Skip to content
Post Views: 1,715
நீங்காத நினைவு நீ
Advertisement
அத்தியாயம் -15
Advertisement
Advertisement
ஆண்டவர் கனிக்கு எப்போதுடா எல்லாம் கடமையும் முடியும், திவ்யாவை அழைத்து வரலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்க.
Advertisement
மீனாட்சிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்க, தங்கையையும் சேர்த்து பார்க்கும் பொறுப்பும் கனிக்கு வந்திருக்க. யோகவையும், லட்சுமியையும் மாறி, மாறி ஹாஸ்பெட்டல் அழைத்து வர. வீட்டிற்கு அழைத்து செல்ல என்று வேலை கூடிக்கொண்டே இருந்தது. திவ்யா விருதுநகரை விட்டு சென்று மூன்று மாதங்கள் முடிந்திருந்தது..
திவ்யா டெல்லி வந்து ஒரு வாரத்திலே தான் உண்டாகி இருப்பது அவளுக்கு தெரிந்து விட. முதலில் ஆண்டவர் கனியிடம் தான் சொல்லனும் என்று நினைத்து இருந்தாள், அதனால் யாரிடமும் சொல்ல வில்லை.
ஆனால் திவ்யாவின் அன்னை கண்டு பிடித்துவிட்டார்.
திவ்யாவிடம் “நீ மாசமா இருக்கீயா” என்று கேட்க.
உங்களுக்கு எப்படி தெரியும் என்பது போல் பார்த்தவளை.
“உன்ன பெத்தவடி நானு, உன் மூஞ்சிய வச்சே கண்டு பிடிச்சுருவேன், கிளம்பு உன்னை உன் புருஷன் வீட்டுல விடுறேன்” என்றார் வேணி..
அவளோ “என் வீட்டுகாரர் வருவார், நான் அப்போ போயிக்கிறேன் உங்க வேலையை பாருங்க என்று பேச.
“அப்படியெல்லாம் உன்ன விட முடியாது. உனக்கும், உன் புருஷனுக்கும் என்ன சண்டையின்னு தெரியல. நீ உண்டாகி இருக்குற விசயம் சொன்னா எல்லா பிரச்சனையும் சரியாகிறும்”.
“என் பிள்ளை வர போறத சொல்லி, அவங்க என்னை ஏத்துக்க வேண்டாம்” என்றாள்.
“நான் சொல்லுறத கேளு விருதுநகர் போ, உன் புருஷன் வீடு தான் உனக்கு இனிமேல்” என்று கிருஷ்ணவேணி மகளிடம் பேச.
திவ்யா ஒன்றும் பேசாமல், சூஸ் குடித்துக்கொண்டு இருந்தாள்.
“புருஷன விட்டு இவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்க கூடாது” என்று தினமும் திவ்யாவிடம் சண்டை போட..
நான் கிளம்பிறேன் என்றவள், வீட்டை விட்டு வெளியே வந்து நண்பர்களோடு தங்கி கொண்டு வேலை பார்க்கிறாள். தினமும் ஆண்டவர் கனி வருவார், தன்னை அழைத்து செல்ல என்று எதிர் பார்த்திருக்க. நாட்கள் மாதங்களாக சென்றிருந்தது.
திவ்யாவுக்கு நான்கு மாதம் முடிந்து, ஐந்தாம் மாதம் நடந்து கொண்டிருந்தது, அவளுக்கு வயிறு கொஞ்சம் மேடிட்டு இருக்க. தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் தினமும் பேசுவாள். “உங்க அப்பா வரட்டும் நம்ம மூணுபேரும் சேர்ந்து சண்டை போடலாம் குட்டீஸ் என்று தினமும் கண்கலங்கி பேசுவிட்டு தூங்கி விடுவாள்..
கிருஷ்ணவேணிக்கு மகள் தன்னுடன் சண்டை போட்டு விருதுநகர் சென்றிருப்பாள் என்று நினைத்திருந்தார்.. அவள் டெல்லியில் வேலை பார்ப்பது தெரியாது.
ஆண்டவர்கனிக்கு கொஞ்சம் அவனின் கடமைகள் எல்லாம் முடிய, நாளை டெல்லி போகலாம் என்று முடிவு எடுத்து விமான டிக்கெட் போட்டு இருந்தான்.
அவனின் நேரமோ என்னவோ, ஒரு பைக்காரன் நேராக வந்து ஆண்டவர் கனி காலின் மீது பைக்கை வைத்து இடித்து விட. ஆண்டவர் கனிக்கு பலத்த அடி காலில்.
ஆண்டவர் கனிக்கு காலில் சவ்வு விலகி இருக்க. கட்டு போட்டு இருந்தான்.
அவனுக்கோ என்னாட இது இப்படி ஆகிவிட்டதே என்று இருந்தது.
ஒரு டிரைவரை அழைத்துக்கொண்டு காரிலேயே டெல்லி கிளம்பி விட்டான்..
காலில் வலி இருந்தாலும்.
வலியோடு டெல்லி வந்து சேர்ந்தான்.
திவ்யாவின் போனை இவனே
உடைத்து விட்டிருக்க. திவ்யாவின் தந்தைக்கு கனி போன் போட்டான். எடுத்து பேசிய திவ்யாவின் தந்தை “எப்படி இருக்க திவ்யா என்றார்.. அவனின் தலையில் பெரிய குண்டை போடுவது போல் திவ்யாவை பத்தி கேட்டிருக்க.
” என்ன யார சொல்லுறீங்க என்றான் கனி.
“என் பொண்ணை தான் சொல்றேன், இங்க வந்து ஒரு மாதம் இருந்த என் பொண்ணு.
என் பொண்டாட்டி திவ்யாவை உங்க வீட்டுக்கு போ, போ சொல்லி சண்டை போட. உடனே கிளம்பி விருதுநகர் வந்துட்டா” என்று கூற.
ஆண்டவர் கனிக்கு கோபம் வந்து கண்ட படி திவ்யாவின் தந்தை கர்ணனை திட்ட ஆரம்பித்திருந்தான். “யோவ் நீ எல்லாம் ஒரு அப்பாவா, பொண்ணு அவங்க வீட்டுக்கு வந்துட்டாளா என்று ஒரு போன் பண்ணி கூட சொல்ல மாட்டீங்களா”. என்றான்.
இருவரும் போனில் சண்டை போட, “நீ உன் பொண்டாட்டியை சண்டை போட்டு துரத்தி விட்டுட்டு என் மேல கோப படுவீயா” என்று திவ்யாவின் தந்தை ஆண்டவர்கனியிடம் சண்டை போட.
“யோவ் மாமா உங்கள நம்பி தானா என் பொண்டாட்டியை விட்டு இருந்தேன்” என்றவன்.
சிறுது யோசித்து விட்டு, திவ்யா முன்பு வேலை பார்த்த ஆபிஸ், அவளின் தோழிகளின் போன் நம்பர் என்று அனைத்தையும் கர்ணனிடம் கேட்டவன். நான் அவளை கண்டுபிடிச்சிக்கிறேன் என்றவன்.
திவ்யாவின் தோழி மாலாவுக்கு போன்னிற்க்கு போன் போட்டவன்.
“நான் திவ்யா ஹஸ்பண்ட் பேசுறேன்” என்றவன். “திவ்யா எங்க வேலை பாக்குறா உனக்கு தெரியுமா” என்றான்.
“உம் தெரியுமே நாங்க எல்லாரும் ஒன்னாதான் வேலை பார்த்தோம். எனக்கு போன மாசம் கல்யாணம் ஆச்சு, திவ்யா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்க பிரதர். உங்க போனுக்கு எங்க ஆபிஸ் லோகேஷன் அனுப்புறேன் போய் பாருங்க” என்றாள்..
“சரிமா, ரொம்ப நன்றி” என்றான்.
“பரவாயில்ல சார், நீங்க கிளம்புங்க” என்று போனை வைத்தாள் மாலா.
ஆண்டவர் கனி போனில் வந்த லோகேஷன் அட்ரஸ் தேடி சென்றான்..
திவ்யா வேலை செய்யும் ஆபிஸ் வந்தவன். காரை ஆபிஸ் உள்ளே விட சொல்ல. அங்கே வேலை பார்க்கும் வாச்மேன் “காரை உள்ளே வர அனுமதி இல்ல. தெரியாத காரை உள்ள விட மாட்டோம். இப்போ மதியம் டைம், வேலை செய்யுறவங்க அந்த ஹோட்டலுல தான் சாப்பிட வருவாங்க, நீங்க அப்போ அவங்கள பாத்துக்கோங்க” என்றான்.
ஆண்டவர் கனிக்கு ரொம்ப நேரம் நிக்க முடியவில்லை, அவனுக்கு பசியெடுக்க. அந்த ஹோட்டலுக்கு சென்று உணவை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
திடிர் என்று ஏதோ மனம் பட, படவென அடித்து கொள்ள நிமிர்ந்து அங்கும், இங்கும் பார்த்தான். தூரத்தில் திவ்யா வருவது போல் தெரிய பார்த்துக் கொண்டே இருந்தான்..
ஒய்ட்டு கலர் ஸ்சிவ் லெஸ் லூசான டாப், புளு கலர் ஜீன்ஸ், ஹேர் கலர், ஹேர் கட் பண்ணி பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்.அவள் கூட இருந்த பிரண்ட் ஏதோ சொல்ல, இவள் ஏதோ சொல்லி அனைவரும் சிரித்துக்கொண்டே ஹோட்டல் உள்ளே நுழைந்தனர்.
திவ்யா ஆண்டவர்கனியை பார்க்கவில்லை. ஹிந்தியில் பேசிக்கொண்டே ஆண்டவர் கனியை கடந்து சென்று விட்டாள்..
ஆண்டவர்கனி திவ்யாவின் முகத்தையே பார்த்திருந்தான்.. அவ்வளவு அழகாய் இருந்தாள் திவ்யா, கொஞ்சம் எடை கூடி, முகத்தில் அத்தனை சந்தோஷம், சிரிப்பு, தோழிகள் ஒருவரை, ஒருவர் கேலி பண்ணி சிரித்துக்கொண்டே உணவை ஆர்டர் சொல்ல..
திவ்யாவின் அருகில் உள்ள அவளின் தோழி ஒருத்தி, திவ்யாவை அழைத்து “அங்க பாரு திவி உன்னை ஒருத்தன் உத்து, உத்து பார்க்கிறான்” என்று சொல்ல.
“ஏய் சும்மா இருடி, யாரு பார்த்த என்ன” என்று சொல்லி விட்டு, அது யாரு என்று பார்க்க. தன் முன்னாடி நான்கு டேபள் தள்ளி அமர்ந்திருந்த கணவனை பார்த்தவளுக்கு அத்தனை சந்தோஷம், அதிர்ச்சி,, வந்து விட்டான் தன்னை தேடி வந்து விட்டான், தன்னை அழைத்து செல்ல வந்து விட்டான் என்று சந்தோஷ பட்டவள்.
அவரா வந்து பேசட்டும் என்று நினைத்து அமைதியாக இருந்தவள். மறுபடியும் ஆண்டவர்கனியை நிமிர்ந்து பார்க்க அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. எங்கே சென்றான் என்று அவள் ஹோட்டலில் உள்ள இடங்களில் தேடிக்கொண்டே வெளியில் வர. ஆண்டவர் கனி காரில் ஏறுவது தெரிய அதிர்ந்து நின்றிருந்தாள்.
அப்போ என்னை பார்க்க வரலீயா. என்னை பார்த்தும் என்கிட்ட பேசமா போக அப்படி என்ன நான் செய்து விட்டேன். மனதில் ஆயிரம் கேள்விகள் கேட்டவள். கண்ணீல் இருந்து கண்ணீர் மட, மடவென கொட்ட ஆரம்பித்து இருந்தது.
போடா, போ என்றவள், இனி நீயே வந்து கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் என்று ஆண்டவர்கனி கார் போகும் பாதையை பார்த்து திட்டிக்கொண்டு இருந்தாள்..
திவ்யாவின் தோழிகள் அவளிடம் வந்து “என்னாச்சு திவ்யா சாப்பிடமா இங்கே வந்து யார தேடுற யாரு அந்த ஆளு”, என்று கேட்க..
“என் ஹஸ்பண்ட்” என்றவள் ஆண்டவர் கனி சென்ற பாதையை பார்த்து கதரி அழ..
அனைவரும் பயந்து “ஏய் என்னாச்சும்மா” என்று கேட்க.
“என்னை பார்க்க வந்துட்டு, பார்க்காம போயிட்டாரு” என்று அழ..
அழும் தோழியை ஒரு சேரில் அமர வைத்து “திவி ரிலாக்ஸ் அழதா மாசமா இருக்குற பொண்ணு இப்படி அழலாமா”, என்று அவளை சமாதானம் பண்ண.
“என்னால முடியலடி, என்னை தேடி வந்து பார்த்துட்டு, என் கிட்டபேசாம போயிட்டார்” என்று மீண்டும் தேம்பி, தேம்பி அழ..
திவ்யாவின் தோழிகள் “அவருக்கு ஏதாவது முக்கியமான வேலை ஏதாவது வந்து இருக்கும் போயிருப்பார் மறுபடியும் வருவாரு பாரு” என்று திவ்யாவை அணைத்து ஆறுதல் படுத்த. யார் சொல்வதையும் அவள் மனம் கேட்க மறுத்தது. என்னை பார்க்காமல் போயிட்டாரு, போயிட்டாரு என்று புலம்பியவள் மயங்கி சரிய..
“ஐயோ”! .. என்று திவ்யா மயங்கியதை பார்த்தவர்கள். அவளை ஹாஸ்பெட்டலில் சேர்த்து விட்டு. திவ்யாவின் தந்தை கர்ணனுக்கு போன் போட்டு சொல்ல. பயந்து போன கர்ணன்.
ஆண்டவர் கனி போன் போட்டு “என்ன பண்ண என் பொண்ணை ஹாஸ்பெட்டலில் அட்மிட் ஆகுற வரை” என்று கண்டபடி திட்ட.
“திவ்யாவுக்கு என்னாச்சு” என்றான்..
“எல்லாம் உன்னால தான்” என்று மறுபடியும் திட்ட.
“யோவ் மாமா திவ்யாவுக்கு என்னாச்சு, எந்த ஹாஸ்பெட்டல்” என்று கேட்டவன்.. 10 நிமிடத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்து விட்டான்..
திவ்யா பெயரை சொல்லி கேட்க..
“இரண்டாவது மாடி” என்று சொல்ல..
ஆண்டவர்கனிக்கு நடக்க கஷ்டமாக இருந்த போது, லிப்ட் வலியாக வந்து சேர்ந்தான்.
ஹோட்டலில் திவ்யாவுடன் இருந்த பெண்கள் அங்கே நின்று இருக்க.
அவர்களின் அருகில் சென்றவன்.
“என்னாச்சுமா என் திவ்யாவுக்கு”. என்று கேட்க.
“நீங்க திவ்யா ஹஸ்பெண்ட்,” என்று ஆண்டவர்கனியை பார்த்து திட்ட, அவர்கள் பேசியதை காதில் வாங்கதவன். “என்னாச்சு திவ்யாவுக்கு கொஞ்சம் நேரம் முன்ன நல்ல தானே இருந்தா என்னாச்சு”.. என்று கேட்க.
“ஏன் சார் திவ்யாவை பார்க்க வந்துட்டு பார்க்காம போனிங்க, எப்படி கதறி அழுதா தெரியுமா, மாசமா இருக்குற பொண்ணு இப்படி அழுதா என்னாகும், இப்படி தான் மயக்கம் போட்டு விழுவா” என்று அப்பெண் கூற..
அப்படியே சிலையாகி போனான் ஆண்டவர் கனி.. என்ன மாசமா இருக்காளா என் திவ்யா வா… என் உயிர் என்றவனின் மனம். என்ன செய்து விட்டேன். தன் உறவு, சொந்தங்களை பார்த்து விட்டு, தன் இரத்தத்தை பார்க்க மறந்து விட்டேனே. நாச்சியா என்றவன். சாரிடி, சாரிடி என்னை மன்னிச்சிரு என்று மனதில் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தான்.
திவ்யாவின் தந்தையும் தாயிம் ஹாஸ்பெட்டல் வந்தனர். ஆண்டவர்கனியிடம் பேசாமல். திவ்யாவுக்கு என்னாச்சு என்று அவளின் தோழிகளிடம் சென்று பேசியவர்கள், “இப்போ எப்படி இருக்க டாக்டர் என்ன சொன்னார்” என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.
டாக்டர் திவ்யாவை பார்த்துவிட்டு வெளியே வர. கர்ணனும், கிருஷ்ணவேணியும் “என்னாச்சு டாக்டர் என் பொண்ணு எப்படி இருக்க” என்று கேட்க..
“ஏன் இவ்வளவு பிரசர் அவங்களுக்கு, மாசமா இருக்குற பொண்ணுக்கு இவ்வளவு பிரசர் இருக்க கூடாது சார் குழந்தையை பாதிக்கும். இந்த மாதிரி நேரத்துல அமைதியா சந்தோஷமா இருக்கனும். எந்த பிரச்சனை வந்தாலும் கோபப்பட கூடாது. அவங்களுக்கு பிரசர் ஏத்துரு மாதிரி எதுவும் நடக்காம பாத்துக்கோங்க. அதிகமா பிரசர் ஏற கூடாது. ட்ரிப்ஸ் ஏறியவுடன் கூட்டிட்டு போங்க” என்றார் டாக்டர்.
error: Content is protected !!