Skip to content
Post Views: 1,706
꧁☆☬ லயம் – 11 ☬☆꧂
மதிய நேரம் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதாய் இல்லமே இமை மூடி உறக்கத்தை தழுவி இருக்க, இருவர் மட்டும் உறங்காமல் உறங்கி, மெதுவே அறையை விட்டு நழுவி அமைதியாய் வெளியேறினர்.
Advertisement
பூனை நடை வைத்து சப்தமே எழுப்பாமல் சமையல் அறைக்குள் வந்தனர். டைனிங் சேர் எடுத்து போட்டு, ஒருவன் குனிய, மற்றவன் தட்டு தடுமாறி அவன் மீது ஏறி சேரில் அமர்ந்தான். ரன்னிங் ரேஸில் முதலாவது வந்தவன் முகத்தில் இருக்கும் பூரிப்பும், வேக மூச்சும் ஒருங்கே அவனிலிருக்க, பிஞ்சு கைகளை மெதுவே ஊன்றி எழுந்து நின்றான்.
” ரோஹித் நா ஏறிடேனே ” கரங்களை சத்தம் காட்டாமல் ஆர்ப்பாட்டமாய் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு, மெதுவே முக்கி முனகி சமையல் மேடையில் ஏறினான். ” பாத்துடா…, விகுதாதே ” தைரியம் கொடுத்த குரலில், கப்போர்டை ஒலி எழுப்பாது திறந்து, டப்பாவில் உள்ள சாக்லேட்டை கை நிறைய அள்ளி கொண்டு ஹர்ஷித்திடம் கொடுக்க, சிறிய கிண்ணத்தில் அதை வாங்கி கொண்டான் சிதறாமல். “போதும் வா…” என கையசைக்க வேகமாய் இறங்கினான். இறங்கும் தடுமாற்றத்தில் கைப்பட்டு சீனி டப்பா கீழே விழுந்தது.
Advertisement
Advertisement
” ஐயோ…!!!!!” என ரோஹித் கத்த, ” டோன்ட் சௌட்” என வாயில் விரல் வைத்து அவனை அடக்கி, முன்னிலும் கவனமாக கீழே குதித்தான். ” கீழ பாரு., எலாம் கொட்டுச்சு.,” மெதுவே முனக நல்லவேளையாக கால் கிலோ ஜீனி தான் கீழே சிதறியிருந்தது. ஸ்பூனில் அள்ளி அள்ளி டப்பாவில் போட போட, அதுவோ ” வீழ்வேன் என நினைத்தாயடா என்னை ” என கீழே தான் பாதி சிந்தியது.
முடிந்தவரை அள்ளி கொட்டி, மிச்சத்தை கவனமாக துணியால் கூட்டி ஓரமாய் நகர்த்தி, டஸ்பீன் அருகே தள்ளி விட்டனர். ஆனாலும் தாய் மீது கொண்ட பயத்தில், கண்டு பிடித்தால் அடிப்பார் என பயந்து அதையும் போர் வீரன் முயற்சி கொண்டு, துளியும் எவிடேன்ஸ் இல்லாமல் குப்பை தொட்டியில் அள்ளி போட்டனர்.
Advertisement
” ஹப்பா.,!!!! முச்சிடோம்.., ” என ஹைபை அடித்து கொண்டு, சாக்லெட்டை பிரித்து வாயில் அதக்கி கொண்டு வெளியே வந்தனர். இவர்கள் தங்கள் சீரிய பணியை முடிக்க எடுத்து கொண்ட அரை மணி நேரம் கழிந்தும் இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை. “கம்… கம்…,!!! ” சத்தமே எழுப்பாமல் மௌன பரிபாஷையில் பேசி கொண்டு சமர்த்தாய் தாயின் அருகே சென்று படுத்து விட்டனர்.
அசந்து தூங்கும் அவர்களின் அழகை எட்டி பார்க்க மேற்கு திசையில் இருந்த ஜன்னலின் ஊடே கதிரவன் மறைந்து வந்து பார்க்க, கன்னத்தினை கைக்கடியில் வைத்து கொண்டும், மற்றொன்றை அடுத்தவனின் இடுப்பை கட்டி கொண்டும், உறக்கத்திலும் இணை பிரியாமல் இரட்டை இதயமும் லப்டப் தாளத்தில் ராகம் இசைத்து கொண்டிருந்தது. அன்னையோ சோம்பல் முறித்து மேலே தூக்கிய கைகளை கீழே போட மெத்தென்ற கன்னத்தில் கைப்பட்டது. அதன் ஸ்பரிசத்தில் கண் விழித்து பார்த்தவள் கண்களில் பிரியத்தோடு ஒட்டி படுத்திருக்கும் சிறுமுகிலில் லயிக்க, மென் சிரிப்பு இதழில் தவழ்ந்தது. சிறிது நேரத்தில் மென்மை வன்மையாய் மாறும் என்று அவளுக்கு தெரியாது.
காலையில் பணியை முடித்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் சேர்ந்து மாலை சுற்றி விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
தந்தையின் உடல்நிலையை பற்றி ராஜாவின் பேச்சு முடிய பொதுவாய் பேசி கொண்டிருந்தனர்.
” டேய்., ! ரோஜா அடுத்த வாரம் வரமாட்டானு சொன்னா., லீவு ஓகே சொல்லிட்டியா., “
ரோஜாவை பற்றி இவன் ஏன் பேசுகிறான் என்ற யோசனையில்” என்கிட்டே லீவு பத்தி ஒன்னுமே சொல்லல. உன்கிட்ட ஏன் சொல்றா.,?”
” அவ மதுரைக்கு போறதால நாலு நாள் லீவு. வர மாட்டேன், நெஸ்ட் வீக் GST பைலை அவங்க மேனேஜர் கொண்டு வருவார்னு சொன்னா., உனக்கு தெரியாதா.,”
” யாரு அவளுக்கு லீவு கொடுத்ததாம்., அதெல்லாம் நாலு நாள் கொடுக்க முடியாது., ” அவளை பார்க்காமல் எல்லாம் என்னால இருக்க முடியாது என கோபத்தில் ராஜா கொந்தளிக்க .
” முழுசா பிசினஸ் மென் ஆகிட்டியாடா நீ. அவ எவ்வளவு ஆசையா இருக்கா தெரியுமா..,? “
” மண்டையில அடிப்பேன்.,, உனக்கென்னடா அக்கறை சக்கரை ..,” மனதிலோ வறுத்து எடுத்து கொண்டிருந்தான் இளாவை.
” செம்ம கேரெக்ட்டர்.., எவ்ளோ ஸ்வீட்டா பேசுவா தெரியுமா., சஸ் எ நைஸ் கேர்ள். ” மாறா சிலாகித்து சொல்ல.
“இவன்கிட்ட மட்டும் பேசுறா., என்னை பார்த்தா மட்டும் கப்புனு வாய் மூடிக்கிட்டு இருக்குற உன்னை .., ” கடுப்பில் முகம் சுருங்க ” என்னடா நைஸ் கேர்ள்., ரைஸ் கேர்ள்னுட்டு.., கடுப்பை கிளப்பாமா பேசாம வாடா., “
“பக்கி உன்னை போய் அவ நல்லவன், வல்லவன்னு சொல்லிட்டு இருக்குறா., “
” என்னை பத்தி சொன்னாளா .., என்னடா சொன்னா ” என ஆச்சரியமாய் கேக்க., “ அன்னைக்கு ஒரு நாள் கோபத்துல உன்னை திட்டிட்டு இருந்தேண்டா., “ என நடந்ததை சொன்னான்.
அவன் மனதில் நினைத்ததோடு அப்படியே விட்டு இருக்கலாம் ” உங்க MD சார் இதெல்லாம் பார்க்காம, எங்கம்மா ஊரை சுத்திட்டு இருக்காரு ” என்ற கேள்வி கேட்டது தான் அவனுக்கு தெரியும்.
” நீங்க எப்படி என் சார் ஊரை சுத்துறாருனு சொல்விங்க. அவர் எவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பார்த்து எத்தனை பேர் வயித்து பாட்டுக்கு வழி செய்றார் தெரியுமா? யாரோ ஒருத்தங்க பண்ண நம்பிக்கை துரோகத்துக்கு அவர் மாட்டிக்கிட்டு முழிக்கிறார். படிச்ச படிப்புக்கு கால் மேல கால் போட்டு பாரின்ல உட்கார்ந்து சம்பாதிக்கிற திறமை இருந்தும் அப்பாவோட பிசினஸ்காக எல்லாத்தையும் விட்டு வந்தவர். அவரு பொண்ணுங்ககிட்ட எவ்ளோ மரியாதையா நடந்துக்குவாரு தெரியுமா? அவர நேரில் பார்த்து இருந்தா இப்படி பேசி இருக்க மாட்டிங்க.” மனதில் இருந்த மரியாதையில் அவன் மேல் இருந்த அன்பில் இவனோடு வாய் சண்டை போட்டாள் ரோஜா.
“ அவ உன்னை பத்தி ஒரு மூச்சு பேசுனா., நீ அவளை திட்டுற..,
” நிஜமா குட்டச்சி இப்படியெல்லாம் பேசுனால ?”
” குட்டச்சியா., அவளா., ” கண்ணாடி வழியே ராஜா முகம் நோக்க அவளோடு கற்பனையில் டூயட் பாட சென்றிருப்பான் போல.., அதற்குள் முகம் மலர்ந்து சிரித்தது.
” பயபுள்ள., சிக்கிட்டான் போல.., அதான் துள்ளுறான்., ” என மனதில் எண்ணியவனோ.., ” நெட்டை கொக்கு., என் தங்கச்சி கரெக்ட் ஹைட்டுல தான் இருக்கா., அவளை குட்டச்சினு சொல்லாதே.., ” நமுட்டு சிரிப்புடன் சொல்ல.
” உன் தங்கச்சின்னா சொன்ன .., தேங்க்ஸ் மச்சான் …, ” அசட்டு சிரிப்பு சிரித்தபடி .., “ இப்படியே மெயின்டைன் பண்ணு.., என் வயித்துல பீரை வார்த்த தங்கமே .., நீ வாழ்க., நின் குலம் வாழ்க., ” ராஜாவின் பேச்சில் சிரித்தவனோ ..,
” நீயும் சிக்கிட்டியா .., ஆமா , இத அவட்ட சொல்லிட்டியா ..,”
“இல்லைடா .., நமக்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை.., அதெல்லாம் முடிஞ்சதும் சொல்ல போறேன்.., ” இளாவிடம் கூறிவிட்டு வானத்தை பார்த்து.
” யப்பா., எல்லாரும் கேட்டுக்கோங்க.., ரோஜா ஆடிட்டர் தங்கச்சி.., கேட்டுச்சா., நல்லா கேட்டுச்சா., ” என்றான் சற்றே குரல் உயர்த்தி .
” யாருக்கிட்டடா சொல்ற., “
” எந்த பொண்ணு வந்தாலும் இளாவுக்கானு தான் யோசிக்கிறங்கா., இந்த ரீடர்ஸ் நம்மள கண்டுக்க மாட்டேன்கிறாங்கா .., அதுக்கு தான்., நானும் ஹீரோ தான் ….”
” வழியுது., தொடைச்சிக்கோ., ” கிண்டல் செய்தபடி வீடு வந்து சேர.
மாலாவின் சத்தம் வாசல் வரை கேட்டது.
” ரோஹித்.., ” அவளின் கத்தலில் ஹர்ஷித் ஓடி வந்து முன்னே நின்றான்.,
” கிச்சன்ல வந்து என்னடா பண்ணீங்க.., “
” ஒன்னுல்ல.,” ஹர்ஷித் சொல்ல
” நீதிடா., நேர்மைடா .., நியாயம்டா., நான்டா., வந்தேன்டா ” என்றபடி ரோஹித் உண்மை விளிம்பியாய் ” டஸ்பின்லே சீனி நாங்க கொட்டல..,” பதிலை சொல்ல.
” நீங்க கொட்டாம தான் எறும்பு படையெடுத்து வருதா.., ” தாயோ அதட்ட,
சேய் இருவரும் மண்டி போட்டு அமர்ந்து உன்னிப்பாய் கவனித்தனர்., ” திஸ் ஐஸ் பேட் ஹாபிட்., யாராவது டஸ்பின்லே போட்டதை எடுத்து சாப்பிடுவாங்களா .., உனக்கு அறிவே இல்லை., ” எறும்போடு பேச்சு வார்த்தை நடத்த.., இவளுக்கோ பொறுமை போனது
” ஆமாம்டா., அது Pht முடிச்சிட்டு வந்துருக்கு., அறிவா இருக்க..,” கடுப்பில் கத்த.
” அச்சோ.., அது படிக்கலயா.., ” திருதிருவென முழித்தபடி ரோஹித் கேட்க.,
” ம்ஹ்ம் .., SRM காலேஜ்ல போய் சீட் வாங்கிட்டு வா…, படிக்க வைப்போம்.., ஏண்டா என்னை படுத்துறீங்க., வாலு.., ” எட்டி முதுகில் ஒரு தட்டு தட்டுவதற்குள் எட்டடி பாய்ந்து விட்டான்.,
” ம்ம்ம்மா.., ப்ளீஸ் சாரி.., இனி பண்ண மாட்டேன்., ” நல்ல பிள்ளையாக அரட்ட, பின்னேயே மாமன் வந்து காப்பாற்றினான்.
” என் செல்லம் இன்னைக்கு என்ன பண்ணுனார்., ” இரு கரங்களில் இருவரையும் சேர்த்து அள்ளி கொள்ள, கழுத்தோடு கை இணைத்து கட்டி கொண்டனர்.
” மாமா., எறும்பு இல்ல., அது சீனியை… கொட்டி… சாப்புடுது., ” வார்த்தையை இருவரும் வெட்டி வெட்டி சொல்ல.,
” டெய்லி உங்க அம்மாவை கத்த வைக்கணுமா., மால்ஸ் இன்னைக்கு நீ பிரீ.., இவனுகளை நாங்க பாத்துகிறோம்., டேக் ரெஸ்ட்.., “
“நிம்மதி, தூக்கிட்டு போடா., ” என கூறியபின் தான் அவன் பின்னிருந்த ராஜா அவள் கண்களுக்கு தெரிந்தான். நீண்ட நாட்கள் கழித்து பார்த்து பரவசத்தில், ” ஏய் ராஜா…!!!! எப்படா வந்த ? எப்படிடா இருக்குற ….? நாயே ! உனக்கு என்னை பார்க்க வர இத்தனை வருசமா..,?” சட்டென சந்தோச உணர்வில் முகம் பூத்தாலும், இவனும் தன்னை மறந்து விட்டானே என ஏக்கமும் வந்து, நொடி பொழுதில் முகம் வாட, கோபமும் தெறித்தது பேச்சில்.
” வெயிட், வெயிட்., மால்ஸ்.., ஒவ்வொண்ணா கேளு.., ஐ ஆம் பாரின் ரிட்டர்ன், யூ நோ ஐயா ரொம்பாஆஆ…. பிஸி…,சோ … ” என பீலா விட ஆரம்பிக்க ,
” அடங்குடா.., பன்னி…, எல்லாம் எனக்கு தெரியும்.., வந்துட்டான் ” மாலா பேசி கொண்டிருக்க,
இவர்களின் பேச்சில் யாரென தெரியாத புதியவனை மிரட்சியோடு பார்த்தாலும், பயம் கொண்டு அழவில்லை இருவரும். மெதுவே இளாவின் கன்னம் தட்டி ” மாமா…, !!!!” யாரென ஜாடை காட்ட.
” நீங்க பிறந்தப்ப தூக்குனா மாடு இப்போ தாண்டா திரும்பி வந்திருக்கு, இவனும் உங்க சித்தப்பன் தான். ” மாலாவின் விளக்கத்தில்,
” இனும் எதனை சித்து …, ” பையன்கள் கேள்வியில் சிரிப்பு வந்தது அனைவருக்கும். அரை டஜனுக்கும் மேல் பெரியப்பா, சித்தப்பா.. இருக்க பிஞ்சுகளுக்கு விவரம் புரியவில்லை. ஆனாலும் மெதுவே இதழ் விரித்து சிரித்தனர்.
” செல்லம்ஸ்…..!!!!! உங்களுக்கு டெடி பியர் வாங்கி ஒரு கரடிக்கிட்ட கொடுத்திருந்தேன்., உங்கட்டா தரலயா …,? ” கரங்கள் விரித்து ரோஹித்தை நோக்கி கரம் நீட்ட வரமாட்டேன் என தலையசைத்தான்.
” மாமாவோட பிரண்டு தான்., நீயும் ஹர்ஷித் மாதிரி., நானும் இவனும்,..,” என்றவனை பார்த்தவனுக்கோ மனதில் மத்தாப்புகள் சாரலாய் பூ தூவியது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் விளையாடி சிறுவர்கள் ஒட்டி கொண்ட பின் பீச்சில் கூட்டி வந்து ஆட்டம் போட இறக்கி விட்டான்.
பரந்து விரிந்து கடல் , அலைகளால் கண் சிமிட்டி அழைப்பு விடுக்க, வெண் வர்ண மணல் வெளியில் ஷூ கால்கள் குடுகுடுவென ஓடி, பின் விழுந்து, எழுந்து, புரண்டு, உருண்டு, அலைகளில் கால் நனைக்க, காதலனை கண்ட காதலியாய் மங்கையவள் ஓடி வந்தாள். நொடி பொழுதில் தழுவி விட்டு, நாணம் கொண்டு விலகி ஓடினாள். விட்டு சென்றவளோ ஆசை குறையாமல் மீண்டும் ஓடோடி வர, இம்முறை முகம் வரை சாரல் தெறித்து, கன்னத்தில் முத்தமிட்டு ஓடினாள்.
ஆர்ப்பரித்து சிரித்தபடி, மாமனோடும், சித்தப்பனோடும், ஒட்டி உறவாடி, சிலாகித்து , தொடரும் அலையின் தழுவலில் கன்ன கதுப்புகள் கூட மணலால் மின்னியது. இவர்களின் ஆட்டத்தை விழி விரித்து ரசித்து கொண்டிருந்தன இமைகள் இரண்டு. இதழும் பிரியாமல், இதழையும் விரிக்காமல் இதமான உணர்வு மனதெங்கும் பரவ, பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க பாவையவள் பார்த்திருந்தாள்.
error: Content is protected !!