Skip to content
Post Views: 1,507
இருவரும் பக்கம் பக்கமாய் அமர்த்திருந்தனர், ஆனாலும் எண்ணங்களோ எதிர் எதிர் திசையில் இருந்தது.
பெரிய போராட்டத்திற்கு பிறகு, அப்பொய்ன்மெண்ட் வாங்கி போய் பார்த்த மருத்துவர்க்கு, முப்பது வயது இருந்தால் அதிகம்.
இவளுடைய இந்த சிக்கலான நிலையை அவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை, இருமுறை வெந்நீரில் குளித்து பார்க்கவும் என்ற அவருடைய யோசனை, மேலும் எரிச்சலை தான் கிளப்பியது.
ஒன்றும் பேசாது கிளம்பியவள் தான் இங்கே உட்காந்து அவரை முறைத்துக்கொண்டு இருக்கிறாள், அவளால் செய்ய முடிந்தது அது ஒன்று தான்.
Advertisement
இந்த போராட்டத்தின் நடுவே வலி மேலும் கூடி இருக்க, அதற்கு கார்டிஸோன் , மைல்டு டோஸ் எடுக்கலாம், அறுவை சிகிக்சைக்கு பிறகு வலி கேட்க, கொடுப்பது வழக்கம் தானே என்று, மகன் யோசனை சொல்ல அதையும் மறுத்தார்.
இந்த மருந்துக்கு சைடு எபெக்ட்ஸ் கடுமையாக இருக்கும், கிட்னியை பாதிக்க கூடும் என்பது அவர் பயம்,
மைல்டு டோஸ் ஒன்றும் செய்யாது, என்பது மகன் வாதம், இவள் மகன் வகுத்த பாதையில் போக, அதற்கும் அவருக்கு வருத்தம்.
இத்தனை வருட குடுத்தனத்தில் அவர்களிடயே பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை.
Advertisement
தீவிரமாக யோசித்து, நன்றாக நாலு பேரை விசாரித்து, பின்பே அவர் எந்த முடிவையும் எடுப்பார், அதையும் அவள் கண் பார்வையில் வைத்து, நீ என்ன சொல்ற என்று கேட்டுவிட்டு முடிவு செய்ய அங்கே அவள் நிம்மதியாக, இருப்பது வழக்கம் .
இதுவரை முக்கிய முடிவுகளான, ஸ்கூல், மற்றும் துறை முடிவு செய்வது, சொந்த வீடு மற்றும் மகன்கள் கல்யாணம் எல்லாவற்றிக்கும் இது தான் நடைமுறை.
Advertisement
அவளுக்கும் எதாவது முடிவு எடுக்க குழப்பமாக இருந்தால், அவருடன் விரிவாக பேசினால், அதான் சாதக, பாதகங்களை அலசிவிட்டு, முடிவை அவள் கையில் விடுவார், அது மிக ஆதூரமாக இருக்கும்.
மகன்கள் சற்று வளர்ந்தவுடன், இது போன்ற விஷயங்கள், பொதுவில் அலசப்படும், பெரும்பாலும் அது அவர்கள் உணவு அருந்தும் வேளையாகவோ, இல்லை அதற்கு பிறகு அனைவரும் சேர்ந்து அமர்ந்து இருக்கும் போதோ, நிகழும்.
அதனால் தான், அவளுக்கு சற்று சுமையை குறைக்க சமையல் செய்ய ஆள் வைக்கலாம் என்ற போது அவள் மறுத்தாள்!
சற்று ஆசுவாசத்தை அது தரும் என்றாலும், அவர்கள் பிரைவசி தான் அதற்கு விலையாக கொடுக்க வேண்டி இருக்கும் என்பதாலும், ஆள் பார்த்து இடம் பார்த்து பேசுவது முடியாது என்பதாலும் அவள் மறுத்தது.
Advertisement
இப்போதோ, இந்த எந்த நடைமுறையும் கைக்கொடுக்காமல், ஆளுக்கொரு திசையில் நின்றனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவள் இல்லை.வலிக்கு மருந்து, என்ற அளவில் மகன் கொடுத்த லோ டோஸ் மாத்திரையை முழுங்க, சற்றே ஆசுவாசம் கிட்டியது.
இருந்தும் நீண்ட காலம் அதை எடுப்பது முடியாத காரியம் என்பதாலும், டோஸ் முடிவு செய்வதிலும் மறுபடி முட்டிக்கொண்டது இருவருக்கும்.
அவன் பேச்சை கேட்டு, குதி என்றால் கிணற்றில் குதிப்பாயா, என்று அவர் முறைக்க, இது நடைமுறையில் இருக்கும் வைத்தியம் தான், என்று அவன் வாதிட, அவள் முழு மனதாக அவரை புறக்கணித்து மகன் பின்னே செல்ல, அதற்கும் ஒரு முடிவு வந்தது.
வலி கேட்ட போதும் மாத்திரையின் அளவை ஏற்றி கொடுக்க மகன் தயங்கி, மறுபடி சம்பந்த பட்ட துறை மருத்துவரே முடிவு எடுக்க முடியும் என்பதில் வந்து நின்றது.
சம்பந்த பட்ட துறை மருத்துவர் என்று இரண்டு மூன்று, வயதில் இளையவர்களை பார்த்து,அவர்களுக்கும் ஒன்றும் பிடிப்படாமல், மேலும் சில பரிசோதனைகள் எழுதி தர, அதை எடுத்தால், அதன் முடிவுகளும் நெகடிவ் என்று வர, முட்டு சந்தில் முட்டி கொண்டு நிற்பது போல் நிலையில், அவளுக்கு மகா வேதனையாக இருந்தது.
மகனும், அவரும் இரண்டு திசையில் பயணிக்க, எதில் அவள் சென்றாலும், ஒருத்தரை மறுப்பது போல் ஆனது.
இதற்கு இடையில் அவள் தந்தை முதலில் குறிப்பிட்ட முருகன் என்ற மருத்துவரை சென்று பார்க்க ஒரு வழியாக கணவர் சம்மதிக்க,
அவரோ நல்ல பழுத்த, பழம் போல முதிர்ந்து கனிந்து இருந்தார்.
சில பல கேள்விகளுக்கும், சில பரிசோதனைக்களுக்கும் பிறகு, இது தசை சம்பந்த பட்டது அல்ல, வெஸ்ஸல்ஸ் எனப்படும் ரத்த நாளம் சம்பந்த பட்டதாக இருக்க கூடும் என்ற முடிவுக்கு வந்தார்.அதற்குரிய பரிசோதனைகளை பரிந்துரைத்த பின் கணவரை லேசாக கடிந்து கொண்டார்.
இவ்வளவு நாட்கள் ஏன் தாமதம், என்றும், கிட்னி அடிவாங்கும் என்று நினைத்தால், அதற்கு உரிய பரிசோதனை ஏன் மேற்கொள்ளாமல், அதாவது பயாப்சி செய்யாமல் மருத்துவராக இருந்தும் எப்படி நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்க போச்சு என்று கடிய, அவளுக்கு மனதுக்கு வெகு இதமாக இருந்தது, அந்த முதிய மருத்துவரை மிகவும் பிடித்து போனது.
பாவம் கணவர் ஒரு விதத்தில்,இது அவர் எதிர்பார்த்த வினைதான், அதை அவர் சுட்டியும் காட்டி இருந்தார் என்ற போதும், அவள் எடுத்த கார்டிஸோன், ஏதும் செய்யாது என்றும், அதற்கு முன் எடுத்த வலி மாத்திரைகள் தான் காரணம் என்பதை டாக்டர் முருகன் விளக்கி இருக்க…முழுவதும் கணவர் பேரில் குறை சொல்ல முடியாது என்றபோதும்….
அவர்களிடம் கலந்து ஆலோசித்து, அவர்களை சம்மதிக்க வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவள் வியாதியை கூட நம்பாமல், எதிர் திசையில் பயணித்து, வேணும்கிற குடைச்சல் கொடுத்த அவரை, தந்தை போல நின்று இவர் கடிந்தது, சந்தோசத்தை கொடுத்தது.
கிட்னி சற்று பிரச்சனை கொடுத்து கிரியட்டினின் (creatine ) சற்று அதிகமாக இருக்க, அதை முதலில் கவனிக்க, அவருக்கு தெரிந்த சிறுநீரகவியல் மருத்துவரை பரிந்துரைக்க, அவரை உடனே அன்றே பார்க்க அந்த மிக பிரசித்தி பெற்ற மருத்துவமனையில் கால் வைத்தாள்.
அதற்கு பின்னான ஆறு மாதங்களுக்கு அதுவே அவளது இருப்பிடம் ஆகும் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை.
தனக்கு துணையாக இரண்டு நாட்களுக்கு முன்னே வந்து இறங்கி இருந்த, அம்மாவையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல, அங்கே அவள் பார்க்க வந்த டாக்டர் வேலாயுதம் இன்னும் ஆறு மாதங்களுக்கு அப்பொய்ன்மெண்ட் இல்லாததால், அவருடைய அசிஸ்டன்ட்யை தான் பார்க்க முடிந்தது, அங்கே அவளுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்து இருந்தது
குருவி போல் வாயை திறக்கும் மகனுக்கு கேழ்வரக்கு கூழ் ஊட்டியப்படி அவள் புன்னகைத்தாள்.
இன்னும் முளைச்சி மூணு இலை விடலை, அதற்குள் மகனிற்கு ருசி நன்றாக தெரிந்தது.
முளைகட்டி அரைத்து, பால் எடுத்து, அதை காயவைத்து கிடைக்கும் மாவில் கிளரும் இந்த கஞ்சி, மிகவும் பதமாக வந்தால், அல்வா போன்று சுவையாக பள பளவென்று இருக்கும், அப்படி அமையும் சமயங்களில் சப்பு கொட்டி சாப்பிடுவதும், மற்ற நேரங்களில் சாதாரணமாக சாப்பிடுவதும் என்று வித்தை காட்டிய மகனை அள்ளி மோந்தாள். கர்ப்பம் உறுதி என்று லேப் ரிப்போர்ட் வந்தது இருவருக்கும் மகிழ்ச்சி.
இரண்டு குடும்பங்களுக்கும் இது முதல் பேர குழந்தை, காக்க வைக்காமல், வரம் கிடைத்ததும் வெகு ஆனந்தம்.
அவளுக்கு தலை சுற்றளோ, வாந்தியோ ஏதும் இல்லாமல், மிக சாதாரணமாய் கழிந்தது கர்ப்ப காலம்!
வயறு கூட அதிகம் தெரியாமல் இருக்க, அதனாலும் குனிய நிமிர எந்த கஷ்டமும் இல்லாமல் இயல்பாக கடந்தாள் நாட்களை.
ஐந்தாம் மாதம், அனாமோலி ஸ்கேன் எடுக்கும் முன் மட்டும், அவள் கணவர் சற்று பதட்டமாக இருக்க, அது முடிந்து எந்த பிரச்சனையும் இல்லை என்று வந்த போது, அவன் முகத்தில் வந்த நிம்மதி!
” எனக்கு ரொம்ப பயமா, பதட்டமா இருந்தது ” என்று அவன் சொன்ன போது தான் அவளுக்கே அவன் கவலையின் ஆழம் புரிபட அவள் இதமாக புன்னகைத்தாள்.
” இக்னோரன்ஸ் இஸ் பிளிஸ், ன்னு சொல்வாங்க, அது உண்மைதான், எனக்கு எந்த பயமும் இல்ல, பாவம் தான் டாக்டர்ஸ் ” என்று அவள் சிரிக்க
” யப், அது உண்மைதான், படிக்கிற காலத்திலேர்ந்தே, எங்க எல்லோருக்கும் இந்த ப்ரோப்லேம் வரும், சின்ன தலைவலி என்றால் கூட மனம் படிச்ச எல்லாத்தையும் பட்டியல் போட்டு அதுவா இருக்குமோ, இதுவா இருக்குமோ ன்னு மண்டை காயும், காண்ட் ஹெல்ப் இட் ” என்று சிரித்தான்.
மேலும் இரண்டு மாதங்கள் உருண்டு ஓட, இப்போது காலை மாலை , இரண்டு வேளையும் கொஞ்சம் நடந்தாள்.
ஏழாம் மாதம், காப்பு போட்டு மகளை அழைத்து செல்லலாமா என்று அம்மா யோசித்த போது தான், தன் கணவரின் ஆச்சோபனையை கண்டு ஆச்சரியப்பட்டாள்!
” நீ ஒன்பதாம் மாதம் போலாம்ல, ஒன்னும் பிரச்சனை இல்லலே, என் பிரிண்ட் மஹி இருக்கான்ல, அவன் இப்படித்தான் ஏழாம் மாசம் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு ரொம்ப போர் அடிச்சி போச்சின்னு சொன்னான்” என்று தயங்க அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவள் தாய் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. அங்கே இவள் செல்லும்போதெல்லாம், அவன் கூட வந்து தங்கவில்லை என்றபோதும், காலை உணவு, மதிய உணவு தொடர்ந்து குட்டி தூக்கம், மாலை வரை அங்கே இருந்துவிட்டு, இரவு படுக்கவே அவர்கள் வீட்டுக்கு செல்வான்.
இதில் என்ன பிரிவு, அதில் என்ன போர், என்ற போதும், அவன் அவள் அன்மையை, விரும்புகிறான் என்பது அவளுக்கு புரிய, அதிவே ஏற்று கொள்ளப்பட்டது.
மகன் பிறந்தபின், தினமும் சிறிது நேரம் அவனை பூ போல் மடியில் வைத்திருப்பான்.
ஐந்தாம் மாதம் குழந்தையுடன் வந்தபின், அனைத்திற்கும் துணை நின்றான். குழந்தையை பார்த்துக்கொள்ள அவள் அம்மா வீட்டில் இருந்து வந்த அந்த பெண்மணி அசந்து போகும் அளவிற்கு, அவன் பங்கு இருந்தது.
மகனுமே வெகு சமார்த்தாய் இருந்தது, பசி நேரத்திற்கு பால், கொஞ்சம் விளையாட்டு, தூக்கம் என்று தொல்லை கொடுக்காத ஆரோக்கியமான குழந்தையாக வளர்ந்தது.
இருந்தும் அவன் படிப்பு முடிந்த பின்னே தான் அடுத்த குழந்தை என்று முடிவு செய்துகொண்டார்கள்.
error: Content is protected !!