Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு

Vaalibaththai Kolluthadi Vannanilavu 2

வாலிபத்தை கொள்ளுதடி வண்ண நிலவு அத்தியாயம் -2

ஒலிப்பெறுக்கியில்
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும்தான்…பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…என்ற பாடல் திருமண வீட்டிலும் அங்குள்ள வீதிகளிலும் ஒலிக்க,

இன்னுமா கெளம்பறீங்க வண்டி வந்து ரெண்டு மணி நேரமாகுது ஒருத்தரும் வெளில தலைய காட்டமாட்டேங்கறீங்க.
எவ்ளோ வைட்டிங் சார்ஜ் கேப்பானோ தெரியலயே என்று மொறுவினார் வீட்டின் பெரிய மனிதர் ஜோதிலிங்கம்.

என்ன பிரச்சனை அவருக்குன்னு தானே யோசிக்கிறீங்க?



Advertisement

(ஜோதிலிங்கம் சிக்கனத்தின் சிகரம் அதனால தான் அந்த காலத்துலயே பொண்ணுங்களுக்கு அஞ்சு பவுனு போட்டு கன்னிகாதானமாக திருமணம் செய்து குடுத்து ஊர் மெச்சும் அளவுக்கு வாழும் குடும்பம்.)

ஒரு ரூபாய் செலவு செய்தாலும் கணக்கு எழுதும் பயக்கம் உள்ளவர். தன்னோட தலைமுறைகளுக்கும் கற்று கொடுத்து தொடர்கதையாக இப்பொழுதும் அதை செய்து வரும் குடும்பம் தான் “ஜோதி லிங்கம் இல்லம்” வீட்டிற்கு வெளியில் பெரிய எழுத்தில் பதித்திருந்தார்கள் பிள்ளைகள் இருவரும்.

அப்படி பட்ட வீட்டில் இவர் பயப்படும் ஒரே ஆளு இவ தான்.

Advertisement

“யார் அவள்? “

Advertisement

தாத்தாவின் அருகில் சென்ற அவருடைய இளைய பேத்தி,

மாம்பழ கலர் பட்டு பாவாடையும், அதற்கு ஏத்தார் போல அடர் பச்சை நிற பாடரும் அதில் குட்டி குட்டியாக மாங்காய் புட்டா போட்டிருந்த ஆடையை அணிந்தவள் மாம்பழ கலருக்கு தகுந்த மாதிரி மாங்கா ஜிமிக்கி கம்பளையும் மாட்டி கொண்டு அது மட்டுமா வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் ரோசா பூ நெத்திசூட்டியை அடம் பிடித்து வாங்கியவள் போடாமல் இருப்பாளா என்ன?

அதையும் போட்டவள் கழுத்துக்கு அடர் பச்சை நிற மணிமாலை லட்சுமி டாலர் பதித்தது, கூடவே ஐந்து முத்து வைத்த கொலுசுவை அணிந்தவள் குட்டி அம்மனை போல ஜொலித்தாள்.

Advertisement

பார்த்த ஜோதிலிங்கம் அசந்து போய்விட்டார்.

தாத்தா எதுக்கு கத்தறீங்க?

உள்ள அங்கம்மா பாட்டி மட்டும் தான் ரெடி ஆகல மத்த எல்லாரும் ரெடி ஆகிட்டோம் என்றாள் தங்கத்தின் கடைசி பிள்ளை வாலு பிள்ளை மதிவதனி.

அது மட்டுமா கோவமாக இருந்த ஜோதிலிங்கத்தின் கன்னத்தில் முத்தமிட்டவள் தாத்தா நீ என்கிட்ட என்ன சொன்ன என்றாள்.

மதிம்மா தாத்தா கோவமா இருக்கேன் இப்ப எதுவும் கேட்காதே என்றார் போலியான வீம்புடன்.

ம்ஹும்… அப்படியா என்றவள் சிறிது நேரம் யோசித்த பின் முகத்தை கோவமாக வைத்து கொண்டு,

நானும் உங்க மேல கோவமாதான் இருக்கேன் சின்ன பொண்ண ஏமாத்திட்டோமேன்னு கொஞ்சம் கூட யோசிக்கல ஆன ஊருக்குள்ள வல்லவரு நல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு நல்ல பேரு தான்.

ஏய் வாயாடி ரொம்ப பேசற.

ஹங்கா…..அதுமட்டுமா புள்ளைங்கன்னா ஜோதிலிங்கத்த மாதிரி தான் வலக்கணும்னு பெத்த பேரு. வீட்டுக்கு வந்தா தானே இவரோட பவுசு தெரியும் என்றாள் கடுமையாக.

போலியான கோவத்தில் இருந்த ஜோதியப்பா கொஞ்சம் கலைந்து பேத்தியின் மழலை குரலில் அசந்து திகைத்து போனார். இந்த சின்ன வயசுல என்னமா பேசுறேன்னு வியந்தும் போனவர் அவளை வாரி அனைத்து கொண்டு

என்ன ஆச்சு என் தங்கப்புள்ளைக்கி எதுக்கு இவ்ளோ கோவம் வருது. தாத்தாவுக்கு வயசு ஆகுதுல மறந்துட்ட மதிமா. எதுக்காக கோவ படரேன்னு புரியலடா எனக்கு சொல்லுடா மதி,

வயசு ஆகுதே தவிர பொறுப்பே இல்ல உனக்கு,

ம்ம்…. மீண்டும் பெருமூச்சு விட்டவர் எனக்கு பொறுப்பிளையா? என்றார்.

ஆமா இல்லதான் எனக்கு காது குத்தினப்ப என்ன சொன்ன? என்ன சொன்னேன்னு கேட்டேன் சொல்லு? என்றாள் மிரட்டலாக,

தலையை சொரிந்தவர் என்ன சொன்னேன்னு யோசித்த நேரம்,

ஐயோ, “மக்கு மக்கு” என்றவள் தன்னுடைய பிஞ்சு கைகளை கொண்டு தாத்தாவின் தலையில் இடித்து நான் அன்னிக்கி அலுவாம காது குத்திகிட்டன்னா மாமாவுக்கும் அக்காவுக்குக்கும் கல்யாணம் பண்ணிவெக்கறன்னு சொன்னியே இப்ப மாமா வேற யாரையோ கல்யாணம் கட்டிக்குதாமே அதுக்கு தான் பட்டு பாவாடை எடுத்து குடுத்துசின்னு அம்மா சொன்னாங்க.

அப்பா வரட்டும் உங்க எல்லாரையும் கூண்டுக்குள்ள போட சொல்றேன் என்றவள் அதோட நிர்காமல் வெம்ப ஆரம்பித்தாள்.

(விளையாடாய் அவள் சொன்ன வார்த்தை அவள் குடும்பத்தை இப்படி தலை குனிய வைக்கும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை)

அவளை சமாதானம் செய்ய ஜோதிலிங்கம் கையில் ஏந்த சென்ற நேரம்

என்ன தொடாத “உன்பேச்சி கா” விட்டுட்ட நான் மாமாகிட்ட கேக்கறேன் என்றவள் தனது மாமனின் அறையை நோக்கி ஓடினாள்.

ஓடாத மதிம்மா மதிம்மா கத்திக்கொண்டே பின்னோடே சென்றவரால் அவளை பிடிக்க முடிய வில்லை.

மாடியில் உள்ள அறையை வேகமா திறந்தவள் மாமா என கத்தினாள். அவளுடைய சத்தத்தில் திரும்பி பார்த்தவன் தனது கை பேசியை கீழே தவற விட்டான்.

கை பேசியை மட்டுமா?

இவனை ஆவளுடன் அழைத்திருந்த அந்த நபரையும் தான்.

உடைந்த கைபேசியை வெறித்து பார்த்து கொண்டிருந்தவனை மதி அருகில் சென்று மாமா இவ்ளோ பெரிய மனிசி உன்ன கூப்பிட்டிருக்க நீ என்ன அங்கயே பாத்துட்டிருக்க,

ம்ம்.. சுயம் கலைந்தவன் அதுவா வாயாடி ரொம்ப நாளா மாமாவ ஒரு தேனி கடிசிட்டு போக காத்துட்டு இருந்துச்சா நீ வந்ததும் உன்ன பாத்து அது பயந்து ஓடி போயிடுச்சி.

என்னது தேனியா?

ஆமா உன்ன கூட பால்வாடில கடிச்சிச்சே அதே தேனி தான் என்றான்.

ஏய்! மாமா பொய் சொல்லாத

“சாமி சாத்தியமா சொல்றேன் மதி”

அட போயா லூசு மாமா ஏற்கனவே பண்ணின சத்தியத்தையே இன்னும் நீ காப்பாத்தல. இப்ப புதுசா இன்னோரு சாத்தியமா! வேண்டாம்ப்பா வேண்டவே வேண்டாம் உனக்கும் எங்க அக்காவுக்கும் கல்யாணம் வேணா பொய் பேசற மாமா எனக்கு வேணாம்ம்ம்ம் என்றவள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டாள்.

முருகன் சிதறி கிடந்த கைபேசியை குப்பையோடு குப்பையாக சேர்த்து கொட்டிவிட்டு சிம் கார்டை எடுத்து மாமியார் வீட்டில் அன்பளிப்பாக கொடுத்த கைபேசியில் திணித்தான்.

திணித்த அடுத்த நொடி கோகிலாவின் அழைப்பு வந்து அவனை இன்பத்தில் ஆட வைத்தது.

ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

தன்னுடைய ஆசை மனைவிக்காக இந்த பாடலை தனியாக பொறுத்தியவன் உடனே அழைப்பை ஏற்று சொல்லு கோகி

மறுபுறம் அமைதி மட்டுமே எந்த வார்த்தையும் வரவில்லை. இரு முறை அவளுடைய மூச்சு காற்று மட்டும் அவனை தீண்டி விட்டு சென்றது.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அமைதின்னு நானும் பாக்கறேன்.

ம்ம்ம்ம்….. இந்த பிறவி முழுசும்ங்க.

இதோ பாருடா என் பொண்டாட்டி வாயில இருந்து முத்தி உதிருது.

ச்சீ.. போங்க இதுக்குத்தான் நான் அமைதியா இருந்தேன்.

கட்டிக்கப்போறவன் கிட்ட என்னடி பயம்?

பயம் இல்லைங்க, மரியாதை அம்மா சொன்னாங்க மாப்ள தங்கமானவரு அவருக்கு கோவம் வர மாதிரி நடந்துக்காத பெரிய குடும்பம் நல்ல குடும்பம் ஆளும் பேருமா இருக்காங்க எல்லாத்துக்கும் அமைதியா பொறுத்து இருக்கணும்னு.

அதுக்கு? என்னவாம் என்றான்.

இப்பவே தயாராகனுமிலையா.

“ம்ம்ம்ம்….. ஆமாமா என்றான் நக்கலாக”

வேற என்னவெல்லாம் சொன்னாங்க உங்க அம்மா? அவன் விசமமாக கேட்க இவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

நீங்க ரொம்ப மோசம் போங்கங்க.

சரிங்க கோகி நான் போறேன் இந்த கல்யாணம் வேணாம் எதுவும் வேணாம்னு உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிடு.

திடிரென்று அதிர்ந்தவள். ஏங்க என்ன ஆச்சு எதுக்கு இப்படி சொல்றிங்க அவள் கண்கலங்கி கேட்க,

நீதானா போக சொன்ன அதான் போறேன்.

அய்யோ ஈஸ்வரா இந்த கல்யாணம் நல்ல படியா நடக்க நீ தான் அருள் புரியனும். எந்த பிரச்சனையும் இல்லாம நீ நடத்தி கொடுத்தா நெய் தீபம் போடறேன்பா என்றவள் மனதில் வேண்டுவதாக நினைத்து பதட்டத்தில் வாய்விட்டு வெளியே புலம்பிவிட்டாள்.

இதற்கு மேல் தாங்க மாட்டாள் என்றுணர்ந்தவன், கோகி மாமா உனக்காக தான் நீ எனக்காக தான் நான் இங்க ஜம்முன்னு ரெடி நீ அங்க கும்மும்னு ரெடியா இரு சரியா என்றவன் சில பல ஆசை வார்த்தையை கூறி அவளை சமாதானம் செய்த பிறகே கைபேசியை அணைத்தான்.

அடுத்த நொடி மீண்டும் கோகிலாவின் அழைப்பு வர

என்னமா?

இல்லைங்க நான் இங்க கும்முன்னு ரெடியாகி கோவிலுக்கு வந்து அரை மணி நேரமாச்சு என்று சொல்ல,

பார்ரா என்றவன்

என்னடி சொல்ற சரிதரத்துல பொண்ணு மாப்பிளைக்கு காத்திருந்தது உங்க குடும்பமாகத்தான் இருக்கும் என்று சிரித்தவன் இன்னும் அஞ்சு நிமிசத்துல மாமா அங்க இருப்பேன் என்று கைபேசியை அணைத்தான்.

அதற்குள் வீட்டில் அனைவரும் தயாராக இருக்க மொத்த கூட்டத்தையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு பெண் அழைப்பிறகு கிளம்பினான்.

கோவிலுக்கு போனதிலிருந்து தங்கம்மாவின் முகம் மட்டும் சற்று வட்டமாக இருந்தது.

ஏண்டி தங்கம் ஒரு மாரி இருக்க. தங்கமலை விசாரிக்க ஆரம்பித்தாள்.

வல்லரசு மாமா வரலைன்னா?

அப்படிலாம் இல்லக்கா.

வேற எதுக்கு இப்படி சோகமா இருக்க? என்றாள் சற்று கோவமாக

அக்கா அக்கா….

என்ன சொக்கா சொக்கான்னு சொல்லி தொலைடி இல்லனா அம்மாவ கூப்பிடுவேன்.

தங்கமலை அதட்டிய நேரம் அங்கே தங்கமலை கணவன் வந்து விட்டான்.

தங்கம்மா நான் கேட்ட சொல்ல மாட்ட உங்க மாமாவ கேட்க சொல்ற இரு. என்னங்க இவள பாருங்க மனசுல எதோ பெருசா நெனச்சி பயந்துட்டு வெளில சொல்ல மாட்டேங்கறா நீங்களாவது கேளுங்க.

ம்ம்ம்ம்…. என்று சொல்ல வாயில் வார்த்தை வரும் நேரம்

தங்கம்மா என்றால் குரல் கேட்டது.

கணவனின் குரல் கேட்ட சந்தோஷத்தில் அவரின் அருகில் சென்றவள் என்னங்க என்னங்க என்று வெம்பி கொண்டே தன் மனதில் இருப்பதை சொல்லி முடித்தாள்.

தங்கம்மா என்ன சொல்லிருப்பாங்க வல்லரசுகிட்ட

தொடர்ந்து பாருங்க தங்கம்ஸ்

அத்தியாயம் -3

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!