Skip to content
Post Views: 2,540
அத்தியாயம் 28
“நாபியோட ஃபோன்ல வெள்ளிக்கிழமை வரைக்கும் தான் பேசியிருக்கான் சியோங்-மின். சனிக்கிழமையில இருந்தே அவ யார்டையும் பேசலை.” எனக் கூற,
“அதான் டெக்ஸ்ட் பண்ணியிருக்காளே” என்று திவ்யா சொன்னாள்.
Advertisement
“இல்ல, திவி, அவ ஃபோன்ல இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் யார் வேணா அனுப்பியிருக்கலாம். ஏன் அவளைக் கடத்தினவன் கூட அனுப்பியிருக்கலாம். அவளோடது ஆப்பிள் ஃபோன். அவ கைவிரல் ரேகையில ஓபன் ஆகும், ஃபேஸ் டிடெக்ஷன்ல ஓபன் ஆகும். சோ, அவ ஃபோனை யூஸ் பண்ணறது ஈஸியா தான் இருந்திருக்கும்.” என்று பரணி விளக்க, அனைவருமே ஒப்புக் கொண்டனர்.
“போலீஸ் அவ ஃபோன் சிக்னல் லாஸ்டா எங்க இருக்குன்னு டிரேஸ் பண்ணிடுவாங்க. அதை வச்சு அவ லொகேஷன் தெரியவரலாம். பட், நாம நினைக்கற இதையே தானே கடத்தல்காரனும் நினைப்பான். ஃபோன் ஐ.எம்.ஈ நம்பர் வச்சு டிடெக்ட் பண்ண முடியும்னு அவனுக்கும் தெரியும் தானே” என்று சியோங்-மின் கவலையுடன் கேட்டான்.
“யு ஆர் ரைட். அவ ஃபோன் இப்போதைக்கு யூஸ்லெஸ் தான். அது கிடைச்சாலும், ஃபோனை ஆன் பண்ணாமட்டும் தான் சிக்னல் டிடெக்ட் ஆகும்.” என்று பரணி சொன்னான்.
Advertisement
“ஃபைண்ட் மை ஃபோன்னு ஒரு ஆப் இருக்கில்ல? அதை வச்சு ஏதாவது ட்ரை பண்ண முடியுமா?” என்று திவ்யா வினவினாள்.
Advertisement
“இல்ல திவி. அந்த ஆப், நம்ம ஃபோனை நாம தொலைச்சிட்டா, ஃப்ரெண்ட்ஸ் ஃபோன்ல ஒரு கெஸ்டா லாகின் பண்ணி, நம்ம ஃபோனோட மெம்மரி எரேஸ் பண்ணலாம், ஏதாவது ரிங் டோன் ப்ளே பண்ண வச்சு நம்ம ஃபோன் எங்க இருக்குனு நாம கண்டுபிடிக்கலாம். மத்தவங்க ஃபோனை நாம கண்டுபிடிக்க முடியாது. அதுக்கு ஆப்பிள் லாகின் ஐடி, பாஸ்வேர்ட் கேட்கும்.” என்ற பரணி,
சியோங்-மின்னிடம் திரும்பி, “பை எனி சான்ஸ், நாபியோட ஆப்பிள் அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்ட் தெரியுமா?” என்ற வினவ, எதிர்பார்த்தது போலவே சியோங்-மின் இல்லை என்று தலையசைத்தான்.
“யாரோட மெயில் பாஸ்வேர்ட்டும் யாருக்கும் சொல்லியிருக்க மாட்டாங்க. சோ, இப்போ என்ன பண்ணலாம்னு அவங்க அவங்க யோசனை சொல்லுங்க” என்று பரணி கேட்க, மற்றவர்கள் திருதிருவென முழித்தனரே அன்றி உபயோகமாக ஒன்றும் சொல்லவில்லை.
Advertisement
“கைஸ், நாம வேணா அந்த டிரெக்கிங் டிரையல் வழியில ஒரு தடவை முழுசும் நடந்து பார்த்துட்டு வரலாமா? போலீஸ் ஏற்கனவே செக் பண்ணிட்டாங்க தான். பட் நாமளும் ஒரு தடவை செக் பண்ணிடலாமே? என்ன சொல்லறீங்க?” என்று யஷ்வந்த் கேட்க, அனைவருக்குமே அந்த எண்ணம் சரியென்று தோன்றியது.
“இப்போ மணி நாலு ஆச்சு. இன்னும் ஒன் அவர்ல இருட்டிடும். சோ, நாளைக்கு காலையில முதல் வேலையா, அந்த டிரெக்கிங் டிரையல் முழுசும் ஒரு தடவை நாம அலசிடணும்” என்று முடிவெடுத்தனர். சியோங்-மின் அந்த வீட்டிலேயே நாபியின் அறையில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடானது. இரவு உணவை வருணும், பரணியும் சமைத்திட, மற்றவர்கள் மெளனமாய் உண்டு முடித்த சமயம், சியோங்-மின்னின் கைப்பேசி அழைத்தது.
“வெர்மெண்ட் போலீஸ்” என்ற எண் திரையில் மின்னவும், பதட்டத்துடன் தான் கைப்பேசியை எடுத்தான் சியோங்-மின். மறுமுனையில் அவர்கள் பேசியது கேட்காவிடினும், சியோங்-மின்னின் “எஸ். ஓகே, ஐ கெட் இட்” இவர்களை ரொம்பவும் கலவரப்படுத்தியது.
கைப்பேசி அணைப்பட்டதுமே,
“என்னாச்சு, நாபி கிடைச்சுட்டாளா? போலீஸ் என்ன சொன்னாங்க?” என்று அவசரமாக வினவ, “நாபியோட ஆப்பிள் ஃபோன் லாஸ்ட் கால் சிக்னல் வச்சு டிரேஸ் பண்ணதுல, அந்த ஃபோன் இந்த வீட்டுல இருந்து மூணு கிலோ மீட்டர் ரேடியஸ் தாண்டலைன்னு ரிப்போர்ட் வந்திருக்கு.” என்று குழப்பத்துடன் பதிலளித்தான் சியோங்-மின்.
“அப்படின்னா நாபி, இந்த மூணு கிலோ மீட்டர்குள்ள தான் இருக்கான்னு அர்த்தமா?” என்று வருண் வினவ, சியோங்-மின் பதிலேதும் சொல்லவில்லை. வருணின் கேள்விக்கு யஷ்வந்த் பதிலளித்தான்.
“ஃபோன் கூடவே தான் அதோட ஓனர் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது வருண். நாபி கடத்தப்பட்டிருந்தா, கிட்நாப்பர் கண்டிப்பா அவளோட ஃபோனை டெஸ்டிராய் பண்ண பார்ப்பான். போற வழியில தூக்கி எரிஞ்சிருக்கலாம்.” என்று கூற,
“ஆனா, சனிக்கிழமை ஈவினிங் வரை நாபி எனக்கு மெசேஜ் பண்ணியிருக்காளே” என்று சின்ன நம்பிக்கையுடன் கேட்ட சியோங்-மின், “அது நாபி தான் அனுப்புனான்னு என்ன நிச்சயம்? உன்னை நம்ப வைக்க கிட்நாப்பர் அனுப்பியிருக்கலாம்.” என்ற பரணியின் பதிலால் அமைதியானான்.
“சீ கைஸ். திஸ் இஸ் வெரி சீரியஸ். கிட்நாப்பிங் பண்ணறவங்க பெரும்பாலும் பணம் கேட்டு ப்ளாக்மெயில் பண்ண விக்டிம்மோட ஃபோனை உபயோகிப்பாங்க. பணத்துக்காக கடத்தலைங்கறப்போ, அவங்க ஃபோனை எங்கையாவது போற போக்கில வீசிட்டு போயிடுவாங்க.” என்று பரணி சொன்னது ஏற்றுக் கொண்டாலும், அனைவரும் முகமும் வெளிரிப் போயிருந்தது.
“போலீஸ் நாபி ஃபோன் கடைசியா சிக்னல் காட்டின இடத்தைப் பார்க்க, இப்போ வந்துட்டு இருக்காங்க.” என்று சியோங்-மின் சொல்லிய சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அதே இரண்டு அதிகாரிகளும் வீட்டிற்கு வந்திருந்தனர். முதல் முறை போல இவர்களையே குற்றவாளிகள் போல நடத்தாமல், சற்றே பாங்காக நடந்து கொண்டதைப் போன்று தோன்றியது.
“எங்க சீஃப்க்கு உங்க ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி இந்த கேஸை சீக்கி’ரம் ஃபோகஸ் பண்ண சொல்லி ஆர்டர். நாபி-ஜூன் இஸ் எ ஃபாரினர் ஹியர். அவங்களுக்கு ஏதாவது ஆகிட்டா இது இண்டர்நேஷனல் இஷுவா திரும்பிடும். சோ, ப்ளீஸ் கோ ஆபிரேட் வித் அஸ்” என்று கேட்டுக் கொண்டான் நீலக்கண் ஆண் அதிகாரி.
“நாங்க மறுபடியும் இந்த பெரிமீட்டரை செக் பண்ண போறோம். நாபியோட ஃபோன் ஒரு முக்கியமான எவிடென்ஸ். சோ, பக்கத்து வுட்ஸ்ல கொஞ்சம் சர்ச் பண்ண வேண்டியிருக்கு. இந்த ஸ்டிரீட்டோட சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்துட்டோம், நோ இன்ஃபர்மேஷன் ஃபரம் தேர். நாபி, ஸ்டிரீட் வழியா ஜாகிங் போகலை. சோ, அவ அந்த சிசிடிவிய க்ராஸ் பண்ண வாய்ப்பில்லை. சோ, இஃப் எனிதிங்க், வீட்டுக்கு பின்னாடி இருக்க டிரெக்கிங் டிரையல், அதை சுத்தி இருக்க காடு, இதைத் தான் நாம ஃபோகஸ் பண்ணனும்” என்று தன் பங்கிற்கு கூறினாள் அந்த பெண் அதிகாரிச்சி.
“இங்க அக்கம்பக்கத்து வீட்டில விசாரிசிச்சு பாக்கலாமே” என்று வருண் கேட்க,
“எஸ். வீ வில் டு இட் இன் மார்னிங். இந்த ஸ்டிரீட்ல மொத்தம் நாலு வீடு. உங்க வீட்டுக்கு அடுத்த வீட்ல மிஸ்டர். விக்டர் ஆலன் இருக்கார். அதற்கு அடுத்த வீட்டில, மிஸ்டர் & மிசஸ் டிரெண்ட் இருக்காங்க. அவங்க ரொம்ப வயசான கபில். இந்த மூணு வீட்டுக்கும் எதிர் வீதியில இருக்க பெரிய மேன்ஷன் மிஸ்டர் மைக்கல்சன் ஃபேமிலி எஸ்டேட். அந்த வீட்டில இப்போ யாரும் இல்ல. இஸ் தெயர் வெகேஷன் ஹோம்” என்று பதிலளித்தான் நீலக்கண்ணன்.
“நாளைக்கு காலையில திரும்ப சர்ச் பண்ண ஆரம்பிக்கலாம். இப்போ ரொம்ப இருடிடுச்சு. வீ காண்ட் கவர் த ஃபுல் பாத்” என்று கூறிய காவல் அதிகாரிகள், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றிருந்தனர்.
சியோங்-மின் அங்கேயே இரவு கழிப்பதாய் முடிவு செய்தான். “காலையில போலீஸ் கூட நானும் டிரையல் பாத்ல போய் சர்ச் பண்ண ஹெல்ப் பண்ணபோறேன்” என்று கூற, அவனுடன் மற்றவரும் துணையாக செல்வது என்று முடிவானது.
“நீ வேணும்னா வீட்டில இருக்கியா திவி? உன்னால ஸ்னோல ஆறு கிலோமீட்டர் நடக்க முடியுமா?” என்று பரணி கேட்க, “நானும் கூட வரேனே பரணி” என்று சற்றே கொஞ்சலாக திவ்யா கேட்க பரணி உடனே சம்மதித்தான். இருவரது சம்பாஷனையும் அருகே இருந்து கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது உண்மை.
என்னதான் இருவரும் காதலிக்கின்றனர் என்று தெரிந்து கொண்ட போதிலும், அடுத்த தினம், பரணி தானாகவே அவனைச் சமாதானப்படுத்தி, இருவரும் கல்லூரி காலம் தொட்டே பழக்கம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்திருந்த போதிலும், அவன் மனதிற்குப் பிடித்தமாகிப் போன பெண் அவன் கண் முன்னாலேயே இன்னொருவனுடன் கொஞ்சிப் பேசுவதையும் சிரிப்பதையும் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வருணின் மனம் பக்குவப்பட்டதல்ல.
அடுத்த தினம் காலையில் சூரியன் வெளிவரும் முன்பே நடக்கத் துவங்குவது என்று முடிவு செய்தனர். காவல் அதிகாரிகள் இன்னமும் இரு அதிகாரிகளுடன் வந்திருந்தனர். ‘அங்க போயும் பரணியும் திவ்யாவும் கொஞ்சிக்கறதை பார்த்து அஃபெக்ட் ஆகாத மாதிரி அமைதியா இருக்க முடியாது’ என்று நினைத்த வருண், தான் வீட்டில் இருந்து கொள்வதாய் சொல்லிவிட, இவர்கள் நால்வரும் காவலர்களுடன் தேடுதல் வேட்டைக்குச் செல்லத் தயாராகினர்.
வீட்டின் பின்னால் குச்சி குச்சியாய் முதலில் தென்பட்ட மரங்களில் இப்போது லேசான துளிர் விடத் துவங்கியிருக்க, கால்கள் பனியில் மூழ்கும் அளவிற்கு ஒரு அடி உயரத்திற்கு பனி கொட்டியிருந்தது. இந்த இடத்தில் அவ்வளவாக பனி சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால், நாள்பட இறுக்கம் பெற்று கற்கள் போன்றே காணப்பட்டன. அந்த ஒற்றை அடி பாதை போன்ற டிரையல் வழியில் மட்டுமே சற்றே குறைவான பனியும், மிதிபட்ட இலைகளும் அழுகிய சருகுகளும் தென்பட்டன.
ஒரு மணி நேரம் நடந்த அந்த குழு, ஒரு பாழடைந்த மரத்தினால் கட்டப்பட்ட சிறிய வீட்டின் முன் நின்றது. வீடு பராமரிக்கப்படாமல் இருந்ததால், பாசி படர்ந்து காணப்பட்டது. திவ்யா வெளியே நின்றுவிட, காவலர்களுடன் மற்ற ஆண்களும் உள்ளே சென்று துழாவிவிட்டு வந்தனர்.
“உள்ள எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்ல. எல்லாமே பாசி படர்ந்து அழுகலா தான் இருக்கு. ஆளுக யாரும் யூஸ் பண்ண மாதிரி தெரியல” என்று வெளியே வந்ததும் பரணி திவ்யாவிடம் செய்தி சொன்னான். இதற்குள், காவலர்கள் அந்த வீட்டினைச் சுற்றிலும் இரு முறை ரோந்து சென்று ஏதாவது கால்தடம், ஆள் நடமாட்டம் இருப்பதற்கான தடயம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்து வந்திருந்தனர்.
மீண்டும் நடை பயணம் தொடர்ந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த டிரையலின் இறுதியை எட்டியிருந்தனர். “இந்த இடத்தில இருந்து ரெசிடென்சியல் ஏரியா திரும்ப ஆரம்பிக்குது. சோ, இதுக்கு மேல போக வாய்ப்பில்லை” என்று கூறிய காவலர்கள், வந்த வழியே திரும்ப நடக்கத் துவங்கினர். அங்கங்கே நின்று இலைகளில் கால்தடம் தெரிகிறதா என்று உன்னிப்பாய் கவனித்து, கையேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
“நல்லா தரோவா தான் செக் பண்ணறாங்க திவி. ஏனோ தானோன்னு பார்க்கலை.” என்று காவலர்களின் வேலை திறனை மெச்சினான் யஷ்வந்த். மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் பக்கவாட்டை எட்டியிருக்க, அங்கே இவர்கள் வீட்டின் பின்புறத்திற்கு செல்லும் சின்ன பிரிவுப் பாதை தெரிந்தது. அத்தோடு, அங்கிருந்த மற்றொரு சிறிய ஒற்றைப் பாதையும் தென்பட, அதன் வழியே சென்று பார்ப்பது என்று முடிவானது.
அந்த பாதை ஒரு ஐம்பது அடிகள் சென்றதும், இவர்களது அண்டை வீட்டின் பின் பக்கம் சென்று முடிந்தது. காவலர்களுடன் இவர்கள் அங்கே சென்ற சமயம், அந்த வீட்டில் தங்கியிருந்த, அதன் உரிமையாளர், விக்டர் ஆலன் வீட்டின் பின்பக்கம் குளிருக்கு எரிக்க, விறகு வெட்டிக் கொண்டிருந்தான். சற்றே ஆஜானபாகுவாய் தென்பட்ட போதும், காவலர்களைக் கண்டதும் கையில் பிடித்திருந்த கோடாரியை கீழே போட்டுவிட்டு, “எஸ் ஆபீஸர்ஸ். எனி ப்ராப்ளம்?” என்று சினேகமாகச் சிரித்துக் கொண்டு அருகே வந்தான்.
காலவர்கள் கையுடன் வைத்திருந்த நாபி-ஜூனின் புகைப்படத்தைக் காட்டி, “இந்த பெண்ணைத் தெரியுமா?” என்று கேட்கவும்,
“எஸ். இந்த பெண் அந்த வீட்டில் வசிக்கிறாள்.” என்று இவர்களது வீட்டின் பக்கம் கை காட்டினான்.
“திஸ் கேர்ள் இஸ் மிஸ்ஸிங் ஃப்ரம் சாடர்டே” என்று காவல் அதிகாரிச்சி கூற, “ஓ மை காட்” என்று சற்றே அதிர்ச்சி காட்டிய விக்டர் ஆலன், “ஹ்வ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்க, காவலர்கள் அவரிடம் இன்னும் சில கேள்விகள் கேட்டனர்.
இந்த பெண் பற்றி தகவல் ஏதும் தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து திரும்ப வீட்டிற்கு வந்தனர். காவலர்கள் விக்டரிடம் பேசிக் கொண்டிருந்த சமயம், திவ்யாவும் மற்றவர்களும் சற்றே தள்ளி நின்று சம்பாஷனையை கவனித்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.
விக்டருடன் பேசிவிட்டு, அடுத்த வீடான, திரு & திருமதி டிரெண்ட் வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தினர் காவலர்கள். டிரெண்ட் தம்பதியினர் 70 வயதைக் கடந்தவர்கள். நாபியின் புகைப்படத்தைக் காட்டவும், “எஸ் வீ நோ திஸ் கேர்ள். ஷி வேவ்ஸ் வென் ஷி ரன்ஸ் அவுட்சைட்” என்று கூறிய திரு.டிரெண்ட், நாபி ஊரடங்கு உத்தரவு போடும் முன்பு ரோட்டில் ஜாகிங் செல்லும் சமயம் இவர்கள் வீட்டின் வெளியே நின்றிருந்தால் குட்மார்னிங் செல்லிவிட்டு கையசைத்துவிட்டு ஓடுவாள் என்று தெரிவித்தார். ஊரடங்கிற்கு பின்னர் இந்த வழியே அவள் வருவதில்லை என்பதும் சொன்னார்.
திருமதி டிரெண்ட், அவளின் நலத்திற்காக தான் பிராத்தனை செய்வதாக சொல்ல, காவலர்கள் அந்த வீட்டில் இருந்தும் எந்த துப்பும் கிடைக்காமல் வெளியேறினர். விக்டர் ஆலன், மற்றும் டிரெண்ட் தம்பதியினரின் வீட்டில் விசாரித்து விட்டு வந்த காவலர்கள் சோர்வுடன் இருக்க, அவர்களை அனுகிய யஷ்வந்த், “இவர்களது வீட்டில் சோதனை செய்து பார்த்து விட்டீங்களா?” என்று வினவினான்.
இந்தியாவில் காவலர்கள் ஒருவர் வீட்டினுள் நுழைந்து சோதனை செய்வது சாதாரணமாக நடந்தேறும் விஷயம். அந்த ரீதியின் தான் யஷ்வந்த் காவலர்களிடன் கேட்டது. ஆனால், அவன் கேள்விக்கு காவலர்கள் சற்றே கோபம் கொண்டது தெரிந்தது.
“அப்படி வாரண்ட் இல்லாமல் விசாரிக்க முடியாது. மேலும், இது கொரோனா நேரம். இப்போது அவர்களை சந்தேகிக்க உறுதியான சாட்சி வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்வையிட அனுமதி கிடைக்கும். அதிலும், விசாரணை செய்த நபர்கள் எவருமே முன்னர் குற்றவாளிகளோ தண்டனை பெற்றவர்களோ இல்லை. அவர்கள் நாம் கேட்ட கேள்விக்கு ஒழுங்காக தங்களுக்குத் தெரிந்த விஷயத்தை சொல்லியிருக்க, எந்த காரணம் சொல்லி சோதனை செய்ய முடியும். நாட் பாசிபிள்” என்று பதிலளித்திருந்தனர்.
காவர்களின் கூற்றும் ஒப்புக் கொள்ளும் படியாகவே இருந்தது. டிரெண்ட் தம்பதியினர் மீது சந்தேகம் கொள்ள காரணம் இல்லை. விக்டர் ஆலன் சற்றே முரட்டுத்தனமாக தோன்றினாலும், காவலர்கள் கேட்ட கேள்விக்கு எந்த தடையும் இல்லாமல் பதில் சொல்லியிருந்தான். அவனைச் சந்தேகிக்கவும் எந்த காரணமும் இருக்கவில்லை.
டிரையல் வழியில் ஏதாவது துப்பு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாபி-ஜூனைப் பற்றி கவலை அதிகரித்தது. அவள் உயிருக்கு எதுவும் ஆபத்து வந்திருக்கக் கூடாதே என்று அச்சம் எழுந்தது. அனைவருக்குள்ளும் இந்த பயம் உருண்டோட, அதிகம் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்த்தனர்.
அமைதியாக வலம் வந்த திவ்யாவுடன் பரணி எதுவும் பேசிக் கொள்ளாவிடினும், உன்னருகே இருப்பதே போதுமானது என்பது போலவே நடந்து கொண்டான். அவள் இருக்கும் இடம் தேடி வந்து அவன் கணினியை வைத்துக் கொண்டு அவனும் உடனமர்ந்து கொள்வான். அவ்வப்போது சின்ன சிரிப்பை வெளிப்படுவது மட்டுமே அவன் செய்தது. ஆனால், அவன் இருப்பே திவ்யாவிற்கு யானை பலமாக அமைந்தது.
அன்றைய தினம் இப்படியே கழிந்திருக்க, நாபி காணாமல் போய் முழுவதுமாய் மூன்று தினங்கள் கழிந்திருந்தன. மூன்று நாட்களாக நாபியின் புகைப்படத்தை மீடியாவில் வெளியிடாமல் தாங்களாகவே தேடிக் கொண்டிருந்த காவல் துறை, செவ்வாய் அன்று அதிகாலை செய்தியில் நாபியைப் பற்றி செய்தி வெளியிட்டு தேடுதலை தீவிரப்படுத்தியிருந்தது.
இவர்களது அலுவலகத்திலும், அனைவருமே நாபியின் நன்மைக்காக பிராத்தனை செய்ய வேண்டியும், அவள் காதலனுக்கும், வீட்டில் தங்கியிருந்த அவள் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறினர். செவ்வாய் கிழமையும் சென்றுவிட்டிருக்க, அன்றைய தினம் இரவு, திவ்யா வீட்டின் முன்னால் போட்டிருந்த கூடை நாற்காலியில் அமர்ந்திருந்தாள். குளிருக்கு இதமாக கெட்டியான போர்வையைப் போர்த்திக் கொண்டு அதனுள் சுருண்டு அமர்ந்திருந்தாள்.
இவளைத் தேடிக் கொண்டு அங்கே வந்த பரணியும், சோஃபாவில் அவளருகே அமர்ந்துகொள்ள, அவன் தோளில் இயல்பாக சாய்ந்து கொண்டாள். அவன் கைகள் திவ்யாவின் தோளைச் சேர்த்து அணைத்துக் கொண்டன.
“இந்த நாபி எங்க போயிருப்பா பரணி. எனக்கு நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. வேலையே ஓடலை தெரியுமா?” என்று மெல்லமாய் பேசினாள். குளிரில் அவள் உதடுகள் மெல்ல தந்தி அடித்த வண்ணம் தான் இருந்தன.
“நாபியை பத்தி யோசிக்கவே முடியலை. இந்த நேரம் எங்க இருக்காளோ, எப்படி இருக்களோ, இருக்காளோ என்னவோ. நினைச்சு பார்த்தா, எல்லாமே என் தப்புன்னு தோணுது. வீட்டை விட்டு போன்னு சொன்னதுனால வந்த வினை தானே இது” என்று பரணி சொல்லிட, அவசரமாக அவன் வாயை மூடியவள்,
“அப்படியெல்லாம் சொல்லாத பரணி. அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது. நீ என்ன தப்பு பண்ண? அவளா தேடிகிட்ட வம்பு தான் இது. வெளிய போகாதன்னு எவ்வளோ தடவை சொல்லியும் கேட்கலை. நம்ம சொல் பேச்சு கேட்டு வீட்டில இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல” என்று ஆறுதலாய் திவ்யா கூற, பரணி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
“என்ன தான் சொல்லு திவி, அவ காணாம போனதுக்கு நானும் ஒரு வகையில காரணம் தான். எனக்கு அதை நினைச்சாலே என் மேல கோபமா வருது. ஏன் அப்படி யோசிக்காம பேசினேன்னு எரிச்சல் வருது திவி” என்று சொன்னவனின் குரல் உடைபட, திவி தடுமாறினாள்.
அவனை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவள், அவனை தோளோடு அணைத்துக் கொள்ள, பரணி அவள் அணைப்பில் இன்னமும் மனசு அழுத்தம் கொடுக்க, வாய்விட்டே அழுதான். சிறிய கேவலாக வெளிப்பட்ட அவன் அழுகை திவ்யாவின் கண்களையும் கலங்க வைத்தது.
“ஒண்ணுமில்ல பரணி. நாபி கிடைச்சிடுவா. பயப்படாத, அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது பரணி. என் செல்லம்ல அழுகாதடா” என்று சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல மெல்லமாய் சொல்லிக் கொண்டே இருந்தாள். அவள் நெஞ்சில் சாய்ந்திருந்த பரணியின் அழுகை, இவள் பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவருவது தெரிந்தது.
நீண்ட நேரம் கழித்து முகத்தை அவள் உடையிலேயே துடைத்துக் கொண்டவன், “எனக்கு ஒன்னு தோணுது சொல்லட்டா?” என்றான்.
“ம்ம்ம்” என்று திவ்யா சொல்ல,
“போலீஸ் அஃபீஷியலா அந்த பக்கத்து வீட்டில தேடிப்பார்க்க பர்மிஷன் வாங்கணும்னு சொன்னாங்க. இப்போ கொரோனா நேரத்தில பர்மிஷன் கிடைக்காது. அதனால, நாமளே அந்த வீடுகுள்ள தேடிப்பார்க்கலாமா?” என்று பரணி கேட்பான் என திவ்யா நினைக்கவில்லை.
அவர்களைப் பற்றி ஏதேனும் சொல்லுவான் என்றோ, அவளுடன் சேர்த்து இப்படி அமர்ந்திருக்கும் நேரத்தைப் பற்றி சிலாகிப்பான் என்றோ எண்ணியிருக்க அவனோ நாபியைத் தேடுவது பற்றி சொல்லவும், அவன் மனதின் குற்ற உணர்வு அவனை எவ்வளவு ஆட்டிப்படைக்கிறது என்பதே அவளுக்குப் புரிந்தது.
பார்க்க கரடுமுரடாகத் தோன்றினாலும் அவன் உள்ளம் எத்தனை மென்மையானது என்று நினைக்கும் போது அவள் உள்ளத்தில் அவன் மீது பேரன்பு பொங்கியது. அவன் மனசாந்திக்கு தன்னாலான எல்லாமே செய்யவேண்டும் என்ற உந்துதல் எழ, “ம்ம், தேடிப்பார்க்கலாம் பரணி. நீ என்ன சொன்னாலும் அது சரியா தான் இருக்கும். எப்படி தேடலாம்னு சொல்லு.” என்று திவ்யா சொல்லிட, கன்னத்தில் பதிந்திருந்த கண்ணீர் கோட்டை அழுந்த தேய்த்தவன், எழுந்து அமர்ந்து கொண்டு பேசினான்.
error: Content is protected !!