Skip to content
Post Views: 3,885
பரணிக்குள் ஒரு எரிமலையே வந்து விட்டிருந்தது!
ஜான்வியின் நல்ல எதிர்காலம் தன்னால் கெட்டு விடக் கூடாது என்று நினைத்து தானே அவன் காதல் ஆசையை எல்லாம் கட்டுப்படுத்தி கொண்டு, தன்னை காதலுடன் நெருங்கும் அவன் அன்பு மனைவியை விட்டு மிகுந்த மன வேதனையை அடக்கி வைத்துக்கொண்டு விலகி நிற்கிறான்!
ஆனால் ஜகதீஸ் பெரிதும் நம்புகிற இவனும் இவன் அப்பாவும் இவ்வளவு பெரிய துரோகிகளா?
சொத்துக்காக ஒரு பெண்ணை அவள் புருசனிடம் இருந்து பிரித்துக் கொண்டு போகும் அளவு!
Advertisement
ஏண்டா! திருட்டுப் பொறுக்கி! உனக்கு இந்த பரணியோட பொண்டாட்டி வேணும், அவள் சொத்தும் வேணும், அப்புறம் அவ உனக்கு பிரெஷா வேற வேணுமா?
எவ்வளவு திமிர்! உன்னை எல்லாம் உயிரோடவே விடக் கூடாது! மறுபடியும் கனகுவின் கைகளில் இருந்து விடுவித்துக்கொண்டு நிகிலை அடிக்கப் போனான் பரணி!
“டேய்..டேய்.. கொஞ்சம் பொறுடா.. நான் ஒண்ணும் அவனை உன்கிட்ட இருந்து காப்பாத்தல, அவனை இன்னும் வலுவா சிக்க வைக்க வேணும்னு தான் தடுக்கிறேன்!” என்றார் கனகு!
Advertisement
“இல்ல ஆத்தா, உனக்கு அவனைப் பத்தி முழுசா தெரியாது.. அவன்.. ” பரணி மேலே சொல்ல வந்தவனைத் தடுத்து
Advertisement
“எல்லா வெங்காயமும் எனக்குத் தெரியும். அவனைப் பத்தியும் தெரியும். உன்னைப் பத்தியும் தெரியும். நீ வாடா, என் கூட” என்று அவனை பரத்திடம் அழைத்து சென்றார் கனகு.
அங்கு மணியும் உட்கார்ந்து இருந்தான் பரத்தோடு.
“வாங்க அண்ணே, உங்க கிட்ட நிறைய பேசணும், அந்த நிகிலைப் பத்தி”.
Advertisement
“நீங்களும் நானும் நினைச்ச மாதிரி இவன் ஒண்ணும் ஜான்வி அண்ணி பின்னாடி ஜொள்ளு விட்டு அலையிற சாதாரண காமெடி வில்லன் இல்ல!
இவன் பின்னாடி ஒரு ஆர்கன் திருட்டு மாபியா கும்பலே இருக்கு!
இவனும் இவன் அப்பனும் அப்படி ஒரு நெட்வொர்க்கில் இருக்கிறாங்க.
முதலில் சின்ன லெவலில் ஏஜென்டாக மட்டுமே இருந்த இவர்களுக்கு,
அதை இன்னுமும் டெவலப் பண்ண ஆசை!
அதற்கு அவர்களுக்கு ஜகதீஸ் மாமாவோட ஹாஸ்பிட்டல் வேணும்!
அது ஜான்விக்கு தான் என்று அவர் சொல்லி விட்டதால், எப்படியாவது நிகில் ஜான்வி அண்ணிய கல்யாணம் செய்து அதைக் கைப்பற்ற நினைத்த வேளையில், அண்ணிக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு!
அதான் உங்க கிட்ட இருந்து அண்ணியைப் பிரிச்சு கொண்டு போக இத்தனை முயற்சி! நாடகம்!
இப்போது அவங்களுக்கு ஜான்வி அண்ணியின் மூலம் கிடைக்கப் போகும் ஜகதீஸ் மாமாவோட மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அப்புறம் இந்தியா பூராவும் இருக்கும் அவங்க பிரான்ச் ஹாஸ்பிட்டல்ஸ், அப்புறம் அண்ணியோட அம்மா விஜியோட ஹாஸ்பிட்டல் எல்லாமே தான் டார்கெட்!
அதுக்கு துருப்பு சீட்டு ஜான்வி அண்ணி!
அதனால தான் அவங்கள உங்க கிட்ட இருந்து பிரிக்க இவ்வளவு எப்போர்ட் போடுறாங்க!”
இதைக் கேட்ட பரணி மிகவும் அதிர்ந்துப் போய், “நீ எப்படிடா இத கண்டுப் பிடிச்ச?” என்று கேட்டான்.
எல்லாம் நம்ம மணி செய்த வேலை தான்!
வழக்கம் போல, மணி பெரிதாக திட்டமிட்டு எல்லாம் செய்யாத ஒரு காரியம் தான் இதற்கு பிள்ளையார் சுழிப் போட்டு ஆரம்பித்து வைத்திருந்தது!
மணிக்கு, இந்த நிகிலை எதிலாவது கோத்து விட்டு அடி வாங்க வைக்க ஆசை!
உங்க ஊர்த் திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் உண்டான்னா கேட்ட? அப்ப எங்க ஊர் ஜல்லிக்கட்டுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ! என்று நினைத்தவன்,
நிகிலுக்கு தெரியாமல் அவனை அந்த ஊர்த் திருவிழாவில் ஒரு முக்கிய அங்கமான ஜல்லிக்கட்டில் நிகில் பேரை சேர்த்து விட்டு ஜல்லிக்கட்டு காளை மாட்டிடம் குத்து வாங்க வைக்க விரும்பினான்.
ஏற்கனவே அவனுக்கு நிகிலை அவர்கள் வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு மாட்டிடம் அவனைக் கூட்டிப் போய் பயமுறுத்திய நிகழ்வும் உண்டு!
அதற்காக, ஜல்லிக்கட்டில் இப்போது உள்ள நெறிமுறைகளின் படி, கலந்து கொள்பவர்களின் விவரங்கள் சொல்லி முன்பதிவு செய்ய வேண்டியிருக்க, நிகிலிடம் சென்று ஆதார் மற்றும் விவரங்களைக் கேட்டான்.
எதற்கு என்று கேட்ட நிகிலிடம், “பரணி அண்ணன் குடும்பம் நடத்துகிற ஹாஸ்பிட்டல், இந்த திருவிழாவின் போது இலவச மருத்துவ முகாம் நடத்துவாங்க.
அதுக்கு எங்க ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ்களோட, வெளி டாக்டர்களும் வாலண்டியராக கலந்துப்பாங்க.
அப்ப அவங்களோட பெயர் விவரம் எல்லாம் முன் கூட்டியே இப்படி பதிவுப் பண்ணுவோம்” என்று வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.
தமிழில் இருந்த அந்த ஜல்லிக்கட்டு பார்மில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டான்.
கையெழுத்துப் போட்டுக் கொண்டே கேட்டான் நிகில், “அந்த மெடிக்கல் கேம்புக்கு யார் யார் வருவாங்க?”
“சுத்துப்பட்டு கிராமத்துல இருந்து நிறைய பேர் வருவாங்க. எல்லோருக்கும் சுகர் பிபி டெஸ்ட் பண்ணுவாங்க.
இந்த முறை, ஜான்வி அண்ணி, வர பொம்பளைங்களுக்கு எல்லாம் தைராய்டு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்க. அதனால அதுவும் நடக்கும் இந்த வருஷம்”.
“அப்ப, நிறைய பேருக்கு ப்ளட் டெஸ்ட் பண்ணுவீங்களா? யார் அதை பண்ணுவா?” நிகில் கண்ணில் தென்பட்ட அந்த ஒரு சந்தோஷ மின்னல், மணிக்கு என்னமோ தப்பாகப் பட்டது!
உடனே பரத்திடம் அதையும் சொல்லி விட்டான்.
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது கனகுவும் வந்தார்.
“டேய்.. நம்ம செல்வராசுவோட மகன் தானே நம்ம ஆஸ்பத்திரியில ரத்தம் டெஸ்ட் பண்ற லேப்பில் மானேஜர்?
அவனைப் போய் இந்த நிகில் பார்த்து, இந்த முகாம் முடிஞ்சவுடனே, அவன் கம்ப்யூட்டர்ல இருக்கிற ரத்தம் டெஸ்ட் பண்ணினவங்க பெயர், அட்ரஸ், ப்ளட் க்ரூப் எல்லாம் இருக்கிற மொத்த விவரமும் அவனுக்கு வேணும்னு கேட்டுருக்கான்.
அவனுக்கு வேணுமின்னா காசு கூட தரேன்னு சொல்லி பேரம் பேசி இருக்கான்டா! என்னமோ பெரிசா தப்பு இருக்கு அவன் கிட்ட அவன கொஞ்சம் கவனி!” என்று சொன்னார்.
அதற்கு பிறகு பரத், எத்திக்கல் ஹேக்கிங் படித்து விட்டு சைபர் க்ரைமில் வேலைப் பார்க்கும் அவன் நண்பனின் உதவியை நாடினான்.
அவன் உதவியுடன் உடனேயே நிகில் போன் டேப் செய்யப்பட்டது.
அவனும் சந்தீப்பும் பேசும் அனைத்தையும் கேட்டவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
மிகப்பெரிய மனித உறுப்புகள் திருட்டில் ஈடுபட்டிருக்கும் கும்பலோடு அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது!
மேலும் விவரங்கள் கிடைக்க, டிபார்மென்ட் அவர்களுக்குப் பொறி வைத்துக் காத்திருந்தது.
“பரணி, நிகில போலிஸ் பார்த்துப்பாங்க, நீ போய் உன் பொண்டாட்டியை சமாதானம் செய்.
அவளை கூட்டிக் கொண்டு அவ பாட்டி ஜானு வீட்டுக்கு போ. நானும் ஜகதுவும் பின்னாடி வர்றோம்”. என்று பரணியை ஜான்வியிடம் அனுப்பி வைத்தார் கனகு.
மணிக்கு தான் ஒரே வருத்தம்!
அவன் வைத்த ஜல்லிக்கட்டு பொறியில் இருந்து நிகில் தப்பித்து விட்டான்.
“இப்ப என்னடா, உனக்கு அவன் கையை காலை உடைக்கணும் அவ்வளவு தானே! அத ஆத்தா பார்த்துகிறேன் விடு. நீயும் எனக்கு பேரன் தாண்டா, உன்னோட ஆசைய நிறைவத்த மாட்டேனா நான்?” என்றார் கனகு அவனிடம் சமாதானமாக!
—
தங்கள் அறைக்கு சென்றான் பரணி. கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. நிகில் உள்ளே வந்து விடுவான் என்று ஜான்வி இப்போது எல்லாம் உள்பக்கம் பூட்டியே தான் வைத்துக் கொண்டிருந்தாள்!
கதவைத் தட்டி குரல் கொடுக்க, அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்தவள், உடம்பில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த புடவை சகிதம் வந்து கதவைத் திறந்தாள் ஜான்வி!
உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்த அவனை கொஞ்சம் கூட சட்டை செய்யாது, கொஞ்சம் யோசித்தவள், பிறகு, அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு, அவள் புடவையை மீண்டும் அவிழ்த்து சரியாக கட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.
உள்ளுக்குள், ஆமா, பாத்ரூமை திறந்து வைத்துக்கொண்டு குளிச்சப்பக் கூட இது ஒண்ணும் பண்ணல, இப்ப மட்டும் வந்துட போவுதா என்ற நினைப்பு!
ஆனால், அவள் எண்ணியதற்கு மாறாக அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் பரணி!
சரேலென்று கோபமாக திரும்பினாள் ஜான்வி! கையில் இன்ஜெக்சன் நீடில்!
“கையை எடுடா முதல்ல, எடுக்கல அப்படியே குத்திப்புடுவேன்!”
“அய்யோ! ஜான்விம்மா, என்ன இது? நான் உன் புருசன்டி? இப்படியெல்லாம் பண்ணப்படாது.. மீ பாவம்! “என்று அவன் அசராமல் கொஞ்சிக் கொண்டு நிற்க,
“ஓ.. சாருக்கு அது இப்ப தான் நினைப்பு வருதா? இத்தனை நாள் கோமாவில் இருந்தீங்களா? இதுல அந்த நிகில வேற நம்ம விசயத்துல இழுத்துட்டு..”
அவள் கையை மடக்கி, கவனமாக அந்த ஊசியைப் பிடுங்கி ஓரமாக வைத்தவன், “ஏண்டி.. உனக்கு மட்டும் தான் பொசசிவ்நெஸ் வருமா? எனக்கு வராதா?
நீ பாட்டுக்கு அவன் கூட வந்து இறங்குற! அவன் என்னடான்னா அப்படியே அட்டை மாதிரி உன்னை ஒட்டிக் கிட்டே வரான், அதான் கோபத்துல சொல்லிட்டேன்!
ஏன், அன்னிக்கு ஒரு நாள், நீ என்னை கேக்கல, உங்க ஹார்ட் ஜனனிய நினைச்சு தானே துடிக்குதுன்னு?”
“ம்ம். கேட்டேன், அவ.. அந்த ஜனனி உங்களோட எக்ஸ்! ஆனா இந்த நிகில் எனக்கு அப்படியா?”
“சரி தப்பு தான். ஆனா அன்னிக்கு நான் கோபத்துல உன்னை என்ன பண்ணினேன்?
இந்த உதட்டை கடிச்சு வச்சேன். அப்ப நீயும் அதையே தானே பண்ணியிருக்கணும்!
இப்படி ஊசியை குத்துற வயலன்ஸ் எல்லாம் கூடாது! சரியா?” சொல்லிக் கொண்டே அவள் முகத்தை நெருங்க, அவள் மீண்டும் கோபமாக தள்ளி விட்டாள்.
“இல்ல.. நான் இத நம்ப மாட்டேன், நீங்க வேற எதையோ மனசுல வச்சுட்டு தான் விலகிப் போனீங்க!
இல்லன்னா, அன்னிக்கு நான் தேளுக்கு பயந்துட்டு கதவைத் திறந்து வச்சுட்டு குளிச்சுட்டு இருந்தப்போ, நீங்க அப்படியே வெளியே கதவைப் பூட்டிட்டு போயிட்டீங்க, நீங்க அப்படி போற ஆளா? இதுல என்னமோ இருக்கு! நான் நம்ப மாட்டேன்!”
பரணி கொஞ்சம் திகைத்து விட்டு, “இல்லடி, அன்னிக்கு கோவில்ல என்னை வரச் சொல்லி போன் வந்தது. அதான் நான் கிளம்பிப் போயிட்டேன்!”
“இல்ல.. பொய்! உங்களுக்கு போனே வரல அப்ப!”
“ஷ்.ஷ். அப்..பாஆ.. இப்ப என்ன.. ஒரு படத்தில வர மாதிரி.. உன் பப்பா தான் அவர் பொண்ணை தொடக் கூடாதுன்னு என்கிட்ட வாக்கு வாங்கிட்டாருன்னு சொல்லட்டா?”
“ம்ம். என் பப்பா ஏன் அப்படி சொல்லப் போறாரு?
போடா புருஷா ஒரு பொய் கூட உனக்கு ஒழுங்கா சொல்ல வரல..” அவள் பப்பாவை பற்றி பேசியதும், அவளின் முகம் பிரகாசம் அடைந்தது. அவளின் கோபமும் கொஞ்சம் மறைந்து,
“அப்ப.. பெரிசா ஒண்ணும் ரீசன் இல்லையா?” கொஞ்சல் குரலோடு அவன் மேல் சாய்ந்து கொண்டாள் ஜான்வி!
“அதான் சொல்றேனேடி.. எதுவும் இல்ல.” என்று பரணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் போன் அடித்தது.
கனகு தான்.
“டேய். இன்னமும் ஜானு வீட்டுக்கு கிளம்பலையா? அங்க அவ ஆசையோட காத்திட்டு இருப்பா!”
“இதோ கிளம்பிட்டோம்”. என்ற பரணி
“ஜான்வி சீக்கிரம் கிளம்பு உன் பாட்டி வீட்டுக்கு” என்றான்.
இருவரும் தயாராகி ஜோடியாக பைக்கில் கிளம்பினார்கள்.
பைக்கில் ஏறியவுடன் பரணி கேட்டான்.
“இப்ப நம்மள யாராவது வாட்ச் பண்றாங்களா பாரு”.
“இல்லையே, இங்க யாருமே இல்ல” என்றாள் ஜான்வி.
“நல்லா பாரு, அந்த நிகில் எங்கயாச்சும் நின்னு நம்மளையே பார்த்துட்டு இருப்பான்.”
“அட ஆமாங்க.. அவன் கண்ணில் கொள்ளியை வைக்க..” ஜான்வியும் திட்டினாள்.
“இப்ப நீ என்ன பண்ற, இறங்கி, ரெண்டு சைடும் கால் போட்டுட்டு உட்கார்ந்து, அப்படியே என்னை இறுக்கமா ஹக் பண்ணிட்டு உக்காரு” என்றான்.
அப்படியே செய்தாள் மனைவியும்!
பார்த்துக் கொண்டிருந்த நிகிலுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
அவன் உடனே “ஜான்வி நில்லு..” என்று அழைத்துக் கொண்டே வெளியே வந்தான். அதற்குள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான் பரணி.
திகைத்துப் போய் நின்றுக்கொண்டிருந்த அவனிடம் வந்த கனகு, “என்னப்பா.. ஜான்வி எங்க போறான்னு பார்க்கிறியா, அவ பாட்டி வீட்டுக்கு போறாங்க ரெண்டு பேரும்”.
“ஓ. அப்படியா, நானும் அங்க போகணும். பாட்டியை நானும் பார்க்கணும்!”
“டேய். மணி.. தம்பிய கூட்டிட்டுப்போய் ஜானு வீட்டில இறக்கி விட்டுட்டு வா. நீ பாட்டுக்கு வேலை இருக்குன்னு சொல்லிராத, ஆமாம்..” என்றார் கனகு பொடி வைத்து!
“ஆமா ஆத்தா.. பரத் அண்ணன் எனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுத்துருக்காரு.
என்னால வர முடியாது இப்ப..” புரிந்து கொண்டு சொன்னான் மணியும்.
“சரி. இப்ப என்னன்ற, தம்பியவே வண்டிய எடுத்துட்டு போக சொல்றியா? அவருக்கு வீடு தெரியாதேடா!”
“அவருக்கு தெரியாட்டா, நீயும் அவர் கூட வண்டியில ஏறிப் போய் வழியை காட்டு” என்று சொல்லி பைக் சாவியைக் கொடுத்தான் மணி.
“என்னடா, உன்னோட.. ஒரே ரோதனையா போச்சு.. சரி, நிகில் தம்பி, நீங்க வண்டிய எடுங்க, நான் உங்கள அங்க அழைச்சிட்டுப் போறேன்”. என்று சாவியை நிகில் கையில் கொடுத்து, பின்னால் ஏறிக் கொண்டார் கனகு!
வில்லங்கத்தை வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான் நிகில்!
“இந்த குறுக்கு வழியில போனா சீக்கிரம் போய்டலாம்” என்று குறுகிய சந்தில் எல்லாம் அழைத்துப் போய், ரொம்ப சரியாக வாசலில் மாடு கட்டியிருந்த ஒரு வீட்டு அருகில் போய்க் கொண்டிருந்த போது, கனகு தன் வேலையைக் காட்டினார்!
அதான்.. தன் வழக்கமான ஸ்டைலில் வண்டியை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு நிகிலைத் தடுமாற செய்து, அவர் மட்டும் அருகில் இருந்த வைக்கோல் போரில் ரொம்ப சேபாக லான்ட் ஆகி விட்டு, அவனை மாடு கட்டியிருந்த இடத்தில் விழ வைத்து விட்டார்.
திடீரென்று இப்படி வண்டியில் இருந்து ஒருவன் தன் அருகே விழுந்ததில் பதறிய அந்த பசு மாடும் அதன் கன்றும் தாறுமாறாக அவனை மிதிக்கத் தொடங்கின!
வலி பொறுக்க முடியாமல் அவன் நகர முயன்று சாணியில் கையை வைத்து விட்டு அருவருப்பு அடைந்து, வேறு பக்கம் கையை ஊன்ற, அந்த இடத்தில் மாடு அதன் வாயில் இருந்து தீவனக் கரைசலை ஒழுக விட்டிருக்க, ஊன்றியிருந்த கையை வழுக்கி விட்டது.
அவன் கையை பலமாக ஊன்றியதில் கை மூட்டு நழுவி விட்டது, வெறும் கண்களில் பார்க்கும் போதே தெரிந்தது!
நிகில் வலியில் அலறினான்!
அவன் சத்தத்தைக் கேட்டு மேலும் மிரண்ட மாடு, அவனை இன்னும் மிதிக்க போனது, சட்டென்று மாட்டைப் பிடித்துக் கொண்டு விட்டார் கனகு!
இல்லையென்றால், சந்தீப்பிற்கு நிகில் மூலம் சந்ததிக்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்!
அவனை மெல்ல எழுப்பி அமர வைத்தவர், மணிக்கு போன் செய்ய அவன் ஒரு குட்டி யானை வண்டியில் வந்து நிகிலை அள்ளிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிட்டல் விரைந்தான்!
error: Content is protected !!