Skip to content
Post Views: 425
டின்னர் டைம்.
அமலா மகளுக்கும் மருமகனுக்கும் உணவை பரிமாறினாள்.
Advertisement
உணவை அள்ளி சாப்பிட்ட ரதி “வெறும் ரசம். அப்பளமாவது பொரிச்சி இருக்கலாம்..” என்றாள்.
“நாளைக்கு வாங்கிட்டு வரேன்..” என்றாள் அமலா.
Advertisement
Advertisement
வருணுக்கு ரதியின் தேவையை கூட நம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்று கவலை உண்டானது.
அமலாவும் ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவள்தான்.
Advertisement
தருண் தன் தாய் தந்தையோடு சண்டை போட்டு விட்டதால் கம்பெனிக்கும் செல்லவில்லை. அமலாவும் கணவனின் இறப்பை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் வீட்டில்தான் இருந்தாள். கையில் இருந்த பணம் குறைந்து கொண்டே இருந்தது.
இதற்கு மேலும் இப்படியே இருந்தால் உணவுக்கு கூட இவர்களை தவிக்க விட்டு விடுவோம் என்பது தருணுக்கு புரிந்தது.
நடந்த தவறுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். அதற்கு முதலில் நாம் அனைத்தையும் சரியாக திட்டமிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அன்று இரவு முழுக்க யோசித்தான்.
ரதி அவனின் தோளில் தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏசி ரூமோ பட்டு மெத்தையோ தேவைப்படவில்லை. அவன் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் அவனால் அப்படியே விட முடியாது.
அரை இருளில் இரவெல்லாம் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசி அவளை கற்பனையில் காதலித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு நிஜம் போதவில்லை. கற்பனையிலும் கனவிலும் கூட காதல் தேவைப்பட்டது.
ஒருவேளை அவள் கர்ப்பமானால் அதன் பிறகு என்ன ஆகும்? குழந்தையும் சேர்ந்துதானே ஏழ்மையில் தவிக்கும்?
நாம்தான் இவள் இழந்ததை எல்லாம் திருப்பி தர வேண்டும். விக்னேஷ் சொன்னது சரிதான். மாயா செய்வதும் சரிதான்.
மறுநாள் காலை மாமியார் காபியை நீட்டியபோது “நாம எங்க வீட்டுக்கு போகலாம் அத்தை..” என்றான் தருண்.
“உங்களுக்கும் கிறுக்கு புடிச்சி போச்சா தம்பி?” என்று கேட்டாள் அமலா.
“எல்லாத்தையும் இப்படியே விட முடியாது அத்தை. நீங்க இன்னைக்கு ஒன்னுமே இல்லாம இருக்க காரணம் நான்தான். உங்களோட மாங்கல்யத்தை என்னால திருப்பித் தர முடியாது. ஆனா நிம்மதியான வாழ்க்கையையாவது தரணும்ன்னு ஆசைப்படுறேன்..” என்றான்.
“எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பதே எனக்கு நிம்மதிதான் தம்பி..” என்றாள் அமலா.
“அப்படின்னா இப்படியே இருந்துடலாம்ன்னு சொல்ல வரிங்களா? என்னால முடியாது. எனக்கு என்னோட உரிமைகள் திரும்ப வேணும். நான் அந்த வீட்டுக்கு போறேன். நான் உங்க இஷ்டத்தை மதிக்கிறேன். ஆனாலும் நீங்க ஒருமுறை யோசிச்சி பாருங்க..” என்றான்.
ரதி தயங்கினாள். ஆனாலும் அவனோடு செல்ல முடிவெடுத்தாள்.
அவளின் முகத்தைப் பார்த்து முடிவை கண்டு கொண்ட தருண் “போய் டிரஸ்ஸை பேக் பண்ணு ரதி..” என்றான்.
மாயா வந்துதான் இவர்கள் மனதையும் குழப்பி விட்டு விட்டாள் என்று அமலாவுக்கு சின்ன மகள் மீது கோபம் வந்தது.
“என் அம்மாவை பழிவாங்கலாம் வாங்கன்னு கூப்பிடல. உங்களைப் பார்த்தாலாவது என் அம்மாவுக்கு கில்டினஸ் வேலை செய்யுமான்னு பார்க்கதான் கூப்பிடறேன். உங்களோட வாழ்க்கை அழிச்சிட்டு அவங்க அங்கே சந்தோஷமாவும் பிரச்சனைகள் இல்லாமலும் வாழ்வாங்க. ஆனா நீங்க இங்கே பணத்துக்கும் மத்த விஷயத்துக்கும் கஷ்டப்பட்டு வாழணுமா? கொஞ்சம் யோசிங்க அத்தை..” என்றான்.
அமலா முடியாது என்று தலை ஆட்டினாள். “உங்க அம்மா சும்மாவே எங்களை பிச்சைக்காரங்கன்னுதான் சொல்வாங்க. நான் உங்க வீட்டுக்கு வந்தா உங்கம்மா இன்னும் கேவலமா பார்ப்பாங்க. உங்கம்மா ஏதாவது வார்த்தைகள் சொல்லிட்டா நான் அவமானத்தால செத்துடுவேன். என் பொண்ணை வேணா கூட்டிட்டு போங்க. ஆனா என்னை விட்டுடுங்க தம்பி..” என்று கேட்டாள்.
அதற்கு மேல் அமலாவை இவனாலும் கட்டாயப்படுத்த முடியவில்லை.
இவனும் ரதியும் அந்த வீட்டிற்கு கிளம்பினார்கள்.
“உங்க அம்மா நம்மை வீட்டுக்குள்ள விடலன்னா என்ன பண்றது?” சந்தேகம் கேட்டாள் ரதி.
இவன் கைக்கடிகாரத்தை பார்த்தான். “என் அப்பா இப்ப வீட்டுலதான் இருப்பாரு. அவர் நமக்கு தடையா இருக்க மாட்டார். என் அம்மா ஏதாவது சொன்னா அதை நான் பாத்துக்குறேன். நீ எதை நினைச்சும் பயப்படாதே..” என்றான்.
இவளுக்கு தன்னை நினைத்து பயமில்லை. தங்கை அங்கே தனியாய் மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு துணையாக இருக்கலாம் என்றுதான் இவள் கிளம்பி இருந்தாள்.
இவர்கள் வீட்டிற்கு வந்தபோது இவன் எதிர்பார்த்தது போலவே அவனின் தந்தை வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்வதற்கு தயாராக இருந்தார்.
இவனை கண்டதும் எழுந்து நின்றார். “வீட்டுக்கு வரணும்ன்னு இப்பவாவது உனக்கு தோணுச்சே!” என்று கடிந்து கொண்டார்.
இவன் ரதியின் கைப்பிடித்தபடி வீட்டுக்குள் காலை எடுத்து வைத்தான்.
“யாரும் வேணாம்ன்னு சொல்லிட்டுதானே அங்கே போனான்? இப்ப எதுக்கு வரணும்?” என்று கனகவதி படிகளில் இறங்கி வந்தபடி கேட்டாள்.
ரதிக்கு திரும்பி போய் விடலாமா என்று யோசனை வந்தது.
அவளின் கையை விடாமல் இறுக்கி பிடித்து இருந்த தருண் “வீடு என் அப்பாவோட சம்பாத்தியம். நீங்க இப்ப நினைச்சா கூட இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவிங்க. ஆனா நீங்க எத்தனை பேரை கல்யாணம் பண்ணாலும் என்னோட அப்பா இவர்தானே? உங்களை விடவும் இவர்கிட்ட எனக்குதான் அதிக உரிமை இருக்கு. நான் ஏன் என் அப்பாவை விட்டு விலகி இருக்கணும்?” என்று கேட்டான்.
தர்மேந்திரன் விழிகளை சுழட்டினார். இது மாதிரியான உவமைகளை எல்லாம் இவன் எங்கிருந்து கண்டுபிடிக்கிறான்?
“உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா நீங்க வெளிய போகலாம்..” என்று அம்மாவின் முகத்திற்கு நேராக சொன்னவன் மனைவியோடு படிகளை நோக்கி வந்தான்.
பொன்னம்மா கிச்சனிலிருந்து இவர்களை ஆவலாக பார்த்தாள்.
படிகளின் ஆரம்பத்தில் நின்றிருந்த அம்மாவின் முன்னால் வந்து நின்றவன் “நகருங்க..” என்று சொல்லிவிட்டு மேலே ஏறினான்.
விக்னேஷும் மாயாவும் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். வீட்டிலேயே சும்மா அமர்ந்திருந்தால் எதையும் சாதிக்க முடியாது. மாயாவுக்கு வெறுமனே அமர்ந்திருப்பது சுத்தமாக பிடிக்காது. அதனால்தான் இன்று கணவனோடு சேர்ந்து அலுவலகம் செல்ல முடிவெடுத்தாள்.
இருவரும் ஒரே நிலை கண்ணாடியை பார்த்து தலைவாரி கொண்டிருந்த நேரத்தில் அந்த அறையின் வாசலில் வந்து நின்றார்கள் தருணும் ரதியும்.
கண்ணாடி பிம்பத்தில் அக்காவையும் மாமாவையும் பார்த்துவிட்டு திரும்பினாள் மாயா.
“அக்கா..” ஓடி வந்து அவளை அணைத்தாள்.
விக்னேஷ் அண்ணனின் முன்னால் வந்து நின்றான்.
“வந்ததுக்கு தேங்க்ஸ். ஆபீஸ் வரியா நிறைய வேலை இருக்கு..” என்று கேட்டான்.
தருண் மனைவியின் முகம் பார்த்தான். அவள் கையை அறுத்துக் கொண்ட விஷயம் கண் முன் வந்து போனது.
“நீயும் என்னோடு ஆபீஸ் வா..” என்று மனைவியை அழைத்தான் தருண்.
“ஆனா நான் வந்து என்ன பண்ணுவேன்?” அவள் சந்தேகம் கேட்க, “எனக்கு ஹெல்ப் பண்ணு. இல்லன்னா என் ரூம்ல சும்மா உட்கார்ந்து இரு. அதுவும் முடியலன்னா அங்கே படுத்து தூங்கு. உன்னை இந்த வீட்டுல இனி தனியா விட்டு போக மாட்டேன்..” என்று தன் முடிவை சொன்னான்.
இவளுக்கு அவனின் பயம் புரிந்தது. சரி என்று தலை ஆட்டினாள். “போகலாம்..” என்றாள்.
கனகவதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளின் இரண்டு மகன்களும் இரண்டு மருமகள்களும் படிகளில் இறங்கி வந்தார்கள்.
வீட்டை விட்டு செல்கிறார்களோ என்று கனகவதி யோசிக்க, “பொன்னம்மா அம்மா..” என்று கூப்பிட்டான் விக்னேஷ்.
அவள் குழப்பத்தோடு கிச்சனில் இருந்து வெளியே வந்தாள்.
“நாங்க ஆபீஸ் போயிட்டு வரோம் அம்மா..” என்று அவளிடம் சொல்லி விட்டு நடந்தான் விக்னேஷ்.
தருணுக்கு தம்பியின் சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கல் சிரிப்பை தந்தது. ஆனால் அம்மாவின் முகத்தில் இருந்து கடுகடுப்பை பார்த்த பிறகு இவனும் “ஈவினிங் சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும் செஞ்சிடுங்க பொன்னம்மா அம்மா..” என்று கூறிவிட்டு நடந்தான்.
இவர்கள் நான்கு பேரும் அலுவலகத்திற்கு வந்தபோது தர்மேந்திரன் இவர்களை தனது அறைக்கு அழைத்தார்.
வந்து நின்றவர்களை அமர சொன்னார்.
அவர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். “நானும் நீங்களும் இப்ப ஒரே கோட்டுலதான் நிக்கிறோம். நம்முடைய எதிரி அந்த கைலாஷ். அவனை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் ஜெயிக்க முடியாது. அவனை ஜெயிப்பதும் நம்முடைய வேலை கிடையாது. நம்மை நாம காப்பாத்திக்கணும். அதுக்கான வேலையை பார்க்கணும். அதுக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவிங்கன்னு நான் நம்புறேன்..” என்றார்.
இவர்கள் நால்வரும் அவரை வித்தியாசமாக பார்த்தார்கள்.
“கைலாஷ் அங்கிளுக்கும் நமக்கு நடுவுல அப்படி என்ன பிரச்சனை இருக்கு டாடி?” என்று கேட்டான் தருண்.
“அங்கிளா? இந்த வார்த்தை காதுல விழுந்தா உங்கம்மா உன் தோலை உரிச்சிடுவா. அவன் நம்மோட எதிரி..” என்று நினைவு படுத்தினார்.
“அப்படி என்னதான் பிரச்சனைன்னு சொன்னாதானே எங்களுக்கும் தெரியும்?” என்று கோபத்தோடு சத்தமாக கேட்டான் விக்னேஷ்.
“அது உங்கம்மாவோட பர்சனல். என்னால சொல்ல முடியாது. அவன் நம்மோட எதிரி அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டா போதும்..” என்றவர் சில பைல்களை எடுத்து அவர்களின் முன்னால் வைத்தார்.
“வந்த வேலையை பாருங்க..” என்றார்.
தருண் மீண்டும் அவரிடம் பேச முயற்சிக்க, “வேலையை பார்க்கலாம் மாமா..” என்று சொல்லி பைல்களை கையில் எடுத்தாள் மாயா.
தர்மேந்திரன் அவளை சந்தேகத்துடன் பார்த்தார். அவள் இவரை நக்கலாக பார்த்தபடி அங்கிருந்து கிளம்பினாள். விக்னேஷ் பட்டத்தின் வால் போல அவள் பின்னால் சென்றான்.
வருணும் தந்தையை சில நொடிகள் யோசனையாக பார்த்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு போனான்.
தர்மேந்திரன் நெற்றியை தேய்த்தார். ஒரு பழிவாங்கல் அது. இப்போது பூதாகரமாக வளர்ந்து நிற்கின்றது. மனைவி எப்போதுதான் புரிந்து கொள்வாளோ என்று இவருக்கு கவலையாய் இருந்தது.
நால்வரும் தங்களின் வேலைகளை பொறுப்போடு கவனித்தார்கள். மாயாவும் விக்னேஷும் பக்கத்திலேயே உட்கார்ந்து வேலை பார்த்தார்கள்.
கடினமாக தோன்றும் சில வேலைகள் கூட இப்போது சுலபமாக தோன்றியது. அடிக்கடி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வேலை செய்வது போலவே தெரியவில்லை. இருவருக்கும் வாழ்க்கையை என்ஜாய் செய்வது போல் இருந்தது.
“நீ டெய்லியும் இப்படி என் பக்கத்துல இருப்பதாக இருந்தால் நான் எத்தனை வேலைகள் வேணாலும் பார்ப்பேன்..” என்று சொன்னான் விக்னேஷ்.
“நானும்..” என்றாள் இவள்.
மாலை நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப, மாயா மட்டும் “நான் என் பிரெண்ட்டை மீட் பண்ண வரேன்னு சொல்லி இருக்கேன். போயிட்டு வரேன்..” என்றாள்.
விக்னேஷ் அவளை ஏக்கமாக பார்த்தான். “நான் வர கூடாதா?” என்று கொஞ்சலாக கேட்டான்.
பக்கத்தில் இருந்த தருண் “இவன் என்ன இவ்வளவு க்யூட் ரியாக்ஷன் காட்டிட்டு இருக்கான்?” என்று ஆச்சரியப்பட்டான்.
மாயா தன் கணவனின் கன்னங்களை பிடித்து கிள்ளினாள். “நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். என் பிரெண்ட்ஸ் கொஞ்சம் சரியில்ல. உன்னை கண்ணால கற்பழிப்பாங்க. நான் ரிஸ்க் எடுக்க விரும்பல. நீ வீட்டுக்கு கிளம்பு..” என்றாள்.
இவன் உதட்டை பிதுக்கினான்.
“போ.. நான் உன்னோடு கோபம்..” என்று பொய் கோபத்தோடு தன் காரில் ஏறினான்.
அவனை அப்புறமாக சமாதானம் செய்யலாம் என்று நினைத்தவள் அவர்கள் அங்கிருந்து சென்றதும் ஒரு ஆட்டோவை பிடித்தாள்.
ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு வந்தாள். கைலாஷ் ஏற்கனவே வந்து காத்திருந்தார்.
இவளை கண்டதும் “காப்பி ஆர்டர் பண்ணி இருக்கேன்..” என்றார்.
அதே நேரத்தில் காப்பியும் வந்தது.
“எனக்கு வேணாம்..” என்றவள் எதிரில் அமர்ந்தாள். சுற்றிலும் கவனித்தாள்.
“என்ன பார்க்கிற?” எனக் கேட்டார் அவர்.
“எங்காவது எவனாவது துப்பாக்கியோடு இருப்பானோன்னு பயம்தான். திடீர்ன்னு சுட்டுட்டா என்ன பண்றது? நீ அப்படிப்பட்ட ஆள்தானே?” என்று கேட்டாள்.
“நீ வா போ தேவையா? வயசுக்கு மரியாதை தரலாமே!” என்றவரை நக்கலாக பார்த்தவள் “யார்கிட்ட நடிக்கிற நீ? உன்னோட முழு குணமும் எனக்கு தெரியும். நடுவுல இருக்கும் இந்த பொய் திரையை தூக்கி எறிஞ்சிட்டு பேசலாமா?” எனக் கேட்டாள்.
அவர் ஆச்சரியப்பட, “என் மாமியாரை நீ ரேப் பண்ணிட்டியா? இல்ல லவ் பண்ணி ஏமாத்திட்டியா? அதனாலதான் உங்களுக்குள்ள இப்படி பகையா?” என்று விசாரித்தாள்.
தொடரும்.
error: Content is protected !!