Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 16 1

꧁☆☬  லயம் – 16 ☬☆꧂

காலேஜ் நண்பர்கள் சந்திப்பு நடந்து முடிந்த பின் மாறா தனியே கிளம்பி விட்டான். மற்ற மூவரும் ராஜாவின் காரில் வந்து கொண்டிருக்க ” நல்லவேளைடா, ஒருத்தனும் பழசை பேசி அவனை டென்ஷன் ஆக்கல. குரூப்ல சொல்லி தான் வர சொல்லிருந்தேன்.



Advertisement

இருந்தாலும் பயமா இருந்துச்சு, ஏடாகூடாம பேசி திருப்பி கோபப்பட போறான்னு தான் சுபா குட்டியையும் கூட கூட்டி வர சொன்னேன். இவ இருந்தா அடுத்தவங்க வாயை தொறக்க யோசிப்பாங்க.” ராஜா கூற,

Advertisement

” அந்த சுகுமாரனும் இன்னைக்கு வரேன்னு தான் சொன்னான். இவன்ட்ட சாரி கேக்கனும்னு அழுதான்.  போடான்னு கத்தி விட்டுட்டேன். “

Advertisement

” அந்த நாயை பத்தி பேசாதடா?  அவன் பேச்சை எடுத்தாலே இழுத்து நாலு அறை விட தோணுது. “

Advertisement

” சத்யாவை நம்பி அவனும் படிக்காம ஊரை சுத்திட்டு, அரியர் வைச்சு கிளியர் பண்ணறதுக்குள்ள நாக்கு தள்ளி போயிருச்சாம். செர்டிபிகேட் இல்லாம, வெளியூர் வேலைக்கு போய் பணத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுருக்கான். அக்கா தங்கச்சி கல்யாணம்லாம் கடன் வாங்கி பண்ணிருக்கான். உங்க ரெண்டு பேரை பிரிச்ச பாவத்துக்கு தான் கஷ்டப்படுறேன்னு வருத்தப்பட்டதா பிரெண்ட்ஸ் சொன்னாங்கடா. ” சிவா அவன் பட்ட கஷ்டத்தை கூறினாலும் மனம் சமன்படவில்லை.

சத்யா வாழ்க்கை கதை அதை விட கொடுமையாய் இருந்தது. இவனை ஏமாற்றிய பின் வேலை செய்ய போன இடத்தில் எவனோ ஒருவனை நம்பி ஊரை விட்டு ஓடி இருந்திருக்கிறாள். அவனோ சக்கையாய் ஆசை தீர்ந்த பின் அவளை தவிக்க விட்டு, வயிற்றில் பிள்ளையும் கொடுத்து, கொண்டு வந்த நகையையும் தூக்கி கொண்டு கம்பி நீட்டியுள்ளான்.

அழுது கொண்டு வீட்டுக்கு வந்த மகளை பெற்றோரும் ஏற்று கொள்ளாமல் பத்தி விட, அனாதை இல்லத்தில் குழந்தையோடு தஞ்சம் புகுந்து, இப்போது வேலைக்கு சென்று தனியே வாழ்கிறாளாம். நண்பர்கள் தெரிவித்த தகவல்களை சிவா கூற கோபம் தான் ஏறியது ராஜாவிற்கு.

 இவர்கள் இருவரால் தாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா., நட்பை தொலைத்து, தனிமையில் தவித்து, எத்தனை இன்னல்கள் அனுபவித்து விட்டனர்.

” பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாங்க. நல்ல மனசுக்கு கஷ்டம் கொடுத்தா அவங்க அதுல இருந்து நல்ல படியா மீண்டு வருவாங்க. மாறா மனசுக்கு அவன் நல்லா இருப்பான். கண்ட கழிசடைங்க பத்தி பேசி கடுப்பை கிளப்பாம வேகமா போடா.  “

துரோகம் செய்தவர்கள் செய்த பாவத்திற்கு கூலி பெறுகிறார்கள் என்றே தோன்றியது. மாறாவிற்கு எதையும் கூறி மீண்டும் அவன் துக்கத்தை கிளறி விட யாருக்குமே விருப்பம் இல்லை. அனைத்தும் தெரிந்த போதிலும் மாறா மேல் உள்ள அவளின் அன்பு, துன்பம் செய்த நினைவுகளை தூசி போல துடைத்து விட்டு அவன் சந்தோசம் ஒன்றையே நாடியது. இதுபற்றி அவனிடம் கூற லயாவிற்கு கூட மனதே இல்லை. ராஜாவிற்கே கோபம் வர மாறாவிற்கு வராதா ?  அதை மறந்து விட்டனர்.

********

தன்னறையில் அமர்ந்து முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் கடகடவென்று செய்து கொண்டிருந்தவள் அறைக்கு வெளியே பேச்சு குரல் கேட்க யாரென நிமிர்ந்து பார்த்தாள். பின் மதிய பொழுது நெருங்கி இருந்தது.

“மாப்பிள்ளை வராங்க…, வழி விடுங்கோ..,மாப்பிள்ளை வராங்க…, வழி விடுங்கோ..” என பராக் ஒப்பித்தபடி ரோஜா சுபாவின் அறைக்கதவை திறக்க, தன சிஸ்டமில் டிசைன் ஸ்கெட்ச் போட்டு கொண்டிருந்தவள் சட்டென்று எழுந்து நின்றாள். எப்போதும் அவனை கண்டவுடன் அவள் முகத்தில் தோன்றும் மலர்ந்த சிரிப்பில்லை. அமைதியாய் ஒரு பார்வை அவ்வளவே.

புன்னகை முகமாய் அவளின் வசீகரன் தான் வந்தான். ஞாயிறு மதியம் கல்லூரியில் இருந்து கிளம்பி சென்ற போது பார்த்தது. நேற்று முழுதும்   வேலை இழுத்து கொள்ள, இன்றும் மூன்று நாட்களில் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டுமென அவதி அவதியாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்.

அவனை காண வேண்டும் என தோன்றினாலும், மனம் தவித்தாலும், தன்னை விட அவன் பிஸியாயிற்றே, எப்படி சந்திக்க முடியுமென தவித்திருக்க அவன் எண்ணத்தின் நாயகன் வந்து விட்டான்.  இந்த நேரம் இங்கெதற்கு என யோசனை வந்தாலும், ” வாங்க..,” தன் சீட்டில் அமர சொல்லி கண் காட்ட, அதை விடுத்து எதிரே அமர்ந்தான். அவளை அங்கே அமர சொல்லி ஜாடை செய்ய விழியின் வழி மொழி பேசும் இருவரையும் பார்த்து ரோஜாவிற்கு சிரிப்பு வந்தது.

” இளா சார்!!!…, நீங்க மாப்பிள்ளையா வந்திருக்கிங்களா, ஒர்க் பார்க்க வந்திருக்கிங்களா?”

” ரெண்டும். கண்ணு முன்னாடி பொண்ணு இருந்தும் ஒன்னும் பண்ணலன்னு சொன்னாங்க. அதான் இனிமே பொண்ணு முன்னாடி உட்கார்ந்து ஒன்னும் பண்ணாம இருக்க போறேன். ” கண்ணடித்தப்படி சொல்ல.

” எங்க அண்ணனும் புல் பார்முலா இறங்கிட்டாரே ..,?” அவளின் கிண்டலில் முறைத்தவளோ.

” என்ன விஷயம் மாறா ? தேவை இல்லாமல் வர மாட்டிங்களே ., ” சுபாவின் கேள்வியில்.

” உங்க லயா கலெக்ஷன்ல ஆர்டர் சொல்ல வந்தேன். ” சுப இலக்கியா தான் செய்யும் அவளின் தனிப்பட்ட  டிசைன் கலெக்ஷன்ஸ் அனைத்தும் லயா என்னும் பிரத்தேயேக பெயரில் தான் செய்கிறாள்.

அவளோ கண்கள் சுருங்கி பார்க்க, ” தனிப்பட்ட நபர்க்கு டிசைன் பண்ணி தரமாட்டிங்கன்னு தெரியும். பட் கல்யாண பொண்ணுக்கு நீங்க பண்ணி கொடுக்கனும்னு என்னோட ஆசை. ஒன் வீக் டைம். அதுக்குள்ள ரெடி பண்ணிருவீங்களா “

” அட்ரா அட்ரா… அவளுக்கு அவளே டிசைன் பண்ணி தரனுமா, செம்ம ..ண்ணா ” ரோஜா குதூகலமாய் கத்த

” என்ன மாறி டிசைன் வேணும்னு சொல்லுங்க. “

” இந்த மாடல் பேட்டேர்ன், புல்லா ஸ்டோன் ஒர்க் இல்லாம, முத்துக்கள் வச்சு டிசைன் பண்ணி தர முடியுமா? டைம் இருக்குமா, இல்லைனா கூட நோ ப்ரோப்லேம். அடுத்து ராஜா கல்யாணத்திற்கு பண்ணி கொடுக்கலாம். ” அவன் போனில் காட்டிய மாடலை பார்த்தவள் மனதில் ” ரசனைகாரன்டா… நீ ” அகத்தில் எண்ணியவை இதழ்கள் உரைக்காமல் அவள் இமைகள் தான் அவனுக்கு உரைத்தது.

ஒற்றை புருவம் ஏற்றி  ” டிசைன் ஓகேயா, எப்போ தருவிங்க, என் வைப்க்கு பிடிக்கிற மாதிரி இருக்கனும். “

” ம்ம்ம்..பண்ணிரலாம், என்ன கலர்னு சொல்லுங்க..  “

” ஐவரி ஒயிட் வித் ரெட், நல்லா இருக்குமா., “

” ம்ம்ம் .., ” இமை முடி சம்மதம் சொன்னாள்.

” ஒர்க் முடிஞ்சிருச்சு., இனி பர்சனல்.., உனக்கு ஜீவெல்ஸ் வாங்கினேன்,. பிடிச்சிருக்கா இல்லையான்னு காட்ட வந்தேன், இல்லைன்னா வேற பார்த்து உடனே வாங்கலாம்.., ” அவள் கையில் கொடுக்க ,

“உங்களுக்கு பிடிச்சி தானே வாங்கிருப்பிங்க., “

 “எனக்கு பிடிச்சா போதுமா., உனக்கும் பிடிக்கணும்.” தன் தகப்பனை போலவே  தன் விருப்பம் கேட்டு நிற்கும் அவனை இன்னுமே பிடித்தது.

” டிசைன்ஸ் நல்லா இருக்குண்ணா, எல்லாம் ரெட் செட் வாங்கி இருக்கீங்க., “

நகைகளை பார்வையிட்டாள். நான்கு அடுக்குகளாய் ஒன்றன் கீழ் ஒன்றாக கொடிகளை இணைத்து, நுணுக்கமாய் வேலைப்பாடுகள் கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அழகாய் தோன்ற, கழுத்தில் அணிந்தால் இன்னுமே சுடர் விட்டு ஜொலிக்கும் என்றே தோன்றியது. அதற்கேற்ற  காதணிகள், நெத்தி சுட்டி, மோதிரம் என செட்டாய் இருந்தது.

இத்தனையும் தனக்காக வாங்கினானா? பெண் வீட்டில் நகையை கேட்டு வாங்குவோர் மத்தியில், ஒன்றுமே கூறாமல் தனக்காய் வாங்கி வந்து நிற்பவனிடம் உன் மனதை விட இது அத்தனை அழகல்ல என்றே சொல்ல தோன்றியது.

அவள் கண்களின் பாவனையில் விரிந்து, சுருங்கி, இங்குமங்கும் அலைபாய்ந்து, மென்னிதழ் சிரித்ததோடு, விழிகளும் சிரித்ததில் மனதை படித்து விட்டான். அவனின் ரசனையை ரசிக்கும் அவளை பார்த்தபடி அவனிருக்க இடையே நந்தி பேச தொடங்கியது.

” ஒர்க் பிளேஸ்ல உன் அண்ணன் என்னை சைட் அடிப்பாருனு சொல்லிட்டு இருந்த என் அண்ணன் உன்னை சைட் அடிக்குறாரே ? இதெல்லாம் நியாயமா ? “

“அப்படியே உன் அண்ணன் சைட் அடிச்சி, என்கிட்டே பேசிட்டாலும், தனியே இருந்தப்பவே ஒண்ணுமே பேசல, போடி அங்குட்டு., ” லயா மனதில் நினைக்க சுருங்கி விரிந்த புருவத்தின் மத்தியில் சுருக்கம் படர, அவளின் கண்களும் சுருங்கியது.

” ரோஜா !!!, உன் அண்ணிக்கு எனக்கு பேஸ் ரீடிங் தெரியும்னு நீ இன்னும் சொல்லலையா., ?  என்னை பத்தி உனக்கு தெரிஞ்சது எல்லாம் அவகிட்ட சொல்லுமா ” அவன் சொல்லும் போது முகத்தை பார்த்து விட்டு,

” அப்படியே தெரிஞ்சிட்டாலும்..,” இதழ்கள் உச்சரிக்காமல் வாயசைக்க, அதுவும் அவன் கண்களில் தப்பாது விழுந்தது. ஏதோ ஒன்று அவளை இம்சித்து கொண்டிருக்க சிறு சுணக்கமும் கண நேரத்தில் தோன்றி மறைந்தது.

” அவரை பத்தி நீ சொல்லி நான் ஒன்னும் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை. போடி.., “

பக்கத்தில் இருந்த போனை எடுத்தவள், ரிசீவரை காதில் வைத்து கொண்டு, அவனை நோக்கியபடியே ” லெமன் ஜூஸ் வித் சால்ட் ஒன்னு, வித் சுகர் ரெண்டு என் கேபினுக்கு கொடுத்து விடுங்க. ” அவனிடம் பதில் கூறாமல் உன்னை பற்றி எனக்கு தெரியும் என்பதாய் அவன் இந்த நேரத்தில் அருந்தும் ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு ரோஜாவிடம் திரும்பியவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!