Skip to content
Post Views: 4,171
நான் தேடும் காதல் நீ…..20
இரவு அமரன் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு சென்றவுடன் தங்கள் அறைக்குள் வந்து கடைவடைத்து கொண்டாள் தாமரை ஏனோ ஒரு வித கோபம் அனைவரின் மீதும் தான் நினைத்த காரியம் நடக்காமல் போனதே என்று ஒரு வித வெறி என்று கூட கூறலாம்.
“ஆஆ…..ஏன் ஏன் எனக்கு மட்டும் எதுவும் நான் நினைச்ச மாதிரி நடக்கமாட்டேங்குது….”என்று தனக்குள் கத்த,அவள் கேட்டதற்கான விடை தான் இல்லை.சிறு வயதிலிருந்தே அன்னையின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவளுக்கு ஏனோ வெளி உலகம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி போயிருந்தது பள்ளி இறுதி ஆண்டில் ஒருமுறை அவர்கள் பள்ளியில் கல்லூரி ஒன்றிர்க்கு அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து சென்றிருந்த போது தான் நிமலனை சந்தித்தாள்.பார்த்தவுடன் காதல் என்று தான் கூற வேண்டும்.அதன் பின் அவர்களின் காதலை வளர்த்தது கைபேசி தான்.நிமலன் கூறி தான் பெங்களூரில் கல்லூரி சேர்ந்தாள் தாமரை.
முன்பிருந்தே நிமலன் இருவீட்டிலும் பேசலாம் என்று தான் கூறியிருந்தான் ஆனால் தாமரை தான் அதை முற்றிலுமாக மறுத்திருந்தாள்.அவளுக்கு நிச்சயம் தன் அன்னை தன் விருப்பத்துக்கு மதிப்பளிக்க மாட்டார் என்று முடிவுடன் இருந்தாள் அதனாலே அவள் திருமணம் செய்து கொண்டு வீட்டில் சொல்லாம் என்று கூற அதற்கு நிமலன் சம்மதிக்கவில்லை.தன் வீட்டின் மூலம் உன் வீட்டில் பேச வருகிறேன் என்று அவன் பிடிவாதமாக தான் அவளை அழைத்துவந்திருதான்.
Advertisement
“நான் அப்பவே சொன்னேன் கேட்டாரா….இப்ப பாரு என்ன ஆச்சுனு….நாளைக்கு அவங்க எந்திரிச்சு….என்னை பிளாக் மெயில் பண்ணுவாங்க….இல்ல இல்ல இந்த தடவை நான் எதுக்கும் மடிய மாட்டேன்….எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம்….”என்று கூறிக் கொண்டவள் காலையிலேயே தன் அன்னையை பார்க்க கிளம்பிவிட்டாள்.
கற்பகத்தை அப்போது தான் அறைக்கு மாற்றியிருந்தனர்.அமரன் தான் அவருக்கு துணையாக அனைத்தும் செய்து கொண்டிருந்தான்.அப்போது சரியாக தாமரை அறையின் உள்ளே நுழைய,
“வா தாமரை….நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்….”என்று அமரன் கற்பகத்தை படுக்கையில் கிடத்தியபடி கூற,
Advertisement
“ம்ம்…அதான் நான் வந்துட்டனே….நீங்க கிளம்புங்க…”என்று கூற அமரனுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.
Advertisement
“சரி நானும் வீட்டுக்கு போயிட்டு….அத்தைக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துடுறேன்….”என்று கூறியவன் கற்பகத்திடம்,
“அத்தை நான் போயிட்டு வந்துடுறேன்…..”என்று கூற கற்பகம் எதுவும் கூறவில்லை தலையை மட்டும் அசைத்தார்.அமரன் சென்றவுடன் கற்பகம் சாய்வாக அமர்ந்திருக்க தாமரை அவரின் எதிரில் அமர்ந்தாள்.இருவரும் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தனர்.கற்பகம் மகளை தான் பார்த்தபடி இருந்தார்.அவரின் மனது ஏதோ அனைத்தும் முடிந்துவிட்டது போல் உணர்ந்தது.ஆனாலும் மகளிடம் பேசியாக வேண்டுமே,
“தாமரை….”என்று ஏதோ கூற வந்தவரை தடுத்த தாமரை,
Advertisement
“ம்மா….என்னை மாத்தலாம்னு மட்டும் நினைக்காத…..நான் நிமலனை தான் விரும்புறேன் அவரை தான் கல்யாணம் செய்வேன்…..எல்லாமும் நீ நினைக்கிற மாதிரி தான் நடக்கனும்னு எதிர்பார்க்காதம்மா….எனக்குனு ஒரு மனசு இருக்கு அதை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்குற….”என்றவள் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக்கொள்ள,
“நான் என்னடீ பண்ணேன்….உனக்கு எது நல்லதுனு பார்த்து பார்த்து செஞ்சது தப்பா….அதெல்லாம் விடு கண்ணாவும்,அகிலாவும் என்ன நினைப்பாங்க…..”என்று கற்பகம் கூற,அதுவரை தன் தாயிடம் பொறுமையை கையாண்ட தாமரை இருவரின் பெயரையும் கேட்டவுடன் கோபம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
“ம்மா…எப்ப பாரு கண்ணா கண்ணா….எனக்கு அவரை பார்த்தாலே பிடிக்கலை….அவர் ஆளும் மூஞ்சியும்….”என்று தாமரை மேலும் என்ன கூறியிருப்பாளோ,
“தாமரை….”என்று கற்பகம் கத்திவிட்டார்.
“சும்மா கத்தாதம்மா….எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்….எனக்குனு வரப்போறவன் இப்படி தான் இருக்கனும்னு எனக்குனு சில ஆசைகள் இருக்கு அப்படிபட்டவன தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்….இதுல நீ குறுக்க வந்தாலும் எதுவும் மாறாது….அதோட இன்னுமொரு விஷயமும் சொல்லுறேன் கேட்டுக்கோ…..என்னமோ உன் தம்பி மகன் ரொம்ப நல்லவன்னு சொல்லுற அவன் அந்த தீர்த்தாவை தான் விரும்புறான்…..அது தெரியுமா உனக்கு….”என்று தாமரை தன் மீது உள்ள தவறை சாமர்த்தியமாக அமரனின் மீது திருப்ப,மகளின் சூட்மம் அறிந்த கற்பகம்,
“நீ உனக்குனு ஒரு வாழ்க்கை தேடிக்கிட்ட மாதிரி கண்ணாவும் தேடிக்கிட்டான்….அவனுக்கு என்ன தலையெழுத்தா உன்னை நினைச்சே வாழ்க்கையை கெடுத்துக்க….”என்று கூற,தாமரைக்கு வெறியே வந்தது அமரனை எப்படியாவது தன் தாயின் பார்வையில் கீழே இறக்கிவிடும் நோக்கில்,
“ஆமா…ஆமா….தலையெழுத்து இல்லை தான் அதான் ஒண்ணு இல்லைன்ற உடனே இன்னொன்னை பிடிச்சிக்கிட்டான்….அது கூட உனக்கு புரியலை…நீ என்னமோ அவன் தான் உத்தமன் மாதிரி பேசுற….அதோட அத்தை மட்டும் என்ன லேசுபட்டவங்களா அவங்களுக்கும் உன்னை போல என்னை வீட்டோ வேலைக்காரியா வச்சிக்கலாம்னு நினைச்சிருப்பாங்க இப்ப அது நடக்கலை அதனால அவங்களும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பாங்க….”என்று தன் மனதில் இத்தனை நாள் உள்ள வன்மத்தை கூற கற்பகத்திற்கு தான் மனது அத்தனை வலித்தது தான் எதில் தவறிவிட்டோம் என்று யோசித்தபடியே அவர் இருக்க சரியாக அந்த நேரம் ஒரு செவிலியர் உள்ளே வந்து,
“நீங்க கொஞ்சம் வெளில இருங்கம்மா….இப்ப டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாரு….”என்று விட்டு வெளியில் சென்றுவிட்டார்.தாமரை தன் தாய் ஏதாவது கூறுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க அவரோ எதுவும் பேசாமல் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க ஒருவித ஏமாற்றத்துடன் வெளியில் வந்தாள்.சிலரை நாம் எந்த நிலையிலும் திருப்பதி படுத்த முடியாது அப்படி பட்டவள் தான் தாமரை.சிறு வயதிலிருந்தே அவளுக்கு எல்லாம் கிடைத்தது தான் ஆனால் அவள் மனதில் எப்போதும் இதை விட நல்லதாக செய்திருக்கலாம் இவர்கள் என்ற எண்ணம் அகிலாவின் மீது உண்டு அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து கொள்வாள் அதற்கு காரணம் கற்பகம்.அதுவும் சிறிது காலம் கழித்து குறைய தொடங்கியது அதன் விளைவு இதோ முற்றிலுமாக இருவரையும் பிடிக்காமல் போனது.
“தம்பி நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டேன்….ம்ம்…சரி தம்பி நீங்க சீக்கிரம் வாங்க….”என்று அந்த செவிலியர் அமரனிடம் கூறிவிட்டு கற்பகத்தின் அறையில் அமர்ந்து கொண்டார்.அவருக்கு அமரனை நன்கு தெரியும் அவரிடம் அவன் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான்.கற்பகத்திற்கு மாத்திரைகள் கொடுக்க சென்ற போது தாமரை அவரிடம் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தவர் உடனே அமரனுக்கு அழைத்து கூறிவிட்டார்.அமரனுக்கு அதிர்ச்சி தான் தாமரை இப்படி செய்வாள் என்று அவன் நினைக்கவில்லை.அதனால் அவன் உடனே அந்த செவிலியரிடம்,
“நீங்க டாக்டர் இப்ப ரவுண்டிஸ் வருவாங்கனு சொல்லி அவளை வெளில உட்கார வைங்க…நீங்க அவங்க பக்கதிலேயே இருங்க இதோ நான் கிளம்பிட்டேன்….”என்று அமரன் கூறிவிட்டான்.
“கண்ணா தான் உங்களை பார்த்துக்க சொன்னதா….”என்று கற்பகம் சரியாக கேட்க,
“ஆமாம்மா….நான் தான் சொன்னேன் உங்க பொண்ணு சண்டை போடுதுனு….அதான் தம்பி என்னை பார்த்துக்க சொல்லுச்சு…..”என்று கூற கற்பகம் சரியென்னும் விதமாய் தலையாட்டிவிட்டு அமைதியாகிவிட்டார்.
இங்கு அமரன் பேசியை வைத்தவுடன் அகிலா,
“என்ன கண்ணா என்ன பிரச்சனை…அண்ணி நல்லா இருக்காங்கல்ல……”என்று பதட்டமாக கேட்க,
“ஒண்ணுமில்லம்மா….அத்தை நல்லா தான் இருக்காங்க….அவங்க பொண்ணு தான் சரியில்லை….”என்று பல்லைக் கடித்து அந்த செவிலியர் கூறியதை கூற,
“அய்யோ….இவ ஏன் இப்படி இருக்கா….என்ன தான் ஆச்சு இவளுக்கு….நம்மளை ஏன் விரோதி மாதிரி பார்க்குறா….”என்றவரின் குரலே கரகரத்து விட,தன் தாயின் தோள்களை தட்டிக் கொடுத்த அமரன்,
“ம்மா விடுங்க….இதுக்கு தான் அத்தைக்கிட்ட பல தடவை சொன்னேன்….இப்ப நமக்கு எதிரா வந்திருச்சு…..ப்ச்….எனக்கு அத்தையை எப்படி தேத்தறதுனு தான் தெரியலை….”என்று வருத்தமாக கூற அகிலாவும் அதை நினைத்து தான் பயந்து போயிருந்தார்.ஏற்கனவே நான் தங்களுக்கு பாரமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தவர் இப்போது என்ன கூறுவார் என்ற பயம் பிடித்துக் கொள்ள எப்போதும் போல் தன் கணவனின் முன் நின்றுவிட்டார்.அவரின் மனதை கொட்டும் இடம் அவர் ஒருவர் தானே அதான் அவரிடம் நின்றுவிட்டார்.அமரனுக்கு தாயின் மனநிலை நன்கு புரிந்துவிட அவன் எதுவும் கூறாமல் மருத்துவமனை நோக்கி புறப்பட்டுவிட்டான்.
அமரன் வந்த போது தாமரை வெளியில் தான் அமர்ந்திருந்தாள்.அவன் வருவதை பார்த்ததும்,
“டாக்டர் வராங்கலாம் வெளில இருக்க சொன்னாங்க….”என்று கூற,
“ஓஓ….சரி….”என்றுவிட்டு கதவை தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே செல்ல,
“அதான் சொல்லுறேனே கேட்குறாரா பாரு….எல்லாம் இவரு இஷ்டம் தான்….”என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க அவளின் கைபேசி இசைந்தது நிமலன் அழைத்திருந்தான்.
“என்ன அதிசயமா கூப்பிட்டு இருக்கீங்க….”என்று பேசிக் கொண்டே அவள் அந்த இடத்தை விட்டு நகர,அதை பார்த்துவிட்டு திரும்பிய அமரன்,
“க்கா….அவ போயிட்டா….நீங்க போங்க….நான் பார்த்துக்குறேன்…..”என்று கூற,
“சரிப்பா….”என்றுவிட்டு அவரும் சென்றுவிட்டார்.
“என்ன கண்ணா என்கிட்ட என்ன பேசனும்…..இப்ப தான் என் பொண்ணு பேசிட்டு போனா…”என்று கற்பகத்தின் குரல் உடைந்தே விட,
“ச்சு….அத்தை என்னதிது….கண்ணு கலங்கிட்டு….அவ சின்ன பொண்ணு ஏதோ கோபத்துல பேசுறா….நீங்களும் அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க….”என்று அமரன் அவரின் கை பற்றி கூற,
“நான் ஏதோ தப்பு பண்ணிட்டேனாப்பா….எனக்கு புரியவும் இல்லை தெரியவும் இல்லை….அவரு போனதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே போன மாதிரி ஆகிடுச்சு….என்ன தான் நீங்க என்னை தாங்கினாலும் நான் உங்களுக்கு பாரமா இருக்கேன்னு மனசு உருத்திக்கிட்டே இருக்கும்….ஆனா அகிலா தான் அதை சரியா கவனிச்சு உன் பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு இந்த உருத்தலும் இருக்காதுனு சொல்லுவா….எனக்கும் உன்னை போல ஒரு மாப்பிள்ளை யாரு வேணாம்னு சொல்லுவா அதனால ஒத்துக்கிட்டேன்….இப்ப தோணுது நான் என் பொண்ணுகிட்ட கேட்டு இருக்கனும்னு….தப்பு பண்ணிட்டேன்….”என்று அழுதவாரே கூற,அமரனுக்கு கண்களில் கண்ணீர் இறங்கிவிட்டது.
“என்னதிது அத்தையும்,மருமகனும் அழுகாச்சி படம் காமிச்சிக்கிட்டு இருக்கீங்க….”என்று கேட்டபடி தீர்த்தா சாப்பாட்டு கூடையுடன் உள்ளே வர,
“ம்ம்…சிரிச்சு சிரிச்சு வயறு வலிச்சு போச்சு அதான் அழுகாச்சி படம் எப்படி இருக்குனும் பார்க்குறோம்….”என்று அமரன் குறுநகையுடன் கூற,
“கொழுப்பு தான் உனக்கு…அவங்களே உடம்பு முடியாம இருக்காங்க…அவங்க கிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருக்க…”என்று தீர்த்தா கோபமாக கேட்க,
“அடியே வாயாடீ…என் மருமகனை எதுவும் சொல்லாத….”என்றவர் அமரனிடம் திரும்பி,
“எப்படி தான் சமாளிக்க போறியோ…..”என்று கூற,
“ம்ஹம் எப்படி சாமளிக்க போறோம்னு சொல்லுங்க அத்தை…..”என்று திருத்திக் கூற,கற்பகம் முகத்தில் விரக்தி புன்னகை,
“இங்க பாருங்க அத்தை தாமரை அவளுக்கு மனசுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுத்திக்கிட்டா….இதுல தப்பு சொல்ல முடியாது….உங்க கிட்ட ஒண்ணு சொல்லவா நானே போன வாரம் தாமரையை பார்க்க தான் போயிருந்தேன்….அவ கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லாம் தான் போயிருந்தேன்….”என்று கூற,
“என்ன கண்ணா சொல்லுற….”என்று கற்பகம் அதிர்ச்சி ஆனார் என்றால் தீர்த்தா கண்களை சுருக்கி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.அமரன் அன்று நடந்தவைகள் அனைத்தையும் கூறி முடித்தவன் தன் விருப்பத்தையும் கூறிவிட கற்பகத்திற்கு சற்று அதிர்ச்சி தான் என்றாலும் தன் மகளும் அமரனை விரும்பவில்லை என்று சற்று நிம்மதியும் இருந்தது.
“நீ அப்புறமா உன் கதையை சொல்லு இப்ப அவங்களை சாப்பிட விடு….”என்று தீர்த்தா கூற,
“சரிமா பேசலை…நீ கொடு…”என்றுவிட்டு அவன் வெளியேறிவிட்டான்.
வெளி பகுதிக்கு வந்த அமரன் தாமரை போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் நிமலனுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பிவிட்டான்.நிமலன் பேசியில் மெஸேஜ் வந்ததை பார்ரத்தவுடன்,
“சரிமா எனக்கு வேலை வந்திடுச்சு…..நான் அப்புறம் பேசுறேன்….”என்றுவிட்டு பேசியை வைத்துவிட்டபின் அமரனுக்கு அழைத்துவிட்டான்.
“என்னாச்சு அமரன்…ஏதாவது பிரச்சனையா…..”என்று கேட்க,
“ம்ம்…சின்னதா…நிமலன் உங்க வீட்டுல எல்லார் கிட்டேயும் பேசிட்டீங்களா….அங்க ஓகே தான…..”என்று கேட்க,
“நான் ரெடி எப்ப வரனும்…..அதை சொல்லுங்க வந்துடுறோம்…..”
“சீக்கிரம் வருவீங்க…..நான் பேசுறேன் உங்களுக்கு….”என்றுவிட்டு அமரன் வைத்துவிட்டான்.ஏதோ மனதின் அழுத்தங்கள் சற்று குறைந்தது போல் உணர்ந்தான்.நாம் தேடுவது எது என்று உணர்ந்துவிட்டாலே நமக்கான விடை கிடைத்துவிடும்.அமரனுக்கு அவன் தேடிய காதல் தீர்த்தாவிடம் தான் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது.அதனால் அதை அவன் விடப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டான்.
error: Content is protected !!