Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முழுமை பெற்ற காதல் என்றால்

முழுமை பெற்ற காதல் என்றால் 12

மூச்சு திணறல்  அதிகரிக்க, மறுபடி எடுத்த ‘ சி டி ‘ புதிய கதை சொன்னது.

   மொதலில் ஒரு நுரையீரலில் இருந்த தொற்று, சற்று மட்டுபட்ருக்க, அடுத்த நுரையீரலில் கொஞ்சமாக தெரிந்த தொற்று அசுர வளர்ச்சி காட்டியது!
 
 முதலில் இருப்பது கோவிட் என்று வைத்துக்கொண்டு,அது சற்று அடங்கி இருப்பதால், அதை விடுத்து, இரண்டாவதை,வேறு வகை தொற்றாக வைத்து அதற்கு மருந்து கொடுத்தால், அவர்கள் அனுமானம் தப்பாக இருக்கும் பட்சத்தில் உயிர் போகும் அபாயம் இருந்ததால், முடிவு எடுக்க முடியாமல் இருக்க, இப்போதோ இதன் அசுர வளர்ச்சி, உடனே முடிவு  செய்ய வேண்டிய  கட்டாயத்தை உருவாக்கியது.
 
அப்போது தான் மகன் துணிந்து அந்த மருந்தை செலுத்த சொல்லிவிட்டு , விளைவுகள் கையை மீறி போனால், தான் பொறுப்பேற்று கொள்வதாக கூற…

    சோதனை முயற்சியாக, கொஞ்சம் மருந்து ஏற்றப்பட, அதற்கு கை மேல் பயன் கிடைத்தது !
சற்றே அவள் ஆஸிஜென் அளவு தேவை குறைந்தது, அவள் மூச்சு விட சற்று ஆசுவாசம் ஏற்பட்டது!

ஒரு வார போராட்டத்திற்கு பிறகு, அவளுக்கு நோய் தீர்க்கும் மருந்து, இப்போது தைரியமாக கொடுக்கப்பட, படி படியாக முன்னேற்றம் வந்தது.
அப்படியே அது சென்றுவிட்டால் அது வாழ்க்கை அல்லவே, 
மருந்தின் பக்க விளைவில் ஒன்றாக அவள் வயற்றில், புண் ஏற்பட்டு, ரத்தம் கசிந்து, அளவுக்கு  அதிகமாக உதிர போக்கு வெளியேற  மறுபடி அபாய   கட்டத்தில் தள்ளியது. அப்போதும் கவனித்து காப்பாற்றியது, மகனும், கணவருமே.



Advertisement

 மாலை ஒருமுறை அவளை பார்க்க வந்த கணவர் அவள் சோர்வாக இருக்க கண்டு விசாரிக்க, அவளுக்கு காரணம் அப்போது தெரியவில்லை, உணவு பிடிக்கவில்லை, அதிகம் சாப்பிடவில்லை என்பதோடு அவள் முடிக்க, அவருக்கு எதுவோ சரி இல்லை என்று பட்டது.

அதையே, நான்கு நாட்கள் இங்கேயே பழியாய் கிடந்து, இன்று தான் சற்று முன்னேற்றம் அவள் நிலையில் என்று அவன் டூட்டி பார்க்க மகன் சென்றிருக்க, அவனிடம்  “அம்மா கொஞ்சம் சோர்வா தெரியுறா, நீ போய் பார் “என்று  சொல்ல 

  மகன் டூட்டி முடிந்து மாலை   ஐந்துக்கு வரும்போது அவள்  இருமுறை, மலத்துடன் ரத்தம் வெளியேறி இருக்க, பாதி மயக்கத்தில் இருந்தாள்.
அவனை கண்டவுடன் எழும்ப பார்த்த செயல்  தாங்காமல் மயங்க 
ஓடி வந்து முதல் உதவியாக மூச்சு காற்றை ஏற்றிவிட்டு, மற்றவர்களை அழைக்க ..

Advertisement

 சற்று நேரத்தில் அவள் பேர் சொல்லி மேடம் மேடம் என்ற குரலுக்கு  கண்   விழித்து,
அனிச்சையாக அவள் மூக்கில் இருக்கும் டூபை பிடுங்க பார்க்க,

Advertisement

” அம்மா அதை  பிடிங்காதே ” என்ற மகனின் குரலில் கண் விழித்து தேட,

“இங்கதாமா இருக்கேன்,” என்று  கூறி  அவள் கைகளை பிடிக்க அதை நெஞ்சோடு சேர்த்து அனைத்துக்கொண்டாள். மயக்கத்திற்கு, காரணம் தேடியபோது, ரத்தம் கலந்த இருந்ததை போட்டோ எடுத்து வைத்திருந்ததை, நர்ஸ்  காட்ட, அவருக்கு பாவம் நிலைமையின் தீவிரம் தெரியாமல், மறுநாள் டாக்டர் விசாரிக்கும் போது காட்டலாம் என்று இருக்க,இப்பொது ஏற்பட்ட இந்த திருப்பத்தில்   அதை காட்ட, நல்ல வேலை, காரணம் புரிப்பட்டது 

   அதற்கு பின்னான பொழுதுகளில், மறுபடி ஓடி வந்த கணவரையும், கணேசையும், கண்ணாடிக்கு அந்த பக்கம் கண்டாள்.
 
அவர் மனதில் தோன்றிய சந்தேகம் தான் மகனை அனுப்பி அவள் உயிரை காப்பாற்றியது.
அதற்கு பின்னே , இழந்த ரத்தத்தை ஏற்றி, புண் ஆற்றி, மேக்கொண்டு புண் வராமல் இருக்க மருந்தும்  கொடுத்தது தனி கதை.

Advertisement

செத்து செத்து பிழைப்பது போல் இருந்தது அவள் கதை, இருந்தும் பிழைத்ததை கொண்டாட தான் வேண்டும், என்ற மன நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.
 
மறுநாள் காலையில் பார்க்க வந்த கணவர், அவள் நெற்றியில் விபதி பூசினார்.

 அவர்கள் வீட்டுருக்கே இருந்த சந்திரா மௌலீஸ்வர கோயிலை மூன்று முறை வலம் வந்து  வேண்டிக்கொண்டால் தீராத வியாதி தீரும், என்ற விஷயம் அவர் கண்ணில் பட, அதை செய்துவிட்டு வந்து, அந்த விபூதியை தான் பூசி விட்டார், டாக்டர்  என்பதை தாண்டிய  நம்பிக்கையை  கடவுள் தானே தருவார்.
டிசம்பர் ஓடி மறைந்து, கடைசி நாள் அவளுக்கு சற்று நம்பிக்கையை  தந்தது,  ஹாஸ்பிடலும் புது வருட பிறப்பை கொண்டாடியது, அவளுக்கு ஒரு சிறு  துண்டு கேக் கொண்டு வந்த நர்ஸ் கண்ணில் நேசம் இருந்தது.

அவள் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்த போதும், தொடர்ந்து வார்டுக்கு மாற்றாமல், அங்கேயே வைத்து அடுத்த  மருந்தை, அதாவது இரண்டாவது டோஸ் மருந்தை ஏற்றி, மெல்ல தேறி, வார்டு வந்து சேர ,  இரவில் அவள் துணைக்கு கணவர் படுக்க முடியாமல் அவருக்கு லேசாக தும்மல் இருக்க, இளைய மகன் துணைக்கு வந்தான்   இரவு பூராவும் ஒரு சின்ன சத்தத்திற்கு கூட என்ன என்ன வேண்டும் என்று அவன் விசாரிக்க, அவன் கவனிப்பில் அவளுக்கு அழுகை வந்தது. இரவு முழுவதும் கண் துஞ்சாமல் அவளை காவல் காத்த மகன் விடியும் வேளையில் சற்று கண் அசர,  எந்த சத்தமும் போடாது, அவனை உறங்க விட அவள் பெரு முயற்சி எடுத்தாள்.

   பின்பு இரண்டு மூன்று  நாட்களில்  வீடு வந்து சேர்ந்து விட, இளையவன்  லீவு முடிந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. 
இந்த அளவில் அவள் தேறி வந்து, வீடும் வந்துவிட்டதே சந்தோசம் என்ற நிறைவுடன் அவன் கிளம்பினான்.ஆனால் அப்படியே நிம்மதியாக செல்லவில்லை அவள் காலம்.
 
    
 கொஞ்ச காலம் பிரின்ட்ஸ் கூட சனிக்கிழமை இரவு, அல்லது அதற்கு அடுத்த நாள் பூராவும், பிளான் செய்து, பீச், தீம் பார்க், பசங்களுடனும், குட்டிஸ் இல்லாமல் படம், மற்றும் நாடகங்கள் பார்ப்பது என்று சில காலங்கள் சுவாரிசியமாக கழிந்தது.அதான் உச்சக்கட்டமாக, அப்போது தான் புதிதாக திறந்திருந்த, ‘டிரைவ் இன் தியேட்டர்’ சென்று பார்த்தனர்.
இப்போது போல் உணவு எடுத்து செல்ல கூடாது என்ற கட்டுப்பாடு அப்போது இல்லை என்பதால், நிறைய கொரிக்க, குடிக்க எடுத்துக்கொண்டு, அத்துடன் பெரிய போர்வைகளையும் எடுத்து கொண்டனர்.

மிக நூதனமான அனுபவமாக அது இருந்தது. பக்கம் பக்கமாக, கார் பார்க் செய்து, அதில் உட்கார்ந்தபடி , திறந்த வெளியில் இருந்த பெரிய திரையில் படம் பார்த்தார்கள்.சற்று நேரம் கழித்து, காருக்கு முன்னே போர்வை விரித்து அதில் ஒன்றாக உட்கார்ந்து, கொரித்தபடி படத்தை ரசித்தார்கள். பசங்களுக்கு அங்கே ஒரு ஓரமாய் விளையாட சறுக்கு மரம் போன்றவை இருக்க, அவர்களுக்கும் ஆனந்தமே.
மெல்ல ஆளாளுக்கு ஒரு வேலை என்று கூடி களிப்பது குறைந்து மறைந்தது.
 
எதிர்பார்க்காமல் சிங்கப்பூர்  சென்று பார்க்க வாய்ப்பு வந்தது.
அங்கே ஒரு கான்பெரன்ஸ் நடக்க, அவள் கணவன் அதில் ஒரு பேப்பர் பிரசென்ட் செய்ய, குடும்பமாக கிளம்பினார்கள்
நான்கே வயது ஆன மகனை அழைத்து செல்வது, ஓரு பக்கம் கொஞ்சம் கவலையாக இருக்க, மாமனார் தான், சில காலம் முன் அங்கே சென்றிருந்த அனுபவத்தை வைத்து, அ தைரியம்  தந்து அனுப்பி வைத்தார்.
அவர்கள் கூடவே, மற்றொரு டாக்டர் நண்பர் அவர் மனைவியுடன் வர, அவளுக்கு தெரிந்த துணை ஒன்று கிடைத்தது.
இவர்கள் சென்று தங்கியதும், மற்றும் ஒரு டாக்டர் அங்கே வைத்திருந்த  கெஸ்ட் ஹௌசில்.
கட்சிதமாக, ஒரு சின்ன நீச்சல் குளத்துடன், அருமையாக இருந்தது வீடு, கிட்சேன் ஜன்னல் வழியே கார் பார்க் பார்க்க முடிந்த அந்த டிசைன் அவளுக்கு பிடித்து போனது.வீடு மொத்தமும் இஷ்டம் போல் இருக்க சொல்லி, ஹவுஸ் கீப்பர், சாவி தந்து நகர, அடுத்த ஒரு வாரதிற்கு அது அவர்கள் மனதுக்கு நெருக்கமான வீடு ஆனது.
காலையில் குட்டி கிட்சேனில் காபி, டோஸ்ட் முடித்து, கான்பிரன்ஸ் நடக்கும், ஹோட்டல் சென்று அவன் அதில் கலந்து கொள்ள, இவர்கள் மூவரும், அங்கே இருந்த கடைகளை சுற்றி வந்தனர்.
பொடியனுக்கு ஏறும் எஸ்கலேட்டரில் ஏறி, இறங்கும் எஸ்கலேட்டரில் இறங்குவதில், பொழுது போனது.   மதியத்திற்கு மேல் கணவர்கள் வந்து விட, சேர்ந்து ஊர் சுற்றி பார்த்தார்கள், பிரசித்தி பெற்ற சிங்கப்பூர்  வைல்ட் லைப் ஜூ, மற்றும் போர்ட்ஸ் பார்க் பார்த்து, உறங்குடாங் பின்னணியில் இருக்க , போட்டோ எடுத்து கொண்டனர்.

அடுத்த நாள் சென்டோசா ஐ லேண்ட், சென்று சுத்தி பார்த்துவிட்டு, சீ அக்வாரியத்தில்  வால்ரஸ் (walrus)  காட்டிய வித்தைகளை பார்த்தனர்.

முதல் முதலில், மெட்ரோ ட்ரெயின் சென்றதும் அங்குதான்.
கடைசி இரண்டு நாட்கள், ஷாப்பிங்கில் கழிய, பெரிய பெரிய பைகளுடன், டாக்ஸி க்கு காத்து நின்றபோது ஒரு முதியவர் இவை அனைத்தும், கொஞ்ச நாட்களில் இந்தியாவில் கிடைக்கும் என்று கூற, காலம் அதை உண்மை என்று நிரூபித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!