Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு

Vaalibaththai Kolluthadi Vannanilavu 1

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு அத்தியாயம் -1

“பகலவன்” தன் வேலையை சிறப்பாய் செய்து முடித்து ஓய்வெடுத்து கொள்ளலாம் என்று நினைத்த நேரம் மதிவதனி தன்னுடைய கடைசி தேர்வினை முடித்துவிட்டு உல்லாசமாக ஆடி பாடிக்கொண்டே வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.

அந்த நேரம் பார்த்து அவளுடைய தோழி பரமேஸ்வரி என்னடி வதனி கடைசி பரீட்சை முடிஞ்சிடுச்சு. உங்க பெரிப்பா வீட்டுக்கு போவியா இல்ல திருவிழா வருதுன்னு இங்கேயே இருப்பியா?



Advertisement

“ம்ம்ம்ம்…” சிறிது நேரம் யோசித்தவலாக இல்லல்ல கண்டிப்பா நான் ஊருக்கு போயிடுவேன் பெரிப்பா இந்நேரம் கண்டிப்பா வீட்டுக்கு வந்திருப்பார் காலையிலேயே துணிமணி எல்லாம் எடுத்து வச்சுட்டேன் தெரியுமா? பரமு

“ப்ச்” போடி லூசு, நீ ஏன்டி இப்படி இருக்க உன்னய நம்ப பிரண்ட்ஸ் எல்லாரும் ஒவ்வொரு லீவுலையும் ரொம்ப மிஸ் பன்றோம் தெரியுமா? நீ என்னனா எப்ப பாத்தாலும் உங்க பெரிப்பா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்க.

இந்த ஒரு முறை மட்டும் இங்கே இரு வதனி, திருவிழா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பண்றாங்க ரொம்ப ஜாலியா இருக்கும் டி, குட்டி குட்டி பசங்களாம் வேஷம் போடுவாங்கடி அதல நாமளும் வேஷம் போட்டா சரித்திரத்துல நம்ம பேரும் வருமில்ல.

Advertisement

பெருமூச்சு எடுத்தவள் “உட்ச்”…. கொட்டிக்கொண்டே ஐயோ, தோடா அம்மணிக்கு ஆசைய பாரு அவன் அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு புதுசு புதுசா கண்டுபிடிச்சு சரித்திரத்துல பேர் பதிகிறாங்கன்னா, உனக்கு இது மாதிரி நோகாம நோன்பு கும்பிட்டு வேஷம் போடுறதுனால சரித்திரத்தில பேரு பதிச்சிடுவாங்களா?

Advertisement

மகாத்மா காந்திஜி, நேரு மாமா கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோஸ் இது மாதிரி பல பேரு சும்மா ஒன்னும் சரித்திரத்துல பேர் வாங்கிட்டு வந்துடல அவங்க இந்த நாட்டுக்காக தான் சொந்த குடும்பத்த கூட ஒதுக்கி வச்சிட்டு தான் போராடுனாங்க. அது மட்டும் இல்லாம உயிரையும் கொடுத்தாங்க. அதுக்காக தான் அவங்க பேரை இன்னைக்கும் நாம ரொம்ப பெருமையா பேசிக்கிட்டு இருக்கோம்.

புத்தகத்துலயும் அவங்கள பத்தி பெருமையா படிக்கிறோமே உனக்கு தெரியாததா என்ன அது மாதிரி ஏதாவது சாதிக்கணும்ன்றது தான் என்னோட ஆசையே. அத விட்டுட்டு திருவிழா மேக்கப் போடணும் வேஷம் போடணும்னு ஏதாவது புலம்பிக்கிட்டு வராத வருஷம் கூட கூட வயசும் கூடிக்கிட்டே போகுது நாம சின்ன பிள்ளைங்க இல்ல புரிஞ்சுதா பரமு.

எம்மா தாயே நீ சொன்னது நல்லாவே புரிஞ்சது தெரியாம உன்ன திருவிழாக்கு இருடின்னு சொல்லிட்டேன் நீ உங்க பெரிப்பா வீட்டுக்கே கிளம்பிடு உனக்கு ஒரு கும்புடு உன்னோட அட்வைஸ்க்கு ஒரு கும்புடோ கும்புடு.

Advertisement

நீ சொன்னாலும் சொல்லலனாலும் கண்டிப்பா நான் எங்க பெரியப்பா வீட்டுக்கு கிளம்ப தான் போறேன் இங்க இருந்து என் நேரத்தை செலவழிக்க விரும்பல அங்க போனா மட்டும்தான் என்னுடைய லட்சியத்தை நான் அடைய முடியும்.

என்று சொன்னவளுக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது தன்னுடைய அண்ணன் செய்த அத்தகைய கொடூர செயல்.

****************

இவ்வளவு நேரம் தோழிங்க ரெண்டு பேரும் பேசினதை கேட்டீங்க இப்ப வாங்க மதிவதனி குடும்பத்தை பத்தி கொஞ்சம் பார்த்துடலாம்.

மதிவதனி பெயருக்கு ஏத்தாப்ல ரொம்ப அறிவான பொண்ணு எந்த விஷயத்தையும் ஒரு முறை சொன்னாலே கப்புன்னு புடிச்சுக்குற திறமை அவகிட்ட இருக்கு. இவங்க குடும்பத்துல இவதான் கடைசி பொண்ணு.

ஆஸ்திக்கு ஒன்னு அந்தஸ்த்துக்கு ஒன்னுன்னு பழங்காலத்தில் சொல்ற மாதிரி பொண்ணொன்னு ஆண் ஒண்ணு பெத்துக்கிட்டாங்க நம்ம மதிவதனியோட அம்மா தங்கம்மா.

மூத்தவ பேரு மதியழகி இவளுக்கு பேர்ல மட்டும் தான் மதி இருக்கு. ஓரளவுக்கு தான் படிப்பு வாசம் இருக்கும். ஆனா அழகு ஏகபோகமா இருக்கு அதனாலேயே என்னவோ ஊர்ல இருக்கிற பாதி பசங்க இவ பின்னாடி தான் திரிவாங்க. இதுக்கு பயந்து வல்லரசு மனைவி தங்கம்மா மூத்த மகள தன்னுடைய அக்கா ஊருக்கு அனுப்பி படிக்க வெக்க ஆரம்பிச்சா.

இந்த தங்கம்மா பேருக்கு ஏதாப்ல தங்கமான குணம் கொண்டவங்க தான். உலகத்துல இருக்கற எல்லா அம்மாகளும் இப்படித்தானே. இதல என்ன பிரமாதம்ன்னு நினைப்பிங்க.

பெத்த புள்ளைங்களை யாரும் எதுவும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக்கூடாத அளவுக்கு ரொம்ப கராறாக இருப்பாங்க தங்கம்மா.

என்னதான் மூத்தவள ஊருக்கு அனுப்பினாலும் இரண்டாவது இருக்கிறானே சரியான வாலு அவன் பேரோ மதிவாணன்.

ஊர்ல எல்லார் கிட்டயும் எதாவது பேசியோ இல்லனா குறும்புதனம் பன்னிட்டோ வம்பிலுக்கறது தான் இவனோட வேலையே.

“ஊட்டுக்கு அடங்காதது ஊருக்காவது அடங்கும்ன்னு சொல்லுவாங்க ஆனா இவன் ரெண்டுத்துக்குமே அடங்க மாட்டான் அப்படி ஒரு குணம் கொண்டவன்.

இப்படி பட்டவன் சிறுவயதில் செய்த செயலால் குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிட்டது.

வல்லரசு மனம் தாங்காமல் பிறந்து வளர்ந்து கஷ்ட பட்டு கவர்மென்ட் உத்தியோகம் வாங்கி மாமன் மகளை அடம் பிடிச்சி தன்னுடைய சித்தாவின் உதவியால் திருமணம் முடிஞ்சி மூன்று மணிப்போன்ற பிள்ளைகளை பெற்றும் நிம்மதி இல்லாமல் செய்யும் வேலைக்கு ஆப்பு வந்து விடுமோங்கற பயத்துல வாழ்ந்துட்டு வராங்க நம்ப வல்லரசு துணை ஆய்வாளர் (Sub inspector).

ஆமாங்க சரியாக பதினஞ்சி வருசத்துக்கு முன்னாடி………

மரங்கள் தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறு இடம் தேடும் அளவுக்கு காத்து மழை ஓயாமல் பெய்து கொண்டிருக்க, ஓலையால் கட்டப்பட்ட குடிசை எல்லாம் காற்றில் பறந்து மேகத்தையும் மலைகளையும் தொட்டு கொண்டிருக்க வீட்டில் பிறந்த கடைசி மகனின் திருமணத்துக்கு போடப்பட்ட அலங்கார பந்தல் மட்டும் தாங்கி பிடித்து நிற்குமா என்ன?

விட்டிள் மூத்தவரின் குரல் இடிபோல கேட்டது.

அடியே அமராவதி இங்க இருக்கற லட்டு எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைடி அடிக்கிற பேய் காத்துக்கு மழை இன்னிக்கி உடாது போலிருக்கே.
பாத்தாலும் பாத்தாளுங்க இப்படி ஒரு பொண்ண பாத்துருக்காங்க. வூட்டுக்கு வாரதுக்கு முன்னாடியே இப்படி ஒரு சகுனமா இருக்கு என்றபடி கையில் இருந்த சுள்ளாணியில் கொட்டை பாக்கினை இடித்து கொண்டிருந்தார் அங்கம்மா பாட்டி.

இவர்களின் முனுமுனுப்பை கேட்ட அங்கம்மாவின் மகன் ஜோதிலிங்கம் அம்மோய் கொஞ்சம் வாய மூடிக்கிட்டு கிடப்பியாம். இல்லனா இந்த ஜென்மத்துல உம்ம பேரனுக்கு கண்ணாலம்கறதே நடக்காது சொல்லிபுட்டேன்.

ங்கும்.. ங்கும்… நான் அப்படி என்னத்த சொல்லிபுட்டேன்னு வயசானவள இப்படி பாடா படுத்தாரானுவளே இந்த பாவி பயலுக. இதே எம்ம ராசா என் சாமி மட்டும் ஊசுரோட இருந்திருந்தா இப்படிலா பேச விட்டுருப்பாரா.

இவரின் ஒப்பாரியை கேட்டு அங்கே லட்டுக்களை அண்டாவினுள் அடுக்கி கொண்டிருந்த அமராவதி இங்க பாருங்க அத்தை இன்னாருக்கு இன்னாருன்னு அந்த ஈசன் என்ன எழுதனானோ அதான் நடக்குது. உங்களுக்கு மட்டும் இல்ல நம்ப குடும்பத்துல யாருக்கும் இந்த புள்ளைய புடிக்கல தான்.

கட்டிக்கப்போறவன் 55 பொண்ண பாத்துட்டு 56வதா ஒருத்திய பார்த்தான் கட்டுனா இவள தான் கட்டுவேன். இல்லனா சன்னியாசம் போறேன்னு மெரட்டறான். இப்பவே வயசு 33 தாண்டிடுச்சி புரிஞ்சிக்கோங்க அத்தை.

என் மவ வயித்துல பொறந்த பொண்ண என்னோட பேத்திய கட்டிட்டு வரதுல எங்களுக்கு மட்டும் என்ன கசக்கவா போகுது சொல்லுங்க. எல்லாம் தெரிஞ்ச நீங்கலே விதி இதுதான்னு தூக்கி போட்டுட்டு கல்யாண வேலைய பாருங்கன்னா புலம்பி தள்ளுறீங்களே நாயமா இருக்கா?

ம்ம்ம்ம்ம்…… என்றவர் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு, ஆக்கம் கெட்ட கிறுக்கி ஆதங்கத்துல பேசிபுட்ட எதா எடுத்து வச்ச லட்டுல ரெண்டு குடு எனக்கு எப்படி இருக்குதுன்னு பாக்கற.

மாமியார் லட்டு கேட்ட உடனே மருமகளின் பார்வை தன் கணவனை தான் தேடியது.

பாத்தது போதும் என்றவர் மருமகளின் கையில் இருந்த லட்டுவை வாங்கி கொண்டு இருந்த இடம் தெரியாமல் அவருடைய பிரதான இடமான முற்றத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு லட்டினை வாயில் போட்டு பொக்கை வாயில் அசைபோட்டு கொண்டிருந்த நேரம் பார்த்து தோட்டதுக்கு போன முருகன் (மாப்பிளை) கைகால்களை அலம்பிக்கொண்டு உள்ளே வந்தான்.

தன் அம்மாச்சியின் திருட்டுத்தனத்தை உணர்ந்து கொண்ட முருகன் உன்னைய பாத்தா ஏதோ திருட்டுத்தனம் நடக்கிற மாதிரியே இருக்கு மறைக்காம சொல்லிடு அம்மாச்சி நானா கண்டுபிடிச்சேன் அவ்வளவுதான்.

அட போடா கிறுக்கு பயலே நான் என்னத்த மறச்சு வைக்க போறேன் ஏதோ உன் கல்யாணத்துக்கு செஞ்ச லட்டு இருந்துச்சுல்ல அத கொஞ்சமா உங்கம்மா அண்டாவுல அடுக்கி வச்ச கொஞ்சம் தூளகிடுச்சு அத்தை சாப்டாறீங்கலான்னு கேட்டா,

ம்ம்ம்ம்…. அப்படியா?

ஆமாடா பேராண்டி நானும் சரின்னு ஒரப்பெல்லாம் சரியா இருக்கான்னு பாக்கன்னுமில்ல வீட்டுக்கு மூத்தவ நான் தானே.

ம்….. ஆமாமா நீங்க தான் மூத்தவங்க.

என்றவன் புன்சிரிப்போடு அம்மாச்சியின் அருகில் சென்று கிசுகிசுப்பாக நீங்களா பெரியவங்க இல்ல அம்மாச்சி இப்ப நடிக்கிற நடிகை குஸ்பு மாதிரி அழகா கும்முனு பம்முனு இருக்கீங்களே என்றவன் அடுத்த நொடி அவனின் தனியறைக்குள் புகுந்துகொண்டான்.

ஆனால் அவனுக்குள் பல விதமான யோசனைகள் வந்து வந்து போனது. விடிந்தால் திருமணம் இன்னமும் அம்மாச்சி நம்ப கல்யாணத்துல விருப்பமில்லாமா இருக்கே என்ற வேதனையுடன் வருங்கால மனைவியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு மெத்தை மீது அமர்ந்தான்.

பேரனின் மனது புரியாதவறா அங்கம்மா பாட்டி இது தான் உனக்கு விதின்னா நான் தடுக்க மாட்டேன் தங்கப்புள்ள என்றவர் மீதமிருந்த லட்டினை உண்டுகொண்டிருந்தார்.

நேரம் செல்ல செல்ல வீடு முழுவதும் உறவினர் பட்டாளம் நிறந்துவிட்டது.
பெரியமகள் தங்கமலை மாப்பிளை பழனியப்பா வர கூடவே பேரன் பேத்தியான பிரேமாவதி, திலகவதி, குமரன் இவர்களும் வந்திருந்தனார்.

சின்ன மகள் தங்கம்மா ஊரோடு கட்டிக்கொடுத்த காரணத்தால் காலையிலிருந்து வீட்டில் அம்மாவுக்கும் முதல் தம்பி மனைவி சிவகாமிக்கு ஒத்தாசையாக இருக்கிறாள்.

இப்படிப்பட்ட தங்கம்மா தொலைபேசியில் கணவனிடம் காலையிலிருந்து ஒரே புலம்பல், மணிக்கு ஒரு முறை அழைத்து விட்டாள் எப்ப வருவீங்க மாமான்னு கேட்டு கேட்டு அந்த பக்கம் வல்லரசுவுக்கு காதில் இரத்தம் வராத குறை தான்.

அவன் மட்டும் என்ன செய்வான் அவனோட வேலை அப்படி இருந்தாலும் தங்கம்மா ஓய்வதாக இல்லை.

இன்னும் எத்தன நாளக்கிதான் இந்த மாதிரியான கத சொல்றிங்கன்னு பாக்கறேன். எல்லாரும் ஜோடி ஜோடியா அவங்கவங்க புருஷன் கூட தம்பதி சகிதமா வராங்க நீங்க என்னனா வேல வேலன்னு வேலைய கட்டிட்டு ஜாலியா சுத்தரிங்க.

ஆமாண்டி தங்கம் வேல தானே எனக்கு மொத பொண்டாட்டி உனக்கு தெரியாதா?

இங்க பாருங்க இன்னொரு வாட்டி இது மாரி சொன்னீங்க உங்க மாமா அதான் எங்க அப்பாகிட்ட சொல்லி விவாகரத்து பத்திரம் அனுப்ப சொல்லிருவ பாத்துக்கோங்க.

அடிப்பாவி என் தங்கமே நீ இல்லாம நான் இல்லம்மா இந்த பூமியில நான் வாய மாட்டேன். பொசுக்குன்னு இப்படி மாமன பாத்து சொல்லலாமா? என கொஞ்சுதலாக பேச,

ம்ம்ம்ம்… சொல்லலாம் கண்டிப்பா நேர்ல மட்டும் இருந்திருந்தா என்கிட்ட நெறய வாங்கிருப்பிங்க.

என்னது முத்தமா தர போற தங்கம் என்ற வல்லரசுவின் மனதில் ஓராயிரம் ஆசைகளை நினைத்துக்கொண்டு கேட்க,

அந்த நொடி ஸ்தம்பித்து போனாள் தங்கம்.

இருக்காதா பின்ன பிறந்த வீட்டில் சிறு வயதிலிருந்து கிடைக்காத அனைத்து விதமான ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றிய இப்பொழுதும் பார்த்து பார்த்து நிறைவேற்றி கொண்டிருக்கும் கணவனின் ஆசை என்னவென்று புரியாதா அவளுக்கு

இருந்தாலும் அதனை வெளிகாட்டாதவலாக போலீஸகாரருக்கு இருந்தாலும் இந்த அளவுக்கு ஆசக்கூடாது. வயசுக்கு வந்த பொண்ணு இருக்கறது ஞாபகம் இல்ல போலிருக்கு போலீஸ் மாமாவுக்கு.

அதெல்லாம் இருக்கு தங்கம் நான் உன்மேல வச்ச நேசத்துக்கு பாசத்துக்கும் பொறந்த மொத புள்ளையாச்சே அதுவும் மகாலட்சுமியே வந்து பொறந்தாலே மறந்துட்டியே தங்கமே

“ங்கும்”…. இந்த கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் குறைவே இல்ல காலைல இருந்து தம்பி முருகன் உங்கள தான் கேட்டுட்டு இருக்கான் எப்பக்கா மாமா வருவாங்கன்னு என்னால பதில் சொல்ல முடியலங்க என்றவளின் குறளில் உள்ள ஏக்கத்தை புரிந்த கணவன் இன்னும் மூணு மணிநேரத்துல உன் கண் முன்னாடி நான் இருப்பேன் தங்கம் மச்சான் கிட்டபோய்ட்டு தைரியமா சொல்லு.

நிஜமாவா சொல்றிங்க……என்றவளின் குரலில் சொல்ல முடியாத சந்தோசம்.

ஆமா தங்கம் என்றவன் சரி போன வெக்கறேன் இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு சொல்லிட்டு கிளம்பறேன்.

சரிங்க மாமா பாத்து சூதானமா வாங்க அந்தி சாயார நேரமாகிடுச்சு மழை இன்னும் நின்னபாடில்ல என்றவளும் கைபேசியை அனைத்து வைத்தாள்.

மறுபுறம் முகம் முழுவதும் புன்னகையுடன் கண்ணாடி முன்பு நின்று கொண்டிருந்த முருகன் பெண் அழைப்பிறகு தயாராக வேண்டும் வருங்கால மனைவி வாழ்கை துனைவி முன்பு பளிச்சென்று இருக்க நினைத்தவன் அவர்கள் வீட்டில் வாங்கி கொடுத்த “கோட்சுட்” தன் நிறத்துக்கு பொருந்துமா என சோதித்து கொண்டிருந்தான்.

ஆமாங்க மலேசியாகாரங்க சம்மந்தம் அதுவும் கிராமத்துல இருக்கற விவசாயம் பாக்கற பையனுக்கு அமையுதுன்னா சும்மாவா. பொண்ணு அந்த காலத்து நடிகை ரேவதி மாதிரி இருக்கு பத்தாதுக்கு நல்லா படிச்சிருக்கு இது போதாதா முருகனுக்கு ஊரெல்லாம் ஒரே பேச்சுதான்.

ஆண்மகனுக்கு இருக்கும் கம்பீரம் வளைந்த மீசை படிந்து வகிடுடெடுத்து வாரிய தலை அரக்கு கலரில் கோட்டும் அதற்க்கு வெள்ளை நிறத்தில் பட்டன் பதித்து அவனுக்காகவே தயாரித்தது போல இருந்தது.

அந்நேரம் பார்த்து உள்ளே சென்ற சங்கர் முருகனின் அண்ணன் அம்மாடியோ இவ்ளோ நாள் இம்புட்டு அழக எங்கடா ஒளிச்சி வச்சிருந்த

போங்கண்ணா கிண்டல் பண்ணாதீங்க மாப்பிளைக்கு உண்டான அனைத்தும் அவனுக்கு பொருந்தி இருக்க கூடவே வெட்கமும் வந்துவிட்டது.

இல்லடா முருகா எப்பவுமே வேட்டி சட்டையிலே பார்த்துட்டு இப்ப இந்த உடுப்புல பாக்கறப்ப வெள்ளைக்காரதுரை மாதிரி இருக்காப்பா.

இந்த ஒரு விசயத்துக்காக நம்ப குடும்பம் தவம் இருந்தது இப்ப நடக்குது சந்தோசமைய்யா என்றவன் கண் கலங்கினான். அது தம்பிக்கு தெரியாதபடி துடைத்துக்கொண்டு
வா டா கிழ அம்மாச்சி உனக்காக காத்துட்டு இருக்கு தகவலை சொன்னவன் தம்பி அறையில் வைத்திருந்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தந்தையிடம் சென்றான்.

முருகனும் அம்மாச்சியை பார்க்க செல்ல முயன்ற நேரம் அவனின் கைபேசி ஒலித்தது.

அதில் வந்த அழைப்பினை பார்த்து அதிர்ச்சியானன் முருகன்?

அவனின் அதிர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும்.

அத்தியாயம் – 2 -ல் தொடரும்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!