Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 15

அத்தியாயம் 15

ஊட்டியிலிருந்த நாட்களுக்கு குறைவே இல்லாத அழகான நாட்களாய் தான் வெற்றிவேல் செழியன், கனிகாவின் வாழ்க்கை சென்றது.

அந்த அழகான நாட்களில் அவர்களுக்குள் எல்லாமே சரியாக இருந்ததா..? என்றால் அதான் இல்லை.

கனிகா செய்து வைக்கும் வேலைக்கும், வெற்றிவேலின் கோபத்திற்கும்.. நித்தமும் ஊடலில் தான் சுற்றியது அந்த ஜோடி.



Advertisement

ஆனாலும் அன்றைய இரவிலேயே அந்த ஊடலை முடித்துக்கொள்ளும் வித்தையை இருவரும் கற்றுக்கொள்ள.. அழகான டாம் அண்ட் ஜெர்ரியாய் அவ்வீட்டில் வலம் வந்தனர் அந்த தம்பதியர்.

வெற்றிவேல் அவன் வேலை விசயமாய் வெளியே இருக்கும் சமயத்திற்கும், 

கனிகா அவளின் சமூக சேவை சார்ந்த விழிப்புணர்வு முகாமிற்கு சென்று விடும் சமயத்திற்கும் சேர்த்து வைத்து.. அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை அழகாக மாற்றிக்கொள்ள கற்றுக்கொண்டனர் இயல்பாய்.

Advertisement

திருமணம் முடிந்த நான்காவது மாதம் அவள் கருவுற்றிருக்கும் விசயம் தெரிய வர, சந்திராவை கையில் பிடிக்க முடியவில்லை.

Advertisement

அவரை மட்டுமல்ல செந்தமிழ் பிரகாஷின் நிலையும் அதே..

மகளின் வாழ்க்கை பற்றிய அவர்களின் பயத்தை அவர்கள் யாரிடமும் பகிராத போதும் உள்ளுக்குள் அது இல்லாமல் இல்லையே..!

இப்போது அதை எல்லாம் தாண்டி ஒரு சுப விசயம் மகள் வாழ்க்கையில்.. எனும் போது அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமேது.

Advertisement

****

மெரீனா கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வெற்றிவேல் செழியன்.. பொங்கி வரும் கடலின் அலைகளை பார்த்தபடி இருந்தாலும், 

அவனின் நினைவுகள் யாவும்.. சிறிது நேரத்திற்கு முன் தன் வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.

“கனிம்மா சொன்னா கேளும்மா. டாக்டர் இன்னும் ரெண்டு மூணு நாள்ல குழந்தை பிறந்திடுமுன்னு சொல்லியிருக்காங்க இல்ல. 

எப்போ வேணுமின்னாலும் உனக்கு பிரசவ வலி வரலாம். இந்த நேரத்துல போய் பீச் பார்க்க ஆசையா இருக்கு..

அதனால பீச்சுக்கு போய் வாக்கிங் போறேன்னு அடம்பிடிக்கலாமா..? அதும் நேரம் வேற நைட் எட்டாச்சு.. 

சொன்னா கேளுடா..!” என்ற வெற்றியின் கெஞ்சலும், கொஞ்சலும் காதிலேயே விழுந்ததாகவே தெரியவில்லை பெண்ணவளுக்கு.

அவளோ கையிலிருந்த மாதுளையை உறித்து சாப்பிடுவதிலேயே குறியாக இருக்க, அதை பார்த்தவனுக்கு மெலிதான கோபம் வந்திருந்தது.

ஆனால் முந்தைய நாள் ஹாஸ்பிடல் போய் வந்த பின்.. ஏனோ தன்னை அவள் நெருங்கி அணைத்துக்கொண்ட விதமும், 

அவளின் அலைப்புறுதலும்.. அவனுக்கு அவளின் மன உணர்வை நன்றாக புரிய வைத்திருக்க, மிகவும் பொறுமையாகவே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

இதற்கு முன்னும் அவள் இவ்வாறு நடந்து கொண்ட போது சந்திராவிடம் அவளின் நடவடிக்கை பற்றி சொன்ன போது, “கண்ணா.. எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த பயம் இருக்க தான் செய்யும்.. 

பிரசவமுன்னா சும்மாவா.. மறுபிறவி இல்லையா..? 

அந்த பயம் தான் அவள படுத்துது போல.. கொஞ்சம் அனுசரனையா அவகிட்ட இருப்பா.. நானும் கனிம்மாகிட்ட பேசறேன்..” என்று சொல்லியிருக்க,

வேறு வழியின்றி அவளின் எல்லா ஆசைக்கு தலையாட்டும் நிலையில் அவன்.

இல்லாவிட்டால் அவள் அமைதியை தத்தெடுத்து இப்படி அமர்ந்து கொள்ள.. வெற்றிவேலுக்கு தான் சற்று நேரத்திற்கு மேல் அவளின் குரலை கேட்காமல் இருக்க முடியாது.

உடனே அவளிடம் இறங்கி வந்து சமாதானம் செய்து அவள் கேட்டதை செய்து விடுவான்.

இன்றும் அப்படி கேட்டு அடம்பிடிப்பவள் கேட்டதை செய்ய ஒரு மனம் சொன்ன போதும், எந்த நேரமும் வலி வந்து விடும் எனும் போது இது தேவையா..? என்ற மெல்லிய கோபமும் அவனுள்.

ஆனால், எல்லா பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் பிரசவம் குறித்த பயம், அவளை எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்திட சொல்லும் போது, 

அவளின் ஆசையா.. அல்லது உடல்நிலையா.. என்று முடிவெடுக்க இயலாமல் விழிபிதுங்கி நின்றது என்னவோ  வெற்றிவேல் செழியன் மாத்திரமே..

கனிகாவை மணம் புரிந்த நாள் முதல் அவள் செய்யும் செயலில் அவ்வாறு நிற்பது அவனுக்கு இப்போது எல்லாம் பழகிபோன ஒன்றாகி போனது.

செந்தமிழும், பிரகாஷும் கனிகா உண்டான போதிருந்து அவ்வப்போது வந்து இருந்து அவளுக்கு வேண்டியதை ஆவலாக செய்து பார்த்துக்கொண்டாலும், அவளை அவர்கள் வீட்டிற்கு அனுப்ப சந்திராவும் வெற்றியும் அனுமதிக்கவே இல்லை.

‘சரி, வளைகாப்பு முடிந்தால் இங்கு தானே வருவாள்..’ என பொறுத்திருந்தவர்களின் எண்ணத்தை, 

“மாமா, அத்தை நீங்க வந்து இங்கேயே தங்கிக்கோங்க. 

நா கனியை அங்கே அனுப்ப மாட்டேன்..” என்று வெற்றி முடிவாக சொல்லி மொத்தமாய் மூடுவிழா நடத்தியிருந்தான் அவர்களின் எண்ணத்திற்கு.

அதில் சிறு மனவருத்தம் இருந்த போதும், ‘தங்கள் மகளை பிரிந்திருக்க முடியாமல் தானே இப்படி..’ என நினைத்தவருக்கு, அவர்களின் திருமணத்தின் போதிருந்த பயம்.. முற்றும் முழுதாய் விடைபெற்ற உணர்வு.. நிறைவோடே அவனின் கோரிக்கையை ஏற்க வைத்தது.

இதோ பிரசவ தேதி நெருங்கியிருப்பதால் அவர்களின் ஜாகை கூட அங்கு தான்.

கனிகாவின் பிடிவாதத்தையும், வெற்றிவேலின் நிலையையும் அதுவரை பொறுமையாய் பார்த்திருந்த செந்தமிழ், 

“ஏன்டீ.. மாப்பிள்ளை இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்காரில்ல.. எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்கே. 

நாங்க சொன்னா தான் கேட்க மாட்டே. நீ நினைக்கறது தான் நடக்கனுமுன்னு அடம்பிடிப்பே.. 

அவர் சொல்லறதுக்காகவாவது வீட்டுல அடங்கமாட்டியா..?” என தனது ட்ரேட் மார்க் அட்வைஸ் மழையை ஆரம்பிக்க,

அவரிடம் எதுவும் பேசாது கனிகா வெற்றியை பார்த்த பார்வையில், 

‘போச்சு.. இவங்க பேசறதுக்கும் சேர்த்து நைட் என்னை வச்சு செய்ய போறா..! 

அதுல இருந்து தப்பிக்கணுமின்னா அவ சொன்ன மாதிரி வெளிய கூட்டிட்டு போயிட வேண்டியது தான்..’ என்று முடிவெடுத்தவன்,

“அத்தே விடுங்க.. நா கூட தானே போறேன். நா பார்த்துக்கறேன். 

எப்படியும் அவள வாக்கிங் கூட்டிட்டு போகணும் தானே..? 

அந்த வாக்கை பீச்சுலையே செய்யட்டும்..” என்று கூறி, 

அவளின் தலைக்கு மப்ளர் அணிவித்து, நடக்க ஏதுவாக கர்ப்பிணி பெண்கள் அணியவென இருக்கும் அந்த சூவையும் அவனே மாட்டி அழைத்து வந்திருந்தான்.

இதையெல்லாம் யோசித்தபடி இருந்த வெற்றியின் தோளில் சாய்ந்து கொண்டவளின் மணி வயிற்றை.. அவனே அறியாது ஒரு கரம் மென்மையாய் வருடியபடி இருந்தது.

“மாமா.. மாமா..” என்று மெல்ல அழைத்தவளுக்கு அவனிடமிருந்து பதில் வராததால், 

“டேய் வெற்றி…!” என்றதும்,

உணர்வுக்கு வந்தவன், “என்னடீ…!” என்றான் சுவாதீனமாய்.

“மாமா.. எதாவது பேசு மாமா..” என்றாள் கொஞ்சலாய்.

அவளின் வார்த்தை காதில் விழுந்ததும் திரும்பி அவளை பார்த்து முறைத்தபடி, “எதுக்கு.. அன்னைக்கு ஊட்டில தூங்குன மாதிரி தூங்கவா..?” என கடுப்பில் கேட்டவனை,

“ஈ….!” என்ற தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு பார்த்தவள், 

“அது உங்க தப்பு தானே மாமா. பாவம் புள்ளைன்னு கொஞ்ச நேரமாச்சும் நைட்ல தூங்கவிட்டாம டார்ச்சர் பண்ணிட்டு.. கூட்டிட்டு போய்..  லெக்ச்சர் அடுச்சா தூங்காம என்ன செய்வேன் சொல்லுங்க..?” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளை பார்த்தவன்,

‘இல்லன்னா மட்டும் மொத்தமா பேச விட்டு கேட்டிருப்பே..!’ என்பதாய் பார்வையிலேயே உரைத்துவிட்டு,

“போடீ.. நா, அப்போ எவ்வளவு முக்கியமான விசயம் பேசினேன்.. தெரியுமா..?” என்றவனின் குரலில், 

‘தான், தன் காதலை முதன் முறை சொன்னதை அவள் கேட்கவில்லையே..’ என்ற ஆதங்கம் இப்போதும் தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!