Skip to content
Post Views: 397
அவர்களைப் பார்த்தபடி எழுந்து நின்றான் விக்னேஷ்.
“நீங்க எந்த அளவுக்கு தப்பா இருக்கிங்கன்னா நீங்க செய்வது தப்புன்னு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு தப்பா இருக்கிங்க. பெண்களை பெத்துக்கும்போது அவங்களை வேறொரு வீட்டுக்கு நம்பிக்கையோடு அனுப்பும் அளவுக்கு மனசு இருக்கும் உங்களுக்கு பையனோட காதல் முடிவை ஏற்க மனசு வருவதில்ல. மகளோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிற நீங்களே மருமகளை கேவலமா பாக்குறிங்க. பெண்களோட மனசை கூட அளந்துட முடியும். ஆனால் இந்த அம்மாக்களோட மனசை அளக்கவே முடியல..” என்றான்.
Advertisement
“தயவு செஞ்சு போய் தொலை. உன்னோட மூஞ்சியை பார்க்க கூட எனக்கு இஷ்டம் இல்ல..” என்றாள் கனகவதி.
“உங்களுக்கு இப்ப கூட நான் சொல்வதுதான் தப்புன்னு தோணும். ஒருநாள் எல்லாத்தையும் புரிஞ்சிப்பிங்க மம்மி. அன்னைக்கு நம்ம பையனை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டோமேன்னு நினைப்பிங்க..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
Advertisement
Advertisement
அவன் தனது அறைக்கு வந்தபோது மாயா கட்டிலில் தேவதை போல் அமர்ந்து இருந்தாள். இவனை பார்த்து கண் சிமிட்டினாள்.
“என்ன சொன்னாங்க என் மாமியாரும் அவங்க பிரெண்ட்ஸூம்?” என்று கேட்டாள்.
Advertisement
“அவங்க கிடக்குறாங்க காமெடி பீஸ்..” என்றவன் அவள் முன்னால் வந்து அமர்ந்தான்.
அவர்கள் காமெடி பீஸ் கிடையாது. அன்பிலே சிறந்த தெய்வங்களும் கிடையாது. அது இவளுக்கு மட்டும்தான் தெரியும்.
காலங்கள் மாறினாலும் சில கேரக்டர்கள் மாறுவதில்லை. மருமகள் என்பவளும் ஏதோ ஒரு தாய் சிரமப்பட்டு பெற்றெடுத்த குழந்தைதான் என்பது புரியப் போவதும் கிடையாது. ட்ரெண்டிங்கான பிரச்சனைகள் வரலாம். ட்ரெண்டிங்கான திட்டுகள் விழலாம். ஆனால் மருமகளை புரிந்து கொள்ள ஒரு சில மாமியார்களுக்கு மனது மட்டும் வராது.
இவ்வளவு நேரமும் தனது மோதிரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் மாயா.
“என்னோட மரணத்தின் இறுதி வரை இந்த மோதிரம் என் கையில இருக்கும்..” என்று சொன்னாள். இவனுக்கு கொஞ்சம் கர்வமாக இருந்தது.
அருகில் அமர்ந்திருந்தவனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். ஆளை மயக்கம் அத்தனையும் அவன் விழிகளில் இருந்தன. சிட்டுகள் விரும்பும் தேனும் இருந்தது. சிந்தனை மயக்கும் காதலும் இருந்தது.
அவளின் பார்வை கண்டு வெட்கப்பட்டவன் “இப்படி பார்க்காத. வெட்கத்துல கரைஞ்சிடுவேன்..” என்றான்.
அவனை பின்னால் தள்ளினாள். மேலே படர்ந்தாள்.
இவள்தானா என்று அவன் ஆச்சரியப்பட்டான்.
அவன் சட்டையை இறுக்கியபடி குனிந்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
பிறகு அவன் முகம் பார்த்தாள்.
“இதுக்குதான் இவ்வளவு சீனா? பட் இதுவும் எனக்கு பொக்கிஷமே!” என்றான்.
அவள் விழிகள் சுருங்கியது. மீண்டும் கன்னத்தில் இதழ் பதித்தாள். அவன் இதழோடு தன் இதழை வைத்து தேய்த்தாள். அவன் இவளின் இதழ்களை சிறை பிடிக்க வந்தபோது விலகி விட்டாள். அவன் இதழில் பூ தீண்டல் போல் முத்தங்கள் தந்தாள்.
“மாயா!” என்றவனின் குரல் மாறி விட்டது. அவன் கரங்கள் அவளின் முதுகில் படர்ந்தன. அவள் பிளவுஸின் கயிறுகள் அவன் கையில் மாட்டின. தன்னை மறந்து கயிற்றை இழுத்தான்.
பிளவுஸ் கழண்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்து முதுகை தொட்டான். பிளவுஸ் அதே போலதான் இருந்தது. இந்த பிளவுஸின் மாடலை அவனுக்கு பிடிக்கவில்லை. அவனின் புதையலை மறைத்து வைத்திருக்கும் அவளின் சேலையையும் பிடிக்கவில்லை.
அவன் தாடையில் இதழ் பதித்தாள். மெல்லிய சாரலாக முத்தங்களை தூவினாள்.
“மாயா!” என்று அவன் தன்னை மறந்து முனகினான். கதவு வேறு திறந்து இருந்தது. அதில் ஒரு கண்ணை வைக்க வேண்டி இருந்தது.
கதவை சாத்தி விடலாம் என்று சொன்னால் இவளின் மோக மயக்கம் போய் விடும், இந்த அரைகுறை இன்பத்திற்கும் தடை ஏற்பட்டு விடும். இவனால் விடவும் முடியவில்லை.
மாயாவின் இதழ்கள் அவன் கழுத்தை தொட்டன. அவன் விழிகளை மூடினான். அவன் காணாத இன்பம் இது. ஒற்றை முத்தம் ஒரு நட்சத்திரத்தின் விலை பெறும். அவளின் இதழ்கள் மந்திர கோலா இல்லை நெருப்பை கக்கும் பனி மலையா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முத்தமும் தனி தனியாக இனிப்பை தந்தன. இன்பத்தை இதயத்திற்குள் திணித்தன.
அவளும் தன்னை மறந்துதான் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். கணவன் என்று வந்து விட்டால் வெட்கம் மடம் நாணமெல்லாம் கதவுக்கு வெளியே என்று சும்மாவா சொன்னார்கள்?
அவளின் விரல்கள் அவனின் சட்டை பட்டனை தேடி அவிழ்த்தன.
உதடுகள் இரண்டும் அவன் கழுத்தை உறிஞ்சின.
அவனின் கைகள் இரண்டும் அவளை இறுக்க அணைத்தன.
அவனின் ஆசையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த நொடி முடிய கூடாது. இவளின் ஆசை தீர கூடாது.
அவளின் விரல்கள் சட்டையின் ஒரு பட்டனை கழட்டின.
அவனுக்கு இந்த மெதுவான தேடல் பிடிக்கவில்லை. அவளை சாய்த்து தன் ஆசையை தீர்க்க ஆசை. ஆனால் அதுவும் முடியவில்லை. கொஞ்சம் புத்தி வந்தாலும் நகர்ந்து விடுவாள்.
‘நான் என்ன பாவம் செஞ்சேன்னு எனக்கு இப்படியொரு நரக இன்பம் தண்டனையா கிடைச்சிருக்கு?’ என்று தனக்குள் கேட்டான்.
அவனின் சட்டை பட்டன்கள் மூன்று அவிழ்ந்து விட்டன. அவளின் கை விரல்கள் அவனின் நெஞ்சின் மீது ஊர்ந்தன.
தன் முகத்தின் மீது பரவி கிடந்த அவளின் கேசத்தை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தான்.
அவளின் இடையை பற்றியது அவன் கரம். அவனுக்கு நெஞ்சம் விம்மியது.
அவனுக்கு அவசரம் இல்லை. ஆனால் இந்த நொடியில் அவசியமாக அவள் தேவைப்பட்டாள். இது இப்படியே தொடர்ந்து விட்டால் இயற்கைக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்று வேண்டிக் கொண்டான்.
ஆனால் சொர்க்கத்தை நோக்கிய அவனின் பாதையில் கரடியாக யாரோ குறுக்கே வந்து விட்டார்கள்.
வெளியே இருந்து வந்த காலடி சத்தம் அவன் காதுகளுக்கு வந்து சேரும் முன்பே இவள் செவியில் சேர்ந்து விட்டது. அவசரமாக எழுந்தாள்.
இவன் மிட்டாயை தவற விட்ட குழந்தையை போல அவளை பார்த்தான்.
அவள் விழிகளில் இருந்த மோகம் ஒரு நொடியில் மறைந்து விட்டது.
கட்டிலை விட்டு இறங்கியவள் சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.
‘பாவி மகளே! என்னை பைத்தியமாக்க உனக்காக அரை நிமிசம் போதும்டி!’ மனதுக்குள் திட்டியபடி எழுந்து அமர்ந்தவன் தன் சட்டை பட்டன்களை போட்டான்.
பொன்னம்மா அறையின் முன்னால் வந்து நின்றாள்.
“டின்னருக்கு என்ன சமைக்கட்டும் தம்பி?” என்று கேட்டாள்.
மாயா எழுந்தாள். “நானே சமைக்கிறேன்..” என்று அங்கிருந்து நடந்தாள்.
‘உனக்கு நல்லா சமைக்க தெரியும்டி. அதுதான் என்னை நல்லா வேக வச்சிட்டியே!’ என்று நினைத்தவன் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான்.
கழுத்தில் இரண்டு ஹிக்கிகள் இருந்தன. முகம் முழுக்க நிரம்பிய புன்னகையோடு ஹிக்கியை வருடினான்.
‘கனவு நிஜத்தில் நடக்கிறதா? இல்லை இதுவே கனவா?’ என்று தெரியவில்லை. ஆனால் இது வேண்டும். கனவென்றால் கோடி மணி நேரம், நிஜமென்றால் கோடி ஜென்மங்கள் வேண்டும்.
மாயா கிச்சனுக்கு வந்தபோது காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த ரேவதி இவளை பார்த்ததும் தலை குனிந்தாள்.
முந்தானையை இடுப்பில் சொருகிய மாயா வாணலியை எடுத்து அடுப்பின் மீது வைத்தாள். எண்ணெய் ஊற்றி கடுகை போட்டாள்.
ரேவதி உடனே அங்கிருந்து கிளம்பினாள்.
செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த கனகவதியிடம் வந்தவள் “இன்னைக்கு நைட் சமையலை உங்க மருமக சமைக்கிறாங்க..” என்றாள்.
கனகவதி அதிர்ந்தாள். எழுந்து நின்றவள் “அவ ஏன் சமைக்கணும்?” என்று கேட்டாள்.
“தெரியல..”
கனகவதி கிச்சனுக்கு வந்தாள். மருமகளை பார்த்து முறைத்தவள் “நீ சமைச்சா நான் சாப்பிட மாட்டேன். வெளியே வா..” என்று அழைத்தாள்.
“ஆனா அவ சமைச்சாதான் நான் சாப்பிடுவேன்..” என்றான் அங்கே வந்த விக்னேஷ்.
மகனை பார்த்தவள் அவன் கழுத்தில் இருந்த ஹிக்கியை கண்டுவிட்டு “இதுதான் உனக்கு வேணும் இல்ல. வெறும் உடம்பு சுகத்துக்காக பெத்த தாய் பேச்சை கேட்காத நாய் நீ..” என்றாள்.
காலர் பட்டனை போட்டவன் “அம்மா மாதிரி பேசுறிங்களா நீங்க? எவ தொட்டாலும் உருக நான் என்ன விபச்சாரமா பண்றேன்?” என்று கேட்டான்.
மாயா தனக்குள் சிரித்தாள்.
“அவ நல்லா..” என்று அம்மா ஆரம்பிக்க, “தலைகாணி மந்திரம் போட்டுட்டா.. அதானே?” என்று கேட்டபடி அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கிச்சன் வாசலுக்கு வந்தாள் மாயா.
“மந்திர தகடு வாங்கி வந்து உங்க பையன் தலைகாணிக்கு அடியில் வச்சிருக்கேன். மந்திரம் போட்டு விபூதி வாங்கி வந்து தினம் உங்க பையனுக்கு பூசுறேன். உங்க பையன் முடியை வச்சி சூனியம் பண்ணி இருக்கேன். குட்டி சாத்தான் ஏவி இருக்கேன். இன்னும் இருக்கும் எல்லாத்தையும் கூட சொல்லுங்களேன். கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன்..” என்றாள்.
கனகவதி அவளை முகம் சிவந்து பார்த்தாள்.
“உங்களோட வேலை என் மேல பழி போடுறது. ஆனா என் வேலை என் வாழ்க்கையை வாழுறது.. இப்பவும் கெட்டு போகல. என்னை நீங்க கொல்ல முயற்சி பண்ணதை கூட உங்க பையனுக்காக நான் மன்னிச்சிடுறேன். உங்க செயல் என் அப்பாவை கொன்னுடுச்சி. என் அம்மாகிட்ட போய் ஒரு சாரி கேளுங்க. இது எல்லாத்தையும் மறந்துடலாம். ஒரு குட் மாமியார் மருமகளா வாழலாம்..” என்றாள்.
“நீ நினைப்பது கனவுல கூட நடக்காது..” என்றவள் ரேவதியை பார்த்தாள். “இனி எனக்கு தனியா சமை..” என்றா சொல்லிவிட்டு சென்றாள்.
மாயாவின் சமையல் நன்றாகத்தான் இருந்தது. இரவு சாப்பிடும் போது “வாவ். பென்டாஸ்டிக். உன் சமையலுக்கு அவார்ட் தரலாம் பேபி. அவ்வளவு சூப்பரா இருக்கு..” என்று விக்னேஷ் பாராட்டினான்.
மாமனார் அவளின் உணவை பரிமாறி சாப்பிட்டார். “நல்லா இருக்கும்மா. உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு. எல்லாத்தையும் கத்து வச்சிருக்க..” என்றார்.
“தேங்க்ஸ் மாமா..” என்றாள் மாயா.
கனகவதிக்கு தன் கணவன் மீதும் கோபம் வந்தது.
உணவை அவள் கோபத்தோடு சாப்பிட, “உயிரை வளர்க்கும் கடவுள் இந்த உணவு. அதை அவமதிக்கும் விதமாக கோபத்தோடு சாப்பிடாத..” என்றார் தர்மேந்திரன்.
கனகவதி உணவை தள்ளி வைத்து விட்டு எழுந்தாள். “நீங்களே கொட்டிக்கங்க..” என்று திட்டி விட்டு போனாள்.
இவளை திருத்த இந்த ஜென்மத்தில் முடியாது என்று அவர் நினைக்க, “அம்மாவுக்கும் கைலாஷ் அங்கிளுக்கும் நடுவுல என்ன பிரச்சனை?” என்று கேட்டான் விக்னேஷ்.
“அங்கிளா? காதுல கேட்டா உன்னை உங்கம்மா கொன்னுடுவா..” என்றார் அப்பா.
“சரி விசயத்தை சொல்லுங்க..” என்றான் இவன்.
“பிசினஸ் பிராப்ளம்..” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.
“இதை குழந்தை கூட நம்பாது..” என்று முணுமுணுத்த விக்னேஷ் மனைவியை பார்த்தான். “உங்கிட்டதான் நிறைய சக்தி இருக்கே. அதை வச்சி என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிச்சி சொல்லேன்..” என்று கேட்டான்.
‘இக்கட்டான சூழல்ல உயிரை காப்பாத்த உதவிய விஷயத்தை இவன் என்னவோ வெத்தலையில் மை போட்டு தடவி கண்டுபிடிக்கும் விஷயம் போல சொல்லுறானே!’ என்று அதிர்ந்தவள் “எனக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை..” என்றாள்.
இவன் உதட்டை பிதுக்கினான். “இருந்தாலும் உனக்கு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கான சக்தி கிடைச்சிருக்கலாம்..” என்று முனகினான்.
“ஆனா உன்னோட சமையல் செம டேஸ்டி. நீ மட்டும் ஈவினிங் கொடுத்தது போல முத்தமும் இதே போல சமையலும் செஞ்சி கொடுத்தா நான் காலம் முழுக்க உன் காலடியில் கிடப்பேன்..” என்று சத்தியம் செய்யாத குறையாக சொன்னான்.
வெக்கப்பட்டவள் “சாரி நான் ஈவினிங் உன்னை டிசபாயிண்மெண்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..” என்றாள்.
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல பேபி. இது உன்னோட உடம்பு. நான் உன்னோட அடிமை. நீ உன் இஷ்டப்படி என்ன வேணா எப்ப வேணா செய்யலாம்..” என்றான்.
தொடரும்.
error: Content is protected !!