Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 12.1

இதில் மீடியா வேறு விசயத்தை மோப்பம் பிடித்திருக்க, அதையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் வெற்றிவேல் செழியன் வசமாகி இருந்தது.

அவர்களிடம் விசயத்தை சொன்னால்.. அவர்கள் டிஆர்பிக்காக தாங்கள் கண்டறிந்த சில குறிப்புக்களை வெளியிட்டு விட்டால் மொத்தமும் சொதப்பலாகும் அபாயம் இருப்பதால், 



Advertisement

“நைட் தான் எல்லா பிள்ளைங்களையும் கடத்தியிருக்காங்கன்னு எங்களுக்கு முறையான தகவல் கிடச்சிருக்கு. 

Advertisement

அதுல இன்னும் வேற குழந்தைங்களும் சேர்வாங்களான்னு பார்த்துட்டு இருக்கோம்.

Advertisement

மொத்தமா எத்தன பேர்.. எங்கே இருந்து காணாம போனாங்கன்னு மொத்தமா சர்வே பண்ணி தான் நாங்க ஆக்ஷன் எடுக்க முடியும்.

Advertisement

கிடச்ச வரை விசாரணை பண்ணதுல இன்னும் எந்த லூஃப் ஹோலும் எங்களுக்கு கிடைக்கல.. லெட்ஸ் ஹோஃப்..” என்று மட்டும் சொல்லி செல்ல,

“என்ன இப்படி பொறுப்பே இல்லாம பேசறார்..” என பல விவாத மன்றங்களில் பேசும் அதி மேதாவிகள் சிலர் கூடி இதை கொண்டு.. அவர்களின் போலீஸ் மீதான வக்கீரங்களை கொட்டத்தொடங்கினர்.

ஆனால், அதையெல்லாம் பார்க்கவோ.. ஏன் அதை பற்றிய பேச்சை பற்றிய சிந்தனையோ இல்லாமல்.. மொத்த போலீஸ் படையும் அந்த குழந்தைகளை எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் மீட்பதிலேயே குறியாய் இருந்தது.

வெற்றிவேல் செழியனின் உத்தரவின் பேரில் பத்து நாட்கள் அதீ தீவிர தேடுதல் வேட்டையின் பலனாய், ஒட்டு மொத்த குழந்தைகளையும் கப்பலில் நாடு கடத்த என ஏற்றப்பட்ட கண்டெய்னர் கண்டறியப்பட்டு மொத்தமாய் மீட்கப்பட்டனர்.

இந்த பத்து நாட்களும் பிள்ளைகளை தொலைத்த குடும்பத்தை விட, அதை தேடி திரிந்த காவலர்களின் குடும்பமும் அதிகப்படியான மன அழுத்ததில் தான் இருந்தது என்றால் மிகையில்ல.

நேரம் காலம் பாராது.. உணவுக்கும் உறக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காது.. அந்த பிள்ளைகளை எந்த சோதாரமும் இல்லாமல் மீட்டே தீர வேண்டும்.. என்ற உந்துதல் மட்டுமே கொண்டு இந்த பத்து நாட்களை கடந்தவர்களின் வலி எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள் என்றால் பதில் நிச்சயம் பூஜியமே.. 

விதிவிலக்காய் அவர்களின் குடும்பத்தை தவிர..

அப்படியான மன அழுத்தத்தில் தான் துவண்டிருந்தார் சந்திராவும்.. 

இதுவரை தன் மனதில் எழும் தவிப்பையும், பயத்தையும் வெளியே சொல்ல ஆள் இல்லாமல் தவித்திருந்தவருக்கு.. கனிகாவின் வருகை ஒரு விதத்தில் அவரின் எண்ணங்களை அழுத்தங்களை வெளியே கொண்டு வந்திருந்தது என்றே சொல்லாம்..

இந்த பத்து நாட்களும் மனதில் இருந்த பயத்தால்.. அமைதியை மட்டுமே தத்தெடுத்து எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் வெறித்திருந்தவரை, தன்னால் இயன்ற வரை விளையாட்டாய் பேசி திசை திருப்பினாலும்.. அந்த நிமிடம் கடந்ததும் மீண்டும் அதே நிலையில் இருப்பவரின் மனதை அழுத்திக்கொண்டிருப்பதை அறிந்திடும் நோக்கில் அவரிடம் வந்த கனிகா,

“அத்தம்மா.. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.. ஏன் இப்படி இருக்கீங்க..? 

உங்க புள்ள இல்லாம இருக்கும் போது நம்ம ராஜ்யம் தான்.. ஜாலியா என்ஜாய் பண்ணலாமுன்னு என்கிட்ட சொல்லிட்டு இப்படி.. ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸ்ஸூ..’ ன்னு எங்கையோ பாத்துட்டு இருந்தா எப்படி..?” என்று அவரை பேச தூண்டியவளின் எண்ணம் போலவே,

“இந்த மாதிரி நிறைய தடவை ஆகியிருக்கு கனி.. நேரம் காலம் இல்லாம.. நல்லது கெட்டதுன்னு ஒன்னுக்கும் போகாம.. வீடு வாசல் ன்னு நினப்பே இல்லாம சுத்தறதெல்லாம் என்ன பொழப்பு.. சொல்லு.

இது  வேணாம் கண்ணா.. ஏதோ சின்ன புள்ளையா நீ இருக்கும் போது.. நீ போலீஸ் ஆகி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கனுமுன்னு உங்க அப்பா தான் ஆசை பட்டு சொன்னாருன்னு இந்த வேலையில சேர்ந்தே.. இப்போ அவரோட ஆசைக்கு கொஞ்ச வருஷம் வேலையும் பார்த்தாச்சு.. 

இப்போ அவரும் உயிரோட இல்ல.. எனக்கும் உன்னை விட்டா யாரிருக்காங்க..

இந்த வேலைய விட்டுடுன்னு சொன்னா கேட்டா தானே..” என ஆதங்கத்தோடு சொல்ல,

“அத்தம்மா, நீங்க வேலையா பார்க்கிறதை மாமா சேவையா பார்க்கறாங்க.. இதுல தப்பில்லையே..?

அதோட உத்தியோகம் புருஷ லட்சணம்..” என கண்சிமிட்டி லேசான புன்னகையோடு வெற்றி தரப்பை விட்டு கொடுக்காமல் பேசியவளை,

“அவன வேலை பார்க்க வேணாம், சம்பாதிக்க வேணாமின்னு சொல்லலடா கனி. 

இப்பவும்  நமக்கு இருக்கற சொத்தை பராமரிச்சாலே போதும், இன்னும் ரெண்டு தலைமுறைக்கு வரும். 

வீணா தூங்காம, சாப்பிடாம உடம்பை கெடுத்துட்டு கல்யாண வாழ்க்கையை கூட ஒழுங்கா வாழாம இப்படி நிம்மதியில்லாம… ஓடிட்டே இருக்கறதுக்கா வேலையும்,  சம்பாத்தியமும்..

அதுலையும் சில நேரம் தப்பு செஞ்சவனை பிடிக்க போறேன்னு போயிட்டு வரும் போது காயத்தோட ரத்தம் வழிய வந்து நிற்பான் பாரு.. ஒரு நிமிஷம் என் உயிரே போய் வரும்..” என தாயாய் தனது பக்கத்திலிருந்தே பேசியவர், 

“நீயே சொல்லு கனி.. கல்யாணம் ஆகி ரெண்டாவது நாள் போனவன், இதுவரைக்கும் வீட்டுலையே தங்கல.

புதுசா கல்யாணம் பண்ணோமே… வீட்டுல ஒருத்தி நமக்காக காத்துட்டு இருக்கான்னாவது தோணுதா அவனுக்கு..?

கல்யாணமுன்னு ஒண்ணு நடந்தாலாவது ஒழுங்கா வீட்டோட இருப்பான்னு நினச்சா… எங்கே..!” என சலிப்பாய் கூறியவரின் அருகே இன்னும் நெருங்கி அமர்ந்து.. அவரின் கை பற்றி முகம் பார்த்தவாறு,

“அத்தம்மா, ஒரு அம்மாவா உங்க ஆதங்கம் ரொம்ப ரொம்ப சரியா தான் இருக்கு.

ஒவ்வொரு அம்மாவும் எதிர்பார்க்கறது தன் மகன் குடும்பம், குழந்தை, சேமிப்பு, சந்தோஷம், பாதுகாப்பு எல்லாமே கொண்டு சிறப்பா வாழணுமின்னு தான்.

சரி… எல்லாருமே அப்படி இருந்திட்டா.. யார் தான் இந்த மாதிரி குற்றம் செய்யறவங்க கிட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்தறது…?” என கேட்ட கனியிடம்,

“அதுக்கு.. என் புள்ள தான் போகணுமா…? எனக்கும், அவன் பத்திரமா வரணுமின்னு இருக்காதா..?

நா என்ன ஏழு புள்ளையா வச்சிருக்கேன். ஒன்னே ஒன்னு. 

அவனுக்கு எதுவும் ஆகிட கூடாது. சந்தோஷமா நிம்மதியா வாழணுமுன்னு ஆசை படறது குத்தமா..?” என வந்த மருமகளும் தனக்காக யோசிக்காமல் அவளும் மகன் சார்பாக பேசியதில் வருத்தத்தோடு கேட்க,

“அத்தம்மா.. நீங்க ஆசை படறதோ, நீங்க நினைக்கறதுலையோ தப்பே கிடையாது. 

ஆனா மாமா பார்க்கற தொழில் உயிர் காக்குற டாக்டர் தொழில விடவும் மேன்மையானது தெரியுமா..? 

டாக்டர்ஸ் தான் கடவுள் ன்னு எல்லாரும் சொல்றாங்க. 

ஆனா அவங்கள விடவும் பலமடங்கு உயர்ந்தவங்க போலீஸ்.

இப்போ டாக்டர் ஒரு நோயாளி அவர்கிட்ட ட்ரிட்மெண்ட்டுக்கு வந்தா.. அவர காப்பாத்த முயற்சி மட்டும் தான் செய்வாங்க. 

அவங்களால முடுஞ்ச எஃபெக்ட் போட்டு போராடுவாங்க. பல சமயம் காப்பாத்திடறாங்க.. சில கேஸ் தோத்தும் போயிடும். 

இதுல அவங்களுக்கு எந்த லாஸும் கிடையவே கிடையாது.

ஆனா.. போலீஸ் அப்படி இல்ல அத்தம்மா. அவங்களுக்கு ஒரு உயிரை காப்பாத்த போகும் போது எப்படி வேணுமின்னாலும் ஆபத்து தேடிவரும். 

அவங்க கொஞ்சம் சுதாரிப்பா இல்லாம போனா அவங்களோட உயிரும் போகவும் வாய்ப்பு இருக்கு. 

பல போலீஸ் அதிகாரிங்க தன்னோட கை, கால் இழந்து வீட்டுல முடங்கி இருக்காங்க.

நம்ம ஜாலியா கொண்டாடுற எல்லா கொண்டாட்டத்துக்கும், அவங்க தன்னோட வீட்டு கொண்டாட்டத்தை விட்டுட்டு வந்து நிக்கறதால தான் பாதுகாப்பா எல்லாரும் இருக்க முடியுது. 

அப்படிப்பட்ட உன்னதமான வேலையில உங்க மகன் இருக்கறதுக்கு நீங்க பெருமை படணும் அத்தம்மா. 

மாமாவோட கண்ணு அன்னைக்கு சிவந்திருந்துச்சே.. அதுக்காக ஹாஸ்பிடல் போயிருப்பாங்க போல, வாங்கின மருந்தை கூட சரியா எடுத்துக்காம ஓடறாங்கன்னா.. அவங்க வேலை மேல வச்சிருக்கற மதிப்பை நீங்க புருஞ்சுக்கோங்க அத்தம்மா. 

அத விட்டுட்டு இப்படி பேசறது சரியே இல்ல..

இப்போ மாமாகிட்ட வந்த கேஸ் பார்த்தீங்க இல்ல.. பாவம் அத்தம்மா.. பச்ச குழந்தையில இருந்து பதினஞ்சு வயசு பொண்ணு வரை கடத்தியிருக்காங்க. 

அவங்கள நல்லபடியா மீட்டு கொண்டு வர போராடின உங்க புள்ளைய பாராட்டாம இப்படி பேசறது ட்டூ பேட்…” என்றவள்,

“இப்போ என்ன அத்தம்மா.. உங்களுக்கு வாரிசு வேணும்.. உங்க பேர் சொல்ல. 

அவ்வளவு தானே.. விடுங்க, மாமா வேலை முடுஞ்சு வந்ததும்.. இந்த கிட்நாப் கேஸ்ஸுல எப்படி தீயா வேலை பார்த்தாரோ… அதே மாதிரி அதுக்கும் தீயா வேலை பார்த்து, உங்கள பாட்டி ஆக்கிடுறோம்.. இப்ப ஹேப்பியா..?” என இதுவரை பொறுப்பாக பேசியதற்கு நேர் மாறாக விளையாட்டாக பேசியவளை நெட்டி முறித்து..

“ஜாடிக்கு ஏத்த மூடி தான் கனிம்மா.. அவன்கிட்ட வேலைய விட சொல்லி பேசினாலும் இப்படி தான் பக்கம் பக்கமா பேசியே சரிகட்டிடுவான். 

நீயும் அதே மாதிரி இருக்க. என்னைய பொருத்த வரை என் குடும்பம் நல்லா இருக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா அதை விட வேற ஒண்ணும் எனக்கு வேணாம்.

நீயாச்சு உன் மாமானாச்சு.. எங்கே போனாலும் அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லாம உன் மாமன் திரும்பி வந்தா.. எனக்கு அதுவே போதும்..” என்று சமாதானம் ஆனவரின் தோள் மீது சாய்ந்தவள்,

“டோண்ட் வொரி அத்தம்மா.. மாமா எப்பவும் பர்பெக்ட்டா டார்கெட் பிக்ஸ் பண்ணி தான், ஏக்க்ஷன் எடுப்பாங்க.. 

சோ, டோண்ட் வொரி… பீ ஹேப்பீ…!” என விவேக் மாடுலேஷனில் சொல்லி சிரிக்க, சந்திராவும் இதுவரை இருந்த மனஅழுத்தம் நீங்க நகைத்தார்.

கனிகா பேச ஆரம்பிக்கும் போதே வந்து விட்ட வெற்றிவேல் செழியன், கனியின் பேச்சில் திகைப்போடு பெருமையாய் பார்த்தான் எனில், 

அவளின் இறுதி பேச்சில் சிரித்தபடி, ‘அதானே.. இந்த அராத்து அதோட குணத்தை மாத்திக்காதே..!’ என்று நினைத்தபடி, 

அப்போது தான் வந்தது போல நேராக மாடிக்கு சென்றவன் குளித்து தயாராகி மீண்டும் தன் அலுவலகம் நோக்கி சென்றான்.. தனது மீதமுள்ள வேலையை விரைவிலேயே முடிக்க..!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!