Skip to content
Post Views: 3,561
பல்லவியை பார்க்க அவளோ இன்று பர்தா இல்லாமல் ஒரு முழுநீளகை வைத்த சுடிதார்
அணிந்து தலையில் மட்டும் துப்படாவினால் தலையை சுத்தி மூடி இருக்க, அந்த கரும் நீல கலர் சுடிதாரில் தன் பல்லவியை பார்த்து ரசித்து அமர்ந்து இருக்க..
முபாரக் மஹாமுதுவிடம் “அவன் என்ன கேட்கனுமோ கேட்க சொல்லுங்க, பதில் சொல்லிட்டு ஆபிதா உள்ளே போகனும் ” என்று விக்ரமை ஒரு பார்வை பார்க்க..
Advertisement
மஹாமுது ஆபிதாவை பார்த்து ” இவரை உனக்கு ஞாபகம் இருக்கா? ” என்று கேட்க..
Advertisement
” இல்லை வாப்பா” என்றாள் ஆபிதா பானு..
Advertisement
” உன்கிட்ட நாங்க ஏற்கனவே சொல்லி இருக்கோம், நீ எங்க பொண்ணு இல்ல, ஒரு விபத்துல இருந்து காப்பாத்தி வச்சுருக்கோமுன்னு. ஆனா இப்போ வரைக்கும், உன்ன என் பொண்ணு மாதிரிதான் உன்னை பாத்துக்குறோம்.. நீயும் அப்படி தான் பானு, என் பொண்ணு இருந்தா கூட இப்படி எங்கள பாத்து இருப்பான்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு என் பொண்ணா இந்த வீட்டுல வாழ்ந்து இருக்க, ஆஷிக்கை உன் பையன் மாதிரி வளத்து இருக்க”..
Advertisement
” வாப்பா “! என்று ஆபிதா பானு “ஆஷிக் என் பையன் தான் வாப்பா, நீங்க என் வாப்பா, இது என் அண்ணன் முபாரக் என்று சொன்னவள், நீங்க எல்லாம் தான் என் குடும்பம்,,. நான் யாரு என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன், யார் சொல்லுறதையும் கேட்க மாட்டேன், ஆஷிக்கும் , சிவாவும் என் பிள்ளைகள்” அவ்வளவு தான் என்பது போல் அமைதியாகி விட..
ஆனா விக்ரம் சொல்லுற எல்லாம்
சரியா இருக்கும்மா..
அவர் நீ எங்க கிட்ட கிடைச்ச நாளை சரியா சொல்லுறாரே. உன் போட்டோ, உன் அப்பா அம்மா போட்டோ, எல்லாம் காட்டுறாரே என்று சொல்ல..
” எனக்கு இவர ஞாபகம் இல்லையே வாப்பா” என்றாள்.
“யோசிச்சு பாரு ஆபிதா, அவர் சொல்லுறது சரியா இருந்தா, நீ அவர் மனைவி, சிவாக்குட்டி அவர் பொண்ணு ” என்று சொல்ல..
” அவ தான் ஞாபகம் இல்லன்னு சொல்லுறாளே வாப்பா, அவன போக சொல்லுங்க” என்றான் முபாரக்…
” நீ அமைதியா இரு முபாரக், அவர் சொல்லுறது எல்லாம் சரியா இருக்கு, ஆபிதாவுக்கு இப்ப ஞாபகம் ஏதும் இல்ல, கொஞ்ச நாள் கழிச்சு இவர் ஞாபகம் வரலாம், இல்லையா.. “
” ஞாபகம் வந்த அப்போ பாத்துக்கலாம், இப்போ போக சொல்லுங்க ” என்றான் முபாரக்.
” நீ பேசாம இரு முபாரக், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான், ஒரு பொருளோட உரிமை பட்டவன் வந்து அந்த பொருளை கேட்டா அவன் கிட்ட குடுத்துறனும், அது மாதிரி தான் இதுவும். ஆபிதாவும், சிவாவும் விக்ரமோட சொத்து அத அவர்கிட்ட திருப்பி குடுக்குறது தான் முறை”..
மஹாமுது காதில் விக்ரம் ஏதோ சொல்ல..
” சரி ” என்ற முபாரக் ஆபிதா இங்கே வாம்மா என்றவர், அவளை அருகில் அமர வைத்து விட்டு. “உன் கழுத்தில் ஒரு சில்வர் கலர் செயின் போட்டு இருப்பியே அந்த செயினை எடு ” என்றார்..
” இல்ல வாப்பா அந்த மாதிரியான செயின் ஒன்னும் என் கழுத்தில் இல்லை ” என்றாள்..
” பொய் சொல்லாத ஆபிதா, வாப்பா சொன்ன கேளு, உன் கழுத்தில் உள்ள செயினை வெளியில் எடு ” என்க..
ஆபிதாவின் கை நடுங்க அவளின் கழுத்தில் இருந்த பிளாட்டின செயினை வெளியே எடுத்தாள், அதில் வி. மற்றும் எஸ் என்று ஆங்கிலத்தில் எழுத்து வைரம் பதித்து மின்னி கொண்டு இருக்க.
” இது நான் பல்லவிக்கு போட்ட செயின் என்றவன். அந்த செயினை அவன் போட்டு இருப்பது போல போட்டோவை மஹாமுதுவிடம் காண்பிக்க..
முபாரக் அந்த போட்டோவை பார்த்தவன். ஆபிதாவின் கழுத்தில் இருப்பது போலவே அந்த செயின் இருக்க. இத மறந்துட்டோமே என்று யோசிக்க.
எழுந்து நின்ற விக்ரம் “இத விட. வேற என்ன வேணும் இவ தான் என் பல்லவி என்று சொல்ல”..
மஹாமுது நான் உங்கள நம்புறேன் விக்ரம் தாராலமா உங்க மனைவியும், உங்க பொண்ணு சிவகாமியை அழைச்சுட்டு போகலாம்” என்றார்..
ஆபிதா கண்கலங்கி மஹாமுதுவையும், முபாரக்கையும் பார்க்க…
மஹாமுது ஆபிதாவின் தோளை தட்டி கொடுத்தவர், “நீ இனி விக்ரம் கூட தான் இருக்கனும்” என்றார்..
ஆபிதா அண்ணனை பார்க்க, அவனோ முடியாதுன்னு சொல்லு என்பது போல் கண்காண்பிக்க..
ஆபிதா அருகில் விக்ரம் வர.
அவனை விட்டு தள்ளி சென்றவள்..” நீங்க சொல்லுற எல்லாம் சரியா இருந்தாலும், நான் உங்க கூட வர மாட்டேன். நான் சாகுற வரைக்கும் போயியிருக்கேன்னா ஏதோ உங்கள பிடிக்காம தானே, சாக போயிருப்பேன் அதனால சாகப் போனவள் செத்துட்டேன்னு நெனச்சுக்கோங்க சார், எனக்கு என் இரண்டு பிள்ளைகள் தான் முக்கியம், என்னை எந்த மாதிரியான நிலமையில இருந்து காப்பாத்தி வச்சு இருக்குற இந்த குடும்பம் தான் எனக்கு பெருசு. நான் நிம்மதியா, சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன், என் வாழ்க்கையில குழப்பம் பண்ணாதீங்க” என்று சொல்ல..
“பல்லவி நான் என்ன நடந்துச்சுன்னு உனக்கு விளக்கமா சொல்லுறேன்” என்று விக்ரம் சொல்ல..
“எனக்கு இந்த வாழ்க்கையே போதும். நீங்க எனக்கு வேண்டாமுன்னு நான் முடிவு எடுத்துட்டேன். என் வாழ்க்கையில குழப்பம் பண்ணாதீங்க”..
மஹாமுது ” ஆபிதா என்று அழைக்க”..
” வாப்பா இது என் வாழ்க்கை, இத நான் தான் முடிவு பண்ணுவேன். உங்களுக்கு நான் இங்க இருக்கக்கூடாதுன்னா சொல்லுங்க நானும் என் இரண்டு பிள்ளைகளும் வெளியில் போயிடுறோம்” என்று கூற…
மஹாமுது அமைதியாகி விட..
ஆபிதா பானு விக்ரமிடம் ” நீங்க போலாம்” என்று கதவை காண்பிக்க..
முபாரக் எழுந்து நின்றவன், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று விக்ரமை பார்த்து முறைத்து நிற்க..
” பல்லவி” என்று விக்ரம் ஏதோ கூற வர..
போதும் என்பது போல் விக்ரமை பார்த்து கை எடுத்து கும்பிட்டவள், ” 4 வருஷம் எப்படி என்னை பாக்காமல் இருந்தீங்களோ அப்படி இருங்க ” என்று திரும்பி கொள்ள ,.
இனி இங்கே இருக்க கூடாது என்று விக்ரம் நடக்க போக..
விக்ரமனின் அருகில் வந்த சிவகாமி, விக்ரமை பார்த்து “சூர்யா அண்ணா வல்லயா” என்று கேட்க..
தனது மகளை அள்ளி அணைத்துக்கொண்டவன் சோபாவில் அமர்ந்து சிவாக்குட்டியை அணைத்து கண்கலங்க..
தன் மகளை அணைத்தவனுக்கு அனைத்தும் கிடைத்தது போல் தெரிய..
குழந்தை விக்ரமை பார்த்து “ஏன் உங்க கண்ணுல தண்ணி வருது” என்று கேட்க..
“உன்ன பார்த்ததுல வந்த கண்ணீர்டா இது” என்றான்..
“சூர்யா அண்ணா எங்கே?.”
” அவன் மலேசியாவில் இருக்கான் பாக்க போகலாமா” என்று கேட்க..
முபாரக் வேகமாக வந்தவன், சிவாக்குட்டியை விக்ரமனிடம் இருந்து பிடுங்க வர..
தன் மகளை அணைத்து பிடித்து தன்னுடன் வைத்து கொண்டவன்..
” உன் தங்கச்சியை ஆபிதாவை, உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம், அவளும் உன் பேச்சு கேட்டு ஆடலாம்..
இது என் குழந்தை, என் பொண்ணு இவள தூக்கிட்டு போக எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, நான் தூக்கிட்டு போவேன்” என்றான்..
“அது முடியாது இவ என் ஆபிதாவோட பொண்ணு” என்று சிவகாமியை விக்ரமிடமிருந்து வாங்க போக..
மஹாமுது முபாரக்கை ஒரு அறை அறைந்து இருந்தார். ” சிவா விக்ரம்மோட பொண்ணு அவர் அவளை அழைச்சுட்டு போக எல்லா உரிமையும் அவருக்கு இருக்கு”,, என்றவர்..
விக்ரமை பார்த்து ” சிவாக்குட்டி உங்க கூட வர்றேன்னு சொன்னா, கூட்டிட்டு போங்க, அப்படி வரமாட்டேன்னு சொன்னா கொஞ்சம் பொறுமை இருங்க” என்றார்..
விக்ரம் தன் மகளிடம் ” நான் உன் அப்பாடா ” என்றான்..
” அப்பாவா, அப்பா அல்லா கிட்ட போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க, ஐ அப்போ அல்லா திருப்பி உங்கள அனுப்பிட்டாரா ” என்று கேட்க.. “ஆமாம்” என்றான்..
” ஐ அப்பா வந்துட்டாரு, என்றவள் அம்மா பாரு சிவா பாப்பாவுக்கு அப்பா வந்துட்டாரு ” என்றவள் விக்ரமை அணைத்து கொள்ள..
ஆபிதாவின் கண்கள் மகளையே பார்த்து இருந்தது. எத்தனை முறை சிவா பாப்பா, அப்பா எங்கே, எனக்கு அப்பா இல்லையா என்று கேட்டு இருப்பாள். இன்று விக்ரமை அப்பா என்று தெரிந்து அணைத்து கொண்டு இருப்பவளை பார்த்தவளின் மனம் தாருமாறாக துடித்தது..
” என் கூட வர்ரியா என்று விக்ரம் சிவாக்குட்டியிடம் கேட்க”..
ஆபிதா வை திரும்பி பார்த்த சிவகாமி வரல என்று தலையாட்ட.
“உனக்கு யாரெல்லாம் இருக்காங்க ” என்றான் விக்ரம்.
” எனக்கா என்றவள், ஆபிதா அம்மா, ஆஷிக் அண்ணா, மாமா, தாத்தா, பாதிமா பாட்டி, அவளின் பத்து விரலை இன்னும் இவ்வளவு பேரு சிவா பாப்பா பிரண்ட் என்று கைவிரலை காண்பிக்க..
எனக்கு யாரும் இல்ல, என் அம்மா நான் சின்ன பையனா இருக்கும் போது செத்துட்டாங்க, அம்மாவா இருக்குறேன்னு சொன்ன என் பல்லவியும் இப்ப இல்ல, எனக்கு யாருமே இல்ல, என் கூட வர்ரியா எனக்கு அம்மாவா என்று கண்கலங்கி அவள் முன் மண்டியிட்டு கேட்க..
அவன் சொன்னது என்ன புரிந்ததோ சிவாக்குட்டி, விக்ரம் கூட வர்ரேன் என்று தலையாட்ட..
“சூர்யா அண்ணா மலேசியாவில் இருக்கான் அங்கே போலாமா” என்று கேட்க..
குழந்தை உம்… என்று சொல்லி விக்ரமை அணைத்து கொள்ள,.
மஹாமுதுவிடம் வர்ரேன் என்று சொன்னவன். தன் மகளை தோளில் போட்டு வெளியே நடக்க..
ஆபிதா விக்ரம் போகும் திசையை பார்த்து சிவா என்று கதறி அழ…..
error: Content is protected !!