Skip to content
Post Views: 790
“ஏய் ப்ளீஸ் நீயும் வாடி. உள்ள போக எனக்கு பயமா இருக்கு”என்று பயத்தில் முதல் இரவு அறைக்கு செல்ல கீதாவை அழைத்தாள் பாரதி.
“ஏய் லூசு ஏதாவது சொல்லிருவேன் போடி… போனா.. போடினா..” என்று கடுப்புடன் அவள் கையில் பாலை கொடுத்து மாடியில் இருக்கும் திருவின் அறைக்கு அனுப்ப முயன்றாள்.
“ஏய் ரொம்ப பயமா இருக்கு டி.அதனாலதான் உன்னை துணைக்கு கூப்பிடுறேன். அதுவும் வாசல் வரைக்கும் தான் கூப்பிடுறேன் ப்ளீஸ் வாடி”
“ஆள பாரு போடி. பொதுவா இந்த சடங்கு நடக்கும்போது கல்யாணம் ஆகாத பொண்ணுங்கள இருக்க விட மாட்டாங்க நீ ஏதோ கெஞ்சினனு எங்க அம்மா என்ன இருக்கவிட்டதே பெரிய அதிசயம். இதுல உன் கூட நான் ஃபர்ஸ்ட் நைட் ரூம் வரைக்கும் வந்தேனு எங்க அம்மாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். என்னால முடியாதுப்பா நீ வேற யாரையாவது கூட்டிட்டு போ”என பார்த்து கும்பிட்டாள் கீதா
Advertisement
“ என்னடி இப்படி சொல்ற நீ தானே என்னோட ஒரு ஃப்ரெண்டு. நீ என் கூட வரலைன்னா வேற யாரும் வருவா சொல்லு என் செல்லம்ல என் கூட படிக்கட்டு வரைக்கும் மட்டும் வாடி” என கெஞ்சினாள் பாரதி.
அப்போது அங்கே வந்த புஷ்பா, “என்னமா நீங்க இன்னும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு எதுவா இருந்தாலும் காலைல பேசுங்க போமா ஏற்கனவே நேரமாக்கிட்டு” என்று அவளை அறைக்கு போகச் சொன்னார்.
“ சரிங்கத்தை இதோ போகிறேன் இவதான் என்ன தேவை இல்லாம இருக்க வச்சு பேசிட்டு இருக்கா அத்த நான் இதோ.. இதோ கிளம்பிடுறேன்”என வேகமாக பால் சொம்புடன் படி ஏறி திருவின் அறைக்கு சென்றாள் பாரதி.
Advertisement
அவளின் ஓட்டத்தை பார்த்த கீதா, “ அடிப்பாவி செவனேன்னு இருந்தவள எப்படி கோத்து விட்டு போயிருக்கா பாரு. இவ காரணமாகத்தான் நம்மள இருக்க சொல்லி இருக்கா. அடியே பாரதி உனக்கு நான் அப்ப பண்ணத. எனக்கு இப்படி வட்டி மொதலுமா திருப்பி தரியா. நல்லா வருவடி அம்மா”என புலம்பிக் கொண்டு தன்னை பார்த்துக் கொண்டிருந்த புஷ்பாவை பார்த்து, “ ஐயோ இவங்க வேற நம்மளையே பார்த்துட்டு இருக்காங்களே என்ன சொல்ல எதுக்கும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்” என்று நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்து சிரிக்க
Advertisement
“ என்னம்மா உன்னை என்கிட்ட கோர்த்து விட்டுட்டு அவ தப்பிச்சுட்டானு மனசுக்குள்ள நினைக்கிறாயா” என்றார் சிரிப்புடன்
அதற்கு ஆமாம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டு, “இல்லை இல்லை ஆன்ட்டி நான் அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கல” என்றாள் அவசரமாக கீதா.
அப்போது அங்கே வந்த கார்த்திக், “ என்னம்மா நம்ம வீட்டுக்கு புதுசா வந்த பொண்ண ரேக்கிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா” என்றான்.
Advertisement
“ யாரு நான் ரேக்கிங் பண்றனா அட போடா. ஆமாம் மத்தவங்க எங்க எல்லாரும் சாப்டாங்களா” என்று விசாரித்தார்.
“அதுலாம் எல்லா பேரும் சாப்டுட்டு மேல மொட்டை மாடியில படுக்க போட்டு எல்லாரும் படுக்க போயாச்சு”
“மொட்டை மாடியிலயா அது சரி நீ எதுக்கு கீழே வந்த“ என்றார் சந்தேகமாக
“ அது அம்மா நான்” என்று உளறியவன், “ ஐயோ அவசரத்திற்கு பொய் சொல்ல தெரியலையே. இதுக்கு தான் சொன்னேன் நான் போல டா வேற யாரையாவது அனுப்புங்கன்னு யாரு கேட்டா இப்ப அம்மா கிட்ட வேற மாட்ட போறேன் அய்யோ இவங்க வேற நம்ம மூஞ்சிய பாத்துட்டு இருக்காங்களே என்ன சொல்ல” என்று மனதில் புலம்பி கொண்டு, “ஆங் அது வந்தும்மா நான் தண்ணி எடுக்க வந்தேன். எல்லோரும் மேல படுக்கிறதால குடிக்க தண்ணி வேணும்னுல அதான் எடுக்க வந்தேன்”
“ ஓ தண்ணி எடுக்க வந்த சரி ஓகே” என்றவர், “ தண்ணி தாகத்துக்கு மட்டும் தான” என்று மறுபடியும் கேட்டார்.
“ என்னமா நீங்க தண்ணி தாகத்துக்கு மட்டும் தான் குடிப்பாங்க. நீங்க என்ன சில்லியா கொஸ்டின் கேட்டு இருக்கீங்க. போங்க உங்க தண்ணி வேண்டாம் ஒன்னும் வேண்டாம் நான் மேலே போய் படுத்து தூங்க போறேன்” என்று நிற்காமல் படியேறி மேலே சென்றான் கார்த்திக்.
அவன் வேகமாக ஓடுவதை பார்த்து சிரித்து நின்ற கீதாவிடம், “ மேல பீர் பார்ட்டி நடக்குது. அதுக்கு தண்ணீ எடுக்க வந்துட்டு எப்படியெல்லாம் பொய் சொல்றான் பாருமா” என்றார் சிரிப்புடன்.
“ ஏன் ஆன்ட்டி அவங்க குடிக்க போறாங்க உங்களுக்கு இப்படி குடிக்கிறாங்களேன்னு கோபம் வரலையா”
“ கோபம் லைட்டா வருது தான் இருந்தாலும் என் பசங்க எப்பவாது தான் ஃபங்ஷனுக்கு லைட்டா குடிப்பாங்க. அதுவும் பீர் மட்டும் தான் குடிப்பாங்க. இந்த வயசுல இந்த சந்தோஷம் கூட இல்லனா எப்படிம்மா. குடிக்கட்டும் அவங்களுக்கு அளவு எவ்வளவுனு தெரியும். அதையும் மீறிப் போனா அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்” என்று புஷ்பாவை வியந்து போய் பார்த்தாள் கீதா.
@@@@@@@@@@
தனது அத்தை ஏதாவது சொல்வார்களோ என்ற பயத்தில் மேலே வந்து பாரதி திருவின் அறைக்குள் செல்ல முடியாமல் அறை வாசலிலே நின்று உள்ளே செல்லலாமா வேண்டாமா என சிந்தித்துக் கொண்டு நிற்க இப்போது ஒரு வலியக்கரம் அவளை பிடித்து அறையின் உள்ளே இழுத்தது.
அதில் பயந்து போன பாரதி மிரண்டு போய் ஆ.. என கத்த வர அங்கே என்றவனின் கெட்டப்பை பார்த்து அப்படியே வாயடைத்து போய் நின்றாள்.
திரு தனது வலது கையில் மல்லி பூவை சுற்றிக்கொண்டு பட்டு வெட்டி பட்டு சட்டை அணிந்து கண்ணில் கூலருடன் ஸ்டைலாக நின்றவன். இவளை பார்த்து,
“ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்கமாட்டேன்…
தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி…
அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…” என்று பாடி ஆடினான்.
திருவிடம் இப்படி ஒரு பரிணாமத்தை எதிர்பாக்காத பாரதி எதுவும் பேச முடியாமல் சமைந்து போய் அவனை பார்த்துக்கொண்டு நின்றாள்.
“ என்ன பொண்டாட்டி என்கிட்ட இப்படி ஒரு பெர்பார்மன்ஸ் எதிர்பார்க்கலையா அப்படியே மாமன பார்த்து வாயடிச்சு போய் நிக்கிற” என்றான் ஸ்டைலாக திரு.
“ மாமா உண்மையிலே நீதானா இல்ல வேற யாருமா. எப்படி மாமா இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுற” என்றாள் வியந்து போய் அவனை தொட்டு தடவி பார்த்துக்கொண்டு
“ ஏய் என்னடி பண்ற அங்கங்க கை வைக்காதடி” என்று நெளிந்த திரு அவளின் கைகளை அசையாமல் பிடித்துக் கொண்டு
“செல்லக்குட்டி இந்த சேலையில நீ எப்படி இருக்கு தெரியுமா. அப்படியே ஸ்கை ப்ளூ நிறத்துல அங்கங்க முத்துக்கள் தூவுன மாறி அப்படியே கடல் கன்னி மாதிரி இருக்கடி. உன்ன அப்படியே படுக்க போட்டு” என்றவனின் வாயை அவசரமாக மூடிய பாரதி
“ என்ன மாமா நீ இப்படி எல்லாம் பேசுற எனக்கு ஏதோ மாதிரி இருக்குது ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதே” என்று கெஞ்சினாள்.
அவனோ அதற்கு பதில் சொல்லாமல் அவள் தனது வாயில் வைத்திருந்த கையை காட்டி எடுக்கச் சொன்னான்.
“ நான் கையை எடுக்கேன் இனிமே நீ அப்படி பேசக்கூடாது சரியா” என்று அவனுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கையை எடுக்க
“ அட லூசு படுக்க போட்டு முந்தானை விரிச்சு விட்டு ரெண்டு ஸ்டில் எடுக்கணும்னு சொன்னேன் டி. எப்ப பாரு அதே நினைப்புல இருக்க வேண்டியது. நீ வர வர ரொம்ப பேட் கேர்ள் லா மாறிட்டு வர பாரு குட்டி” என்று அவள் தலையில் இரண்டு கொட்டு வைக்க
“போ மாமா எப்ப பாரு என் தலையில கொட்டிக்கிட்டு மீந்தி தான் சின்ன பிள்ளையா இருக்கும் போது தலையில் அடிப்ப இப்பவும் ஏன் மாமா அடிக்க வலிக்குது” என்று சினங்கினாள்.
“ஐயோ என் செல்லத்துக்கு வலிக்குதா இரு மாமா உன் வலிய எப்படி போக்குறேன் பாரு” என்று அவளின் முகத்தை தனது இரு கைகளால் தாங்கி உச்சந்தலையில் அழுத்தமாக தனது இதழ்களை பதித்தான். அதில் கிறங்கிப் போன பாரதி தனது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள. அப்படியே கீழே இறங்கி நெற்றியில் அழுத்தமாக தனது முத்திரையை பதித்து அப்படியே கொஞ்சம் கீழே வந்து அவளின் கண்கள் மேலும் இரு கன்னத்திலும் தனது முத்திரையை பறித்து தனது மூக்கினால் அவள் மூக்கினை தீண்டி அவனின் உதடுகளை அவள் உதடுகளின் அருகே கொண்டு செல்ல அப்போது திடீரென அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.
அந்த சத்தத்தில் தன்னிலை மறந்து இருந்த இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.
“ஒரு நிமிஷம் இருடா அந்த போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வந்துடறேன்” என்று சொல்லி
கடுப்புடன் தனது கைகளில் சொக்கி நின்ற மனைவியை விட மனம் இல்லாமல் விட்டுவிட்டு மேஜையின் மீது இருந்த தனது கைபேசியை எடுத்து பார்க்க அதில் தனது வேலை சம்பந்தமான அழைப்பு என்பதால் தவிர்க்க முடியாமல் அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்து பாரதியை பார்த்து பைவ் மினிட்ஸ் என கை அசைத்து விட்டு பால்கனியில் நின்று பேச தொடங்கினான்.
அவனை பார்த்துக்கொண்டு அப்படியே படுக்கையில் போய் அமர்ந்தவள் சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் தூக்கத்திற்கு சென்றாள்.
போன் பேசி முடித்துவிட்டு வந்த திரு சிறு குழந்தை போல் கால்களை மடித்து உறங்கும் மனைவி பார்த்து சிரிப்புடன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளை ஒழுங்காக படுக்க வைத்து விட்டு, “ ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு ஒன்ன தூங்க விடக்கூடாது நினைச்சேன் ஆனா இப்ப பாரு. எல்லாம் என் நேரம் என்னோட எட்டு வருஷ காதல் கைகூடி வந்திருக்கு. ஆனா அத அனுபவிக்க முடியாம கடமை என்ன அழைக்குது. சாரிடா பாரு குட்டி நீ இன்னைக்கு நிம்மதியா தூங்கு. நாளைக்கு மாமா உன்ன ஒரு செகண்ட் கூட கண்மூட விடமாட்டேன்” என்று சொல்லி அவளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டு, “அப்படியே கடற்கன்னி மாதிரி இருக்கா. அவள அப்படியே சாப்பிட முடியாம இருக்கேன் பாரு என் விதியை தான் சொல்லணும். இந்தக் கடற்கன்னி இந்த காளைக்கு இன்னைக்கு இல்ல”என புலம்பி விட்டு தன் போனை எடுத்து தனது அன்னையிடம் தான் செல்ல போகும் கேஸ் விஷயமாக சொல்லி, தன் மனைவியும் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு தனது பணியை பார்க்க சென்றான் திரு.
error: Content is protected !!