Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 13 2

விக்ரமுக்கு  அன்று  பல்லவிக்கு  நடந்தது கண்முன் தோன்ற, தன் அம்மா உயிருக்காக  கல்யாணம் பண்ணியவள்,  என்னை தவிர வேற ஒருவனை தன் கணவனாக நினைக்க முடியாமல், ஒரு நாள் கூட விஷால்லோடு  வாழ முடியாமல், அவள்  எடுத்த  முடிவை  எண்ணியவள்,  எந்த மாதிரி ஆன  சூழ்நிலையில் தன் உயிரே  கொடுக்க நினைத்திருப்பாள்.

பல்லவி, பல்லவி  என்று கண்கலங்கியவன், எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பாள். தன் உயிர் போனாலும் பராவயில்லை, இன்னொருவனோடு  வாழ முடியாது, என்று  முடிவு எடுக்க காரணம், தன்  மேல் வைத்து  திருந்த காதல்.



Advertisement

அந்த காதல் தான் நம்மலை  சேர்த்து வைக்கும் பல்லவி என்றவன்.. ”பல்லவி அம்மா எங்கே? ” என்று  விக்ரம் கேட்க..

Advertisement

 ” வாங்க”    என்று விக்ரமை ஒரு அறைக்கு   ஜோதி அழைத்து சென்றாள்.. அந்த அறையில்  பைரவி படுத்து  தூங்கிக்கொண்டு  இருந்தார்.

Advertisement

”  என்ன ஆச்சு பல்லவி அம்மாவுக்கு என்று விக்ரம்  கேட்க,”.

Advertisement

 ”  அம்மாவுக்கு  பல்லவி இறந்தது இருந்தே  இப்படி தான்  பகல்ல தூங்கு வாங்க, நைட்டானா  அம்மா,, பல்லவி வாம்மா,  தண்ணீல வீழதம்மா, அம்மாவை விட்டு போகாதா மான்னு அழுதுட்டு இருப்பாங்க,  டெய்லி நைட்டு பல்லவி  நெனச்சு, நானே என் பொண்ண கொன்னுட்டேன்னு அழுவாங்க”,,..

  ”இப்போ அழுவுறவங்க  ஏன் என் பல்லவிக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க? “என்றான் விக்ரம்..

 ” அதுவா எங்க  குடும்பத்துக்குன்னு ஒரு  ஜோதியர் மாமான்னு  ஒருத்தர் இருக்காரு,, அவர் பல்லவிக்கு  ஏற்கனவே   தண்ணீல கண்டம் இருக்குன்னு சொல்லி இருந்தார், அதனால பல்லவி தண்ணீல போனாலே பயப்படுவா,, இதுல  அவ உங்கள  லவ் பண்ணுற விசயம் கேள்வி பட்டு அம்மா ஜோசியரை பார்த்து என்ன பண்ணாலமுன்னு கேட்டாங்க.

அப்போ அந்த ஜோசியர் பல்லவிக்கு  மரண கண்டம் இருக்கு, ஒன்னு பல்லவி உயிர் போகும், இல்ல  பல்லவி பித்து பிடித்து அவ யாருன்னு தெரியாமல் வாழ்வா இதுதான் விதியின்னு அம்மா கிட்ட சொல்லி இருக்காரு..

அதனால எங்க  அம்மா பயந்து போயி பல்லவிக்கு  கல்யாணம் பண்ணி பக்கத்துல வச்சு பாத்துக்கலாமுன்னு நெனச்சு பல்லவிக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சாங்க, ஆனா ஜோதியர் சொன்ன மாதிரி  நடந்துருச்சு” என்று பைரவின் தலையை வருடிவிட,..

தூங்கும் பைரவி கண்விழித்து பார்த்து, ”எங்கே என்  பல்லவி லண்டனுல இருந்து வந்துட்டாளா”.. என்று கேட்க..

எழுந்து நின்ற விக்ரம் ”கண்டிப்பா வருவா,  ஜோசியர் சொன்னது பலிக்காது, என் பல்லவி மீண்டு வருவா”  என்றான்..

 ஜோதி விக்ரமை பார்க்க..

” ஆமாம் நீங்க பல்லவி  டெட் பாடியை பாத்தீங்களா” என்றான்..

”  இல்லை ”  என்று ஜோதி தலையாட்ட..

”  அப்பறம்  எப்படி முடிவு பண்ணுனீங்க அவ செத்தத,  பல்லவி உயிரோட இருக்கா” என்று எழுந்து நடந்தான்..

அவன்  பின்னாடி வந்த ஜோதி  ”எப்படி” என்று  கேட்க…

”  அவ  உயிர் என்க்கிட்ட இருக்கு, அது போகாது” என்றான்..

செல்லத்துரை விக்ரம் பேசியதை கேட்டவர் ”  தம்பி நீங்க பல்லவி மேல உள்ள  பாசத்துல  பேசுறீங்க” என்றார்..

”  இல்ல அங்கிள்”  என்றவன், அவர்களின் வீட்டில் பல்லவி போட்டோவுக்கு மாலை போட்டு இருக்க, அதை எடுத்து எறிந்தவன், என் பல்லவி சாகல,கண்டிப்பா ஒரு நாள் அவளை  நான் கூட்டிட்டு வருவேன்”  என்றவன்  கிளம்பிவிட்டான்..

விக்ரமுக்கு  பல்லவியின் நினைவே, பல்லவி, பல்லவி உன் அளவுக்கு நான் உன்னை காதலிக்கல பல்லவி,, உன் காதலுக்கு நான் என்ன செய்வேன், தன் உயிரையே  கொடுக்க துணிந்து  இருக்காளே, உனக்கு கல்யாணம் முடிஞ்சது நெனச்சு,  நான் உன்னை பார்க்காம, உன் மேல கோபப்பட்டு  நான் உன்னை மறக்க ஆரம்பிச்சு இருந்தேன், ஆனா நீ  எனக்காக எவ்வளவு போராடி இருக்கா, ஐ. லவ் யூ டா பல்லவி மா என்று அவளோடு  மனதில் பேசிய வாறே லண்டன் வந்து சேர்ந்தான்…

விக்ரமனின் பீ, ஏ  வந்து ”  சார்  இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு, நீங்க  கண்டிப்பா கலந்துக்கனும்”.. என்றான்..

 ”  என்ன மீட்டிங், எனக்கு மலேசியாவில்  ஒரு வேலை இருக்கு ஈவ்னிங் போகனும்” என்றான்..

“இந்த   மீட்டிங் உலக அளவில் ஜுவல் சாப்  வச்சு இருக்குறவங்க கலந்துக்குற  மீட்டிங், இதுல சாப் ஓனர்ஸ், ஜுவல் டிசைனின்  பண்ணுற டிசைனர், அப்பறம் நம்ம வைரத்த டிசைன் பண்ணி சேல் பண்ணுறவங்க அவ்வளவுதான்”..

   நான்  எல்லாத்தையும், பென் டிரைவ்வுல காப்பி பண்ணி வச்சுஇருக்கேன் சார் . நீங்க செஸ்ட் நம்ம ப்பிராடக்ட், டிசைனை  பத்தி கேட்பாங்க, அத  நீங்க  தான் எக்ஸ்பிளைன் பண்ணனும் ”  என்று சொல்ல..

” ஓகே”   என்ற விக்ரம்,,  மலேசியா போயிட்டு வந்து பல்லவியை  பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தவன்..

மீட்டிங் நடக்கும்  இடத்துக்கு  சென்று  அமர்ந்து  இருந்தான்.. இன்னும் பத்து நிமிடத்தில்  மீட்டிங்  ஆரம்பிக்க இருந்தது..

அங்கே  நிறைய ஜுவல்  சாப் ஓனர்ஸ் பல நாடுகளில் இருந்து வந்து  இருந்தனர்..

மீட்டிங்  நடக்கும் சில நொடிகள்  முன்  வந்தனர், முபாரக்கும், ஆபிதா பானுவும். மொத்தம்  25  ஜுவல் சாப் ஓனர்,, 10 ஜுவல் டிசைனிங் ஓனர்ஸ், மற்றும் வைரம் டிசைன் பண்ணிவிக்கும்  இரண்டு கம்பெனிகள் வந்து இருந்தனர்…

விக்ரம் ஆபிதா பானுவை பார்க்க வில்லை, அவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தாள்..

 மீட்டிங் தொடங்கியது முதலில் ஜுவல் டிசைனரின் ஒருவர் பெயரை மேடையில் வாசிக்க, அவர் வந்து அவரின் பென்டிரைவை கொடுக்க, அது அங்கே உள்ள பெரிய திரையில் வீடியோவா  அவர்களின்  டிசைனின் புகைப்படங்கள் தெரிய , அவர்களின் டிசைனை பத்தி அவர்கள்  எடுத்து சொல்லி காண்பிப்பார்கள்..

இப்படியாக  ஒரு, ஒருத்தரின் பெயர் பெரிய  ஸ்கிரினில்  காண்பித்து அவர்களை அழைக்க அவர்கள் வந்து அவர்களின் சாப், டிசைனை பத்தி பேசுவார்கள்..

  அடுத்ததாக விக்ரம் பெயரை  அழைத்தனர் பீ, டெக் ஓனர் விக்ரம் ஜித் என்று அழைக்க, விக்ரம் மேடை அருகே சென்று   அவனின்  பென்டிரைவை கனெக்ட்  செய்து,  ”அவன் எப்படிப்பட்ட வைரத்தை வாங்குகிறான்,  அதை  எப்படி டிசைன்  செய்கிறான், அவனிடம்  எத்தனை விதமான  வைரம் இருக்கிறது,, இன்னும் அவனால் பெரிய அளவில்  வைரத்தை ஜுவல் சாப் ஓனர்ஸ் டிசைன்  பண்ண சொன்னா  தங்களால் பண்ணி தர  முடியும்” என்று தனது பேச்சை  நிறுத்தி கொண்டான்..

 ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடம்  தரப்படும், அந்த  பத்து  நிமிடத்தில் அவர்களை பத்தி அறிமுகம் செய்து கொண்டு அவர்களின் தேவை , சாப் பத்தி பேசலாம்..

ஆபிதா பானு விக்ரம்  பேசியதை  கேட்டு  கொண்டு இருந்தாள் அவனை கப்பலில் வைத்து பார்த்த ஞாபகம் வர, அவனின் குரலை ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்க, அதை ஒதுக்கி வைத்தவள் .. மத்த இருவர் பேசியதை விட விக்ரம்  பேசிய விதம், அவனின் அடுத்த கட்ட வைரம் டிசைன் பண்ணும் விதம் என்று  சொல்லியதை கேட்டவள், முபாரக்கிடம் ”நாம  பீ,  டெக்  கம்பெனிக்கு வைரம் டிசைன் பண்ண கொடுக்கலாமா””  என்று கேட்க..

 ”எனக்கு  பீ, டெக்  ஓனர் விக்ரம் பேசியது புடிச்சுருக்கு, நாம நம்ம ஜுவல் சாப்புக்கு வைரம்  டிசைன் பண்ண  சொல்லி அக்ரிமென்டு போடலாம் என்று ஆபிதாபானுவும், முபாரக்கு பேசி முடித்தார்கள்…

அடுத்ததாக  சிங்கப்பூர்  சாப் ஓனர் முபாரக் என்று  அழைக்க,, முபாரக்  தன்னை அறிமுகம் படுத்தி கொண்டவர் தனக்கும்  தன் தங்கை ஆபிதா பானுவுக்கும் பீ, டெக் ஓனர்  விக்ரம்  கம்பெனியோட அக்ரிமென்ட் சைன் பண்ண போறோம், விக்ரமனின்  டிசைன், அவர் சொன்ன விதம் எல்லாம் பிடிச்சு இருக்கு என்று என்று கூறி தனது பேச்சை முடித்தான்..

அடுத்ததாக,, மலேசியா ஜுவல்   சாப் ஓனர் என்று ஆபிதா பானுவை  மைக்கில் அழைக்க,, ஆபிதா பானு  எழுந்து போனாள், அன்று போலவே  கண்கள்  மட்டும் தெரிய, பர்தா  அணிந்து முகத்தை மறைத்து  இருந்தாள்.

 விக்ரம்  இவ்வளவு நேரம் ஆபிதா பானுவை அங்கே  இருப்பதை பார்க்க வில்லை.. ”ஜுவல் சாப் ஓனர் ஆபிதா பானு  ”  என்று காதில் கேட்டவுடன் தான்  ஆபிதா பானு சொல்லும் பக்கம் திரும்பி பார்த்தான்..

ஆபிதா பானு  தனது பென்டிரைவை  ஸ்கிரினில் கனெக்ட் பண்ண குடுத்து விட்டு..

அவளின்  முகத்திரையை  எடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள்..

விக்ரம்  அவள் முகத்திரை எடுக்க போக முன் ஆர்வமாக  அவளை பார்த்து இருந்தான்..

ஆபிதா விக்ரமனின்  முகத்தை  பார்த்து கொண்டேதான்  முகத்திரை திறந்தாள்..

அவனின்  முக பாவனை பார்த்தவள். பேச்சற்று  சில நொடிகள் இருந்து பின்பு அவளின் ஜுவல் சாப்பை பத்தி  பேசி முடித்தவள், முகத்திரையை மூடாமல். முபாரக்  அருகே  சென்று அமர்ந்து கொண்டாள்..

விக்ரமனின் பார்வையை  அவளால், பார்க்க முடியவில்லை, என்னை பார்வை டா அது, காதலன் காதலியை பார்க்கும் ஆசை பார்வையா, இல்லை  கணவன்  மனைவியை பார்க்கும்  பார்வையா,  அய்யோ அந்த உரிமையான பார்வை அவளுக்கு ஏதோ ஒரு பயத்தை  கொடுக்க..

முபாரக்  அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.. அவனின் பார்வை இன்னும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள்..  கைகள் ஏனோ நடுங்குவதை போல் தெரிய, முபாரக்கிடம் 5 நிமிடம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக  சொல்லி விட்டு. மீட்டிங் ரூம்பில் இருந்து வெளியில் சொல்ல..

அவள்  சென்ற அடுத்த நொடி, விக்ரம்   ஆபிதா பானுவின்  பின் சென்றான்.

 அவளோ வேகமாக  செல்கிறேன்  என்று வேகமாக நடக்க, பர்தா  தடுக்கி  கீழே விழ போக..

அவள் விழ போகும் முன் விக்ரம் அவளை  தன்னோடு  சேர்த்து அணைத்து பிடித்து இருந்தான்..

அவள் கண்ணோடு கண் பார்த்தவன் ”பல்லவி” என்றான்..

அவளோ  அவன் கண்ணை பார்த்து  கொண்டே”  நான் பல்லவி இல்ல பானு” என்றாள்..

 ”  நீ என் பல்லவி  தான்” என்றான் விக்ரம் அவளை அணைத்து இருந்தபடியே..

”  ஏய் ”  என்று சத்தம் கேட்டு இரண்டு பேரும்  திரும்பி பார்க்க.

முபாரக்  கோபமாக நின்று இருந்தான்..

வேகமாக  வந்தவன் விக்ரமிடம் இருந்த பல்லவியை ( சாரி) ஆபிதா பானுவை  தன்னோடு இழுத்து நிறுத்தியவன்..

”  யூ ராஸ்கல்” என்று  கண்டபடி  விக்ரமை திட்ட..

”  ஏய்!…  யூ  ஷட் அப்.. முபாரக்”  என்று  கர்ஜித்தான்..

”  என் தங்கச்சியை எப்படி நீ தொடலாம்”  என்றான் முபாரக்..

”  சாரி  முபாரக் அவ  உன் தங்கச்சியில்லை, என்  பொண்டாட்டி பல்லவி,,    என் பொண்ணு சிவகாமியோட அம்மா”… என்றான் விக்ரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!