“க்கூட்டிட்டு போக சொல்லலாம்ன்னு நினைச்சேன். சரி நான் கிளம்பறேன். பை பாட்டி” எனக் கிளம்ப எத்தனித்தவளை, “கண்ணு, கையில காதுல எல்லாம் அழகா போட்டுட்டு கழுத்துல ஒண்ணும் போடாம விட்டுட்ட பாரு” என நிறுத்தினார்.
“ப்பாட்டி, இப்பிடி பெரிய சைஸ்ல தொங்கட்டான் போட்டா கழுத்து காலியா இருக்கணும் இல்ல மெலிசா போடணும். அப்போ தான் நல்லா இருக்கும். அது தான் ஃபேஷன்” என்றவள், “அஅப்படி என் கிட்ட மெலிசா ஒண்ணும் இல்லையே. அதுதான் காலியா விட்டுடேன்” என உதடு பிதுக்கினாள்.
“இரு கண்ணு, வந்துட்டேன்” என்றவர், சில நிமிடங்களில் ஒரு மெலிதான தங்கச் சங்கிலியோடு வந்தார்.
Advertisement
“ரொம்ப அழகா இருக்கு பாட்டி”
“என் பொண்ணு காலேஜ் படிக்கும் போது… செயின்ல சின்னதா ஜிமிக்கி தொங்கற மாதிரி வேணும்ன்னு தேடித் தேடி ஆசையா வாங்கினா. பொண்ண பெத்து போட்டு போயிருந்தா, போட்டு அழகு பாத்திருப்பேன். பையன பெத்து கொடுத்துட்டு போயிட்டா. அவன கட்டிக்க போறவளுக்கு இதெல்லாம் பிடிக்குதோ என்னவோ? நீ போட்டுட்டு போ. நீ போட்டிருக்க ஜிமிக்கிக்கு செட்டா வாங்கின மாதிரியே இருக்கு” என்றவர் நீட்டிய மாலையை வாங்கிக் கொண்டாலும், போட்டுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது.
“கோல்டா? வேண்டாம் பாட்டி” எனத் தயங்கியவளை வித்தியாசமாகப் பார்த்தார் பாட்டி.
“எனக்கு ஹூக்க போட முடியாது. நீங்களே போட்டு விடுங்க” என்றவளுக்கு மாலையை அணிவித்தவர், ரவிக்கையில் இருந்த கயிற்றையும் ஒழுங்கே கட்டி விட்டார்.
அதே இன்பத்தோடே அன்றைய பொழுது கழிந்தது. “பாஸ்கி உன் ஆளு வரலியா?” என சீனியர் ஒருவன் மற்றவனிடம் கேலி பேசுவதைக் கேட்கும் வரையுமே மனநிலை நன்றாகத் தான் இருந்தது. பாஸ்கியின் ஆள்… அதாவது அவளின் தோழி… அவளை தவிர அனைவருமே சீனியர் வகுப்பில் இருக்க, சின்னவளின் மனம் இலேசாகச் சுணங்கியது. சில மாதங்கள் முன் ஏற்பட்ட சிறு சருக்கல்… இருவரின் நட்பு வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவள் தோழிக்கு வீட்டில் விதிக்கப்பட்டத் தடைகள் என பலதும் மனதில் ஒரு முறை ஊர்வலம் வந்து சென்றது.
தவறுகள் ஆண் பெண் என இருபக்கம் இருந்தாலும், அதற்கான தண்டனைகள் பெண்களுக்கு மட்டுமே என்ற இந்தச் சமூகத்தின் அமைப்பை எண்ணி வருந்துவதா? இல்லை நொந்துக் கொள்வதா? தெரியவில்லை தாராவிற்கு.
உணவு, விளையாட்டுகள், பாடல்கள், புகைப்படங்கள் எனக் களைகட்டிய கொண்டாட்டம் ஒருவழியாக மூன்று மணியளவில் முடிவுற்றது.
‘அடிக்கிற வெயிலுக்கு இந்த பொடவையோட வீடு வரைக்கும் நடக்கணுமா?’ என நொந்துக் கொண்டே பள்ளியில் வாயிலை அடைந்தவளை, காரில் சாய்ந்த வண்ணம் காத்திருந்தவன் புன்முறுவலோடே வரவேற்றான்.
தொற்றிக் கொண்ட புன்முறுவல், முகம் கொள்ளா சிரிப்பாக மாறியது அவளிடம். என்றுமில்லா திருநாளாக இன்று ரகுவின் பார்வைக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
“என்ன பேபி… வெயிலுக்கு வாடி போயிட்ட?” எனக் கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து விட்டவன், “அழகா இருக்க பேபி” என்றான்.
“ந்நிஜமா? தேங்க்ஸ் லகு” என்றவள் எட்டிப் பார்த்த வெட்கத்தை காரின் கதவின் பின் மறைத்தாள்.
“கிட்ட தான, ஸ்கூட்டில வர வேண்டியது தான லகு?”
“நீ புடவை எல்லாம் கட்டி இருக்கன்னு பாட்டி சொன்னாங்க. எப்படி வண்டியில உக்காருவியோன்னு தான்” என்றவன், “பெல்ட் போடு” என்றான் காரை கிளப்பிக் கொண்டே.
அவள் சட்டென்று பெல்டை இழுக்கவும் அது வர மாட்டேன் என அடம் பிடித்தது. “இஇஇழுத்தா சீட்பெல்ட் வர மாட்டேங்குது” என்றாள்.
அதையே அவன் மெல்ல இழுக்க அது எந்த பிகுவும் செய்யாது அவன் கையோடு வந்தது. அவளைத் தாண்டிச் சென்ற கை, கொங்கைகளை உரசிக் கொண்டே பெல்டை அவள் இருக்கையோடு இணைத்தது.
வேண்டுமெனச் செய்யவில்லை என்றால் என்ன? மின்சார கம்பியில் கை வைத்தால் ஷாக் அடிக்கதானே செய்யும்.
நான்கு விழிகளும் மோதி நின்று, பின் எதுவும் நடவாதது போல் இருவிழிகள் எதிரே இருந்த சாலையின் பக்கம் திரும்ப, மற்ற இரண்டும் முகத்தோடு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டது.
உருண்டு புரண்ட வேளைகளில் சீண்டப்படாத பல உணர்வுகளும், பட்டும் படாமலும் வருடிச் சென்ற மெல்லிய தீண்டலுக்குத் தலைவிரித்தாடியே ஆகவேண்டுமா? ‘ஈஸ்வரா…’ என்று கடவுளைத் துணைக்கு அழைத்தவனின் பார்வை அவள் பக்கம் செல்ல, இதழ் கடையோரம் மந்தகாசப் புன்னகை தானாக எட்டிப் பார்த்தது.
“ல்லகு…” என்றவளுக்கு இதழ்கள் விரிந்து வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“இறங்கு” என இருக்கைவாரை விடுவித்துவிட, இருவருமாகப் பனிக்கூழ் கடைக்குள் சென்றனர். விரும்பியதை உண்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கிக் கொண்டு உல்லாசமாக இருவரும் வீட்டை வந்தடைந்தனர்.
“பேபி ஐஸ்கிரீம எடுத்துட்டு போ” என்றவனிடம், “ந்நான் தடுக்கி விழுந்துடுவேன். நீ தூக்கிட்டு வா” எனப் பணித்தாள். “என்னவோடி… எடுபிடி மாதிரி என்னை யூஸ் பண்ற” எனச் சலித்தாலும், தொனியில் இருந்த சலிப்பு அவன் நடையில் இல்லை.
வீட்டைத் திறந்து அதன் உள்ளே நுழைந்த கையோடு அவன் குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் செல்ல, அவள் புடவையிலிருந்து விடுபட்டால் போதும் எனப் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். சென்ற அதே வேகத்தில், அவிழ்த்த புடவையை மீண்டும் சுற்றிக் கொண்டு “ல்லகு, இந்த செயின கழட்டி விடேன். முடி செயினோடையும் பிலௌசோடையும் சுத்தியிருக்கு” என வந்து நின்றாள்.
முடி நன்றாகவே சுற்றி இருக்க, அவன் எப்படி முயன்றாலும், “ல்லகூஊஊ இழுக்காத… வலிக்குதுடா” எனச் சத்தம் எழுப்பினாள்.
“குனிஞ்சு நின்னு என் கழுத்தும் வலிக்குது, நான் கத்தறேனா? வாய மூடு இம்சை” என அவன் கழுத்தை நீவிக் கொள்ள, “எனக்கு வேர்த்து அவியுது” என்றவள் நடுக்கூடத்து மின்விசிறிக்கு அடியில் நின்று கொண்டாள்.
“முடியக் கட் பண்ணினா தான் வலிக்காம எடுக்க முடியும் பேபி… இல்ல செயினோட கொக்கிய வளைச்சு எடுக்கணும். என்ன பண்ணட்டும்?”
“செயின ஒண்ணும் பண்ணிடாத லகு. முடிய கட் செய்திடு”
“சரி குனி…” என்றவன் மீண்டும் ஆராய்ந்தான். முடி கற்றைகள் எக்குத் தப்பாக ரவிக்கையில் இருந்த வேலைப்பாட்டிலும், கழுத்தணியிலும் சுற்றி இருந்தது. முடியைக் கத்தரிப்பதே சிறந்த வழியாகத் தோன்ற, “சிசர்ஸ் இருக்கா?” எனக் கேட்டான்.
“ப்ச்… இம்சை டா நீ. எவ்வளவு நேரம் குனிஞ்சே நிக்கிறது? ரெண்டு முடிய பிக்கறதுக்கு கத்தி கத்திரிகோல்ன்னு! பிச்சு தொல” என்றாள் கழுத்து வலியால்.
சங்கிலியில் பதித்த ஈர இதழ்கள் பின்னங்கழுத்தில் தீண்டும் வரை இருவருக்கும் எப்பொழுது முடியும் எனத் தோன்றியது உண்மை. ரவிக்கையின் முடிச்சி அவிழ்ந்தபின்னும்… சில்லென்ற இதழ் சங்கிலியிலிருந்து முடி கற்றைகளை வெற்றிகரமாக விடுவித்தபின்னும், அவன் கரம் அவளை விடவும் இல்லை. அவள் தள்ளிச் செல்லவும் இல்லை.
காடு பற்றி எரியக் காய்ந்த சருகில் துளி நெருப்பு விழுந்தால் போதுமே. பிடிப்பில்லாத முந்தானையும், மறைக்கப்படாத முதுகும், என்னை பாரேன் என்ற இடையும் மண்ணென்னையாக நெருப்பின் வீரியத்தை ஏற்றிவிட்டது அவர்களின் குற்றமா? இல்லை இளமையின் குற்றமா?
ரகுவின் இதழ்களும் கரங்களும் அதற்கான எல்லைகளை யோசிக்காது தகர்த்துக் கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் டெஸ்டோஸ்டிரோனும் ஈஸ்ட்ரோஜனும் செவ்வனே அதன் வேலையை ஆரம்பித்திருந்தது. முதல் முதலாக அனுபவிக்கும் வெடித்துத் தெறிக்கும் உணர்வுகள்… தடுக்க ஆள் இல்லாது தலை விரித்தாடியது. புதையலைக் கண்டறியும் வேகம் அவனுக்குள். இன்னும் இன்னும்… தாகம் தணியாதா என அவன். கரம் தன் இஷ்டம் போல் பயணித்தது. அவன் கரத்திற்குள் எதிர்ப்பில்லாது கரைந்தாள் அவள். இப்படி ஓர் இளமையின் தேடலை இருவருமே அந்த நிமிடம் வரை எதிர்பார்க்கவில்லை. தங்களை மறந்தவர்களுக்குச் சுற்றம் நினைவில் இருக்குமா? சுற்றம் மறந்தனர். கதவு என்ற ஒன்று இருப்பதை மறந்தனர். அது திறந்திருப்பதையும் மறந்தனர்.
வேக வேகமாக ஆரம்பித்துக் கொழுந்துவிட்டு எரிந்த உணர்வு அலைகள்… “கண்ணு…” என்ற சத்தத்தால் நீர் ஊற்றப்பட்டு அணைந்து போனது. பட்டென மோக வலை இருவருக்கும் அறுந்து தெறித்தது.
தன்னை விட்டு அவனைத் தள்ளிவிட்டவளின் பார்வை கதவின் பக்கம் சென்றது. யார் வேண்டும் என்றாலும் வாருங்கள் எனக் கதவு திறந்து கிடந்தது. தங்களின் செயல் சரியா… தவறா… என்றெல்லாம் தோன்றவில்லை. திறந்திருக்கும் கதவின் வழி யாரேனும் வந்திருந்தால்? அவர்களை அந்தக் கோலத்தில் பார்த்திருந்தால்? கைகால் நடுங்கியது.
தவறு இருபக்கம் இருந்தாலும், அதற்கான தண்டனைகள் பெண்களுக்கு மட்டுமே என்ற இந்தச் சமூகத்தின் அமைப்பு அவர்கள் வீட்டிலும் செயல்படுத்தப் பட்டால்? வீடே சிறையாகிப் போனால்? செல்லும் இடமெல்லாம் காவல் வைக்கப்பட்டால்? ரகு என்பவனைப் பார்க்க முடியாதே போனால்?
பெண்ணின் கலங்கிய கண்கள் அவனைக் குற்றம் சாட்டியது. என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குமே அப்பொழுது தான் உரைத்தது.
“பேபி…” என்றான் தயக்கத்தோடே.
‘என்ன டா பேபி?’ எனக் கத்தத் தோன்றியது. தப்பென்றால் அது அவள் மீதும் தான். ஆனால்… அவன் ஆரம்பிக்காதிருந்தால் இது நடந்திருக்காது என்றே மனம் அவளுக்குச் சாதகமாக வாதம் செய்தது. அவன் தான் குற்றவாளி என அவளே அவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பைக் கூறிக்கொண்டாள். குற்றவாளி அவனாக இருந்தாலும் தண்டனை அவளுக்கு மட்டுமே என நினைத்தவளுக்குப் பயம் கொடுத்தது. அது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“டென்ஷன் ஆகாத பேபி” எனப் பெண்ணை நெருங்கினான்.
அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த புடவையைச் சுருட்டி பிடித்தவளுக்கு அழுகையை அடக்கப் பெரும் பாடாய் போனாலும், “இஇஇது பேர் என்ன ர்ரகு?” என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டே.
“பேபி! என்ன கேள்வி இது?” இயலாமையோடே வார்த்தைகள் வந்து விழுந்தது.
“சொசொசொல்ல்லு…. நநமக்குள்ள எஎஎஎன்ன ரரரரகு?” என்றவளுக்கு வார்த்தைகள் திக்கித் திணறலாய் வந்து விழுந்தது.
“என்ன டி… கொல குத்தம் மாதிரி பேசாத. அப்படி ஒண்ணும் தப்பு நடந்திடல” என்றான் அவளின் திணறல் கொடுத்த வலியால்.
“அஅஅப்போ என்ன நடந்துது ரகு? காதலா? காதல் மட்டுமா?” என்றவளின் குரலில் அவ்வளவு ஆதங்கம்.
தன்னை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது போல் தோன்றவும் அவனுக்கும் கோபம் துளிர்த்தது. “ஆமா… பத்து நிமிஷம் வரைக்கும் முன்னாடி இருந்தது வெறும் காதல் மட்டும் தான். காதல்ல உணர்வுகள் சேராதா? சேர்ந்தா என்ன தப்பு? ஆமா… இப்போ நடந்தது வெறும் காதல் மட்டும் இல்ல தான். அதுக்கு என்ன? இது காதல் கலந்த விழைதல்… பொருந்துதல்… முயங்குதல்… எப்படி வேணா சொல்லலாம்.” என்றான் சற்று காட்டமாக.
“ல்…ல்…லஸ்ட்டுன்னு சிம்பிளா சொல்லேன்” என்றாள் அவனை முறைத்துக்கொண்டே.
“கண்டவ கிட்டா வந்தா தான் லஸ்ட். உனக்கு என் மேலயும்… எனக்கு உன் மேலயும் வந்தா அதுக்கு பேரு லவ் தான்!” என்றான் அவனும் முறைத்துக் கொண்டே.
“ஓ…உஉஉங்க ஊர்ல இது பேர் தான் லவ்வா?” எனக் கேட்டாள் அவிழ்ந்திருந்த புடவையை பார்த்தவாறே.
கேட்டவனுக்குக் கோபம் சுள்ளென வந்தது. “எதுக்கு இப்போ ஓவரா பேசற நீ? ஆச இல்லாம தான் இழைஞ்சியோ?” என அவளை ஊடுருவும் பார்வை பார்த்தான்.
“எஎஎனக்கு அப்படி எல்லாம் ஒஒஒரு எண்ணமும் இஇல்ல ர்ரகு. உன் புத்தி தான் கண்டதையும் யோசிக்குது. நீ தான் என்னை செட்யூஸ் பண்ற. ந்ந்நீ.. உன் பார்வ… எல்லாமே தப்பு… நீ தான் தப்பு. என்னைச் சொல்லாத” என்றாள் கோபம் கொப்பளிக்க அடிக்குரலில்.
“பேபி… போதும். அது… அது அந்த நிமிஷம் உணர்ச்சி அவ்வளவு தான். நான் பிளானும் பண்ணல… உன்ன ஃபோர்சும் பண்ணல. எனக்குத் தான் புத்தி புல்லு மேய போச்சு. உனக்கு என்ன வந்துது? பிடிக்கலன்னா வேண்டாம்ன்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தான?” என்றான் தன்னை கட்டுப்படுத்தி.
“ஓ… அஅஅப்போ தப்பு எல்லாம் என் மேல. அஅப்படி தானே? ய்யாராவது பார்த்திருக்கணும்! காதலாம் காதல்… எல்லாம் அன்னைக்கு என்னை நீ ஜன்னல் வழியா பார்த்த பிறகு தானே ஆரம்பிச்சுது. அஅப்போ இது காதலா? இதுல… தொட்டதும் கரைஞ்சுட்டேன்னு எவ்வளவு சீப்பா பேசற!”
“வாய மூடு பேபி” அவனும் சீறினான்.
“வ்வ்வெறும் உடம்பு தான் உனக்குத் தேவ இல்ல?” என்றாள் கோபத்தை எல்லாம் கூட்டி.
“போதும் நிறுத்து டி. மனசுல என்ன உலக அழகின்னு நினைப்பா? ஆமா பார்த்தேன் தான். உன்ன யாரு ஜன்னல திறந்து வச்சுட்டு அவுத்து போட்டுட்டு நிக்க சொன்னா? தெரிஞ்சு இருந்திருந்தா அந்த பக்கமே வந்திருக்கவே மாட்டேன். கிள்ளச் சொட்டு சதை இல்ல… இதுக்கே இவ்வளவு பேச்சா உனக்கு? ம்ம்ம்? உன் உடம்புக்கு அலையறேனா நான்? பொண்ணுங்களையே பார்க்காதவனா நான்? காலேஜ்ல எத்தன பொண்ணுங்க என் கிட்ட பிரப்போஸ் பண்ணி இருக்காங்க தெரியுமா? அவங்க கூட எல்லாம் இப்படித் தான் பழகறேனா? வந்துட்டா என்னை குத்தம் சொல்ல. பார்த்தேன்… தொட்டேன்னு! அங்க என்ன டி இருக்கு? பாக்கவும்… தொடவும்?” அவன் பற்களை அரைக்க, அவன் வார்த்தைகள் அவளைப் படு கேவலமாகத் தாக்கியது.
“செ…செ..செய்யறது எல்லாம் செய்துட்டு… எ..எ..எவ்வளவு கேவலமா பேசற நீ? நான் பாக்கிற மாதிரி இல்லையா உன் கண்ணுக்கு? எ..எ..ஏன் சொ..சொ..சொல்ல மாட்ட… உன் வேலை என் கிட்ட ஆகலன்னதும் நான் அசிங்கமா போயிட்டேனா? ப்போடா… உன்ன போய் லவ் பண்ணினேன் பாரு. எ…எ..என்னை சொ..சொல்லணும். உலகத்திலேயே ந்ந்நீ மட்டும் தான் ஆம்பிள்ளையா போனாலும் ந்…ந்…நீ எனக்கு வேண்டவே வேண்டாம் போடா. அஅந்த உலக அழகிங்க கூட போ நீ! ந்ந்நான் கேவலமா இருந்துட்டு போறேன் போடா ஒட்டகச்சிவிங்கி” என்றான் மூக்கு விடைக்க… கண்ணீர் தளும்ப.
அவள் இதைக் கூறி முடிக்கும் முன் திக்கித் திணறியதே அவளின் காயத்தின் அளவை கூற, ஐயோ என்றிருந்தது அவனுக்கு. இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்து அதை அப்படியே தலைக்குக் கொண்டு போனவன் தலையை அழுந்த தேய்த்து நின்றான்.
“எ..எனக்கு நீ வேண்டாம்” எனப் பெண் மூக்கை உறிய, “பேபி… சாரி பேபி. கண்டிப்பா நடந்ததுக்கு இல்ல. உன்ன பேசினதுக்கு. ஆனா யோசி… நீயும் விரும்பின தானே… என்னை மட்டும் தப்பா சொல்லலாமா?” அவன் பேசி முடிக்கும் முன் அவனைத் தேடிக்கொண்டு பாட்டி வருவது தெரிந்தது.
“இந்தப் பாட்டி வேற… அரை மணி நேரம் காணாட்டா கண்ணு மண்ணுன்னு…” என வாய்க்குள் முனகியவன், “டிரெஸ்ச சரி பண்ணு பேபி… இல்லல்ல… நீ தயவு செய்து பாத் ரூமுக்கு போயி உன்ன பிக்ஸ் பண்ணு போ.” என அவசர அவசரமாக வெளியே சென்றான்.
தன் அலங்கோல நிலையைக் கண்ணாடியில் பார்த்தவளுக்கு அழுகை பீரிட்டது. என்ன துணிச்சல் தனக்கு என எண்ண எண்ண… மிக மிகக் கேவலமாக உணர்ந்தாள். அப்பாவோ அம்மாவோ தன்னை அந்த நிலையில் கண்டிருந்தால்? தன் நிலையை மறந்து ஆண்மகன் கையில் தன்னை இழக்க வைக்கும் இந்தக் கருமம் பிடித்த காதல் வேண்டவே வேண்டாம் எனச் சட்டென புத்தி முடிவெடுக்க, முகம் கழுவி உடை மாற்றி வந்தாள் பெண்.