஸ்டாப் ஒருத்தங்களை  உன்னை பார்க்க உன் ஆபீஸ் அனுப்புவேன். அவங்க கேக்குற எல்லா டவுட்டும் கிளியர் பண்ணி நீ அனுப்புற, ஓகே…,”  என கூறி விட்டு,

” அப்புறம் நீ என் ஆளுன்னு அவங்களுக்கு தெரிய கூடாது. ஆடிட்டரா மட்டும் பேசு என் வென்று….”  என்றான் .

” நாயே! வந்தேன்னு வை, தூக்கி போட்டு மிதிப்பேன். எகத்தாளம் பண்ணிட்டு இருக்கியா ” மனதில் அவனை வறுத்தெடுத்து கொண்டு ” ஹ்ம்ம் ”  என்றான் அழுத்தி.

” பாசம் வைக்க.. நேசம் வைக்க… தோழன் உண்டு… வாழ வைக்க.. அவனை தவிர… உறவுகாரன் யாரும் இங்கில்ல.., ” என கட்டை குரலில் வேறு பாடி கடுப்பேற்றியவனை எண்ணி சிரிப்பு தான் வந்தது இளாவிற்கு.

” வெக்கம், மானம், சூடு, சுரணைனு எதுவுமில்ல மச்சி உன்கிட்ட எனக்கு. நீ திட்டனும்னா மூஞ்சிக்கு முன்னாடி வந்து திட்டிக்கோ. சந்தோசமா ரசிப்பேன், துப்பனும்னா துப்பிக்கோ, தொடைச்சி விட்டு போயிட்டே இருப்பேன். இனி உன்னை விட்டு எல்லாம் போற ஐடியா எனக்கில்லை.

சாகுற வரைக்கும் சாவடிச்சிட்டே கூடவே சுத்துவேன். செத்தாலும் சுத்துவேன். அதான் உன்னை விட்டு போன எனக்கான தண்டனை. ” நித்தமும்  மூச்சு விடாமல் பேசி  கணன்ற அவன் உள்ளத்து நெருப்பை கொஞ்சம் கொஞ்சமாய் நட்பேனும் நீர் ஊற்றி அணைத்தான்.

 ” பரதேசி, விடுறானா பாரு ” முணங்கி கொண்டே போனை வைத்தான்.

இன்னும் இளா வீடு போய் சேரவில்லை. இவன் கிளையண்டோடு பேசி கொண்டிருந்ததில் நேரம் கடந்திருக்க, மீத வேலைகள் முடித்து விட்டு விட்டு அவதி அவதியாய் கிளம்பி வந்து காரை ஓட்டி கொண்டிருக்கும் போது தான் ராஜா பேசியது. டிராபிக்கில் ஊர்ந்து போய் கொண்டிருக்க, பத்தே நிமிடத்தில் மீண்டும் இணைப்பில் வந்தவனிடம் தன்னை மறந்து

“இப்போ என்னடா ….“என்றான் கடுப்பாய்.

” ரெண்டு இட்லி, ஒரு மசால் தோசை, ஒரு பூரி  கிழங்கு வித் காபி ” என்றான் சிரிக்காமல்.

“டேய்….! ” பல்லை கடிக்க ,

“கூல்! கூல்! இதெல்லாம் நான் சாப்பிட்டேன். நீயென்ன சாப்பிட போறேன்னு கேட்க தான் கால் பண்ணேன். உனக்கென்னடா உன் தமிமா வித விதமா சமைச்சு கொடுப்பாங்க. பூரியை பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்துருச்சுடா. எத்தனை நாள் பிச்சி பிச்சி சண்டை போட்டு சாப்பிடுருப்போம். அது ஒரு கனா காலம், இல்லடா…”  எதை பற்றி பேசினால் அவன் அமைதி ஆவானோ, அதை பற்றியே பேச ஆரம்பித்தான். தமயந்தி பற்றியே தன் போக்கில் பேசி கொண்டு இருந்தான் இளா  வீடு போய் சேர்ந்த பின்பும்.

எப்போதும் இல்லது இன்று நேரம் கழித்து வந்தவனோ,  ஒன்றுமே கூறாமலே , காதில் போனை வைத்து கொண்டே படி ஏற தமயந்தியின் புருவ முடிச்சில் யோசனை படர்ந்தது.

ஒரு வாரம் முழுவதும் பேசி பேசியே அவனை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான் ராஜா. தாயிடம் கோபம் காட்டி விலகி நின்றவன், நட்பிடம் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் தடுமாறி நின்றான்.

ஏனெனில் இளா நண்பர்களே உலகமென்று வாழ்ந்தவன், யாரையும் இப்போது பார்ப்பதுமில்லை. பேசுவதுமில்லை. எங்கேனும் வழியில் கண்டால் சிறு புன்சிரிப்பு மட்டுமே உதட்டளவில் எட்டி பார்க்கும். தேவைக்கு மட்டும் பேசுபவன் வேறு எந்த உணர்வையும் யாரிடமும் காட்டி கொள்வதில்லை. அவனுக்கென்று அவனே வகுத்து கொண்ட எல்லையில், அவன் குடும்பத்தை மட்டுமே இப்போது நிறுத்தி இருக்கிறான். வேறு யாரையும் அனுமதிக்கவும் இல்லை. விலகியே நிற்கிறான். இப்போது அந்த எல்லையை உடைத்து தகர்க்க  ராஜா வந்து முயற்சித்து கொண்டிருக்கிறான்.

அவன் கூறியது போலவே இளாவை காண ரோஜா தான் வந்தாள். கிண்டல் செய்து பேசினாலும் வேலையில் நம்பிக்கை வைக்கும் அளவு கண்ணியமாக நடந்திட்டாள். இவர்களை பற்றி அறிந்தும் யாரிடமும் எதுவும் கூறாமல் முன்பு போலவே இருந்தாள்.  ரோஜா, சுபாவின் நெருக்கம் மட்டுமே ராஜாவையும் அவளை நம்ப செய்தது.

தன் வாகனத்தில் வந்து இறங்கியவள் நிமிர்ந்து பார்க்க அவன் கூறிய ஆடிட்டர் ஆபீஸ் மிக பெரிய கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தது. கீழ் தளத்தில் தமயந்தி அலுவலகம் இருக்க, மேல் தளத்தில் தான் இளா அலுவலகம் இருந்தது. இதை அறியாதவளோ உள்ளே சென்று, ரிசப்ஷன் பெண்ணிடம் வினவ, மேல் தளம் செல்ல சொல்லி அனுப்பி விட்டாள்.

அங்கே சென்று கேட்க., அவன் வெளியே சென்று உள்ளதாகவும், ஒரு மணி நேரம் கழித்து தான் பார்க்க முடியும் என கூறி வெயிட் செய்ய சொல்ல,  அதுவரை வெளியே சென்று ஜூஸ் குடிக்கலாம் என கீழிறங்கி விட்டாள்.

ஆர்டர் செய்து விட்டு போன் எடுத்து பார்த்து கொண்டிருக்க சுபா போன் செய்தாள்.

” அவரை பார்த்துட்டியா.., ரோஸ்., என்ன சொன்னார்?., ” என வினவ .

” ஆபீஸ் விட்டு வந்து அரைமணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள பேசிட்டியானு கேள்வி கேக்குற.,”  என்றவள் தொடர்ந்து.

” உலா போன… இளா வந்தா தான் பேச முடியும். அதுக்குள்ள நீ என் விலாவில் குத்தி கேள்வி கேக்காதே., ” என்க.

” அவரையாவது விட்டு வைடி., பாவம் பெரிய ஆளு…, ” என்று சிரித்து விட்டு

” அப்புறம் நான் ஊருக்கு போறேன் .,  நாலு நாள் கழிச்சி தான் வருவேன்., தேடாதே .., நீ வரதுக்குள்ள கிளம்பினாலும் கிளம்பிருவேன், சரியா.,” என்க.

” திடீருனு என்னடி ஊருக்கு போற .,  சொல்ல விரும்பினா சொல்லு., இல்லைனா வேணாம்., ” என்ன தான் தன்னோட சகஜமாக பழகினாலும்,  அவள் முதலாளியின் தங்கை ஆயிற்றே என்ற மனப்பான்மை ரோஜாவுக்கும் தற்போது வந்திருந்தது.

“ஆமா, பெரிய சிதம்பர ரகசியம். உனக்கு தெரியாம இருக்க, ஏண்டி நீ வேற , என்னை பொண்ணு பார்க்க வராங்கனு அப்பா உடனே கிளம்பி வர சொன்னார். அவ்வளவு தான்.”

” பாருடா மாப்பிள்ளை என்ன பண்றாராம்..,,? எந்த ஊரு.,? என்ன பேரு…,? எப்படி இருக்காரு.., ? போட்டோ பார்த்தியா.,?  ” என வரிசையாய் கேள்விகளை தொடர்ந்து அடுக்கி கொண்டே வர.

” ஸ்டாப்., ஸ்டாப்., என்ன வண்டி நிக்காம ஓடுது.,” அவளை தடுத்து நிறுத்தியவள்

” இப்போதைக்கு எனக்கு எதுவும் தெரியாது.., வீட்டுக்கு போய் தான் பேசணும்., ” குரலிலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிர்மலமாய் பதில் வந்தது.

” எதே ., ஒன்னும் தெரியாம கிளம்பி போவியா., ஏண்டி இப்படி இருக்க., நானெல்லாம் எம்புட்டு கொஸ்டின் கேப்பேன் தெரியுமா.,? எங்க அம்மா எல்லாம் அழுதுரும்., “

” எங்க அப்பா எனக்கு எது பண்ணாலும் பெஸ்ட்டா மட்டும் தான் பார்ப்பாரு. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஊருக்கு போனா நேருல சொல்லப்போறார்., இதுல என்ன இருக்கு., ” மேலும் சிறிது நேரம் பேசி முடித்து இளா அலுவலகத்திற்கு மீண்டும் கிளம்பி சென்றாள்.

” எஸ்கியூஸ்மீ  சார்.., ” கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய அழகான வாலிபன் அமர்ந்து இருந்தான் அங்கே. இவள் எண்ணி சென்றதோ கிழ போல்ட் .., ஆனால் இருந்ததோ இள போல்ட் .

” ஓஓ அதுக்கு தான் இளானு பேரு வச்சிருக்காங்களோ..,சப்போஸ் இவருக்கு வயசானா இளானு கூப்புடுவாங்களா, இல்லை கிளானு கூப்புடுவாங்களோ  ” அதி முக்கியமாய் மனதில் கேள்வி எழும்ப, முகத்தில் கிண்டல் சிரிப்பு தன்னாலே வந்து விட்டது.

அடக்கி கொண்டவள் அமைதியாய் உள்ளே சென்று நின்றாலும் குறுஞ் சிரிப்பு முகத்தில் இருந்தது. தன்னை பற்றி  தான் எதையோ நினைத்து சிரித்தபடி வந்துள்ளாள்  என்பதை அவள் முகம் பார்த்து கண்டு கொண்டவனோ.,

அவளை பார்த்தும் ஜாடையால் சீட்டில் அமர சொல்லியபடியே  ” என்ன மேடம், உள்ளே வந்த உடனே கிண்டல் எல்லாம் மனசுல வருது ..,  என்ன நினைச்சீங்க .., சும்மா சொல்லுங்க ..,நானும் சிரிப்பேன்ல  ”  புருவம் உயர்த்தி ரோஜாவிடம் கேள்வி கேட்க.,

” அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்., ” சிரித்து மழுப்பி சமாளிக்க தான் ரோஜாவால் முடிந்தது. “ஆத்தி பயபுள்ள மூஞ்சை பார்த்தே கண்டுபிடிப்பான் போல, போற வரை ஒண்ணுமே நினைக்காம கம்முனு வேலை முடிச்சிட்டு ஜம்முனு கிளம்பி போகிரணும்., ” மனதில் சொல்லியபடி கண்ணும் கருத்துமாக வேலை பற்றி மட்டுமே யோசித்து பேசினாள் அங்கிருந்து செல்லும் வரை. மறந்தும் தலை உயர்த்தி அவன் கண்களை சந்திக்கவேவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!