Skip to content
Post Views: 375
மாயா சொன்னது கேட்டு முகத்தை சுளித்த கைலாஷ் “அவளை நான் மனுஷியாவே மதிச்சது கிடையாது. நான் ஒன்னும் ரேப்பிஸ்டும் கிடையாது..” என்றார்.
“அப்புறம் என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை?” இவள் அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்கவில்லை.
Advertisement
இவளின் டா என்ற வார்த்தையில் அவருக்கு முகம் கறுத்து விட்டது. “அவ என்னோட அம்மா அப்பாவை கொன்னுட்டா..” என்றார் சோகத்தோடு.
இவன் ஆச்சரியத்தோடு மேஜையின் மீது இரண்டு கை முட்டிகளையும் ஊன்றினாள்.
Advertisement
Advertisement
“என்னய்யா சொல்ற?” என்று கேட்டாள்.
“என்னோட அப்பாவும் அம்மாவும் ஸ்வீட் கப்பிள்ஸ். நான் அவங்களோட ஒரே பையன். திடீர்ன்னு ஒருநாள் எங்கப்பா கனகவதியையும் அவளோட அம்மாவையும் எங்க வீட்டுக்கு கூட்டி வந்தாரு. தெரிஞ்ச பொண்ணு, இவளோட புருஷன் இவளையும் குழந்தையையும் கைவிட்டுட்டான். கொஞ்ச நாளைக்கு இவங்களை நம்ம வீட்டுல தங்க வச்சிக்கலாம்ன்னு சொன்னாரு. எங்கம்மாவும் சரின்னு சொன்னாங்க.. ஆனா அவங்க எங்க வீட்டிலேயே வாழ ஆரம்பிச்சிட்டாங்க. அவ எங்கப்பாவை அப்பான்னு கூப்பிட்டா. எங்கம்மாவை பெரியம்மான்னு கூப்பிட்டா..” என்றார்.
Advertisement
இவள் மேஜையின் மீது தாளம் போட்டாள். “ஐ திங் உங்கப்பாவோட செகண்ட் செட்டப்போட பொண்ணு அவ..” என்றாள்.
“இல்ல. அவதான் அப்படி தப்பா புரிஞ்சிக்கிட்டா. ஆரம்பத்துல நாங்களும் அதை பெருசா எடுத்துக்கல. அவங்கம்மா அடுத்த சில நாள்ல இறந்துட்டாங்க. சோ அவ எங்க வீட்டோடு பெர்மனென்டா தங்கிட்டா. நானும் தங்கச்சி போலதான் அவளை நடத்தினேன். அவளோட பத்தொன்பதாவது வயசுல என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விஷத்தை வச்சி கொன்னுட்டா. கேட்டதுக்கு அவ கேட்ட தொகையை அவங்க தரலன்னு சொன்னா..” என்றார்.
கேட்டுக் கொண்டிருந்த மாயா “கண்டிப்பா கஷ்டமாதான் இருக்கும்..” என்றாள்.
“ஆமா. போலிஸ் வந்து விசாரிச்சபோது நான்தான் விஷம் கலந்துட்டேன்னு என் மேல பழியை போட்டுட்டா. அப்ப வேற என் லவ்வரை என் ஃபேமிலி ஏத்துக்காம இருந்தாங்க. அதை ரீசனா சொல்லிட்டா. போலிஸ் என்னை பிடிச்சிட்டு போயிடுச்சி. ரொம்ப கஷ்டப்பட்டு நான் விஷம் கலக்கலன்னு நிரூபிச்சி இரண்டு வருசம் கழிச்சி அந்த கேஸ்ல இருந்து வெளியே வந்தான். அவ மேல குற்றத்தை நிரூபிக்க முடியல. அவ ஒரு பணக்கார பையனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா. நான் ஒத்தை ஒத்தை ரூபாயா உழைச்சி இந்த இடத்துக்கு வந்தேன்..” என்றார்.
மேஜையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து அவரின் முகத்தில் ஊற்றினாள் மாயா.
கைலாஷ் தன் முகத்தை துடைத்துக் கொண்டு அவளை வெறித்தார்.
“உங்கப்பா அம்மா செத்தா அதுக்கு ஏன்டா எங்கப்பாவை கொலை பண்ணிங்க?” என்று கேட்டாள்.
“நான் எதுவும் பண்ணல. எல்லாம் பண்ணது உன் மாமியார். அந்த கல்யாணம் நடக்கும் முன்பே நான் உங்கப்பாக்கிட்ட சொன்னேன். அவ வீட்டுக்கு பொண்ணு தராதிங்க, அவளை நம்பாதிங்கன்னு. அத்தோடு என் பாஸ்டையும் கூட அவர்கிட்ட சொன்னேன். ஆனா உங்கப்பா அவளை நம்பினாரு. அவ வீட்டுக்கு பொண்ணை அனுப்பி வச்சாரு. தப்பு உங்கப்பா மேல..” என்றார்.
கண்கள் சிவந்தவள் “அதுக்காக எங்கப்பாவை நடு தெருவுக்கு கொண்டு வருவியா?” எனக் கேட்டாள்.
இல்லை என தலையாட்டியவர் “அது நான் இல்ல. எனக்கு தொழில் ரீதியா எல்லாரும் போட்டியாளர்கள்தான். அவங்களை ஜெயிக்க என்ன வேணா செய்வேன். உங்கப்பாவையும் தொழில் ரீதியாதான் ஜெயிச்சேன். ஆனா அவரோட ஏகப்பட்ட பணத்தை வரதட்சணையா வாங்கியது உன் மாமியார். அப்பப்ப அவருக்கு போன் பண்ணி பணத்தை பிடுங்கியது உன் மாமியார். டவுட்டா இருந்தா உன் அப்பாவோட ஆடிட்டர்கிட்ட கேட்டு பாரு. எனக்கு எல்லா உண்மையையும் சொன்னவர் உனக்கும் சொல்வாரு..” என்றார்.
மாயா விழிகளில் பரவிய கண்ணீரோடு தலை குனிந்தாள். பழியை கனகவதி மீது தூக்கி போட்டு விட்டான். ஆனால் கனகவதியை கேட்டால் இவன் மீது சொல்வாள்.
இரண்டு பேருமே மனித மிருகங்கள். இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதுதான் இருப்பதிலேயே பெரிய முட்டாள்தனம் என்று தோன்றியது.
“எதுக்கு என்னை இங்கே வர சொன்ன?” என்று கேட்டாள்.
“உனக்கு நான் எவ்வளவு வேணாலும் பண உதவி செய்றேன். உன் மாமியார் நிம்மதியா இருக்க கூடாது. இவ்வளவுதான் என் ஆசை. நீ என்ன வேணா பண்ணு. நான் ஹெல்ப் பண்றேன்..” என்றார்.
“தேங்க் யூ..” என்று எழுந்தாள்.
“நிஜமா மாயா. அவ ஃபேமிலி அழியணும்..” என்றார்.
கசப்பாக அவரை பார்த்தவள் “உனக்கு என் மாமியாரை பத்தி சரியா தெரியல. அவங்களுக்கு யார் செத்தாலும் கவலை கிடையாது. சொந்த பையனையே கொல்ல பார்க்கிறா. ஃபேமிலி அழிஞ்சா அழுவாளா? அடுத்த ஃபேமிலியை ரெடி பண்ணிப்பா. அந்த அளவுக்கு சுயநலவாதி..” என்றாள்.
இவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இவ்வளவு யோசிப்பதற்கு பதிலா நீ உன்னோட வேலையை மட்டும் பார்த்திருக்கலாம். எங்கப்பாவாவது உயிரோடு இருந்திருப்பாரு..” என்று சொல்லிவிட்டு வலது பக்கம் திரும்பினாள்.
திடீரென்று அந்த இடம் பச்சையாய் மாறிவிட்டது. எங்கிருந்தோ ஒருவன் ஓடிவந்து இவளை உதைத்தான்.
மாயா தூரமாக இருந்த சுவற்றின் மீது போய் மோதி விழுந்தாள். அவள் விழுந்த இடத்திற்கு பின்னால் ஒரு பெரிய கம்பி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அந்தக் கம்பி இவளின் நெஞ்சில் ஏறிவிட்டது. ரத்தம் வாயிலிருந்து கொட்ட கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போக ஆரம்பித்தாள்.
கைலாஷ் எழுந்தோடி வந்தார். “அடப்பாவிங்களா! சும்மா மெரட்டுங்க, பழியை அவங்க மாமியார் மேல தூக்கி போட்டுடலாம்ன்னு சொன்னா இப்படி மொத்தமா கொன்னுட்டீங்களே!” என்று புலம்பினார்.
அந்த ரெஸ்டாரன்ட்டில் இருந்த ஆட்கள் பயத்தில் அலறியபடி இவர்களை நெருங்க ஆரம்பித்தார்கள்.
அந்த பச்சை விளக்கு ஒளியில் உயிரை விட்டுவிட்ட மாயா நிஜத்தில் திடுக்கிட்டு கண்களை திறந்தாள்.
இன்னும் அவள் சீட்டை விட்டு எழுந்திருக்கவில்லை. முன்னால் கைலாஷ் இருந்தார்.
“என்னம்மா இப்படி பார்க்கிற? உனக்கு எவ்வளவு பண உதவி வேணாலும் செய்ய நான் தயாரா இருக்கேன். உன் மாமியாருக்கு எதிரா திட்டங்களை கூட நான் போட்டு தரேன்.” என்று சொன்னார்
“இப்ப உன் ஆளுங்க இங்க வருவாங்க இல்லையா, என்னை மெரட்டவும் அடிக்கவும்? என்று கேட்டாள்.
அவரின் முகம் மாறிவிட்டது
திரும்பிப் பார்த்தாள். இவர்களிடம் இருந்து பத்தடி தொலைவில் இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்.
“அந்த கிரீன் சர்ட்டும் வொயிட் டீசர்ட்டும்தானே?” என்று கேட்டாள்.
இது எப்படி இவளுக்கு தெரியும் என்று கைலாஷ் அதிர்ச்சி அடைய “இந்த மாதிரி சின்ன புள்ளத்தனமா என்கிட்ட விளையாடாதிங்க. எனக்கு என் மாமியாரையும் அழிக்கணும். உங்களையும் அழிக்கணும். நீங்க எனக்கு எதிரி. என் மாமியார் எனக்கு துரோகி..” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் வலது பக்கம் திரும்பாமல் இந்த முறை இடது பக்கம் திரும்பினாள்.
அந்த இருவரும் பக்கத்தில் நெருங்கி வந்தார்கள்.
மேஜையின் மீதிருந்த தண்ணீர் தீர்ந்த கண்ணாடி டம்ளரை எடுத்து இருவரின் காலுக்கு முன்னாலும் வீசினாள். டம்ளர் உடைந்து விட்டது. வந்த இருவரும் திகைத்து நின்று விட்டார்கள்
“இந்த ஆளு சரியான ஏமாத்து பேர்வழி. உங்களுக்கு பீஸ் கொடுக்காம கூட போயிடுவான். நல்லா மிரட்டி வாங்கிக்கங்க..” என்று சொல்லிவிட்டு வேறு திசையில் நடந்தாள்.
ரெஸ்டாரண்டில் இருந்தவர்கள் இங்கே நடந்ததை குழப்பத்தோடு பார்த்தார்கள்.
ரெஸ்டாரன்ட் ஓனர் கைலாசுக்கு வேண்டப்பட்டவர். அதனால் இரண்டு சர்வர்கள் கைலாசிடம் ஓடி வந்தார்கள்.
“என்னாச்சி சார்? ஏதாவது பிரச்சனையா?” என்று விசாரித்தார்கள்.
“ஒன்னுமில்ல..” என்றவர் தன் ஆட்களை பார்த்து வெளியே வர சொல்லி கண் சைகை காட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
வெளியே அவர் தனது காரில் காத்திருந்த பொழுது அந்த இருவரும் பக்கத்தில் வந்தார்கள். “என்ன சார் ஆச்சி?” என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள்.
“நான் உங்களை செட் பண்ணி இருப்பது அவளுக்கு தெரிஞ்சிருக்கு. என்னோட பக்கத்திலேயே யாரோ ஒரு துரோகி இருக்காங்க. அது யாருன்னு நான் கண்டு பிடிச்சிக்கிறேன். நீங்க கிளம்புங்க..” என்று சொல்லி அவர்களுக்கான பணத்தை கொடுத்தார்.
இருவரும் எந்த வேலையும் செய்யாமல் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பி போனார்கள்.
மாயா வீட்டிற்கு வந்த போது ரதி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
பணிப்பெண் ஒருத்தி பக்கத்தில் நின்று “கொடுங்க மேடம் நான் போடுறேன்!” என்று கேட்டாள்.
ஆனால் ரதி சாக்பீஸை தராமல் கோலங்களை வரைந்து கொண்டு இருந்தாள்.
அக்காவின் அருகில் அமர்ந்தாள் மாயா.
“உனக்கு கோலம் போடுவதும் வீட்டை நிர்வகிப்பதும் ரொம்ப பிடிச்சிருக்குதான். அதை நான் இல்லைன்னு சொல்லல. ஆனா இப்போதைக்கு இதெல்லாம் வேணாம். எழுந்து வா..” என்று சொல்லி அக்காவை எழுப்பி நிறுத்தினாள்
“ஏன்டி என்னை விடுடி..” என்றவளை உள்ளே இழுத்துப் போனாள்.
விக்னேஷும் தருணும் அப்பாவின் அருகில் அமர்ந்து ஆபீஸ் விஷயமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாயா அக்காவை அவர்களின் பக்கத்தில் கொண்டு போய் அமர வைத்தாள்.
“இதை கொஞ்சம் கவனி. வீட்டு வேலை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நீ ஆபீஸ் வேலையையும் கத்துக்கணும். இன்னைக்கு அப்பா இறந்ததும் அம்மா நடுத்தெருவுல நிற்கிற மாதிரி நீ நிற்க கூடாது..” என்று சொன்னாள்.
ரதி கண் கலங்கினாள். “ஏன்டி இப்படி அபசகுணமா பேசுற?” என்று கேட்டாள்.
“எதார்த்தத்தை பேசினா கூட உன்னால ஏத்துக்க முடியல. அந்த அளவுக்கு நீ பலவீனமா இருக்க. இது தப்புக்கா. கொஞ்சமாவது ரியாலிட்டி புரிஞ்சிக்கிட்டு சில விஷயங்களை கத்துக்க..” என்று சொன்னாள்.
அவளின் வார்த்தைகள் சாட்டையடி போல் விழுந்து விட்டது. வருண் தன்னிடம் இருந்த பைலை மனைவியின் கையில் கொடுத்தான்.
“வா நான் உனக்கு கத்து தரேன்..” என்று சொன்னான்.
விக்னேஷ் மாயாவை நாக்கை சுழட்டியபடி பார்த்தான். அவனுக்கும் கற்றுத் தரதான் ஆசை. ஆனால் இது மட்டுமல்லாமல் மற்றொரு விஷயத்தையும் கற்றுத்தர ஆசை.
அவனின் விழிகளை பார்த்த மாயாவுக்கு கோபப்பட வேண்டும் என்றுதான் மூளை ஆசைப்பட்டது. ஆனால் வெட்கம் அவளின் கன்னங்களில் தானாய் படர்ந்தது.
இவர்கள் அனைவரும் ஆபீஸ் விஷயத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் கனகவதி வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
பொன்னம்மா கொண்டு வந்து தந்த தண்ணீரை பருகியவள் இவர்களை பார்த்துவிட்டு முகத்தை சுளித்தாள்.
இந்த சுளிப்பு மாயாவுக்கு கைலாஷைதான் நினைவு படுத்தியது. இவள் கைலாஷின் அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்களில் அடிக்கடி அவரின் முகத்தில் இந்த சுளிப்பை பார்த்து இருக்கிறாள்.
இரண்டு பேரும் அண்ணன் தங்கை என்பதால் மேனரிசம் ஒத்துப் போகிறதா இல்லை ஒரே இடத்தில் பல வருடங்களாக வளர்ந்ததால் அவரின் மேனரிசத்தை இவள் திருடி கொண்டாளா என்று மாயாவுக்கு புரியவில்லை.
அலுவலக வேலைகளைப் பற்றிய விவாதங்கள் முடிந்த பிறகு மாயா தன்னறைக்கு கிளம்பினாள்.
பிரஸாகி உடையை மாற்றிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.
விக்னேஷ் அறையின் நடுவில் நின்று இருந்தான். கைகளைக் கட்டியபடி இவளை பார்த்து கண்களால் சிரித்தான்.
“என்ன?” என்று கேட்டாள் இவள்.
“சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்க. நான் எறும்பா மாறிட்டேன். என்ன பண்றதுன்னு தெரியல..” என்று அப்பாவி போல சொன்னான்.
பக்கத்தில் வந்து அவனின் கழுத்தை சுற்றி கைகளை போட்டவள் “எறும்புக்கு நிஜமாவே தெரியலையா? நம்ப முடியலையே!” என்றாள்.
அவளின் இடைகளில் இரு கைகளையும் பதித்தவன் “அந்த அளவுக்கு எறும்பு மயங்கி நின்னுடுச்சி!” என்று கிசுகிசுப்பாக சொன்னான்.
அவனின் நெற்றியில் புரண்ட கேசத்தை ஊதினாள்.
அவனின் இதழ்களில் முத்தமிட்டாள். “மயக்கம் தெளிய என்ன செய்யணும்?” என்று மோக குரலில் கேட்டாள்.
“இதே போல் கோடி முத்தம் தரணும்..” அவளின் இதழை நெருங்கியபடி கேட்டான்.
இவளுக்கு அவனின் நெருக்கம் புல்லரிப்பை தந்தது.
“உன் கண் விழியில் என் உருவம் தெரியும் வரை உன் நெஞ்சில் நான் வாழ்வேனாம்..” என்றாள்.
அவளின் இதழில் தன் இதழ் பதித்தவன் “இந்த இதழ் வரிகள் மறையாமல் வாழும் வரை உன்னோட நெஞ்சில் நான் வாழ்வேனாம்..” என்றான்.
தொடரும்.
error: Content is protected !!