Skip to content
Post Views: 2,154
பின் இருவரும் பேசியபடியே வெளியே வந்து, கனிகாவை பூஜை அறைக்கு அழைத்து வந்து விளக்கேற்ற சொல்லி.. விளக்கேற்றியதும் நிம்மதியாய் பார்த்திருந்தவரின் காலில் விழுந்து வணங்கியவளை பார்க்க பார்க்க அத்தனை நிறைவாக இருந்தது அவருக்கு.
அதே நிறைவோடு பால் காய்ச்சி காபி போட்டபடியே, “கண்ணா எழுந்திட்டானா கனிம்மா..?” என்றார்,
‘ஒருவேளை இன்று தனது நடைமுறையை மாற்றியிருப்பானோ..?’ என்ற நட்பாசையில்.
“உங்க பையன் எப்பவோ எழுந்து ரோட்டுல மேடு பள்ளம் சரியா இருக்கான்னு செக் பண்ண போயிட்டாரு அத்தம்மா..” என அவன் ஜாக்கிங் சென்றுவிட்டதை அவளுக்கே உரித்தான பாணியில் சொல்ல,
அவள் சொல்லிய விதத்தில் வந்த சிரிப்போடு காபியை சந்திரா அவளின் கையில் கொடுக்க,
Advertisement
அங்கிருந்த சமையல் மேடையின் ஒரு இடத்தில் மேலேறி அமர்ந்து கொண்டு காபியை ருசித்தவள்,
“அத்தம்மா.. காபி ஏ ஒன்..! பேஸ்.. பேஸ்.. நீங்க என்னோட மம்மிக்கும் கொஞ்சம் இதெல்லாம் சொல்லி கொடுங்க.
உங்க புண்ணியத்துல இதுக்கும் மேலையாவது டாடிக்கு நல்ல காபி கிடைக்கட்டும்..” என கூற,
Advertisement
“வாலு.. குடி.. உங்க அம்மா சமையல பத்தி என்கிட்டையே கொற செல்லறே..!
Advertisement
அவளை உனக்கு முன்னாடி இருந்து எனக்கு நல்லா தெரியுமுன்னு மறந்திடாதே..!” என சொல்லிய படியே வெற்றிக்காக சத்துமாவு கஞ்சியை கலந்தவர், காலை உணவிற்கான ஏற்பாடுகளையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார்.
அவர் செய்யும் வேலையை மேடையில் அமர்ந்தபடியே காலை ஆட்டி பார்த்துக் கொண்டு அவருக்கு சமமாக வாய் பேசிக்கொண்டிருக்க,
அந்நேரத்தில் தயாராகி வந்த தமிழும் மகளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தால் ஒருபுறம் நிம்மதி எழுந்தாலும்,
அவள் புகுந்த வீட்டில் இவ்வாறு இருந்தால் நாளை இதனை கொண்டு ஒரு வார்த்தை தவறாக வரக்கூடாதே..! என நினைத்து,
Advertisement
“ஏய் கனி.. என்னடீ இப்படி செய்யறே..? காலைல உங்க அத்தம்மாவ வேலை செய்ய வச்சிட்டு அங்கெதுக்கு குரங்கு மாதிரி உக்காந்திருக்கே..?” என திட்டிக்கொண்டே,
“அண்ணி.. எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான். அதான் இப்படி இருக்கா. ஒரு மாமியாரா அவள வேலை வாங்கறத விட்டுட்டு இப்படி உக்கார வச்சிட்டு நீங்க வேல பார்க்கனுமா..?”
“இன்னும் என்னடீ பண்ணற அங்கே..? இறங்குடீ கீழ..” என்று அதட்ட,
“மம்மி.. என்ன பார்த்தா உனக்கு மங்கி மாதிரியா இருக்கு..?
பாருங்க அத்தம்மா.. இப்படி தான் என்னை டேமேஜ் பண்ணிட்டே இருக்காங்க..” என சிணுங்கியபடி தன்னை துணைக்கு அழைத்தவளை பார்த்து,
“சில நேரத்துல உண்மை கசக்க தான் செய்யும்டா கனிம்மா.. அதுக்காக உண்மைய சொல்லாம இருக்க முடியுமா..?” என சொல்லி சிரிக்க,
“யூ டூ அத்தம்மா..!” என முகத்தை திருப்பியவளின் செல்லக்கோபத்தை போக்கிட,
“உன்னோட அம்மா இன்னைக்கு தானே இதெல்லாம் சொல்ல முடியும். நாளைல இருந்து அவ அவங்க வீட்டுக்கு போயிடுவா.
அப்புறம் ஃபுல்லா நம்ம ரெண்டு பேரோட ராஜ்யம் தான் தங்கம். நீ இங்கே என்ன.. எங்கே வேணுமின்னாலும் உக்காரு. எத வேணுமின்னாலும் உன் இஷ்டப்படி செய். யார் கேட்க போறாங்க..?” என்றார்.
சந்திரா எதார்த்தமாக கூறினாலும், ‘தன் மகளிடம் இதுவரை அதட்டியது போல உரிமையாய் இனி செய்ய முடியாதே என்பதும், நாளை முதல் தன் வீட்டில் அவள் இருக்கமாட்டாளே..!’ என்ற எண்ணமும் வர,
‘தங்களின் ஒரே மகளை.. அவளின் சேட்டையை விடுத்து எப்படி இனி இருக்க போகிறோமோ..?’ எனத் தோன்ற கண்களில் நீர் நிறைந்தது செந்தமிழுக்கு.
சந்திரா தான் சொன்னதற்கு பதிலாக தமிழும் எதாவது சொல்வார் என எதிர்பார்க்க,
பதிலெதுவும் வராது போனதால் திரும்பி அவரை பார்த்த பிறகே புரிந்தது.. தான் சொன்னது அவர்களை எப்படி பாதித்திருக்கும் என்பது.
அதே போல தானே கனிகாவிற்கும்.. என அவளையும் பார்க்க,
கனிகாவும் சந்திராவின் வார்த்தையில், ‘இனி தன் தாய் தன்னுடன் இருக்க மாட்டார்..’ என்பது உறைக்க,
தனது மனதில் லேசாக ஏறிய பாரத்தை யாருக்கும் காட்டிட கூடாது என்பது போல, விழியில் வழிய இருந்த நீரை நிறுத்திட, கண்களை நாலா புறமும் சுழற்றிய படி அமர்ந்திருப்பவளை பார்த்ததும் சந்திராவிற்கே மிகவும் வருத்தமாகி போனது.
“இப்போ நா என்ன சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் சோக கீதம் வாசிக்கறீங்க..?
நா சும்மா எதார்த்தமா தான் சொன்னேன்.
ஏன் தமிழ் இது உன் அண்ணன் வீடு தானே..?
அப்போ நா சொன்னதும், ‘என் அண்ணா வீட்டுக்கு நா எப்போ வேணுமின்னாலும் வருவேன்.. அத கேட்க நீங்க யாருன்னு கேட்டுட்டு.. கட்டி கொடுத்தாலும் என் மகள அதட்ட எனக்கு இல்லாத உரிமையான்னு சொல்லாம.. எதுக்கு இப்படி கலங்கிட்டு இருக்கே..?
அம்மாடி கனி.. நீயும் என்னடா இப்படி..? உன்கிட்ட இருந்து இதை நா இத எதிர்பார்க்கவே இல்ல.
இந்நேரம் நா பேசினதுக்கு என்கிட்ட மல்லுக்கு நிப்பேன்னு பார்த்தா.. நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரியும் பண்ணிட்டு இருக்கே..?
யூ ஆர் ஸ்பெஷல்.. ஏம் ஐ கரெக்ட்..?” என சிரிப்போடு சொல்லியவரை,
செந்தமிழும் கனிகாவும் இருபுறமும் அணைத்தபடி.. கண்ணில் நீரோடும், இதழில் சந்தோஷ புன்னகையோடும் நின்ற காட்சியை கண்ட பிரகாஷின் மனமும் நிறைவோடும்.. நிம்மதியோடும் இருந்தது.
‘தன் மகளை எப்போதும் நல்லமுறையில் சந்திரா பார்த்துக்கொள்வார்..’ என்பதோடு,
‘தங்களுக்கும் அவளின் உறவு என்றும் மாறாது. அதே உரிமையுடன் நடக்கலாம்..’ என்பதை விட பெரிய நிம்மதி பெண்ணை பெற்றவருக்கு கிடையாதே..!!
அது தந்த நிம்மதியோடு பிரகாஷ் ஹாலில் அமர்ந்து பேப்பரை கையிலெடுக்கவும், வெற்றிவேல் செழியன் உள்ளே வரவும் சரியாக இருக்க, “வாங்க மாப்பிள.. குட் மார்னிங்.. அம்மாடி கனி.. மாப்பிளை வந்துட்டாரு பாரு. குடிக்க காபி கொண்டுவாடா..” என சொல்ல,
‘பிராடு பொண்ண பெத்து வச்சிட்டு அக்கரைய பாரு. மொத்த குடும்பமுமே பிராடா மாறி இருக்கு..
எல்லாம் அந்த குட்டி பிசாசு தான் கத்து கொடுத்திருக்கும்..
கார்த்தி இருந்த வரை எப்படி இருந்தாரு.. இது எப்படி மாத்தி பொய் சொல்ல கத்து கொடுத்து வச்சிருக்கு..’ என மனதில் நினைத்தவன்,
வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றவாறே அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் மெல்ல, “குட் மார்னிங் மாமா..” என சொல்லிய படி அமர்ந்தான்.
அவனை அருகில் பார்த்த பிரகாஷ், “என்ன மாப்பிளை கண்ணொல்லாம் சிவந்து கிடக்கு..?” என அக்கரையாய் கேட்க,
அவருக்கு காபியுடன் வந்த தமிழை, வெற்றிக்கு சத்துமாவு கஞ்சியோடு வந்த சந்திரா, ‘இத போய் கேட்கறாரே..?’ எனும் விதமாய் பார்க்க,
செந்தமிழோ, “இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட கூரே இல்ல.. என்ன அண்ணி செய்ய..?” என சந்திராவிடம் சொன்னதோடு, அவரையும் பார்த்து முறைத்து வைத்தார்.
வெற்றியோ அவரின் கேள்விக்கு பதில் சொல்லாது, கனியை பார்வையாலேயே, ‘உண்மைய சொல்லிடவா..?’ எனக் கேட்க,
அவளும், ‘சொல்லுங்க.. நானும் நடந்ததை சொல்லுவேன்..’ என திரும்ப பாவனையாய் சொல்லிட,
“போடீ.. அராத்து..” என வாயசைத்துவிட்டு,
பிரகாஷிடம், “ஜாக்கிங் போகும் போது டஸ்ட் விழுந்திடுச்சு மாமா வேற ஒண்ணுமில்ல..” என கூற,
சிறியவர்களின் நயண பாசையை கண்ட பெண்கள் ஒருவிதமாய் பார்த்து சிரிக்க,
பிரகாஷோ, “அப்ப போய் கண்ணை நல்லா தண்ணி விட்டு கழுவுங்க மாப்பிளை.
எவ்வளவு சிவந்து போச்சு. கனிம்மா நீயும் அவர் கூட போடா.
மாப்பிள்ளைக்கு என்ன வேணுமின்னு பார்த்து செய்..” என சொல்ல,
‘மாட்டுனீயா..? காலைல தப்பிச்சிட்டே. இப்போ வாடீ உனக்கு இருக்கு..’ என்ற பார்வையோடு வெற்றி உற்சாகமாய் மாடியேற,
சந்திரம்மா கனியிடம், “இந்தாடா இந்த கஞ்சியையும் கொண்டு போய் கொடு..” என்றவர்,
தமிழிடம், “வா தமிழ்.. நம்ம போய் டிபன் வேலைய பார்க்கலாம்..” என சமையறைக்கு செல்ல, தான் கொண்டு வந்த காபியை பிரகாஷிடம் கொடுத்துவிட்டு அவரை பின் தொடர்ந்தார் தமிழும்.
காபியை குடித்துக்கொண்டே பிரகாஷ் மீண்டும் பேப்பரில் முகம் புதைக்க,
தப்பிக்கும் மார்க்கமில்லாததால், கையிலிருந்த கஞ்சியையும் மாடியையும் பார்த்த கனிகா..
“கண்டிப்பா போகணுமா..?” என்ற சிந்தனையோடு மாடியேற துவங்கினாள் வேறு வழியின்றி..!!
காத்திருப்பவனின் வலைக்குள் செல்பவள் மீள்வாளா..?! இல்லை அவனிடம் வீழ்வாளா..?!
error: Content is protected !!