Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 13 1

இதோ.. இதோ.. என் பல்லவி

  அத்தியாயம் -13



Advertisement

    விக்ரம்  தனது  வீட்டின்  பின்னால்  உள்ள  ஸ்விம்மிங் பூலில்  மிதந்துக்கொண்டு  இருந்தான்.

Advertisement

அந்த பர்தா போட்ட பெண் தன் பல்லவி என்று  தன் மனது சொல்ல.

Advertisement

அவளோ  நான் ஆபிதா பானுவென்று  சொல்லி சென்றவளை  நினைத்து  இருந்தான்..

 சிவகாமி  தன்  மகள்  என்று  அவனுக்கு தெல்ல தெளிவாக  தெரிந்து  விட்டது.

Advertisement

பல்லவி இந்து தானே, ஏன் இந்த  பர்தா,  அவள் பக்கத்தில்  பத்து வயதில்  ஒரு பையன்  வேறு  ஆபிதா பானு என் அம்மா வென்று சொல்லிக்  கொண்டு  இருக்கிறான்..

பல்லவிக்கு  என்னை அடையாளம்  தெரியவில்லை?. அவனின்  கணவன் இறந்து விட்டானா?..  எல்லாத்தையும்   தெரிந்து கொள்ள வேண்டும்   என்று தண்ணீரில்  மிதந்து  கொண்டே  சிந்தித்துக்கொண்டு  இருந்தான்..

ஸ்விம்மிங் பூலின் பக்கத்தில்  சூர்யாஜித்  அவனது  டேப்பில்  கேம்  விளையாடிக் கொண்டு  இருக்க.

விக்ரமனின் போன்  ஒலித்தது.

”  போனை  எடு சூர்யா ”  என்ற  விக்ரம்  ஸ்விம்மிங் பூலின்  இருந்து  வெளியில் வந்தான்.

சூர்யாஜித் போனில்  தன்  தாத்தா சுந்தரின்  பெயரை கண்டு, போனை ஆன் பண்ணியவன்  ”ஹாய் தாத்தா  ஹவ்  ஆர் யூ”  என்று கேட்க..

” யா, ஐ, யம், பைன்  கண்ணா, நீ  எப்படி இருக்க., ” யா பைன் தாத்தா”..

 ”உன்  டாடி என்ன பண்ணுறான்”..

 ”  நாங்க  இரண்டு பேரும்  இங்கே  ஸ்விம்மிங் பூல் கிட்ட இருக்கோம். இதோ, டாடி கிட்ட தர்றேன் ”  என்றவன், விக்ரமிடம் போன் தர.

 ”ஹாய்  டாடி ”  என்றான் விக்ரம்..

”  என்ன  விக்ரம்  இந்தியா போக  டிக்கெட் போட  சொன்னீயாம்”  என்றார் சுந்தர்..

தெரிஞ்சுருச்சா என்றவன்,. ”ஆமாம்  டாடி  ஒரு  முக்கியமான ஒரு  விசயத்தை பத்தி  தெரிஞ்சுக்க  போறேன்” என்றான்..

 ”  அப்படி  என்ன  முக்கியமான  விசயம்முன்னு  நான் தெரிஞ்சுக்கலாமா,,  விக்ரம்”  என்றார் சுந்தர்…

”  யா, டாடி  எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச  ஆளுதான்  பல்லவி, பல்லவியை  பத்தி தான் தெரிஞ்சுக்க  போறேன்…

 ”  செத்த  பொண்ண  பத்தி, நீ  என்ன  தெரிஞ்சுக்க  போறே  விக்ரம்”..

”  யாரு  செத்தா”?.

”  விக்ரம்  பல்லவி செத்து  நாளு  வருஷம்  ஆச்சு , உனக்கு  தெரிஞ்சா நீ கஷ்ட படுவண்ணு தான் நான் உன்கிட்ட  சொல்லல விக்ரம்”..

 ”  நோ  டாடி  பல்லவி சாகல, நான் இன்னைக்கு பல்லவியை பார்த்தேன்”. என்றான்..

”  என்ன சொல்லுற விக்ரம் பல்லவியை பாத்தீயா”.. என்றார் சுந்தர்…

”  ஆமாம்  டாடி பல்லவி மட்டும் இல்ல, இன்னொரு  ஆளையும் சேர்த்து பார்த்தேன்”..

”  யாரு  இன்னொரு ஆளு  விக்ரம்”..

 ”  அத நீங்க   நேருல  பாருங்க”  என்றவன். ”  அப்பறம் டாடி உங்களுக்கு பல்லவி இறந்துட்டாத  சொன்னது  யாரு”..?

”  அதுவா ஞானதுரை  தான், உனக்கு  ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்  இருந்தோமே, அப்போ  தான்  சொன்னான், பல்லவிக்கு  விருப்பம் இல்லாம  கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, அதனால அவ பாலத்தில்  மேல இருந்து  தண்ணீல  குதிச்சுட்டா, தேடி பாத்தோம்  கிடைக்கல. ஒரு வாரம் கழிச்சு  கண்டு  பிடிச்சாங்கன்னு சொன்னான்..

”  டாடி  ஞானதுரை  சொல்லுறத  நான் நம்ப மாட்டேன், நானே  இந்தியா போயி  பல்லவிக்கு  என்ன நடந்ததுன்னு  தெரிஞ்சுக்க  போறேன்,.  நீங்க  சூர்யாவை  ஒரு 4  டேஸ்  பாத்துக்கோங்க.” என்றான்..

”  நீ இந்தியா போறப்போ  சொல்லு  விக்ரம், நான்  வந்து சூர்யாவை  என் கூட கூப்பிட்டுக்கிறேன்”  என்றார்..

”  ஓகே  டாடி டிக்கெட் கன்பார்ம்  ஆன உடனே  சொல்றேன்.. ஓகே பாய் டாடி என்றான்…

 விக்ரமுக்கு  மறுநாளே  இந்தியாவுக்கு  கிளம்ப  டிக்கெட் கிடைத்து விட,, சூர்யாவை  சுந்தரிடம்  ஒப்படைத்தவன் இந்தியா கிளம்பினான்..

விக்ரமுக்கு  பல்லவி  4  வருடம் முன் சொன்னது  ஞாபகம் வந்தது, எங்க வீடு திருச்சியில  ரங்க நாத சுவாமி கோவில்  பக்கத்தில் போனா 6 வது தெரு, 8  வது வீடு  எங்களுடையது  வெளியில்  நிறைய பூசெடி  இருக்கும் என்று அவள் சொன்னதை  வைத்து  திருச்சி வந்தவன், ஒரு ஹோட்டல்  ரூம்  சென்று  குளித்து  விட்டு, பல்லவியின் வீட்டை  நோக்கி சென்றான்..

சரியாக அவள் வீட்டை  கண்டுபிடித்தவன், அவளின் வீட்டின்  காலிங் பெல்லை அடித்தான்…

செல்லத்துரை  வந்து  கதவை திறந்தவர், விக்ரமை பார்த்து       ”யார் ,  என்ன வேணும்”  என்று கேட்க..

” இது பல்லவி வீடு தானே ”  என்றுவிக்ரம் கேட்க..

 ” ஆமாம் ”   என்றவர்.. ” நீங்க” என்க..

” உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்  பல்லவியை பத்தி”என்று   விக்ரம் கூற..

” வாங்க ”  என்று விக்ரமை வீட்டின் உள்ளே அழைத்தார்..

 அந்த  வீட்டின்  உள்ளே  விக்ரம் நுழைந்து பார்க்க, அந்த வீட்டின் ஹால் முழுவதும்  பல்லவின் சிறு வயது  புகைப்படங்கள் அதை பார்த்து கொண்டே வந்தான்..

செல்லத்துரை  விக்ரமை ஒரு சேரில்  அமர  சொல்லி  விட்டு,     ”ஜோதி”  என்று  பெரிய மகளை  அழைத்தவர்  ”தண்ணி கொண்டு  வாம்மா”   என்றார்…

ஜோதி தண்ணி கொண்டு வந்து விக்ரமிடம் தர..

அதை வாங்கி குடித்தவன்,     ”தாங்யூ” என்று  ஜோதியை பார்த்து கூற..

ஜோதி   விக்ரமை பார்த்து தலையாட்டி உள்ளே செல்ல போக..

”  நீங்க  பல்லவி அக்கா ஜோதி தானே ”  என்றான் விக்ரம்..

”  ஆமாம்”  என்ற ஜோதி,. ”  நீங்க” என்றாள்..

”  நான் விக்ரம்  லண்டனுல  இருந்து  வந்து இருக்கேன்”..

”  நீங்களா விக்ரம் “, என்று விக்ரமனின் பக்கத்தில்  உள்ள  சேரில்  அமர்ந்த ஜோதி விக்ரமை பார்த்து  மறுபடியும், ”நீங்களா விக்ரம் “என்று கேட்க..

” ஆமாம் ”  என்று விக்ரம் தலையாட்ட..

கண்கலங்கிய ஜோதி, ”உங்க கூட சேர்ந்து  வாழ  என் தங்கச்சிக்கு  குடுத்துவைக்கல”  என்றவள்…

 ”  அப்பா பாருங்க ” என்று விக்ரமை காண்பித்த ஜோதி,,   ”எப்படிபட்ட ஒருவரை என் தங்கச்சி விரும்பி இருக்கா, நாமா  எல்லாரும்  சேர்ந்து அவள  கொன்னுட்டோம்”  என்று அழுதாள்…

விக்ரம் ஜோதியை பார்த்து   ”அழாதீங்க சிஸ்டர் ”  என்றவன்,     ”உங்க கூட கொஞ்சம்   பேசலாமா”  என்றான்..

”  சொல்லுங்க விக்ரம் ”  என்றாள் ஜோதி..

”  பல்லவிக்கு  என்ன  தான் ஆச்சு,  கொஞ்சம் டீட்டியலா சொல்லுங்க”  என்றான்..

ஜோதி பல்லவி இந்தியா வந்தது.  அவளுக்கு கல்யாணமுன்னு தெரிஞ்சு கல்யாணம் பண்ணா மாட்டேன் என்று ஆர்பாட்டம் பண்ணுனது, அப்பறம் பைரவி செத்துருவேன் சொல்லி, கையை கட் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியது,, அப்பறம் கடைசியாக பல்லவி  இந்த கல்யாணம் நடந்த நான் செத்ததுக்கு சமம் சொல்லி  கல்யாணம்  நடந்தது.

பல்லவி கல்யாணம் ஆன அடுத்த நொடி  மயங்கியதை சொல்ல..

 ஜோதி சொல்ல, சொல்ல    விக்ரம் தன்னவள் அப்பொழுது  எவ்வளவு  மனவழி  அனுபவித்து  இருப்பாள் என்று  நினைத்த வருந்த..

மேலும் ஜோதி தன் தங்கை பல்லவி தன்னிடம் விக்ரமனை பத்தி சொன்னதை சொல்ல, ”  என் விக்ரமை தவிர  நான் யாரு கூடவும் வாழ மாட்டேன். எனக்கு இந்த கல்யாணம் நடந்தா நான் செத்ததுக்கு சமம் என்று சொன்னா”.  ”அதே மாதிரியே செத்துட்டா,, அவ சொன்னத  நாங்க கேட்கல,,. நாங்க அவ சொல்லுறத கேட்டு இருந்த இப்போ என் தங்கச்சி உயிரோட இருந்து இருப்பா”.. என்று புலம்பியவளிடம்..

 விக்ரம்  ”கல்யாணத்துக்கு  அப்பறம் என்னாச்சு  பல்லவிக்கு”  என்றான்…

 பல்லவியா என்று ஜோதி  ” அவ கல்யாண மேடையில மயங்கிட்ட அதனால நாங்க அவள காருல ஏத்தி வீட்டுக்கு போகலா முன்னு  போயிட்டு இருந்தாம்,, கார் டிராபிக்குல  நின்னுச்சு,, பல்லவி  தாலியை கழட்டி விஷால் கையில் குடுத்து, நான் செத்துட்டேன்னு நெனச்சுக்கோன்னு   விஷால் கிட்ட சொல்லிட்டு காருல இருந்து ஓடிட்டா.. நாங்க அவ பின்னாடி போனோம்.

பல்லவி ஒருத்தர் கிட்ட போன் வாங்கி பேசிட்டு இருந்தா..

எங்கல பாத்துட்டு  பாலத்து மேல ஏறி  நின்னு  தண்ணியில குதிச்சுட்டா ” என்று அழ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!