Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 19 2

பார்க்க மனம் நிறைவாக இருந்தது  பானுவிற்கு.  பிள்ளைகளை  இவர்கள் பார்த்து க்கொள்வார்கள்  என்று நினைத்தவள் கண்மூடினாள்..

அவளின் சீட்டில் கால் நீட்டி  படுத்துக்கொண்டாள்..  அவளுக்கு உடல் வலி மிகவும் அதிகமாக இருந்தது.



Advertisement

பானு மாத்திரை போட்டு படு  என்றவன். அவளிடம்  மாத்திரையை தர.

அதை வாங்கி  விழுங்கியவள். படுத்துக்கொண்டாள்..

Advertisement

Advertisement

அனைவரும் லண்டன் வந்து சேர்ந்தார்கள். ஆஷிக்கும் சூர்யாவும் சுந்தரிடம் சேர்ந்து பிளைட்டில் இருந்து கீழே இறங்கி விட.. விக்ரம்  சிவாக்குட்டியை தோளில் வைத்துக்கொண்டு. ஆபீதாபானுவை மெல்ல அழைத்து வந்தான்.

அவளோ நானே வருவேன் எற்று அவனிடம் இருந்து தள்ளியே வர..

அவளின் சிறு பிள்ளையின் கோபம் கூட விக்ரமுக்கு பிடிக்க..

Advertisement

“ஏய் பொண்டாட்டி இன்னும் கோபம்  போகலீயா”  என்றவன். அவளின் பின்னே வம்பு  பேசியபடியே வந்தான்..

 விக்ரமனின் கார் டிரைவரோடு  இவர்களுக்காக காத்து இருக்க.. அனைவரும் ஏறியவுடன் கார் வீட்டை நோக்கி  கிளம்பியது..

 விக்ரமனின் வீடு தனி வில்லா போன்றது..ஒரு தளம் கொண்ட வீடு. கீழே நான்கு தனி அறைகள் இருக்க. விட்டின் பின்னே பெரிய  சிம்மிங் பூல் இருந்தது. வீட்டின் முன்னே சிறிய பூங்க போல். பெரிய பூ மரங்கள் அழகாய் பூத்து இருந்தது.. மேல் தளத்தில் விக்ரமனின் ஆபிஸ் ரூம், சிம், குட்டி பார், கூட வைத்து இருந்தான்..

கார் வீட்டினுள்  நுழைந்தவுடனே பிள்ளைகள் “ஐ வீடு வந்திருச்சு”  என்று  காரில் இருந்து இறங்கி வீட்டினுள் ஓட..

சுந்தர் பிள்ளைகளிடம் “பார்த்து போங்க, விழுந்துராதீங்க  பாத்து போங்க” என்று அவர்கள் பின்னாடியே போக…

  ஆஷிக் வீட்டை சுற்றி பார்க்க. சூர்யாவும் ஆஷிக்கோடு சென்றான். சூர்யாவின் சைக்கிள் விளையாட்டு பொருள்களை பார்த்து கொண்டு  இருக்க..

சிவாக்குட்டியும் அண்ணன் பின்னாடியே வந்தவள். சூர்யாவின் விளையாட்டு பொருள்களை பார்த்து அதில் இருந்து ஒரு காரை எடுத்தவள்..

” தாத்தா டுர். டுர் ”  என்று சத்தம் போட்டுக்கொண்டை காரைஓட்டி  விளையாட..

ஆபீதா பானு காரில் இருந்து இறங்கி  வீட்டின்னுள் செல்லாமல்..வாசலில் இருந்தே வீட்டை சுற்றி பார்த்தாள் மிக அழகாக இருந்தது அந்த வில்லா..

“வா பானு”  என்று  விக்ரம்  அவளை வீட்டினுள் அழைத்து சென்றான்..

வீட்டின் உள்ளே இருந்து  இரண்டு பேர் வெளியே வந்து. காரில் உள்ள லக்கேசை  எடுக்க, விக்ரம்  அவர்களிடம்  “பெரிய பெட் ரூம்புல  எல்லாத்தையும் வச்சுருங்க” என்றான்..

பானுவை  வீட்டின்  உள்ளே அழைத்து வந்தவன். அவர்கள்  வீட்டில் சமையல் செய்வதற்கென்றே   ஒருவர் இருக்க  அவரை  அழைத்தவன்.. “இவர் தான் சுப்பராமையா நம்ம வீட்டுல  சமையல் பண்ணுவாரு, உனக்கு  பிள்ளைகளுக்கு  என்ன சாப்பிட வேணுமோ சொல்லு  இவர் சமைச்சு தருவார்” என்றான் விக்ரம்..

சுப்பராமையா  ஆபீதாவை  பார்த்து  “வணக்கம்மா” என்றார்..

அவள் எல்லாரிடம் சொல்வது போல் “சலாம்”  என்றாள்…

விக்ரம் இவள் முழு முஸ்லீம் பொண்ணாவே  மாறிவிட்டாளே.  என்று பார்த்தவன்

அப்பா வேற  பல்லவியை கல்யாணம் பண்ணிக்கோ, தாலி கட்டுண்ணு சொல்லுறாரு, இவ தாலி கட்ட சம்மதம் சொல்லுவாளா. எனக்கு நம்பிக்கை இல்ல. மெதுவா  தான் பானு கிட்ட பேசனும் என்று மனதில் நினைத்தான்…

பானு பர்தா  அணியவில்லை ஆனால். தலையை  சுற்றி அவளின் சுடிதாரின் துப்பட்டாவை வைத்து மூடி இருந்தாள்..

சுப்பராமையா “அம்மா  முஸ்லீமா தம்பி”  என்றார்..

“ஆமா ராம்மையா, இப்போ முஸ்லீமா இருக்க.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு. இந்துவா மாறிருவா”   என்றான்..

“சரி தம்பி” என்று   பிள்ளைகளுக்கும், உங்களுக்கு  என்ன சாப்பிட வேண்டும் என்று சுப்பராமையா பானுவிடம் கேட்டு. செய்து கொண்டு வருவதாக சொல்லி சென்றார்..

விக்ரம் பிள்ளைகளை பார்த்து கொள்ள என்று ஒருவரை  வேலைக்கு வைத்து இருக்க.. அவரை வர சொல்ல. ஒரு 50  வயது பெண்மணி வந்தார். அவர் ஒரு இந்தியா பெண்மணி தமிழ் தெரியும். அவரின் வேலை பிள்ளைகளை குளிக்க வைத்து. மூன்று வேலை  அவர்களை சாப்பிட வைப்பது. அவர்களுடனே இருப்பது அவ்வளவே அவருரைய வேலை..

அவர் ஒரு கிரிஸ்டீயன் பெண்மணிஅவருடைய பேர் ஜெனி..

பிள்ளைகளை அழைத்து ஜெனியிடம் அறிமுகம் படுத்தியவன். பிள்ளைகளை ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க சாப்பிடலாம் என்றான்..

  “ஓகே சார்” என்று ஜெனி பிள்ளைகளை அழைத்து சென்றாள்…

சுந்தரிடம் “இந்த ரூம்புல நீங்க இருந்து கோங்க பா”  என்று ஒரு ரூம்பை   காட்ட..

“ஓகே  விக்ரம்”  என்றவர் அந்த ரூம்  சென்றார்..

“நீ வா பானு”  என்று  விக்ரம்  பெரிய  பெட் ரூம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்…

அது மிக பெரிய பெட் ரூம். அதில் பத்து பேர்  படுத்து தூங்கும் அளவுக்கு  பெரிய  பெட் இருந்தது..

பிள்ளைகளும், இவர்களும் சேர்ந்து படுக்க என்று விக்ரம்   இப்போது  தான் புதிதாக ரெடி பண்ணி இருந்தான்..

“நல்லா  இருக்கா பானு, நாமலும், நம்ம பிள்ளைகளும்  சேர்ந்து தூக்க ரெடி பண்ணி இருக்கேன். நல்லா இருக்க”  என்றான்..

அவளோ “உம்” என்று சொல்லி விட்டு  குளிக்க உடை எடுத்து கொண்டு  பாத்ரூம் செல்ல..

“நீ குளிச்சிட்டு வா பானு சாப்பிடலாம்” என்றவன்..

அவன் எப்போதும் இருக்கும் அறைக்கு சென்று குளித்து வர.

இன்னும் பானு வராமல் இருக்க. பானு  இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்..

அவளோ  கீழே  ஒரு  விரிப்பை  விரித்து, அல்லாவை நினைத்து “நமாஸ்”  பண்ணி கொண்டு இருக்க.

திறந்த  கதவை சத்தம் இல்லாமல் மூடிவிட்டு வந்தான்…

இங்கே டைனிங் டேபளில் சூர்யாவும், சிவாவும்  அமர்ந்து இருக்க. ஆஷிக்கை  காணவில்லை. விக்ரம் சூர்யாவிடம் “ஆஷிக் எங்கே”  என்று கேட்க..

“அவன்னா டாடி, அவன் ஒரு மேட் போட்டு அதில் உட்கார்ந்து ஏதோ சொல்லிட்டு இருக்கான். நான் அவன் கிட்ட பேச போனேன். சிவா தான் அண்ணா நமாஸ் பண்ணுறான். டிஸ்டர்ப்  பண்ண கூடாது 10  மினிட்ஸ்ல வருவான்னு   சொல்லி என்னை கூட்டிட்டு  வந்துட்டா”.. என்றான்..

“அவன்   என்ன பண்ணுறான் டாடி என்றான்..

“ஆஷிக் (கடவுளை)  அல்லா கிட்ட எல்லாரும் நல்லா இருக்கனுமுன்னு  வேண்டிக்கிறான் சூர்யா.. அவன் தினமும்  இரண்டு தடவை இந்த மாதிரி  அல்லாஹ் கிட்ட வேண்டுவான். நீ அவனை  தொந்தரவு  பண்ண கூடாது சரியா”  என்றான்..

“ஓகே டாடி ”  என்று சூர்யா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே. ஆபீதாவும், ஆஷிக்கும் வந்து சேர்ந்தனர்..

 “அப்பா”  என்று   விக்ரம் சுந்தரை அழைக்க . சுந்தர் போன் பேசிய படியே ரூம்மை விட்டு வெளியே வந்தவர்.. இவருக்காக சாப்பிடாம அனைவரம் காத்து இருப்பதை பார்த்தவர். “ஐ கால் யூ, பேக் என்று போனை கட் செய்தார்..

அனைவரும்  ஒன்றாக சேர்ந்து டைனிங் டேபளில் உட்கார்ந்து. குடும்பமாக அவர். அவருக்கு பிடித்ததை  பரிமாறிக் கொண்டு  சாப்பிட்டனர்..

சாப்பிட்டு  முடித்தவுடன் விக்ரம் பானுவிற்கு மறக்காமல் மாத்திரையை தர. அவன் குடுத்ததை வாங்கி   விழுங்கிவிட்டு. பிள்ளைகளை பார்க்க. “நீ போயி ரூம்புல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு பானு. ஜெனி பிள்ளைகளை பாத்துப்பாங்க” என்றான் விக்ரம்.

பிள்ளைகளிடம் “கவனமா இருக்கனும், வீட்டை விட்டு வெளியே போக கூடாது, ஜெனி ஆண்ட்டி  சொல்லுற கேட்கனும்” சொல்லி விட்டு..

ஜெனியிடம் “பாத்துக்கோங்க  என்றவள்.. சிவா ஒன் ஹவருக்கு  ஒரு வாட்டி  சாப்பிட புட் கேட்பா, ஏதாவது ஸ்னாக்ஸ் கொடுங்க. ரொம்ப அடம் பண்ணுணா. என்னை கூப்பிடுங்க நான்  அந்த பெரிய ரூம்புல இருப்பேன்” என்றாள்..

 ஜெனி “ஓகே மேம் யு டேக் ரெஸ்ட். ஐ டேக் கேர்  சில்ரன்”  என்றான் ஜெனி…

பிள்ளைகள் வீட்டை சுற்றி விளையாட. “சுந்தர்  ஒரு மீட்டிங் இருக்கு விக்ரம் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பிவிட..

 விக்ரமுக்காக  ஏகப்பட்ட வேலைகள் காத்து  இருந்தன.ஒவ்வொன்றையும்  பார்த்துக் கொண்டு இருந்தவன்.  பானு என்ன  பண்ணுற தூங்கிட்டாளா என்று  பார்க்க வர..

அவளோ  அவன் நினைத்தப்படியே தூங்கிக்கொண்டு இருந்தாள்..

அவள் தூங்கும் அழகை பார்த்தபடியே இருந்தவன் விக்ரம். தன் வீட்டில் பல்லவி. தன் மனைவி. ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள்..  என்னை விட்டு போனது எல்லாம்   டபுளாக இரும்ப கிடைத்து விட்ட  சந்தோஷத்தில் இருந்தான்..

பழய நினைவுகளை அசைபோட்ட படியே  நினைத்து இருந்தான்.

பானு தூக்கம் கலைந்து எழுந்து அமரபோக..

“ஏய் தூங்கு பானு. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”  என்றவன். அவளோடு சேர்ந்து சிறிது நேரம் படுத்து இருக்க. பானு மறுபடியும் தூங்கி  இருந்தாள்.

பானுவை பார்த்து கொண்டே இருந்தவன். மெல்ல அவளை அணைத்து. அவளின் கழுத்து வளைவில்  முகத்தை புதைத்தவன். அவளுக்கு சிறு, சிறு முத்தம் வைக்க.

தூக்கம்  கலைந்தவள். அவனின்  செயலில்  சிறு  கோபம் வர. அவனிடமிருந்து விடுபட உடலை  நெளிக்க..

அவள் நெளிவது. அவனுக்கு அவள் கூச்சத்தில் நெளிகிறாள் என்றவன். அவளிடம்  இன்னும் நெருக்கத்தை கூட்டி அவளிடம் புதைய..

  அவன் செய்யும் செயலில் கோபம் கொண்டவள்  “இதற்க்குதான் என்னை  கூட்டிட்டு வந்தீங்களா”  என்றாள்..

“என்ன  பானு என்ன சொல்லுற”.. என்றான்..

அவர்கள் இருக்கும் நிலையை சுட்டி காட்டியவள்.”இதக்குத்தான்  என்னை  மலேசியாவில் இருந்து கூட்டிட்டு வந்தீங்களா”  என்று மறுபடியும் கேட்க..

“போடி”  என்று  அவளை உதறி தள்ளி  விட்டு  சென்று விட்டான்..

என்ன மாதிரியான வார்த்தை இது.

இவள் என்னை இப்படி நினைத்து விட்டாளே. போடி நீயே என்கிட்ட வரனும். நான் இனி  நீ இருக்கும்  திசைபக்கம் கூட வரமாட்டேன் போடி என்று புலம்பிபடியே..

மாடியில் உள்ள அவன் பார்ருக்கு  சென்றான்.. அவள் பேசிய வார்த்தைகளை  அவனால்  தாங்க முடியவில்லை.

என்னை நீ புரிஞ்சு  கிட்டது  இவ்வளவு தானா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!