Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 10.1

“சரி அத விடு. இப்போ இதை ஏன் இப்படி பண்ணி வச்சிருக்க..?” என கவிழ்ந்து கிடக்கும் ஃபைல்கள் வைக்கும் சிறு கபோர்டை காட்டி கேட்க,

“அதுவா மாமா, நா கொஞ்சம் படிக்கறதுக்காக எங்க வீட்டுல இருந்து புக்ஸ் கொண்டு வந்தேனா.. அதை வைக்க இடம் பார்த்தனா.. இது தான் நல்லா சூப்பரா இருந்துச்சு. 

நீங்க வேற அதுல புக்கும், ஃபையிலுமா வச்சிருந்தீங்க. சோ அதோட சேர்த்து இதையும் அடுக்கி வைக்கலாமின்னு திறக்க பார்த்தேன்…” என இழுத்து நிறுத்தி சொன்னவளை பார்த்து,

“கபோர்டுல வைக்க திறக்க பார்த்ததெல்லாம் சரி. அது இப்படி எப்படி டீ கவுறும்..?” என வெற்றி கேட்க,

“அதுமேல ஏறினா கவுறதா..? என்ன மாமா உங்களுக்கு அறிவே இல்ல.. எப்படி போலீஸ்ல சேர்த்தாங்க..?” என கேலியாய் கேட்டவளை முறைத்தாலும், அதில் ஏற வேண்டிய தேவையை அறிய வேண்டி,

“என்ன அதுக்கும் மேல ஏறுனியா..? எதுக்கு..? குரங்கா நீ ஒரு இடத்துல அடங்காம ஏறி குதிக்க..” என எரிச்சலோடு கேட்க,

“மாமா.. குரங்கு அது இதுன்னா நல்லா இருக்காது பார்த்துக்கோங்க. 

புக் வைக்க திறக்க முதல்ல அதோட சாவி வேணுமே மாமா. அதை ரூம்ல எல்லா பக்கமும் தேடினேன் கிடைக்கல.. 

அதான் அதுக்கு மேல இருக்குமோன்னு ஸ்டூல் போட்டு ஏறி தேட ட்ரை பண்ணேன்.



Advertisement

அதை பிடிச்சதும் இப்படி கவுந்து என்னையும் கவுக்குமின்னு தெரியல மாமா..” என பச்ச குழந்தை போல முகத்தை வைத்து சொன்னவளை பார்க்கும் போது, ‘அதுவரை இருந்த கோபம் போய்விடுமோ..?’ என வெற்றிக்கு ஆக,

‘வெற்றி, இவ சரியான மயக்கு மோகினி. அப்பாவி மாதிரி முகத்த வச்சிட்டு உன்னை பேசியே கவுத்திடுவா கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச மாதிரி. முதல்ல ரூமை விட்டு வெளிய போயிடு..’ என மனது எச்சரிக்க,

“இங்க பாரு மரியாதையா இந்த ட்ரஸ்ஸெல்லாம் எடுத்து என்னோட கபோர்டுல எப்படி இருந்துச்சோ அதே மாதிரி வச்சிட்டு, ரூமை நல்லா நீட்டா க்ளீன் பண்ணி வைக்கறே நைட்டுக்குள்ளே. 

இல்லன்னு வைய்யி உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என அதிகாரமாய் சொல்லிவிட்டு, கீழே குவிந்திருந்ததில் தனக்கான மாற்று உடையை எடுத்த படி குளியலறையை நோக்கி நகர்ந்தவனை பார்த்து,

“என்னை என்ன வேணுமின்னாலும் செய்யலாமுன்னு உங்களுக்கு பர்மிஷன் கொடுத்து 2 நாளாச்சு மாமா.  

ம்ஹும்.. இதுவரைக்கும் எதுவுமே நடக்கல. இதுல அதிகாரம் வேற..” என பெருமூச்சோடு மெதுவாக சொன்னாலும் வெற்றியின் காதில் விழுமாறு சொன்னவளை பார்த்தவன்,

“நீயெல்லாம் திருந்திட்டா நாடு என்ன ஆகும்..? இந்த ஜென்மத்துல நீ மாற மாட்ட. ச்சை.. உன்கிட்ட போய் பேச நினச்சேன் பாரு.. என்னைய…” என அந்த அறையை சுற்றி பார்த்தவனை பார்த்து,

“மாமா, உங்கள அடுச்சுக்கவா பொருள் தேடறீங்க..? நல்லதா பார்த்து தேடி நான் வேணுமுன்னா எடுத்து தரவா..?” என கேட்ட கனிகாவை,

Advertisement

ஒட்டு மொத்த பொறுமையும் தொலைத்த வெற்றி, “அடிங்க..” என சொல்லி தனது கரத்திலிருந்த துணியை அவள் மீது வீசி விட்டு துரத்த,

“அய்யோ.. அத்தம்மா உங்க பையன் என்னை அடுச்சு கொல்ல பார்க்கறாரூ..” என கத்தியபடி ஓடியவளை அந்த அறையை விட்டு வெளியே சென்றிடாதவாறு தடுத்த வெற்றி,

“அடியேய் கத்தாதடீ.. நா அடிக்கவே இல்ல. அதுக்குள்ள இப்படி கத்தி ஊரையா கூட்டறே.. என் கையில மட்டும் சிக்கினா இருக்குடீ, உனக்கு..” என சொல்லியபடியே விரட்ட,

“வேணாம் மாமா.. நீங்க என்கிட்ட வந்தா இன்னும் கத்துவேன்..” என்றபடியே கட்டிலை சுற்றி ஓடியவள், 

Advertisement

கீழே குவிந்து கிடந்த அவனின் உடை காலை தட்டிவிட அந்த ஆடைக் குவியலில் தடுமாறி கனிகா விழ, அவளை விரட்டியவனும் அவளின் எதிர்பாரா செயலில் சேர்ந்தே விழுந்தான் அவளின் மேலேயே.

சில நொடியில் நடந்த இந்த நிகழ்வில் அவளின் மேல் மொத்தமாக கவிழ்ந்திருந்த வெற்றியை வெகுவாய் சோதித்தது பெண்ணவளின் மென்மை.

வெகு அருகில் தெரிந்த அவளின் அதிர்ந்து விரிந்த கண்களும்.. அதில் எப்போது வீற்றிருக்கும் குறும்பும்.. ஒரு வித மயக்கத்தை கொடுக்க, மெல்ல தன் பார்வையை கீழிறக்கியவனை கவர்ந்திழுத்தது அவளின் ஓயாமல் பேசும் செவ்விதழ்கள்.

மேலும் கீழிறங்கி போக சொன்ன பார்வையை கட்டுப்படுத்த முயன்றவனின் கரங்கள் உணரும் அவளின் மென்மை மேலும் சோதனைக்கு உள்ளாக்க தொடங்கியது.

Advertisement

தான் நேசிக்கும் பெண்ணவளின் மென்மை மெல்ல அவனை தடுமாற செய்து கொண்டிருக்க, அதில் மொத்தமாய் அவனின் பார்வை அவளின் மீதான உரிமை பார்வையாய் உருகொண்டது.

அவனின் பார்வை காலையில் மாடிப்படியில் அவள் கண்ட கனவை நினைவு படுத்த, ஏற்கனவே அவனின் நெருக்கத்தில் தகித்தவளுக்கு இன்னும் தவிப்புக்கு உள்ளாக்கியது.

அவனின் பார்வை சென்ற இடங்களை உணர்ந்த கனிகாவிடம் அதுவரை இருந்த  குறும்பு மறைந்து அவ்விடத்தை மெல்லிய நாணமும், பெண்மைக்கே உரித்தான பதட்டமும் ஆக்கரமிக்க அவளின் முகத்தோடு சேர்ந்து மொத்த தேகமும் சிலிர்ப்போடு சிவக்க ஆரம்பித்தது.

அவளின் முகத்திலும் உடல் மொழியிலும் ஏற்பட்ட மாறுபாட்டில் விரும்பியே தொலைந்து போக நினைத்தவன், 

மெதுவாக அவளின் நடுங்கும் இதழை நெருங்க அவனின் நோக்கம் புரிந்து அவளின் இமைகள் மூடிக்கொண்டது, பெரும் எதிர்பார்ப்போடு.

இதுவரை எந்த பெண்ணிடமும் தோன்றாத உணர்வோடு அவளை நெருங்கி அவளின் இதழை தனது இதழால் மொத்தமாய் அணைக்கவிருந்த நேரம்,

“கனிம்மா என்னடா ஆச்சு..? எதுக்கு இப்போ என்னை கூப்பிட்டே..?”  என்ற படி கதவை திறந்த சந்திராவின் குரலில், அடித்துபிடித்து விலகிய வெற்றியையும்,

சட்டென எப்படி அந்த சூழலில் பேசுவது.. என்ன சொல்லி சமாளிப்பது என புரியாது தவித்த கனிகாவையும் கண்டவருக்கு.. 

அவர்கள் இருக்கும் நிலை, அவர்கள் முகம் காட்டிய வெக்கம் அனைத்தும் நடந்ததை ஒருவாறு புரிய வைக்க,

அவசரமாக மறுபுறம் திரும்பி நின்றவாரே, “நைட் டின்னர் ரெடி பண்ணி வைக்கறேன்.. நீங்க பொறுமையா வந்தா போதும்..” என்றபடியே சந்தோஷத்தோடு அவசரமாக கதவை அடைத்து செல்ல,

அதுவரை இழுத்து பிடித்த மூச்சை, ‘உஸ்…’ என வெளிவிட்ட வெற்றிவேல் திரும்பி கனிகாவை பார்க்க, அவளும் வெக்கத்தோடு அசட்டு சிரிப்பொன்றை தந்தபடி எழுந்து வெளியே ஓடிபோனாள்.

இதுவரை உணராத புதுவித உணர்வோடு, “வெற்றி.. நிஜமாவே இவ மோகினி தான்.

இவள விட்டு விலகி இருக்க முடியுமா தெரியலையே.. 

நைட்டே அவகிட்ட பேசறே.. அடுத்து.. அவள மொத்தமா எடுத்துக்கறே..” என நினைத்தபடி எழுந்தவன்,

அவனே தனது அறையை ஒழுங்கு செய்துவிட்டு அழகிய கனவோடு குளியலறை சென்று சிறு குளியலை போட்டவன்  இரவு உணவிற்காக கீழே சென்றான்.

இப்போதாவது அவனின் எண்ணத்தை செயலாக்க அவனின் அராத்து விடுவாளா..?!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!