Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 10 1

நீங்காத  நினைவு  நீ

  அத்தியாயம்  -10



Advertisement

   ஆண்டவர் கனிக்கு   நன்றாக விடிந்தும்   விழிப்பு வரவில்லை.

Advertisement

எப்பொழுதும்  சீக்கிரம் எழுந்து சாக்கிங் செல்பவன்  இன்று விடிந்து வெகுநேரமாகியும் எழுந்துக்கொள்ளாமல்  திவ்யா அரிய நாச்சியை அணைத்துக்கொண்டு  தூங்கிக்கொண்டு இருந்தான்..

Advertisement

முதலில்  விழித்தது  திவ்யா தான். கண் விழித்து  பார்த்தவளின் அருகில்  ஆண்டவர்  கனியின்  கழுத்து தெரிந்தது.

Advertisement

இரவு  நடந்ததை நினைத்து பார்த்தவளுக்கு  வெட்கமாக இருக்க. மெல்ல  நெழிந்தவளின் அசைவு  தெரிய  ஆண்டவர்  கனிக்கு விழித்து  வந்து திவ்யாவின்  முகம் பார்க்க..

அவளோ  அவனுக்கு   முகம் காட்டாமல்.. அவனோடு இன்னும் ஒன்ற,.

“ஏய்  பஞ்சு மிட்டாய்” என்றான் அவளை  ஆசையாய்.

திவ்யா  நிமிர்ந்து  ஆண்டவர்கனியை  பார்க்க. பார்த்தவளின்  இதழ் ஒற்றி எடுத்தவன். “பஞ்சு  மிட்டாய்  மாதிரி சாப்டா இருக்கடி. நான் தொட்டாவே  உன் முகமெல்லாம்  சிவக்குது பஞ்சுமிட்டாய்” என்றவன். திவ்யா அரிய நாச்சியின் கன்னத்தில்  கிள்ளி வாய்யில் போடுவது போல் செய்கை செய்தவனை முறைத்து பார்த்தவள்.

எழுந்து கொள்ள பார்க்க..

எழுந்து  கொள்ள பார்த்தவளை, பார்த்து சிரித்தவன்.

“எழுந்து போடி பார்க்கலாம்”  என்றவனை முறைத்தவள். “என் ட்ரெஸ்  எங்கே”  என்றாள்..

“அது எந்த  முலையில் கிடக்குதோ”.. என்றவன். அவளை அணைக்க வர..

“அடிச்சிருவேன் போங்க என்றவள். அவளின் கழுத்தை தொட்டு பார்க்க அவளின் தாலி ஜெயில் கூட காணாமல் இருக்க.

“என் தாலி ஜெயின்”  என்று பதறி தேடியவளிடம்”ஓய்  தாலி இங்கே இருக்கு”  என்று அவனின் தலையனை அடியில் இருந்த தாலியை எடுத்து அவளின் கழுத்தில் போட்டவன்..

“தாலி கட்டுன புருஷனை திட்டுறது. ஆனா தாலி மட்டும் வேணும்”…

“ஏன் தாலியை கலட்டுனீங்க” என்றவளின்..

 காதில் “அது குத்துதடி” என்று ஏதோ சொல்ல..

“சீ,சீ  எப்படி பேசுறீங்க, பாவம்.. கை வலிக்குதுன்னு  ஹெல்ப் பண்ண வந்தா.  என்ன பண்ணி வச்சியிருக்கீங்க என்னை”என்றாள்..

“என்ன  பண்ணேன்?.. என்  பொண்டாட்டியை கொஞ்சினேன், ஏன் என் பொண்டாட்டியை நான் கொஞ்ச  எனக்கு உரிமையில்லையா?.. என்றவனை..

திவ்யா முறைத்து பார்க்க..”அப்படி பாக்காத காலையில் ஒரு சோ முடிச்சிட்டு தான் விடுவேன் பரவாயில்லையா”… என்றவனை..

“ஐயா சாமி ஆளை விடுங்க, முதலில்,”  என்றவள். “நீங்க போய் குளிங்க  நல்லா விடுஞ்சிருச்சு”.. என்றவளை…

 “சரி” என்றவன்.. திவ்யாவை அணைத்து “ஏதாவது கஷ்டமா இருந்ததா,   உனக்கு” என்றான்..

அவள் அவன் முகம் பார்த்து “இல்லை” என்று தலையாட்ட..

“தாங்யூ பொண்டாட்டி”  என்று அவளின் நெத்தி முட்டி முத்தம் வைத்து,, “நைட்டு வந்து உன் அத்தான்  கண்டிநீயூ  பண்ணுறேன்” என்று அவளை கொஞ்சி  சிவக்க வைத்து விட்டே குளிக்க சென்றான்..

அப்பாடா போய்ட்டாரு என்றவள்.. பெட்சீட்டால்  தன்னை சுற்றி கொண்டு  அவளின் ஆடைகள் கீழே  அங்கொன்று, இங்கொன்றாக கிடக்க ஆடைகளை எடுத்தவள் அழுக்கு கூடையில் போட்டு விட்டு. பக்கத்தில் உள்ள அடுத்த அறைக்கு சென்று குளித்து விட்டு வர..

ஆண்டவர் கனிம் குளித்து  விட்டு வந்து உடை மாற்றி கொண்டு இருந்தான்..

திவ்யா அரிய நாச்சியை பார்த்தவன். “நாச்சியா”  என்று  அருகில் அழைக்க.

மெல்ல அவனிடம் சென்றவளை..

இடுப்பை  பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டவன். “வேலை  அதிகமாக  இருக்கு  நைட்டு தான் வருவேன், சரியா பகல்ல தூங்கி ரெஸ்ட் எடு. எதாவது  வேணுமுன்னா கால் பண்ணு”  என்றவன்.. நாச்சியாவின் இதழ்ழோடு இதழ் ஒற்றி எடுத்தவன். கீழே செல்ல…

அனைவரும் அவர், அவர் வேலையை பார்க்க சென்று இருந்தனர்.

யோகா காலையில் இருந்தே  ஆண்டவர்கனியின்  ரூம் கதவை பார்த்து கொண்டு  இருந்தவர். மனதில் சந்தோஷ பட்டு, சிரித்துக்கொண்டு இருந்தார்..

தன் அக்காவிடம்  சென்று “காலை பத்து மணி ஆகுது இன்னும் கனி ரூம்பை விட்டு வெளியில் வரலக்கா”  என்று  சொல்லி சந்தோஷபட…

“அப்படியா”  என்ற லட்சுமிக்கும் நல்லது நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டார்..

ஆண்டவர்கனிக்கு  ரூம்பை விட்டு  வரவே வெட்கமாக  இருந்தது.. அவன் எப்போழுதும்  10  மணிக்கு எழுந்தது இல்லை. அதிகாலையிலே  சீக்கிரம் எழுந்து கொள்ளும் பழக்கம்  அவனுடையது. தினமும் காலையில் வாக்கிங், ரன்னிங் என்று ஓடிவிட்டு தான் வருவான்..

 இன்று இவ்வளவு  தாமதமாக  எழ. அனைவரும் என்ன  நினைப்பார்கள் என்று  நினைத்து கொண்டே கீழே வர.

நல்லவேளை வீட்டின் ஹாலில் யாரும் இல்லை. அப்பாடா என்றவன். கிச்சனின் பார்க்க  யோகா தான்  ஏதோ வேலை பார்த்து க்கொண்டு  இருக்க..

ஆண்டவர் கனி ஹாலில் இருந்தபடியே “சித்தி  நான் கடைக்கு போறேன்”   என்று சொல்லி விட்டு, யோகாவின் முகத்தை பார்க்காமல் செல்ல..

“கனி  சாப்பிட்டு போப்பா”  என்று  யோகா சொல்வதற்குள் அவன் வாசல் வரை சென்று இருந்தான்…

கிச்சனியில் இருந்தா  யோகா வேகமாக வந்து “ஐயா  கனி சாப்பிட்டு போ”  என்க..

யோகாவின் முகம் பாராதவன்.. “இல்லை சித்தி டைம் ஆச்சு”  என்றவனை…

“வா வந்து சாப்பிட்டு போ  பத்து நிமிசம் ஆகுமா” என்றவர்..

 அவனின் கையைபிடித்து இழுத்து வந்து உணவை உண்ண   வைத்தே  கடைக்கு  அனுப்பினார்..

திவ்யா கீழே வர. அவளுக்கு  யோகாவிடம் பேசவே  கூச்சமாக இருந்தது. பசிவேற  பயங்கரமாக எடுக்க.. தலையை குனிந்து   வெட்கப்பட்டு  கொண்டே வரும்  திவ்யா அரியா நாச்சியை பார்த்த யோகா..

“சாப்பிடு திவ்யா” என்று டைன்னிங்  டேபளில் உணவு அனைத்தையுமே எடுத்து   கொண்டு வந்து  வைத்தவர்…

திவ்யாவை  சாப்பிட சொல்ல.. அவளோ குனிந்து கொண்டு “சாரி யோகா மா லேட்டா எழுந்து வந்தேன்” என்றாள்..

  யோகா   திவ்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வைக்க..”யோகாம்மா”  என்று ஏதோ சொல்ல வர..

“நீ ஒன்னும் சொல்ல  வேண்டாம், இன்னும் பத்து மாசத்துல ஒரு பேரன்னோ, பேத்தியோ  பெத்துக்கொடு  போதும்”  என்று சொல்லி திவ்யாவை அணைத்துக்கொண்டார்…

திவ்யா உண்டு முடித்து  லட்சுமியின் அறைக்கு செல்ல..

“வாடா  திவ்யா” என்று மருமகளை அழைத்த லட்சுமி  பக்கத்தில் உட்காரவைத்தவர். அவளின் முகத்தை பார்க்க..

அவளோ வெட்கப்பட்டு சிரித்து “என்ன அத்தை அப்படி பார்க்குறீங்க”  என்றாள்..

“ஒன்னுமில்லை”  என்றவர்.. திவ்யா அரிய நாச்சிக்கு தன் கை கொண்டு அவள் முகத்துக்கு திருஷ்டி எடுத்தவர். “நல்லா இருக்கனும்  நீயும்,  என் பிள்ளை ஆண்டவர் கனியும்” என்றவர். “நீங்க இரண்டு  பேரும் வாழ தொடங்கிட்டீங்களா” என்றார்..

திவ்யா குனிந்து கொண்டே  “உம்”  என்று தலையாட்ட.

அவளின் கன்னத்தை  தொட்டு முத்தமிட்டவர், யோகாவை அழைத்து ஏதாவது இனிப்பு  இன்னைக்கு செய் என்றார்  மருமகளை பார்த்துக்கொண்டே..

யோகா  ஏற்கனவே பால் பாயசம்  செய்து  கொண்டு இருந்தவர். லட்சுமிக்கும், திவ்யாவுக்கும்  பாயசத்தை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க..

“பாத்தீயா  என் தங்கச்சியை, நான் மனசுல  நினைக்குறத  செய்யுற”  என்றவர். மருமகளுக்கு பால் பாயசத்தை ஊட்டி விட. “உங்கள  மாதிரி  இரண்டு அத்தை  கிடைக்க. நான்  ரொம்ப குடுத்து வச்சு   இருக்கனும் அத்தை”  என்றவளிடம்..

 “நாங்களும்  ரொம்ப குடுத்து வச்சு இருக்கோம். இப்படி தங்கமான மருமகள் எங்களுக்கு  கிடைக்க”.. என்று யோகா சொல்ல.. பெண்கள் அனைவரும் சந்தோசமாக  இருக்க…

 அனைவரும் சேர்ந்து மதிய உணவை  தடபுடலாக  சமைத்தனர்…

பார்கவி, பெரியசாமி   கல்யாணத்துக்கு  இன்னும் சில  நாட்களே இருக்க..

 யோகாவும், லட்சுமியும்  தினமும்  கணவர்களோடு  கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க  கிளம்பி விட.. திவ்யா தான் வீட்டை பார்த்துக்கொண்டாள்..

ஆண்டவர் கனி தினமும் மதியம்  உணவு உண்ண  வீட்டிற்கு வருபவன்.. இரண்டு மணிநேரம் வீட்டில் இருந்து திவ்யாவை கொஞ்சிவிட்டே  சொல்வான்..

யோகா  ஆண்டவர்கனியிடம்  “நீயும், பார்கவியும்  எங்கே யாவது  ஹனிமூன் சென்று விட்டு வாருங்கள்”  என்று கூற…

“கல்யாணம் வேலை  இருக்கு  சித்தி, கல்யாணம் முடியட்டும் கூட்டிட்டு போறேன்”  என்றான்…

திவ்யா மிகவும் சந்தோஷமாக  இருந்தாள்.. எப்பொழுதும் வீட்டிற்க்கு  நிறைய பேர் வந்து போக இருக்க.. அனைவரிடமும் பேசுவது  காபி, பலகாரம்  கொடுப்பது  என்று நாட்கள் செல்ல..

யோகாவும், லட்சுமியும் எதை செய்தாலும், என் மருமகள் திவ்யா செய்வா, என் மருமகளுக்கு தான் முதல்  உரிமை என்று  திவ்யாவுக்கு  அத்தனை உரிமையை, பொறுப்பையும் தர..

திவ்யாவுக்கு  பெருமையாக இருந்தது.. வெளியில் உள்ள அனைவரும்  ஆண்டவர்கனியின்  மனைவி  என்று மரியாதையாக  பேசி பழக..

திவ்யா   தினமும்  இரவில்  கணவனை  அணைத்துக்கொண்டு  நடந்ததை  சொல்லி  சந்தோஷ படுவாள்..

ஆண்டவர்கனி “இதில்   என்ன  இருக்கு  பொண்டாட்டி,,. என் பொண்டாட்டிக்கு  குடுக்குற  மரியாதை எல்லாம்  குடுத்துதான்.,

ஆகனும் என்று சொல்ல..

கணவனை ஆசையாக  பார்த்தவளை..”என்னவென்று கேட்க..

“நமக்கு இது மாதிரி  பத்திரைக்கை  அடிச்சு  எல்லோரும்  சேர்ந்து  நம்ம  கல்யாணம் நடந்து இருந்த  சந்தோசமா இருந்து  இருக்குமுல”  என்றவனை.

“சாரிடா”  என்றான்..

“இல்லை”  என்றவளின் கண்கலங்கி இருக்க..

“என்னாச்சும்மா ஏன்  நாச்சியா  கண்கலங்குற”  என்றான்..

“அம்மா, அப்பா  ஞாபகமா  இருக்கு” என்றவளை. அணைத்துக்கொண்டவன்  “கல்யாணம்  முடியட்டும் நாச்சியா, உன்னை  உன்  அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு  போறேன்  சரியா”  என்றான்..

அவளோ  “வேண்டாம்  அம்மா  கோபமா  இருக்காங்க  கொஞ்சம்  நாள்  ஆகட்டும்”என்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!