Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 15.1

அவனின் மீது இன்னும் வாகாக சாய்ந்து கொண்ட கனிகா, “என்னத்த மாமா சொல்லியிருக்க போறீங்க.. கனி, உன்னை பார்த்து நா ப்ளாட் ஆகிட்டேன். 

என்னோட வேலை எனக்கு முக்கியம். 

என் வேலை என்னோட முதல் காதல் ன்னா.. நீ என்னோட ரெண்டாவது காதல்…  

நீ சொன்ன பொய்யால வந்த கோபமே தவிர உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்டீ.. ஐ லவ் யூன்னு.. நாலு லைன்ல சொல்ல வேண்டியதை நாலூ பக்கத்துக்கு சொல்லியிருப்பீங்க..” என கிண்டலாக சொன்னதும்,



Advertisement

அதிர்வாய் அவளை பார்த்த வெற்றி, “எப்படி, நா சொன்னத ஸார்ட் பண்ணி அப்படியே சொல்றே..? 

அப்போ அன்னைக்கு நீ தூங்கலை தானே..?” என சந்தேகமாய் கேட்க,

Advertisement

“அச்சோ மாமா.. உங்கள கல்யாணம் பண்ண ஃபாலோ பண்ணி.. உங்கள டாப் டூ பாட்டம் அனலைஸ் பண்ணி வச்சிருந்தவளுக்கு.. 

Advertisement

நீங்க எப்போ.. எப்படி பேசுவீங்கன்னு தெரியாமையா இருக்கும்…?

நா, நீங்க அன்னைக்கு பேசினதை கேட்கலைன்னு இன்னைக்கு புகார் சொல்றீங்க.. நீங்க மட்டும் ஒழுங்கா…?

அந்த கிட்நாப் கேஸ் வந்த டைம் நம்ம வீட்டில நீங்க கல்யாணத்துக்கு ஏன் சம்மதிக்கலன்னு விதவிதமா.. அழகா.. நா ஃபீல் பண்ணி கதை சொன்னா.. 

Advertisement

அதை கேட்கறத விட்டுட்டு காதுல ஹெட் செட் வச்சு போன் தானே பேசிட்டு இருந்திருக்கீங்க..?” என்று, 

அன்று அவன் போனில் பேசியபடி.. அவசரமாக சென்றதை இப்போது கேடையாமாக்கி தப்பிக்க சொல்லிட,

“அட அராத்து.. நீ எப்போ ரூமுக்குள்ள வந்தாலும் பேச வேண்டிய விசயத்தை சொல்ல போன் தடையா இருக்க கூடாதுன்னு போனை சைலண்ட்ல போட்டு, நீ.. நின்னு கதை சொன்னையே.. அந்த ஜன்னல்கிட்ட இருந்த டேபிள் மேல தான் வச்சிருந்தேன். 

நீ பேசும் போது.. உன்னை பார்த்துட்டு இருந்ததால தான், அதுல லைட் எரியறதே எனக்கு தெரிஞ்சது.

டூ டைம்ஸ் வர்ற வரை நா கண்டுக்கல.. ஆனா என்னோட தொழிலில் அப்படி அலட்சியமாவும் இருக்க முடியாதே..

அதனால தான் அவசரமா எழுந்து வந்து பார்த்தேன். அதுல சதீஷ் ன்னு வந்ததுமே தெரிஞ்சது முக்கியமான விசயமுன்னு..

கல்யாணத்துக்குன்னு லீவ்ல இருக்கற என்னை.. அந்த டைம் அவன் கூப்பிடறான்னா நிச்சயமா எமர்ஜென்சி இல்லாம கூப்பிட மாட்டான். 

அதான் ப்ளூடூத் ஆன் பண்ணிட்டு ரெடியாகிட்டே பேசினேன். இதெல்லாம் கவனிக்காம நீ தான் லூசு மாதிரி ஒழறிட்டு இருந்தையே…!” என்று சொல்ல,

“என்னது நா லூசா..? ஆமா மாமா உங்கள மாதிரி வெரப்பா கல்யாணமே வேணாமின்னு சுத்திட்டு இருந்தவரை.. திட்டம் போட்டு கல்யாணம் பண்ணி, எப்படியோ இப்போ அப்பா ஆகற மாதிரி மாத்தி வச்சிருக்கற நா லூசு தான்..”  என்று பொங்கிய கனிகா வெற்றியின் முதுகில் அடிக்க துவங்க,

சிரிப்போடு அவளின் அடியை வாங்கிக்கொண்டிருந்தவன், திடீரென அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை விடுத்து, “கனிம்மா.. என்னடா..  என்னாச்சு..?” என்று தவிப்போடு கேட்டிட,

“மாமா.. வயிறு வலிக்குது..” என வயிற்றில் கைவைத்து சிறு பிள்ளை போல உதட்டை பிதுக்கி கண்ணில் லேசாய் நீர் வர சொன்னவளை, 

மறு நொடி கரத்தில் தாங்கியவன் விரைவாய் தனது வாகனத்தில் அமர்த்திவிட்டு, போனில் மருத்துவமனைக்கும்.. வீட்டிற்கும் அழைத்து சொல்லிய படியே ஹாஸ்பிடல் நோக்கி வாகனத்தை செலுத்த தொடங்கினான்.

அவளின் வலியோடு கூடிய ஒவ்வொரு முணங்களுக்கும், அவளின் கரத்தையும் தட்டி கொடுத்து ஆறுதலாய் பேசியபடி மருத்துவமனையை அடைந்தான்.

‘பிரசவ வலி தான்..’ என உறுதி செய்த மருத்தவர், அவளை லேபர் வார்டிக்குள் அனுப்ப, வெற்றிவேலின் கரத்தை இறுக பற்றியவளின் பயம் உணர்ந்தவனாய், 

“டாக்டர்.. நானும் கூட இருக்கலாமா..?” என கேட்க,

“இட்ஸ் யுவர் விஷ் சார்..” என்று அவரும் சொல்லிவிட,

அவளோடே அந்த அறைக்கும் தேவையான பாதுக்காப்பு உடையோடு உள்ளே சென்றிருந்தான் வெற்றி.

இதுவரையிலும் கனியின் கண்ணில் சிரிப்பு, குறும்பு, வெக்கம், சில சமயம் கோபத்தை கூட கண்டு விட்டவன், முதன் முறையாக அவளின் பயத்தையும், அதீத வலியையும் கண்டு மனதளவில் மிகவும் நொறுங்கி போனான் அவளின் கணவனாய்.

அவள், “மாமா.. வலிக்குது மாமா..!” எனும் ஒவ்வொரு  முறையும், அவளை விட மனதால் அந்த வலியை தாங்கி நின்றான் வெற்றி அவளின் கரத்தை பற்றியவாறு.

“ஒன்னுமில்லடா.. கொஞ்ச நேரம் தான்.. நம்ம ஏஞ்சல் வந்திடுவா.. அப்புறம் எல்லாமே சரியாகிடும்..” என்று ஆறுதல் சொல்லி, அவளின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவனுக்கு, தன் கண்ணில் வடியும் நீரை துடைத்திடவும் தோன்றவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் உண்டான அதீத வலியில், “மாமா, எனக்கு பயமா இருக்கு.. நா செத்துடுவேன் போல மாமா.. நா செத்துட்டா பாப்பாவ நல்லா பார்த்துக்கோங்க மாமா..” என்ற அவளின் வார்த்தையில், 

அடுத்து என்ன சொல்லி அவளை தேற்றுவது.. என்பதை கூட, மறந்து உறைந்து போனான் வெற்றிவேல் செழியன்.

எதையும் திடமாய் எதிர்கொள்ளும் காவலன் தான் என்றாலும், மனைவியில் இந்த ஜீவ மரண போராட்டத்தை அவனாலேயே தாங்கிக்கொள்ள தான் முடியவில்லை.

அவள் படும் பாட்டை கண்ணால் காணவும் முடியாது.. அவ்விடத்தில் அவளை தனியாக தவிக்க விட்டு விலகவும் முடியாது.. தவித்து தான் போனான் அவனும்.

தாயை உடலாலும், தந்தையை மனதாலும் படுத்திவிட்டு.. விடியலின் துவக்கத்தில் இந்த மண்ணுலகில் வந்து உதித்தாள் அவர்களின் செல்ல இளவரசி. 

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, உயிரும் உணர்வுமாய் தங்கள் காதலின் அச்சாரமாய் தவழும் பிள்ளைதானை முதன்முறையாக தாங்கி நிற்கும் நேரத்தின் அற்புத உணர்வை தந்தையாய் முழுமையாய் உள்வாங்கி நின்றான் அந்த காவலன்.

இரவிலிருந்து தவிப்போடு காத்திருந்த பெரியவர் மூவருக்கும் பேத்தி பிறந்த சந்தோஷமும், நிம்மதியும் அவர்களை தொற்றிக்கொள்ள அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

***********

நான்கு ஆண்டுக்கு பிறகு..

“மாமா.. மாமா.. சொன்னா கேளுங்க மாமா..”

“ப்பா.. ப்பா.. மம்மி சொல்லுது கேளுப்பா..”

என வெற்றிவேல் செழியன் செல்லும் இடமெல்லாம்.. ரயில் பெட்டி போல அவனின் டீ சர்டை பிடித்தபடி கனிகாவும், அவளின் புடவை முந்தானையை பற்றிய படி அவர்கள் வீட்டு இளவரசி சபர்மதியும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் செய்வது எதையும் கண்டு கொள்ளாது.. தனது வேலையை பார்த்தபடி இருந்த வெற்றியை பார்க்க பார்க்க பெரியவர்கள் மூவருக்கும் சிரிப்பு வந்தாலும், 

கனிகாவின் முன்பு சிரித்து வைத்தால் அவ்வளவு தான்..  என்பதால் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“மாமா.. இப்போ முடிவா என்ன தான் சொல்றீங்க நீங்க..?

நானும் ரெண்டு வருஷமா கேட்டுட்டு இருக்கேன். நீங்களும் பிடிகொடுக்காம எஸ்கேப் ஆகிட்டே இருக்கீங்க. 

இப்ப பாருங்க, நம்ம மதிக் குட்டியும் கேட்கறா…?” என்றதும், 

நின்று அவளை திரும்பி பார்த்து முறைத்தவன், ‘அவளா கேட்டாளா..? இல்ல, நீ சொல்லி கொடுத்து கேட்க வச்சியான்னு.. தெரியாத அளவு நா முட்டாளா…?’ என்று பார்வையாலேயே கேட்டுவிட்டு, 

அவர்கள் அறைக்குள் சென்றுவிட.. சோர்ந்து போய் அமர்ந்தாள் கனிகா.

தாய் அமர்ந்ததும் அவளுக்கு அருகே அமைதியாய் வந்து அமர்ந்து கொண்டது அந்த குட்டி வாண்டும்..

சந்திரா, “அவன் தான் பிடிவாதமா வேணாமின்னு சொல்றானே. விடு கனிம்மா.. உன்னோட நல்லதுக்கு தானேடா..?” என்று சமாதானம் செய்திட,

“அத்தம்மா, அவரு தான் லூசு மாதிரி எதையோ நினைச்சு இப்படி சொன்னதையே சொன்னா, நீங்களுமா இப்படி..?” என்றவள், 

மதிக்குட்டியை பார்க்க, அவளோ டிவியில் ஓடிய கார்ட்டூனில் மூழ்கி இருந்தாள்.

“எனக்கு அண்ணா இருந்தது இல்லாம போய் தனியா வளர்ந்தேன்னா,

அவரும் வீட்டுக்கு ஒத்த புள்ளையா இருந்து தனியாவே வளர்ந்துட்டார்.

இப்போ நம்ம மதியும் அப்படி தான் வளரணுமா..? 

பிரசவ வலியில சொல்றது எல்லாம் பெருசா எடுத்துகிட்டு, மாமா பண்ணறது சரியில்லன்னு தெரிஞ்சும்.. அவரை சரி செய்யறத விட்டுட்டு பெருசுங்க மூணு பேரும் அவருக்கு துணை போறீங்க.. உங்களையெல்லாம், வச்சிட்டு என்னத்த செய்ய..?

இனி உங்களையும் மாமாவையும் நம்பி பிரயோஜனம் இல்லை. கல்யாணத்துக்கு போட்ட மாதிரி அடுத்த திட்டத்தை போடறேன்.. மாமாவ தட்டி தூக்கறேன்..” என்றவள் சற்று நேரம் கண்ணை மூடி யோசித்து விட்டு,

“அத்தம்மா, மாமா வேலையில நாங்க வெளியூர் போறது ரிஸ்க்.. மதிக்குட்டிக்கு ஒரு மாசம் லீவ் விட்டிருக்காங்க.

இதை சாக்கா வச்சு.. நீங்க மூணு பேரும் கோவில் குளமுன்னு போவீங்களோ.. இல்ல, ஊர் ஊரா சுத்துவீங்களோ.. பாப்பாவோட நீங்க எல்லாரும் கிளம்பறீங்க. 

மாமாவ வழிக்கு கொண்டு வர்றது என்னோட பொறுப்பு..” என்றவளின் எண்ணத்திலும் தப்பு இல்லை.. என்பதை உணர்ந்த பெரியவர்களும் அவளின் திட்டத்திற்கு உடன்பட்டனர்.

“இங்க பாரு கனிம்மா, நா அப்போ சொன்னது தான் இப்பவும்.. நீயாச்சு உன் மாமனாச்சு.. 

நாங்க ஜாலியா எங்க மதிக்குட்டி கூட ஊர் சுத்த போறோம்..” என்ற சந்திரா  

‘எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டும்..’ என்ற எண்ணத்தோடு கிளம்ப தேவையானது பற்றி மற்ற இருவரிடமும் விவாதிக்க துவங்கினார்.

அதன் படி வெற்றிவேல் செழியன் ட்யூட்டிக்கு சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் கனிகாவை தவிர்த்து மற்ற அனைவரும் சந்திராவின் பூர்வீக வீட்டை நோக்கி பயணத்தை தொடங்கியிருந்தனர்.

அவர்களை அனுப்பிவிட்டு வெற்றியின் வருகைக்காக காத்திருந்த கனிகாவோ,

“மாமா, கல்யாணமே வேண்டாமுன்னு நீங்க சுத்துல காலத்துலையே திட்டம் போட்டு கல்யாணம் பண்ணி புள்ளைய பெத்தவளுக்கு,  

உங்களோட மொத்த வீக்னஸூம் அத்துப்படியாகி இருக்கும் போது நீங்க முரண்டு பிடிச்சா விட்டுவேனா..?  

மாமா, இனி நோ பேச்சு.. ஒன்லி ஆக்க்ஷன் தான்..” என திட்டமிட்ட படி மாடியேறினாள் கனிகா.

இத்தனை வருட அனுபவத்தில் கனிகாவின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் கண்டு வைத்திருக்கும் வெற்றிவேல் செழியனும் இப்படி ஒன்றை அனுமானித்து இருப்பான்.. என்பதை கனிகா எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அன்றே நிரூபித்திருந்தான் அந்த கள்ள காவலன்..

இருவரின் ஊடலும் மீண்டும் உயிர் பெற.. யார் யாருக்காக விட்டு கொடுத்து.. அந்த ஊடலை சரி செய்வார்கள் என்பதை அந்த காலத்தின் கையில் விட்டுவிட்டு நாமும் விடைபெறுவோம்.

நன்றி.

சுபம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!