Skip to content
Post Views: 3,850
நான் தேடும் காதல் நீ…..18
அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் முன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் அகிலா அவரின் கைகளை இறுக்கமாக பற்றி அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான் அமரன்.அவரின் எதிரே அழுதபடி நிமலனின் கைகளை இறுக்கமாக பிடித்தபடி அமர்ந்திருந்தாள் தாமரை.அதற்கு சற்று தள்ளி நின்றிருந்தனர் தீர்த்தாவும்,சிவன்யாவும்.அனைவரின் கண்களும் அந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவை பார்த்தபடி இருக்க,அந்த கதவை திறந்தபடி வெளிவந்தார் மருத்துவர்.அவர் வந்தவுடன் அனைவரும் சூழ,
“கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்….”என்ற மருத்துவர் அமரனிடம்,
“அவங்களுக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கு….அதோட கொஞ்சம் பிபியும் அதிகமா இருக்கு….பிபி குறைஞ்சா தான் நான் அவங்களுக்கு ஹார்ட்க்கு டீரிட்மெண்ட் கொடுக்க முடியும்….அதுவரைக்கும் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும்…..இப்ப யாரும் பார்க்க அனுமதி கிடையாது….”என்றவர் நர்ஸிடம் சில மருந்துகளை கூறிவிட்டு அதைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
Advertisement
“அய்யோ அமரா நான் என்ன பண்ணுவேன்….இப்ப அண்ணிக்கு ஏதாவது ஆச்சு….நானும் உயிரோடவே இருக்கமாட்டேன்….”என்று அகிலா புலம்ப ஆரம்பிக்க,
“ம்மா…அமைதியா இருங்க….அத்தைக்கு எதுவும் ஆகாது….”என்றவனின் பார்வை தாமரையை சுட்டது.அவளோ யாரையும் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தபடி இருந்தாள்.
“அவளுக்கு தான் அவ அம்மா பத்தின நினைப்பே இல்லையே….அண்ணி தான் என் பொண்ணு பொண்ணு உருகுனாங்க….ஆனா இவ…..”என்று அடுத்து என்ன கூறியிருப்பாரோ,
Advertisement
“போதும் நிறுத்துங்க…..”என்று தன்னையும் மீறி கத்தியிருந்தாள் தாமரை,
Advertisement
“நீங்க பேசாதீங்க…பேசாதீங்க….எல்லாம் உங்களால தான்….உங்களால தான்…..உங்க பேச்சையே கேட்டுட்டு இருக்குறதுக்கு நான் ஒண்ணும் உங்க பிள்ளை கிடையாது…..எனக்குனு ஒரு மனசு இருக்கு அதுல ஆசைகளும் இருக்கு….உங்க பிள்ளைல போல எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது….”என்று கத்த அகிலா அதிர்ந்துவிட்டார்.எப்போதும் அமைதியாக வளம் வரும் தன் மருமகளா இது என்று அவர் வாயடைத்து போய் பார்க்க,
“உன் ஆசைகளை நாங்க தப்புனு சொல்லலை தாமரை…அதை எங்க கிட்ட சொல்லியிருந்தா நாங்களே நல்லபடியா பேசியிருந்திருப்போம்….ஆனா நீ செஞ்சது இப்ப எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாரு…..”என்று அமரன் பொறுமையாக தான் எடுத்துக் கூறினான்.
“ஆமா ஆமா….நான் சொன்னவுடனே நீங்க இவங்க வீட்டுல பேசியிருப்பீங்க….இதை நான் நம்பனும்…இல்லை என் அம்மா தான் இதுக்கு ஒத்துக்கிட்டு இருப்பாங்களா…..என்னை அடிச்சே கொன்னிருப்பாங்க….அவங்களை பொறுத்தவரை அவங்க தம்பி குடும்பம் தான் முக்கியம் நான் எல்லாம் இல்லை…..”என்று தாமரை இளக்காரமாக கூற,
Advertisement
“தாமரை….போதும்….”என்று அமரனின் குரல் கர்ஜனை போல ஒலிக்க,அதுவரை தைரியமாக பேசிக் கொண்டிருந்த தாமரை பயந்து நிமலனின் பின் நகர,
“அவளை ஏன் மிரட்டுற…அவ அவ மனசுல உள்ளதை சொல்லுறா….”என்று தீர்த்தாவை திரும்பி பார்த்து முறைத்தவன்,
“நீ வீட்டுக்கு கிளம்பு…எங்களுக்கு சாப்பாடு செஞ்சு கொடுத்தனுப்பு….”என்று கூற,
“நாங்க கிளம்புறோம் ஆனா சாப்பாடு எல்லாம் கொடுக்க முடியாது…நீ பார்த்துக்க….”என்றுவிட்டு தீர்த்தா சிவன்யாவுடன் கிளம்பிவிட்டாள்.அவர்கள் சென்றவுடன் நிமலனிடம் வந்த அமரன்,
“நீங்க கிளம்புங்க….நான் பார்த்துக்குறேன்….அத்தைக்கு சரியானதும் முறையா பேசலாம்….அத்தை நான் சொன்னா புரிஞ்சிப்பாங்க…..”என்று கூற,
“ம்க்கும்…சாரி…..என் மேலையும் தப்பிருக்கு….நானும் இவ சொன்னதை கேட்டு….”என்ற மேலும் கூற வந்த நிமலனை தடுத்த அமரன்,
“பழசு வேண்டாம் நிமலன்….நீங்க உங்க வீட்டு ஆளுங்க கிட்ட பேசுங்க….அப்புறம் இனி தீர்த்தா என் பொறுப்பு அவளை உங்க அப்பா எக்காரணத்தை கொண்டு தொந்திரவு செய்யக்கூடாது….இது என்னோட எச்சரிக்கை….”என்று மிரட்டுவது போல கூற,
“எங்க அப்பா எதுவும் பேசமாட்டார்…..ஆனா தீர்த்தா எனக்கு அத்தை பொண்ணு அதனால அவளுக்கு நான் எப்போதும் ஒரு நல்ல நண்பனா துணையிருப்பேன்….அதை நீங்களும் தடுக்க முடியாது….வரேன்…..”என்றவன் தாமரையிடம்,
“பார்த்துக்கோ….நான் வரேன்….”என்றவனின் கைகளை பற்றிக் கொண்ட தாமரையை சற்று எரிச்சலுடன் பார்த்த நிமலனுக்கு பொறுமை பறந்தது.
“தாமரை….உள்ள படுத்திருக்கிறது உன்னோட அம்மா….நீ தான் அவங்க பக்கத்துல இருக்கனும்….ஏற்கனவே நீ அவசரபட்டதால தான் நாம இப்படி இங்க நின்னுக்கிட்டு இருக்கோம்….”என்று கத்த தாமரையின் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க,அகிலாவும்,அமரனும் பார்த்துக் கொண்டு நின்றனரே தவிர பேசவில்லை.இன்னும் சொல்ல போனால் பேசும் நிலையில் இருவரும் இல்லை.
“ப்ச்…இப்படி அழுது உன்னை சரினு சொல்ல வைக்காத…இந்த முறை அது நடக்காது…கொஞ்சம் பொறுமையா இரு….நான் எங்க வீட்லேயும் பேசனும்….எனக்கும் கொஞ்சம் டையம் கொடு….”என்று கூற,தாமரைக்கும் வேறு வழி இருக்கவில்லை,
“சரி நீங்க போயிட்டு வாங்க….”என்று கூறிவிட,
“எதுக்கும் பயப்படாத…உன்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க…”என்ற நிமலன் அமரனை பார்த்துக் கொண்டே கூற,அவனோ முகத்தை திருப்பிக் கொண்டான்.எங்கள் வீட்டு பெண்ணை எங்களுக்கு பார்த்துக் கொள்ள தெரியும் என்று சொல்ல முடியும் ஆனால் தாமரையே தங்களுக்கு எதிராக இருக்கும் போது தான் பேசினாலும் அது தங்களுக்கு எதிராக தான் முடியும் அதனால் எதுவும் பேசவில்லை அவன்.நிமலன் சென்றவுடன் மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் அமர்ந்திருந்தனர்.மூவரின் நினைவுகளும் இன்று காலை நடந்த நிகழ்விலேயே இருந்தது.
அகிலா அமரனை அறைந்தவுடன் அந்த இடமே அமைதியாகிவிட கற்பகத்திற்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை இதில் அகிலா அடித்தவுடன்,
“அகிலா எதுக்கு கண்ணாவை அடிக்கிற…நாம இங்க எதுக்கு வந்தோம்….இது யார் வீடு….”என்று வரிசையாக கேள்விகளை சுற்றி பார்த்துக் கொண்டே எழுப்பியவரின் பார்வை ஒரு இடத்தில் நிலைத்துவிட்டது.
“தா…தாமரை….நீ எங்க இங்க….”என்று அவளை வேகமாக நெருங்க அவளோ நிமலனின் பின் நின்று கொண்டாள்.
“என்னடீ நீ இங்க….”என்று கேட்டுக் கொண்டே வந்தவரின் நடை மகள் யாரோ ஒரு ஆடவனின் பின் ஒளிந்து கொள்ளவும் நின்றுவிட,அவரின் நெஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது ஏதோ தவறாக நடந்துள்ளது அதுவும் தன் மகள் சம்மந்தப்பட்டது என்று அப்போது தான் அந்த தாய்க்கு புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.அகிலாவும் அப்போது தான் தாமரையை கண்டு அவளை நோக்கி வந்தவருக்கு ஓரளவிற்கு விஷயம் பிடிபட்டுவிட அவர் அமரனை யாசிக்கும் பார்வை பார்த்தார்.
“ம்மா…நான் எதுவம் நினைக்கலை…ஆனா நீங்க கேட்ட வார்த்தைகளும் நிஜம் தான்….”என்று அந்த நேரத்திலும் தன் மனதில் உள்ளதை தன் தாயிக்கு தெரியப்படுத்திவிட,அவர் திரும்பி தீர்த்தாவை பார்க்க,
“இப்ப எதுவும் நாம பேச வேண்டாம் அத்தையை பார்ப்போம் வாங்க….”என்று இருக்கும் சூழலை நினைவுபடுத்தினான்.இருவரும் கற்பகத்திடம் விரைய,அவரோ தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வு நிஜம் தானா என்று சமைந்து நின்றார்.
“அத்தை….”என்று அமரன் அவரின் தோளை தொடவும்,
“என்ன நடக்குது கண்ணா இங்க…ஆங்….இங்க என்ன நடக்குது எனக்கு தெரிஞ்சாகனும்….அவளை வர சொல்லு இங்க என் முன்னாடி வர சொல்லு….”என்று அவர் தாமரையை அழைக்க,அவளோ நிமலனின் கைகளை பற்றிக் கொண்டு போகமாட்டேன் என்பது போல நின்றாள்.
“தாமரை அது உன் அம்மா….போ….”என்று நிமலன் கூறியும் அவள் நகராமல் இருக்க,தன் அத்தை அழைத்தும் வராமல் இருக்கும் தாமரையை கண்டு எரிச்சலான அமரன் வேகமாக அவளின் அருகில் சென்று அவளின் கைகளை பற்றி தரதரவென இழுத்து வந்து கற்பகத்தின் முன் நிறுத்தினான்.
“சொல்லு கேக்குறாங்கல்ல…சொல்லு….நான் அவரை தான் காதலிக்குறேன்….அவரை கல்யாணம் செஞ்சுக்க போறேன்….அதை பத்தி பேச தான் நான் இங்க அவரோட வந்திருக்கேன்னு சொல்லு….”என்று ஆத்திரமாக கூற,
“என்ன என்ன சொன்ன கண்ணா நீ….”என்றவர் தாமரையின் புறம் திரும்பி,
“கண்ணா சொல்லுறது எல்லாம் உண்மையா…ஆங்…சொல்லு…..”என்று அவளின் தோள்களை பற்றி உலுக்க,அவளோ கல் போல சமைந்து நிற்க,மகளின் அமைதியில் கற்பகத்திற்கு கோபம் எல்லை மீற அவர் கைகளை ஓங்கிவிட்டார்.அமரனோ ஓங்கிய கையை பிடித்துக் கொண்டு,
“வேண்டாம் அத்த…வேண்டாம்….”என்று மறுக்க,
“அய்யோ கண்ணா…நான் என்ன செய்வேன்…..அப்பா இல்லாத பிள்ளைனு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படி சீரழிஞ்சு வந்து நிக்குறா….கடவுளே….ஏன்டீ உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா…உனக்கு ஏற்கனவே கல்யாணம் பேசியிருக்குனு தெரிஞ்சும் இப்படி பண்ணலாமா….”என்று தலையில் அடித்துக் கொண்டு அழ தொடங்க,
“அத்த…அண்ணி….”என்று அகிலாவும்,அமரனும் அவரை தாங்கி பிடிக்க அவர்களின் கைகளிலேயே மயங்கியிருந்தார் கற்பகம்.
“அத்த…”
“அய்யோ அண்ணி….அண்ணி…அமரா ஏதாவது செய்ப்பா…”என்று அகிலா பயத்தில் அலற,மயங்கி தாயைக் கண்டவுடன்,
“அம்மா..அம்மா….”என்று தாமரையும் பயத்தில் கத்த,அனைவருமே பதறி தான் விட்டனர்.
“டேய் கதிரு…..தூக்குடா….சீக்கிரம் தூக்கு….”என்று தீர்த்தா நிலைமையின் தீவிரம் உணர்ந்து கூறியவள் நிமலனை பார்த்து,
“என்ன பார்த்துக்கிட்டே இருக்க சீக்கிரம் வண்டியை எடு….”என்று அவனின் காரில் கிடத்தி தான் கற்பகத்தை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
“ம்மா….”என்ற அமரனின் குரலில் நிகழ்வுக்கு வந்த அகிலா,
“ஆங்…என்னப்பா….”
“நான் டீ வாங்கிட்டு வரேன்…”என்று எழுந்துகொள்ள,
“இல்லப்பா எதுவும் வேண்டாம்….மனசு சரியில்லை….”என்று எங்கோ வெறித்தபடி கூற,
“ப்ச்….ம்மா…அத்தைக்கு ஒண்ணும் ஆகாது….அவங்க எழுந்தா பார்த்துக்கனும்ல….அதுக்கு தெம்பு வேண்டாம்…இப்ப இந்த டீயை குடிங்க…தீர்த்தா சாப்பாடு கொடுத்துவிடுவா….”என்றுவிட்டு எழ,
“அவ தான் முடியாதுனுட்டு போயிட்டாளே….”என்று அகிலா கூற,அமரனின் முகத்தில் மெல்லிய புன்னகை,
“கொடுத்தனுப்புவா….”என்று கூற,அகிலா மகனையே கண்கொட்டாமல் பார்த்தார்.அவனின் முகத்தில் இப்படி புன்னகை மலர்ந்து பார்த்ததெல்லாம் வெகு நாட்கள் என்ன வருடங்கள் ஆகிவிட்டது இன்று முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண் குளிர ரசித்தவர்,
“சரிப்பா போயிட்டுவா….”என்றுவிட்டு மீண்டும் விட்டத்தை வெறிக்க,தாமரைக்கு பற்றிக் கொண்டு வந்தது இருவரையும் பார்க்க பார்க்க,அவள் மனதில் அனைத்திற்கும் காரணம் இவர்கள் தான் என்ற எண்ணம் சிறு வயதிலிருந்தே பதிந்து போயிருந்தது.எதற்கெடுத்தாலும் தன் தாய் அமரனை முன்னிருத்தி தான் அவளுக்கு அறிவுரை வழங்குவார்,அதோடு அகிலா என்ன சொன்னாலும் அமரன் அதை தட்டாமல் செய்வான் அதுவேறு தாமரையை பல இடங்களில் பாதித்திருந்தது.
“உங்க பையன் மட்டும் தீர்த்தாவை காதலிக்கலாமா….”என்று தாமரை கோபமாக கேட்க,
“அவன் காதலிச்சானானு எனக்கு தெரியாது….ஒருவேளை காதலிச்சிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லிருப்பான்….அவனுக்கு யாரோட மனசையும் உடைக்க தெரியாது….”என்றார் எங்கோ பார்த்துக் கொண்டு,
“அப்ப நான் உடைச்சிட்டேன்னு சொல்லுறீங்களா….எல்லாம் உங்களால நீங்க தான் எப்போதும் அந்த வீட்ல முதன்மை எங்க அம்மா அந்த வீட்ல ஒரு வேலைகாரி போல தான் இருந்தாங்க….நீங்க அவங்களை உபயோகிச்சிருக்கீங்க….”மேலும் தாமரை என்ன கூறியிருப்பாளோ அவளை பாதியிலேயே தடுத்த அகிலா,
“இங்க பாரு….நான் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை….அண்ணிக்கு என்னை பத்தி தெரியும் எனக்கு அவங்களை பத்தி தெரியும்….”என்றவர் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார்.தாமரை ஏதோ கூற வர,
“வேண்டாம் தாமரை….நாம பேச வேண்டாம்….”என்று அகிலா முடித்துக் கொண்டார்.அவரின் முகமும் அகமும் அழுத்தமாக இருந்தது எங்கே தனக்கும் ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்து தான் போனார்.எங்கே தானும் படுத்துக் கொண்டால் தன் மகன் உடைந்து போவான் என்று நினைத்தவர் தன்னை முயன்று தேற்றிக்கொண்டார்.
“ம்மா….”என்றபடி வந்த அமரன் தன் தாயின் கையில் ஒரு கப்பை கொடுத்தவன்,தாமரையிடம் ஒரு கப்பை கொடுக்க அவளோ வேண்டாம் என்பது போல மறுத்தாள்.
“அம்மாக்கு சொன்னது தான் உனக்கும்….குடி….”என்று அவளின் பக்கத்தில் வைத்துவிட,தாமரைக்கு இப்போது வேறு வழியில்லை என்பதால் எடுத்துக் கொண்டாள்.அமரன் கூறியது போல தீர்த்தா கதிரிடம் மதிய உணவை கொடுத்தனுப்பிவிட,
“அவளே வந்தாளா இல்ல நீ போய் வாங்கிட்டு வரியாடா….”என்று கதிரிடம் கேட்க,
“தீர்த்தாவே மண்டிக்கு வந்து கொடுத்து என்னை அனுப்பி விட்டுச்சுடா…..”என்ற கதிர் கற்பகத்தின் உடல்நிலை கேட்டவன்,
“சரிடா பார்த்துக்கோ…நான் மண்டியை பார்த்துக்குறேன்….”என்றுவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
இங்கு நிமலனின் வீடே போர்களம் போல இருந்தது.செல்வம் முகத்தில் அத்தனை கோபம் அவர்கள் கற்பகத்தை அழைத்துக் கொண்டு சென்றவுடன் தன் மனைவியை தங்கள் அறைக்கு இழுத்து சென்ற செல்வம்,
“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்…..”என்று கோபத்தில் சாருலதாவை அடித்திருந்தார்.சாரு ஏதோ பேச வரும் முன் மீண்டும் மீண்டும் அவருக்கு அடி விழ அந்த இடத்திலேயே நிலைகுலைந்துவிட்டார் அவர்.
“ச்சீ….நீயெல்லாம் ஒரு பொண்ணா….நீ எப்ப தான் திருந்த போற….”என்று செல்வம் கோபமாக கத்த,
“ஐய்யா…பெரிய ஐய்யா…உங்களை கூப்பிடுறார்….”என்று கதவை தட்டிவிட்டு பணியாள் கூற,
“வரேன்னு சொல்லு….”என்றவர் தன்னை மிரண்டு பார்க்கும் மனைவியின் முன் குனிந்து அமர்ந்து அவரின் கைகளை பற்றி எழுப்பி விட்டவர்,
“இது தான் நான் உனக்கு தர கடைசி வாய்ப்பு….ஒழுங்கா திருந்திக்க இல்லை நான் மனுஷனா இருக்கமாட்டேன்….”என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட,சாரு தன் கணவனின் புதிய பரிமாணத்தை நடுக்கத்துடன் பார்த்து நின்றார்.இங்கு ராஜாங்கத்தின் அறையில் அவரிடம் மேலோட்டமாக விஷயத்தை பகிர்ந்துவிட்டு தன் மகனின் வரவுக்காக காத்திருந்தார்.அவருக்கு மகனின் மீது அத்தனை அதிர்ப்தி இப்படி செய்துவிட்டானே என்று.
error: Content is protected !!